வெள்ளி, 14 ஆகஸ்ட், 2009

இது ஏமாற்றுதல் ஆகுமா?

இது ஏமாற்றுதல் ஆகுமா என்று தெரிய வில்லை. ஆனால் திண்ணையில் உட்கார்ந்து கொண்டு போவோர் வருவோரிடமெல்லாம் ஏதாவது வம்படிக்கும் ஒரு நபரை தேசிகன் பழி வாங்கிய கதை.

வலிவலம் தேசிகர் பாலிடெக்னிக் பாண்டியன் தியேட்டருக்குப் பின்புறம் இயங்கி வந்த நேரம். பெருமாள் கோவிலிலிருந்து கீரைக் கொல்லைத் தெரு வழியே போய் ரயில்வே கேட்டைத் தாண்டிப் போக வேண்டும்.

தேசிகன் சிவில் எஞ்சினீரிங் படித்து வந்தார். ஒவ்வொரு நாள் சர்வே செய்யும் கருவிகளை வைத்துக் கொண்டு தெருவை வரைபடமாக்கிக் கொண்டிருப்பார் நம் நண்பர். அங்கு ஒத்தைக் கடை என்று சொல்லப் படுகிற வெற்றிலை பாக்குக் கடை வைத்திருந்தவர் நிறையக் கேள்விகள் கேட்டுக் கொண்டே இருப்பார். அதனால் மாணவர்களுக்கு அவர் மீது ஒரு வகையான aversion=(கு என்ன தமிழ் வார்த்தை?)

ஒரு நாள் தேசிகன் தன் புத்தகங்களுடன் ஒரு பெரிய நூல் உருண்டையை எடுத்து செல்வதைக் கண்ட கடைக்காரர், "என்ன தம்பி, நூல் என்ன காத்தாடி விடுவதற்கா?" என்று கேட்க, " இல்லை, டேப் கொண்டு வர மறந்து விட்டேன். இங்கிருந்து அடுத்த சந்து முனை வரை அளந்து எழுத வேண்டும் என்றதும் கடைக்காரர் உதவ முன் வரவும், அது தான் சாக்கு என்று தேசிகன் நூல் முனையை அவரிடம் கொடுத்து விட்டு சந்து திரும்பி, அங்கிருந்த ஒரு மின் கம்பத்தில் கட்டி விட்டு மாயமாகி, பின் 4-5 மாதங்களுக்கு அந்தத் தெரு வழியே போவதையே நிறுத்தி இருந்தார்!
கடைக்காரரைத் தெரிந்தவர் யாராவ்து கேட்டு சொல்லுங்களேன் அவர் மீள எவ்வளவு நேரம் ஆயிற்று என்று.

4 கருத்துகள்:

  1. ஊர் பெயர் நாகப்பட்டினம் என்று தெரிகிறது;
    ஆனால் ஒத்தைக் கடை?
    நெல்லுக் கடை மாரியம்மன் கோவிலுக்குப் பக்கத்தில் இருந்ததா - அல்லது வேறு இடமா?
    :: நாகையன்::

    பதிலளிநீக்கு
  2. ஒத்தைக் கடை என்பது கடைத்தெரு போன்று பல கடைகளின் கூட்டு என்றன்றி அவரவர் வீட்டுத் திண்ணைகளில் வீட்டில் இருப்பவர்களால் நடத்தப் பெறும் கடைகளுக்கு ஒரு சுட்டு.

    பதிலளிநீக்கு
  3. புல்லுக் கடை புண்ணிய கோடியைக் கேட்டால் தெரியுமோ என்னவோ..,.,.

    பதிலளிநீக்கு
  4. இது முற்றிலுமாக The compleat practical joker என்ற புத்தகத்தில் கூறப்பட்டுள்ள ஒரு யுக்தியாகும். ஆலன் ஸ்மித் என்ற ஆசிரியர் எழுதிய அந்தப் புத்தகம் மிக மிக சுவாரசியமானது. கிடைத்தால் வாங்கிப் படிக்கலாம். நான் அது இரண்டு ரூபாய்க்குக் கிடைக்கும்போது 1958 சமயம் வாங்கிப் படித்தேன். பிறகு அது எங்கே போனதோ தெரியவில்லை.

    yraman

    பதிலளிநீக்கு

இந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க!