வியாழன், 2 ஜூலை, 2009

பெருங் காயம்!

நான் மடி கணிணியில் சுவராஸ்யமாக விசைப் பலகையைத்
தட்டிக் கொண்டிருந்தால் கீழ்க் கண்டவர்களுக்குத தாங்காது.
1) ஆகாஷ்
2) மீனாக்ஷி
3) விஷால்
in the same order....
நேற்று நான் என்ன பின்னலாம் என்று விரல்களால்
யோசித்துக் கொண்டிருக்கையில் - மேலே காணப்படும்
இரண்டாம் நபர் - என் விரல்களுக்கு ஓய்வு கொடுத்து,
கால்களுக்கு வேலை கொடுத்தார்.
"அங்கிடிகி போயி இங்குவ தீசுனி ரண்ட!"
நான் உடனே கிளம்பினேன் - பெரும் காயத்திலிருந்து தப்பிக்க!

பெங்களுருவில் - புற நகர்ப் பகுதிகளில், தமிழ், தெலுங்கு,
ஆங்கிலம், கன்னடம் - எது தெரிந்தாலும் சமாளித்து விடலாம் --
ஆனால்
முதல் மொழியை, கடைசி பட்சமாக வைத்துக் கொண்டால்,
முதுகு தப்பிக்கும் - அவசர நிலைக் காலங்களில்....
நான் - அருகில் உள்ள Departmental store சென்று
தேடு தேடு என்று தேடியும் - தேடல் காயம் ஆகவில்லை.
தேடியது கிடைக்க வில்லை.
சீருடை அணிந்த அந்த இளம் (கடைப்)பெண்ணிடம் சென்று,
"இங்குவ" என்றேன்.
அவள் என்னைப் பார்த்து புருவம் உயர்த்தினாள்.
சரி தெலுங்கு தெரியாது போலிருக்கிறது என்று நினைத்து,
அடுத்த மொழிக்குத் தாவினேன்.
"அசபோடீடா"
அவளுக்கு அதுவும் புரியவில்லை.
எனக்கு பெருங்காயத்திற்கு கன்னடம் என்ன என்று
தெரியவில்லை; தமிழில் கேட்க - முதுகு பயம்.
சரி அவளை - பெருங்காயம் எப்பொழுதும் காணப்படும்
இடத்திற்கு அழைத்துச் சென்று , பத்மா சுப்ரமணியன் பாஷையில்
கேட்டு விடலாம் என்று நினைத்து, கைகளை 'வா வா' என்று காட்டினேன்.
அதற்குள் அவள் - security guard ஐ அருகில் அழைத்து,
(அவருக்கு எல்லாவற்றையும் மொழி பெயர்க்கத் தெரியும் போலிருக்கிறது;
அதையும் விட முழி பெயர்க்கவும் முடியும் என்பதற்கேற்ப மோட்டாவாக
இருந்தார்)
அவரிடம் அவள் கன்னடத்தில் ஏதோ கேட்டு, என் பக்கம் கை காட்டி,
"இங்கே வா - அனைசிபியாடா " (என்று இந்தக் .........?!! கூறுகிறதே அதற்கு
என்ன அர்த்தம் என்று கேட்கிறாளோ?)
Security guard என்னருகே வேகமாக வந்தார்.
நான் பெரும் காயத்திலிருந்து தப்பிக்க மீண்டும்
E S C A P E!
நீங்கள் யாரவது SSP பெருங்காயம் - பச்சைக் கலர் டப்பாவில் இருக்கும் -
கிடைத்தால் வாங்கி குரியர் பண்ணுங்கள்.
நன்றி.


6 கருத்துகள்:

  1. அலுவலகத்தில் ஒருமுறை அதைப்பற்றிப் பேசிக்கொண்டிருக்கும்போது நாங்கள் LG-தான் வாங்குவோம் என்றபோது இன்னொருவர் அந்தக் கொரியர்கள் இதையும் தயாரிக்க ஆரம்பித்துவிட்டார்களா என்றார்.
    :-)

    பதிலளிநீக்கு
  2. ஹா ஹா - நல்ல ஜோக் பாலராஜன் கீதா. பகிர்வுக்கு நன்றி.

    பதிலளிநீக்கு
  3. நேத்துத் தான் வாங்கிண்டு வந்தேன், எல்ஜி கிடைக்கலை. வேறே ஏதோ கிடைச்சது பரவாயில்லைனு வாங்கினேன். சொல்லி இருந்தா சேர்த்து வாங்கி இருப்பேனே.

    பதிலளிநீக்கு
  4. என்னோட கமென்ட் ஏன் தெரிய மாட்டேங்குது?????????????

    பதிலளிநீக்கு
  5. ஹையோ பழசு! க்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்

    பதிலளிநீக்கு

இந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க!