புதன், 8 ஜூலை, 2009

மாலி கச்சேரி கேளுங்கள்!

Dear All,
28-6 -09( சண்டே) அன்று கிருஷ்ண கான சபையில் நடந்த T M krisna-
விஜய் சிவாவின் கர்நாடிக் jugal பந்தி, கர்நாடக இசையின் மணிமகுடத்தில்
ஒரு வைரமாக ஜொலித்தது . R.கே ஸ்ரீராம் குமார் vaயலின்.
அருண்பிரகாஷ் ம்ருதங்கம் புருஷோத்தமன் கஞ்சிரா. It is part of தி கிரேட் yagnaraaman july fest .

பந்தி என்றவுடன் முதல் நாள் சாப்பிட்ட சூப்பர் (reception ) dinner
ஞாபகத்திற்கு வந்தது. கல்யாண பந்தியுடன் கர்நாடிக் பந்தியை
ஒப்பிட்டு பார்த்தேன் அதனால் வந்த கற்பனை.

சிவா ஆரம்பித்த விறுவிறுப்பான விரிபோணி வர்ணம் (பால் பாயசம்)பந்தியில்
இன்னும் என்னென்ன அயிட்டங்கள் வரப்போகிறது என்ற ஆவலைத் தூண்டியது.

அடுத்து கிருஷ்ணாவின் 'ராம நன்னு ப்ரோவரா ' ஹரிகாம்போதி (பருப்பு நெய் )பரிமாறப்பட்டது.

Next கிருஷ்ணாவின் காமவர்த்தினி ராக ஆலாபனை (உருளை பொடிமாஸ் )தொடர்ந்து சிவாவின் 'ரகு வர நின்னு '(அவரை பொரியல் ) அய்யர்வாள் அயிட்டமாக பரிமாறப்பட்டது.

நெக்ஸ்ட்' நாயகி 'ஆலாபனை (krisnaavin புளிக்காத தயிர் பச்சடி ) தொடர்ந்து தீட்சிதரின் ரங்க நாயகம் பாவயே (அவியலாக) சிவா பரிமாறினார் சிறிது உப்பு தூக்கல்.

அடுத்த அயிட்டம் சிவாவின் பகுதாரி ராக ஆலாபனை - (ஆம வடை) அதை தொடர்ந்து "சதானந்த தாண்டவம்" - (வாழைக்காய் சிப்ஸ்) போன்று முறுகலாக பரிமாறப்பட்டது.

நெக்ஸ்ட் அயிட்டம் கிருஷ்ணாவின் தேவகாந்தாரியில்"வினராதா" - (பொன்னி அரிசி சோறாக) பரிமாறப்பட்டது. நடுநடுவில் சிவா உருக்கிய நெய் வார்த்தார்!
அடுத்த மெயின் அயிட்டம் தோடி ராக ஆலாபனை. சிவா கிருஷ்ணா இருவரும் மாறி மாறி (முருங்கைக்காய் & கத்திரிக்காய் சாம்பார்) ஊற்றினார்கள். தொடர்ந்து சியாமா சாஸ்திரியின் "நின்ன நம்மினானு" கீர்த்தனை - ஸ்வரம் பெங்களூர் பன்னீர் ரசமாக பரிமளித்தது.

அடுத்த அயிட்டம் கோபியர் கண்ணனை நையாண்டி செய்யும் conversation சுலோகம்- ராக மாலிகை
(போளி, நெய்,மாங்காய் ஊறுகாய்,பூந்தி, மிக்ஸ்சர்) . சிவா கிருஷ்ணா இருவரும் இந்த அயிட்டங்களில் excelled .
ரசிகர்கள் எதைவிட எது taste ஆக இருந்தது என்று சொல்லமுடியாமல் திணறி விட்டார்கள்.

அடுத்தது ராதிகா கிருஷ்ணா ஜெயதேவர் அஷ்டபதி (பகாளாபாத்)
நெக்ஸ்ட் திருப்புகழ் (உனதனை அன்பு ) Fruit Salad .
கடைசியாக மணிரங்குவில் 'மாமவ பட்டாபிராம' -(Ice cream )

எவ்வளவுதான் ருசியாக சாப்பிட்டாலும் தாம்பூலம் போட்டவுடன்
அதன் மணம் மட்டும் கடைசியில் நாவில் ருசிப்பது போல நாம்
katcheri முடிந்தவுடன் முணுமுணுக்கும் 'மங்களம்'
இப்படியாக 'jugal பந்தியை ' நேரிடையாக அரங்கில் சுவைக்க முடியாதவர்கள் வெளியில்
போடப்பட்டிருந்த சின்னத்திரையில் வாசனை பிடித்து சென்றார்கள்.

