Wednesday, July 15, 2009

I C I C I - u see!

இன்று காலையில் ஒரு எஸ் எம் எஸ்.
"தரமற்ற சீனப்பொருள்களை வாங்குவதை நிறுத்துங்கள்" என்று.
நம்மூரில் உற்பத்தி செய்த பொருட்களின் மீது 'சீனாவில் தயாரித்தது'
என்று போட்டுவிடுதனால் தான், சீனாவில் தயாரிக்கப் பட்ட மருந்து கூட
இப்பொழுதெல்லாம் 'இந்தியத் தயாரிப்பு' என்ற முத்திரையுடன் வருகிறது
என்கிறார்கள்.
முன்பு யூ எஸ் ஏ என்றால் உல்லாஸ்நகர் சிந்தி
அசோசியேஷன் என்பர். இப்பொழுது சீனா
என்றால் இந்தியா என்றால் சீனா ...[நிறுத்துங்கள்
உங்கள் புலம்பல்களை என்றொரு குரல் ..]
ஆகையால் தோழர்களே தரமற்ற இந்தியத்தயாரிப்புகளையே
வாங்கிப் பயன் பெறுங்கள் என்று சொல்லி விடை
பெறுகிறேன்.

6 comments:

nerkuppai thumbi said...

இந்தியப் பொருள்களின் தரத்துக்கு உத்தரவாதம் இல்லை என்றாலும், சீனப் பொருள்கள் இந்தியப் பொருள்களைவிடவும் தரம் தாழ்ந்தவை தான். இது காமெடி செய்யும் விஷயமல்ல. எனக் கருதுகிறேன். பெரும்பான்மையினர் கருத்தும் இவ்வண்ணமே இருக்கும் என நினைக்கி.றேன்

Anonymous said...

கருத்துக்கு நன்றி தும்பியாரே!
ஆ கு

Anonymous said...

//nerkuppai thumbi said...
இந்தியப் பொருள்களின் தரத்துக்கு உத்தரவாதம் இல்லை என்றாலும்
.....//
தும்பி அய்யா! அப்போ தரம் என்றால் என்ன?
எனக்குத் தெரிந்த விளக்கம் --
Quality is the totality of all the features and characteristics
that goes into the product or service.
-- 1/4.

Anonymous said...

காமெடி செய்யும் விஷயம் அல்ல என்று எதையும் ஒதுக்கக் கூடாது என்று எனக்குத் தோன்றுகிறது. அதுவும் இந்தியப் பொருள்கள் தயாரிப்பைப் பற்றி காமெடி செய்ய ரொம்பவே வாய்ப்பு இருக்கும்போது அதை தடை செய்தால் எப்படி? மாம்பழம் வாழைப் பழம் பழுக்க வைத்து விற்பதிலிருந்து மேம்பாலம் கட்டுவது வரை நம்மவர் செய்யும் காமெடிகளை கண்டு கொள்ளாமல் இருக்க முடியுமா?

ஐம்பது வருஷங்களுக்கு முன்பு நான் வேலை செய்த இடத்தில் செராங் பார்ட்டி என்று மாப்பிள்ளா மலையாள முஸ்லிம்கள் கனமான பொருட்களை தூக்கிச் செல்லும் வேலை பார்ப்பார்கள். ராட்சச அளவுள்ள எந்திர பாகங்களை பார்த்த மாத்திரத்தில் அதற்கு ஸ்லிங் எப்படி மாட்ட வேண்டும், கிரேனை எப்படி நிறுத்த வேண்டும் போன்ற விஷயங்களை சில நிமிடங்களில் தீர்மானம் செய்து, தூக்குதல், நகர்த்தல், ஏற்றல் இறக்கல் முதலிய பணிகளை அனாயாசமாக செய்து முடிப்பார்கள்.

அதைப் பார்த்துப் பழக்கப் பட்ட எனக்கு டில்லி பாலம் இடிந்து விபத்து நடந்தது விசனகரமாக இருக்கிறது.

Anonymous said...

நாம் வீட்டில் பொருள்களை நகர்த்தும்போது கட்டில் மேஜை முதலியவற்றை ஒரு பக்கம் தூக்கி
விட்டோம் என்றால் கீழ்ப்பக்கம் பிடித்திருப்பவருக்கு எல்லா பாரமும் போய் அவர் மிகவும் சிரமப் பட்டுப் போவதைப் பார்த்திருக்கிறோம். அதே மாதிரி ஒன்றுக்கு மேற்பட்ட பளு தூக்கிகளைக் கையாண்டவர்களையும் அவர்களை மேற்பார்வை பார்த்தவர்களையும் விட்டுவிட்டு ப்ராஜெக்ட் டைரெக்டர் மீது பழி

Ganesan said...

icici tamil translation theriyuma?

nan parka nan parka nan

Post a Comment

இந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க!