புதன், 30 செப்டம்பர், 2009

ஜெயிக்க 100 வழி

"என்னடா இப்பதான் போனே...அழுதுகிட்டே வரே...."
"பாய் அடிசிட்டான்மா..."
"ஏண்டா...நான் அடிசுடுவேன்னு வீரமாப் போனியே..."
"என்னம்மா பண்றது? என் கூட வந்தவங்க சரி இல்லைம்மா..."
"விடுடா...மஞ்சமாரி கிட்டயாவது ஜாக்ரதையா இரு..அடிச்சுடு..."
"இல்லம்மா...மழை வந்ததால ஆளுக்கு ஒண்ணு எடுத்துகிட்டோம் அம்மா..."
"அப்புறம்.. இப்போ என்ன பண்றது...என்னடா இது...முதல்லயே பாயை அடிச்சுருக்கலாம் நீ..."
"விடும்மா...இன்னமும் கூட வழி இருக்கு...."
"இன்னமுமா...? எப்படிடா? உன் சான்ஸ் தான் முடிஞ்சு போச்சே...ஒண்ணுதானே பாக்கி? அதுலயும் ஒண்ணும் பண்ண முடியாதே..."
மிச்சப் பேர் எல்லாம் அடி வாங்கினா வாய்ப்பு இருக்கும்மா..."
"எப்படி?"
"மஞ்சமாரியும் பாய் கிட்ட அடி வாங்கணும்..."
"போதுமா?"
"ம்ஹூம்...சேப்பு சட்டைக் காரங்களோட நான் அதிகமா அடிச்சிடணும்..."
"முடியுமா?"
"எனக்குத் தெரியலயே..."
"நீ ரெண்டாவதா அடிச்சா,,,?"
"நான் 85 அடி கூட அடிக்கணும்..."
"அங்க... பாய், மஞ்சமாரில...?"
"பாய் 20 கூட அடிக்கணுமாம்..."
"பாய் இருக்கா...."
"ஏம்மா..?
"ப்ராண்டதான்...போடா போக்கத்தவனே...உன் முயற்சில ஜெய்டான்னா.. வேற எவனோ தப்பு பண்ணனுமாம்...நீ அங்கப் போய்டுவியாம்... போடா புண்ணாக்கு..."

Who Should come up in AP?

Who Should come up in AP?
'SO' asked me this question - through SMS.
I replied her, if A wins - I have no chance to see a semi.
On the other hand, if P wins - I can become a contender for semi.
SO thought that I had gone nuts.
But I pray for P to win - since that is the only chance for I ! 
I yo - A iyo - P oyyaa !!
(This post has more relevance to ICC - than the National game of India - which is politics!)

செவ்வாய், 29 செப்டம்பர், 2009

வலை மொழிகள்!

# போஸ்ட் பாதி; கமெண்ட் பாதி!
# கருத்துத் திருட வேறு வலை மேய்ந்தால் அங்கே நம்ம நேற்றைய வலைக் கருத்தை இலக்கணப் பிழையுடன் - படிச்சது போல ...
# ஒரு follower blog ஐப் பார்த்துச் சிரித்ததாராம்  இரண்டு follower blog ஆசிரியர்!
# ப்ளாகியவன் போஸ்டைக் கெடுத்தான்; கமெண்டியவன் கருத்தைக் கெடுத்தான்.
# ப்ளாகின் அழகு பாலோவேர்ஸ் எண்ணிக்கையில் தெரியும்.
# ஆடியோவும் வீடியோவும் கண்ணெனத் தகும்.
# ஆயிரம் போஸ்ட் போட்டவன் அரை பிளாகர் 
# ஆயிரம் கமெண்ட் போட்டவன் அரை வாசகன் 

அவர் நினைத்தாரா இது நடக்கும் என்று?

இங்கிலாந்து - நியுசிலாந்துக்கு எதிராகத் திணறிக் கொண்டிருக்கு ---
அதுல பாருங்க - England 27 for 3 என்று தடவிக் கொண்டிருந்த நேரத்தில் 
Collingwood - ஒரு ஓவரின் கடைசி பந்தை மேல் பக்கமாகத் துழாவி விட்டு -- ஆஹா ஓவர் முடிஞ்சிடுச்சேன்னு எதிர் திசை நோக்கி நடக்க ஆரம்பிக்க - பந்து கொண்டு நியூசிலாந்து வி கீ -- பளாரென்று ஸ்டம்பில் அடித்து பெயில் எகிற -- முதலாவது அம்பயர் இரண்டாவது அம்பயர் இருவரும் தலையை சொறிந்து -- மூன்றாம் சுழியிடம் (அப்பாதுரை மன்னிக்க) கேட்க, அந்த மூன்றாம் அம்பயர் 'அவுட்டு' என்று கூற -- திகைத்த CW - அங்கேயே நின்று வெட்டோரியிடம் முறையிட -- வெட்டோரி குழுவினருடன் - ஆலோசித்து -- கடைசியில் பெரிய மனசு பண்ணி -- CW வை தொடர்ந்து ஆட விட்டார். 
ஆக, வெட்டோரி - கோடாரியாகி, 'மர'த்தை வெட்டாமல் - விட்டாரே!

