Sunday, August 9, 2009

Naadi Josiyam Surprises.

என்றும் நமது மனதைக் கவரும் விஷயங்களில் இரண்டு நாடி ஜோசியம், அடுத்தது இறந்தவருடன் தொடர்பு. இதில் எனக்கு நேரடியாக அனுபவம் இல்லை என்றாலும் first hand information  என்பார்களே அது நிறையவே உண்டு. நான் சொல்வது எல்லாம் நடந்தது என்றோ உண்மை என்றோ சொல்லும் நிலையில் நான் இல்லை. ஆனால் மிகவும் நம்பத் தகுந்த நபர்கள் இவற்றை எனக்குச் சொன்னார்கள் என்பதை உறுதி செய்கிறேன்.

முதலில் நாடி ஜோசியம். வெறும் கட்டை விரல் ரேகைப் பதிவை வைத்துக் கொண்டு பிரமிக்கத் தக்க வகையில் கடந்த காலத்தை மட்டும் இன்றி கொஞ்சம் எதிர் காலத்தையும் கணித்து தமக்குச் சொல்லப் பட்டதாக என் நெருங்கிய உறவினர் சொன்னார். ஒரு பௌண்ட் நோட்டில் கவிதை யாக எழுதப் பட்ட ஜோசியங்களை எனக்குக் காட்டினார். நான் பிரமித்து முக்காலும் உண்மை.

இன்னொருவர் Overseas Communication Service ல் வேலை பார்த்த தம் உறவினர் பற்றிய நாடி " கடல் தந்தி விடுதூது பணி புரிவான் " என்று வந்ததாககே கூறி என்னை வியப்பிலாழ்த்தினார்.

மற்றும் ஒருவர் தம் பெயர் செல்வம் என்று எண்ணிக் கொண்டு நாடி பார்த்த பொழுது செல்லம் என்று வந்ததாகவும் பிற்பாடு தம் தாத்தாவிடம் சொன்ன பொழுது உனக்கு செல்லப் பெருமாள் என்று தான் முதலில் பெயர் வைத்தோம் என்று சொன்னதாகவும் கூறி ஆச்சரியப் பட்டார்.

எல்லாம் பாசிடிவ் ஆக சொல்கிறேனே நான் நாடி ஜோசியருக்கு ஏஜென்ட் ஆக இருப்பேனோ என்று எண்ணிவிடாதீர்கள்.  கடைசியாகச் சொல்லும் அதிசயத்தையும் கேளுங்கள்.

என் உறவினர் ஒருவர் பல வேலைகளை பார்த்தபின் இப்போது நாடி ஜோசிய ஏஜென்ட் ஆக இருக்கிறார். அவர் சொன்னது: " எல்லாமே டுபாகூர். சுத்த பிராடு."

ஆக  யாரை நம்புவது ஆண்டவா!
y.raman

1 comment:

kg said...

நண்பர் ஒருவர் ஒரு முதியவருடன் வந்தார். சார் முகம் பார்த்து பலன் சொல்வதில் நிபுணர். உங்களுக்கு வேண்டுமானால் பார்க்க சொல்லவா? என்றார். எனக்கு ஜோசியத்தில் என்றும் நம்பிக்கை கிடையாது. மறுத்து விட்டேன். பிறகு ஹபிப் உல்லா சாலையில் ஒரு வீட்டை வாங்குவதற்கு ஆவணங்களை வாங்க வந்திருக்கிறார் சென்று வருகிறோம் என்று கூறி விட்டுப் போய் விட்டார்.

ஒரு நான்கைந்து நாட்கள் கழித்து நண்பரை மீண்டும் சந்தித்த போது, kg, என்ன ஆயிற்று தெரியுமா உங்களுக்கு? அன்று ஒரு பெரியவரை அழைத்து வந்தேனே நினைவிருக்கிறதா - அவர் ௦௦ வீட்டில் போய் பார்த்து விட்டு டோக்கன் அட்வான்ஸ் என்று ஒரு பெரிய தொகையைக் கொடுத்து ஆவணங்களின் பிரதிகளை அவருடைய வக்கீலுக்குக் காட்டுவதற்காகப் பெற்று வந்தார். வக்கீல் எல்லாம் சரியாக இருக்கிறது என்று சொன்னதும் வீட்டுக்காரரிடம் ஒப்பந்தம் போட்டு விடலாம் என்று இருவருமாக நேற்று போனோம். ஒரு மீசைக்காரர் வந்து கதவைத் திறந்து என்ன வேண்டும் என்று கேட்டதும், இங்கு சதாசிவம் என்று நாங்கள் ஆரம்பிக்கும் முன்பே "நான் தான் அது - உங்களுக்கு என்ன வேண்டும்?" என்றார். இல்லை சதாசிவம் என்று வேறு இன்னொருவரை இங்கு சந்தித்தோம் என்று நான் ஆரம்பித்ததும், அவர் சனிக் கிழமை காலி செய்து விட்டுப் போய் விட்டார். அட்வான்ஸ் பணத்தை வட்டியுடன் கொடுத்தால் தான் காலி செய்வேன் என்று அடம் பிடித்துக் கொண்டிருந்தவர் என்ன காரணத்தினாலோ திடீர் என்று காலி செய்து விட்டார். DSP என் நண்பர் அவரிடம் சொல்லி வைத்திருந்தேன். அவர் யாரையாவது அனுப்பி மிரட்டினாரோ என்னவோ - அவருக்கு நன்றி தெரிவிக்க வேண்டும். ஆமாம் உங்கள் வீட்டில் எத்தனை பேர்? எங்கே வேலை பார்க்கிறீர்கள் என்றெல்லாம் ஆரம்பிக்க, DSP யின் நண்பருடன் நமக்கென்ன வாக்கு வாதம் என்று திரும்பி விட்டோம் என்றார்.

இப்பொழுது சொல்லுங்கள் "நாடி ஜோஸ்யம் போன்றவை சொந்த உபயோகத்துக்கு வராதோ?"

Post a Comment

இந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க!