இந்த பந்திக்கு முந்தி சென்ற நான் 22 வது வரிசையில் சிரமப்பட்டு
ஒரு seat பிடித்தேன் (மெடிக்கல் சீட் கிடைத்த திருப்தி ) அரங்கை விட்டு
வெளியேற அரைமணி நேரம் ஆயிற்று.
IN a lighter vein :
அரங்கை விட்டு வெளி வந்த Crowd ஐ சுவர்க்கத்தில்
மஹா ராஜபுரம் சந்தானத்துடன் பார்த்துக்கொண்டிருந்த
yagnaraaman ' பாவிகள், நல்ல காசு கச்சேரியை, ஓசி கச்சேரி
ஆக்கி விட்டார்களே' என்று முணுமுணுத்தது காதில்
விழுந்தது.
IN reality :
கர்நாடக சங்கிதத்தில் புதுமைகளை புகுத்திய
சபா "secretary களின் secretary" ஆக இருந்த
YAGNARAMANUKKU , விஜய் சிவா - TM கிருஷ்ணா
Carnatic jugal Bandhi உண்மையிலேயே ஒரு சிறந்த
அஞ்சலி; இசை ரசிகர்களுக்கு ஓர் அரிய விருந்து.

மாலி

6 கருத்துகள்:

  1. atheppadi-bagaalaabaththukku ivvaLavu sidedishgaL?

    பதிலளிநீக்கு
  2. aanaalum - nalla muyarchi!
    Enna solgireergal?

    பதிலளிநீக்கு
  3. சூப்பர் மாலி சூப்பர் !
    மேலும் மேலும் எழுதுங்கள்;
    மீண்டும் மீண்டும்!
    கௌதமன்.

    பதிலளிநீக்கு
  4. கர்நாடக இசையை பற்றி வலைப் பதிவில் பேச அன்பர்கள் இருக்கிறார்கள் என்பதே மிக மிக மகிழ்ச்சியாக இருக்கிறது.
    தொடர்க. . : நெற்குப்பை தும்பி

    பதிலளிநீக்கு
  5. கிருஷ்ண கான சபா கச்சேரி பற்றி மாலி சொல்வதெல்லாம் சரி. ஆனால் வானுலகில் "படு பாவிகளா, டிக்கெட் கச்சேரியை இலவசமாக்கி விட்டீர்களே " என்று சொல்வது சந்தானம் அல்ல, திரு யக்ஞ ராமன் ஆவியாகத் தான் இருக்கும். புண்ணியவான் அந்தக் காலத்திலேயே நல்ல நல்ல கச்சேரிகளை மிக புத்திசாலித்தனமாக செலக்ட் செய்யப் பட்ட பக்க வாத்தியங்களுடன் வைப்பார். ஆனால், கேட்க மெம்பெர் அல்லாத மனிதர்கள் போய் டிக்கெட் கேட்டால் இருபது ரூபாய் டிக்கெட் இல்லை ஐம்பத்து தான் இருக்கிறது என்று பொங்கல் வைத்து விடுவார்கள். எல்லாம் ஸெக்ரெடரி ஆர்டர் தான் சார் என்பார்கள் சிப்பந்திகள்.

    பதிலளிநீக்கு
  6. எல்லா சபாக்களுமே டிசம்பர் (குளிர்) காற்று இருக்கும்பொழுதே
    தேற்றிக் கொள்பவர்கள்தாம்.!
    நல்ல கச்சேரிகளுக்கு - Minimum 100 max 1000 per 1 program
    என்பது சர்வசாதாரணம் ஆகிவிட்டதே!
    நாரத கான சபை வாசலில் சீசனில் காணப்படும் Kiosk கூட
    கொள்ளையாகத் தான் தெரிகிறது. Per MB அவர்கள் வாங்குவது பயங்கரமாக இல்லை?

    பதிலளிநீக்கு

இந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க!