INDIA vs. & ADVT., ஒரு புலம்பல்

முதல் Match -இல் ஷோயப் மாலிக் சொல்லி சொல்லி Point திசையில் Four Four ஆக விளாசிக் கொண்டிருந்தபோது அந்த இடத்தில் ஒரு Fielder நிறுத்திவைக்க தோன்றாதது ஏன்? 'கம்மேன்டி'க் கொண்டிருந்த வாசிம் அக்ரம் கூட கேட்ட கேள்வி இது. Cool கேப்டன் அல்லது....
நீண்ட நாட்களாய் Form இன்றி தவித்துக் கொண்டிருக்கும் ஆட்டக் காரர்களை Form -க்குக் கொண்டுவருவது நம் வாடிக்கை. அதையேதான் அன்று ஷோயப், யுஸுப் விஷயத்திலும் நடந்தது.
நம்மவர்கள் Batting செய்ய வந்தபோது நடந்த கூத்து வழக்கமானது.
அடுத்த ஆட்டத்தில் தொடர்ந்து ஏமாற்றிக் கொண்டிருந்த யுஸுப் பதானை மாற்றினார்கள், சரி. ரன்கள் வாரி வாரி வழங்கிக் கொண்டிருந்த இஷாந்த் ஷர்மாவை ஏன் மாற்றவில்லை? எட்டாவது ஓவர் வரை கட்ட்டுப்பாட்டுடன் இருந்த ரன் சேகரிப்பை மூன்று ஓவர் முப்பது ரன்கள் என்று வாரிக் கொடுத்து போக்கையே மாற்றிய புண்ணியவான்.
விராத் கொஹ்லி என்று ஒரு புண்ணியவான்...கைக்கு வந்த காட்சைக்கூட ஏன் பிடிக்கலை என்று கேட்டால், 'என்னை ரொம்ப நல்லவன்னு பாண்டிங் சொல்லிட்டார்' என்று அழுதுடுவார் போல..பந்து தாண்டி சென்றதும் விழுந்து நமஸ்காரம் பண்ணி எழுகிறார்...
ஒரு காட்சை Fielder பிடிக்கப் போகும் தருணம்...பிடித்தாரா என்று கூட சரியாகப் பார்க்க முடியாது. உடனே விளம்பரத்துக்கு ஓடி விடுவார்கள் சானல் மகராசன்கள். வருமானமாம்...எனக்கொரு சந்தேகம்...தொலைக் காட்சி விளம்பரத்தைப் பார்த்து யார் பொருட்கள் வாங்குகிறார்கள்? சில சமயம் திரும்ப திரும்ப வரும் விளம்பரத் தொல்லையால் அந்தப் பொருள் கட்டாயம் வாங்கக் கூடாது என்று வைராக்கியம் கூட வருகிறது. மேலும் பல விளம்பரங்களில் சம்பந்தம் இல்லாத காட்சிகளால் புரிவதே இல்லை. நொடிகளுக்கு காசு கொடுத்துப் பேசுவதற்கும் இரண்டு பெண்களுக்கு நடுவில் அமர்வதற்கும் என்ன சம்பந்தமோ? ஷூ விளம்பரத்தில் சிக்கன ஆடை அணிந்த பெண் எதற்கோ? குறிப்பிட்ட பற்பசையை உபயோகித்தால் கௌரவமான (?) போலீஸ் பெண்மணி உங்கள் பின்னாடியே ஜொள்ளுடன் வந்து விடுவாராம்.என்னங்க இது?

