செவ்வாய், 28 ஜூலை, 2009

இது எப்படி இருக்கு?

இன்றைய செய்தித் தாளில் படித்தது... நம்ம ஊர்லேருந்து போன நடிகர், இப்போதைய சமூக நீதித் துறை இணை அமைச்சர் நெப்போலியன் ராஜ்ய சபாவில் தெரிவித்துள்ள புள்ளி விவரம்: டெல்லியில் பிச்சைக் காரர்கள் நாளொன்றுக்கு சுமார் 15,000 ரூபாய் சம்பாதிக்கிறார்களாம். மறு வாழ்வு மையத்துக்குப் போக மறுக்கும் இந்த 58,570 பிச்சைக் காரர்களில் 4 பேர் post Graduate, 4 பேர் graduates, 22 பேர் +2 முடித்தவர்களாம். தத்துவம்: "பிச்சை போடுபவர்கள் இருக்கும்வரை பிச்சைக் காரர்கள் இருப்பார்கள்". இதுவும் அவர் சொன்னதுதான்.

7 கருத்துகள்:

  1. பிச்சை புகினும் கற்கை நன்றே என்பதைத் தவறாகப் புரிந்து கொண்டிருக்கிறார்கள் போலிருக்கிறது.

    http://kgjawarlal.wordpress.com

    பதிலளிநீக்கு
  2. kaRkak kasadaRak kaRpa, KaRRapin niRka kapparaiyudan.

    பதிலளிநீக்கு
  3. இப்போ எனக்கு பெரும் குழப்பம்.
    Engineering பட்டதாரியான நான்,
    கப்பரை ஏந்துவதா - அல்லது
    கப்பரை உற்பத்தித் தொழிற்சாலை
    ஆரம்பிப்பதா?

    பதிலளிநீக்கு
  4. நோட்டுக்கு வோட்டு விற்பவர்கள் இருக்கும் வரை,
    வோட்டுக்கு நோட்டு கொடுப்பவர்களும் இருப்பார்கள்
    என்றும் அவர் சொல்லியிருந்தால் நன்றாக இருக்கும்.

    பதிலளிநீக்கு
  5. வருந்தத் தக்க நிலை

    இரண்டு விஷயங்கள்: 1. பிச்சை எடுக்கக் கூடாது என்ற மனநிலையை உருவாக்க தவறி விட்டோம்.
    2. படித்த வர்களுக்கு வேலை வாய்ப்புகள் போதுமானவையாக இல்லை.

    பாத்திரம் அறிந்து பிச்சை இடு என தமிழ் ( பழமொழி ? ) கூறுகிறது
    எனவே, படித்து, வேறு பணி செய்ய இயன்றவராயிருந்தும் பிச்சை எடுக்க வந்தால் ஈயாமல் இருந்தால் அவர் அரிந்து உண்பதை நிறுத்தி இருக்கலாம்.

    பதிலளிநீக்கு
  6. I agree with Nerkuppai's view.
    The begging mentality emerges from
    laziness. People feel that making easy money is possible through
    1) Cinema.
    2) Politics.
    3) Begging.

    பதிலளிநீக்கு

இந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க!