Thursday, July 16, 2009

வலையங்கம் 160709a

மத்திய மந்திரி, இந்தியர்கள் தம் திருமண வயதை 30 ஆக உயர்ததிக் கொண்டால் நாடு செழிக்கும் என்று கருத்து தெரிவித்திருக்கிறார்.
நாடு செழிப்புற திருமண வயதை உயர்த்தினால் மட்டும் போதாது. அப்படி செய்தால் குற்றம் குறைகள் பெருகுமே அன்றி வேறு நன்மைகள் பயக்காது. அதுவும் அன்றி முதிர் கன்னிகள் மண வாழ்க்கையில் புதிய சங்கடங்கள் தோன்ற வாய்ப்புகள் அதிகம் என்று தினமலர் நேயர் ஒருவர் சுட்டிக் காட்டியிருந்தார்.
நம் குடும்பத்தாரிடம் இது பற்றி விவாதித்ததில் விளைந்ததே இப்பதிவு:
பெண் கல்வி கட்டாயமாக வேண்டும் - படித்துக் கொண்டிருக்கும் பெண்களுக்கு, ஏதோ ஒரு சிலரைத் தவிர, மற்ற விஷயங்களில் கவனம் சிதறுவது இல்லை. படித்த பின் வேலைக்கு செல்லும் உந்துதல் அதிகம் ஆகிறது. வேலைக்குச் சென்ற பின் பெண்ணின் படிப்பு, சம்பளம், சமூக அந்தஸ்து இவற்றிற்கு சமமான அல்லது மேம்பட்ட துணைவரைத் தேடலில் காலம் செலவாகிறது. மந்திரியின் கருத்து சட்டமாக்கப் படாமலேயே நமக்கு வேண்டிய திருமணத்தைத் தள்ளிப்போடும் முயற்சி வெற்றி பெறுகிறது.
படிப்பு முடித்தவர்களுக்கு உடனுக்குடன் அரசாங்க வேலை: இதனாலும் துணை தேடல் காலம் அதிகரிக்கிறது.
ஆடி மாதம் பற்றி முன்னரே தெரிந்தவர்க்கு நம் விளக்கம் தேவை இல்லை.
சலுகைகள் ஒரு குழந்தைக்கு மட்டும்: ஒரு குழந்தைக்கு மேல் பெற்றுக் கொண்டவர்க்கு உத்தியோக, ஊதிய உயர்வு, மற்ற பிற அனுகூலங்களுக்குத் தடை. [ முன்பே தடா போட்டிருப்பது நல்லதோ?]
ஒரு குடும்பம் - ஒரு குழவி இது பற்றிய விவாதம் சற்று நீண்டதாக இருப்பதால் - பின்னர்.

4 comments:

Anonymous said...

தை மாதப் பிறப்பை தமிழ்ப் புத்தாண்டு
என்று அறிவித்தது போல் - பன்னிரண்டு
மாதங்களையும் ஆடி 01, ஆடி 02 ----
என்று அறிவித்துவிட்டால்?

Anonymous said...

நம் வீட்டு மாப்பிள்ளைகள் மற்ற விஷயங்களில் எப்படியோ இதற்கு ஒரு பரிகாரம் கண்டு பிடித்து விடுவர்.

Anonymous said...

முகூர்த்தம், கிரகப்பிவேசம் முதலியன செய்யக்கூடாது என்பதால் ஆடிப் போய் விடுவார்கள்.

தள்ளுபடி கொடுத்தே நம்மை பாதாளத்தில் தள்ள தள்ளிக் கொண்டு போய் விடுவார்கள்.

nerkuppai thumbi said...

திருமணம ஒருவரின் சொந்த விருப்பம் சம்பத்தப்பட்டது. அரசு வயதை நிர்ணயிப்பது சரி அல்ல; உடலியல், மனயியல் ரீதியாக முதிர்ச்சி அடையவேண்டும் என்ற காரணத்துக்காக இப்போது கீழ் வரம்பு இருப்பது சரி; நாளடைவில் கல்வியறிவு சதவீதம் பொதுவாக உயர்ந்த பின் அதையும் நீக்கி விடலாம். ஆனால் 30 என்றெல்லாம் ஆக்கக்கூடாது. நீங்கள் சொல்லியிருப்பது போல் சமூகத்தில் குற்றங்கள் பெருக அல்லது புதிய - அதாவது பொதுவாக ஒத்துக்கொள்ளப் padaatha வாழ்முறைகள் உருவாகலாம். அரசு தலையீடு கூடாது. It will unsettle the fragile applecart.

Post a Comment

இந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க!