Tuesday, July 21, 2009

ஒரு சேவை நூடுல்ஸ் ஆகிறது!

சிலபல நாட்களுக்கு முன்வரை தகவல் தொடர்புகளில் அதிகம் பேர் உபயோகித்த தபால் சேவை இப்போது கிட்டத் தட்ட அழியும் நிலைக்கு வந்து விட்டது...
தினசரி காலை 10.30 மணிக்கு மேல் தபால்காரரை எதிர்பார்ப்பது என்பது ஒரு சுகமான Thrill. இன்று யார் யாரிடமிருந்து தபால் வந்தது என்று தெரிந்து கொள்ளும் ஆர்வமும், சுவாரஸ்யமாக எழுதுபவர்கள் எழுதி இருந்தால் அதை ரசித்துப் படிக்கும் இன்பமும் போயே போச்சு. நிச்சயமா இந்தக் கால email ஐ விட ஒரு post card லயே நிறைய எழுதினார்கள். Post card, Inland Letters Bulk ஆக வீட்டில் வாங்கி வைத்து எழுதியதுண்டு. இப்போதெல்லாம் யார் தபாலில் எழுதுகிறார்கள்? 1940 களில் தபால்காரர் காலில் சலங்கையுடன் ஜல் ஜல் என்று சத்தம் எழுப்பிய படி ஒரு கையில் ஈட்டி (வழியில் ஆபத்துக்குப் பாதுகாப்பு) சகிதம் ஓடியே வருவாராம்....அப்பா சொல்வார். இப்போது தபால்காரர் கைகளில் Inland letter, card களைப் பார்க்கவே முடிவதில்லை. இருந்தாலும் ஒரு 10, 12 தேறுமா? ஏதோ மத சம்பந்தப் பட்ட book posts, Telephone Bills தான்...
பின்னர் வந்த காலங்களில் Telephone ஒரு முக்கிய இடத்தைப் பிடித்துக் கொண்டது. அதுவும் படிப் படியாக மாற்றங்களை சந்தித்து, அங்கொன்றும் இங்கொன்றுமாக இருந்த Land line Telephone கள் பிறகு நிறைய ஆகி, பின்னர் அது குறைந்து, Pager இல் தொடங்கி பின்னர் சில பேர் மட்டும் cell phone என்று ஆகி இப்போது எல்லார கையிலும் அலை பேசி... அதில் SMS லேயே பல தகவல் தொடர்புகள் முடிந்து விடுகின்றன.... லெட்டர் போஸ்ட் செய்து அது ஓரிரெண்டு நாட்கள் ஆகும் டெலிவரி ஆக! பிறகு பதிலெழுதுபவர் வேகத்தைப் பொறுத்து நம் கடிதம் சென்று சேர்ந்த விவரம் தெரிய இன்னும் ஓரிரு நாட்கள்... இப்போது? செல்லிலோ மெய்லிலோ அனுப்பிய உடனே டெலிவரி ரிப்போர்ட் உடனடியாக கைகளில்...! தெருவுக்குத் தெரு போஸ்ட் பாக்ஸ் இருக்கும். இப்போதெல்லாம் தப்பித் தவறி லெட்டர் எழுதி போஸ்ட் செய்ய வேண்டும் என்று நினைத்தால் போஸ்ட் பாக்ஸ் தேட வேண்டியதாக உள்ளது. தபால் அலுவலகங்களிலும் ஆட்கள் வர வேண்டி தபால் சம்பந்தப் பட்டவை தவிர என்னென்னமோ விற்கும் ஐடியா உள்ளதாம்..

12 comments:

Anonymous said...

தபால் அலுவலகங்களில் என்னென்ன விற்கலாம்?
சில யோசனைகள்:
ஓமப் பொடி.
பல்பொடி
க. த. சாதனங்கள்.

Anonymous said...

தபால் அலுவலகங்களை பொடி ஊறுகாய் வகையறாக்களால் நிரப்புவதை விட
ஊரில் இருக்கும் பெரிய கடைகள் சிற்றுண்டி சாலைகள் புகைவண்டி மற்றும் பஸ் நிலையங்களில் ஒரு கியாஸ்க் போட்டுவிடலாம்
இங்கு ஒரு கணினி இருக்கும். வரிசையில் இருப்பவர் தம் ATM Card கொடுத்து பணம் பெறுபவரின் விலாசம் தொகை முதலியவற்றை சொன்னால், இங்கிருக்கும் ஆப்பரேட்டர் பணத்தை அங்கிருக்கும் போஸ்ட் ஆபீஸ் சேமிப்புக் கணக்குக்கு மாற்றுவதுடன் அவரது கை பேசிக்கு ஒரு SMS-ம் அனுப்புவார் .....

Anonymous said...

mokkayargalE!
naanga thuglaklayE padichukarom.

kggouthaman said...

துக்ளக்கில் படித்துக்கொள்வதில் ஆட்சேபணை இல்லை.
ஆனால் அதில் உங்கள் கருத்துக்கள் அச்சேற ஒரு வாரம்
ஆகும் (அதுவும், உங்கள் கருத்து பிரசுரம் ஆக தேர்ந்தெடுக்கப்பட்டால்..)
ஆனால் இங்கு, உடனேயே நீங்கள் அச்சில் பார்த்து, ஆனந்தித்து,
நண்பர்களிடமும் பார்க்கச் சொல்லலாம் - நீங்கள் அனானியாக
இல்லாத பட்சத்தில்!

raman said...

In course of time, certain things, like akal vilakku for instance, will be overtaken by technical advancement. That is what happened to post office. Who would bother to communicate something in a post card when he can talk to the person concerned for one full minute for more or less the same price? After net banking, money orders will have to take a back seat, serving only rural population who are still aliens to the technology. Couriers have improved the quality of service much more than the regd post wallas. That is why Post Offices are taking up extra services like selling sundaikkai vaththal, collecting telephone or laundry bills etc.

Jawarlal said...

ஆனால் இந்த மாற்றத்தால் அஞ்சல் அலுவலகங்கள் ஈ ஒட்டுகின்றன என்று யாரும் நினைக்க வேண்டாம்.

போன மாதம் ஜெயா டி வி க்கு குறுந்தகடு அனுப்பப் போன போது வரிசையில் இரண்டு மணி நேரம் நிற்க வேண்டியிருந்தது.

பதிவுத் தபால்களும், பண அஞ்சல்களும், சேமிப்பு வங்கியும் ஜாம் ஜாம் என்று இயங்குகின்றன. குறைந்தது அஞ்சல் அட்டை மற்றும் உள்நாட்டுக் கடிதப் போக்குவரத்து மட்டுமே.

அரசாங்கத் தபால்கள் இன்னமும் அஞ்சல் அலுவலகங்கள் வழியாகத்தான் செல்கின்றன.

Kasu Sobhana said...

//குறுந்தகடு அனுப்பப் போன போது வரிசையில் இரண்டு மணி நேரம் நிற்க வேண்டியிருந்தது.//

நீங்கள் இரண்டு மணி நேரம் வரிசையில் நின்றதால் - அவர்கள் பிஸி என்று நினைக்க வேண்டாம்; தபால் அலுவலகங்களில், கவுண்டரில் இருக்கும் ஊழியர்கள்
அரட்டை அடிப்பதும், வீட்டுக்குப் போன் பேசுவதும் சம்பளக் கமிசன் பற்றி
விவாதிப்பதும் --- இருக்கையிலிருந்து எழுந்து போய் விட்டு -- சாவகாசமாகத்
திரும்பி வந்து சிடு சிடுப்பதும் -- நான் அடிக்கடி பார்த்திருக்கிறேன்; அனுபவித்திருக்கிறேன்!

Anonymous said...

oru kudumbaththinar pesa blog use pannaradhu kandippaaga ulaga saadanaidhaan. thodarattum.

Anonymous said...

Anony...
India is my country and all Indians are my brothers and sisters. So, we (all can) communicate using this blogspot.

Anonymous said...

Come to think of it,
the title is misleading ...
"Sevai" has lesser aocs.
"Noodles" have greater aocs.
(Anony, aocs = area of cross section)
Posted by:
Head Post Master - GPO

Anonymous said...

போஸ்ட் ஆபிசில் எல்லா கவுண்டரிலும்
வேலை இல்லாமல் இல்லை. வெஸ்ட்
மாம்பலம் தபால் அலுவலகத்தில் savings
bank கவுண்டரில் முச்சு விட நேரமில்லாமல்
தேனீ போல சுறுசுறுப்பாக வேலை செய்யும்
ஒரு பெண் அலுவலரை நாம் பாராட்டாமல்
இருக்க முடியாது.

மாலி

kggouthaman said...

//வெஸ்ட்
மாம்பலம் தபால் அலுவலகத்தில் savings
bank கவுண்டரில் முச்சு விட நேரமில்லாமல்
தேனீ போல சுறுசுறுப்பாக வேலை செய்யும்
ஒரு பெண் அலுவலரை நாம் பாராட்டாமல்
இருக்க முடியாது.//

"எங்கள்" பாராட்டுக்கள் -
அவருக்கும், அதைச் சொன்ன மாலிக்கும்!
Keep it up!!
ஆசிரியர் குழு

Post a Comment

இந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க!