திங்கள், 28 செப்டம்பர், 2009

சரஸ்வதி பூஜை

கம்பியூட்டர் - லாப் டாப் -- நோட் புக் -- எல்லாத்துக்கும் நேற்றே பூஜை முடிந்திருக்குமே!
இன்னிக்கி விஜயதசமி ஆச்சே ---
எல்லோரும் இன்றைக்கு - பி சி - லாப் டாப் -- சிஸ்டம் - இன்டர்நெட் --
எல்லாத்தையும் பயன் படுத்தி -- 
நம் வலைக்கு போஸ்ட் - மற்றும் பின்னூட்டம் எல்லாம் 
எழுதுங்கள்.
சனிப் பெயர்ச்சியால் - இந்தியன் கிரிக்கட் டீமுக்கு - நல்ல பலனா இல்லையா என்பது --
இன்று மஞ்சள் உடை அணிந்தவர்களிடம் அடி / மிதி படுகிறார்களா அல்லது 
கொடுக்கிறார்களா - என்பதில் தெரியும். இப்பொழுது மஞ்சள் ஆடை மக்கள்
இரண்டு விக்கெட்டுகள் இழப்பிற்கு தொன்னூற்றொன்பது.
வாழ்க எல்லோரும் ---

சனி, 26 செப்டம்பர், 2009

கருப்பு காக்கையும் பச்சை முடியும்

1951-52 வாக்கில் சிவாஜி நடித்து முதல் படம் "பராசக்தி" வந்தது. மு.க வசனம். படம் பிய்த்துக்கொண்டு ஓடி நல்ல வசூல்.  அதில் சிவாஜிக்காக சிதம்பரம் ஜெயராமன் பாடிய காக்கா பாட்டு ரொம்ப பிரபலம். அதை பட்டி தொட்டிகளில் எல்லாரும் பாடிக் கொண்டாடுவர்.  அதில் இரண்டு வரி கீழே தருகிறேன்.


"பட்சி ஜாதி நீங்க எங்க பகுத்தறிவாளரைப் பார்க்காதீங்க,
பட்சமாயிருங்க, பகிர்ந்துண்டு வாழுங்க, உங்க பழக்கத்தை மாத்தாதீங்க.."

பாடல் ஆசிரியர் பாவலர் பாலசுந்தரம் என்று நினைவு. கதையும் அவருடையதுதான். .
இந்த பாடலை மிகுந்த உற்சாகத்துடன் பாடிய எங்கள் நண்பர் குழுவில் ஒருவர் பட்சமாயிருங்க என்ற வார்த்தையை மா வுக்கு பதிலாக ம போட்டு பாடினார்.  அதைக் கேட்டுவிட்டு ரொம்ப சீரியஸ் ஆக முகத்தை வைத்துக்கொண்டு எம் குழு நண்பர் ஒருவர் " மயிர் சாதாரணமாக கருப்பு அல்லது வெள்ளையாகத்தான் இருக்கும்.  பச்சை மயிர் நான் பார்த்தது இல்லை. வார்த்தையை சரியாகப் பாடு ஒரு கால் நரைச்ச மயிரோ என்னவோ " என்று சொல்லிக் கலகலப்பு ஊட்டினார்.

வாக் தி டாக்!


கடந்த எட்டு வருடங்களாக காலையில் நானும்நண்பர் ஷ்யாமும் சுமார் ஒரு மணி நேரம் நடப்போம்ஷ்யாம் வீடடில் காபி குடித்துவிட்டு நடக்கத் தொடங்குவோம்ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு மாதிரி அமையும்சற்று சீக்கிரம் செல்வோம் என நினைத்தால் எல்லார் வீட்டிலும் பெருக்குகிறோம் என்ற பெயரில் தூசியை பறக்கவிட்டு எங்கள் தும்மலை பெருக்குவர்ட்ராஃபிக் அதிகம் இருக்காது என்ற கணிப்பில் வண்டிகள் வெகு வேகமாகக் கண்டபடி செல்லும்சென்ற வாரம் அந்தக் காலை வேளையில், ஒரு பெண், அப்பாவுடன் கார் ஓட்ட கற்றுக் கொள்கிறேன் என்று ஒரு திருப்பத்தில் தேமே என்று வந்து கொண்டிருந்த பேப்பர் போடும் பையனின் சைக்கிளில் மோதிவிட்டாள்நாங்கள் அந்த பையனின் பக்கத்தில் வந்து கொண்டிருந்தோம்சற்று தப்பியிருந்தால் எங்கள் மேலும் இடித்திருப்பாள்இதில் கொடுமை என்னவென்றால் கார்க்காரர் டேமேஜ் ஆன சைக்கிளுக்கு 50 ரூபாய் கொடுத்து எஸ்கேப் ஆகிவிட்டார்அடிபட்ட பையன் சிதறிய பேப்பர்களை சேகரிப்பதில் முனைப்பாகிவிட்டான்பாவம் அப்பாவிப் பையன்!. சாலையில்நடப்பவர்களுக்கு உள்ள அசௌகர்யங்களில் இதுவும் ஒன்றுநாம் பாட்டுக்கு நடக்கிறோம் என்று இல்லாமல் நாலா பக்கமும் பார்க்கவேண்டும்காலையில் நிதானமாக எழுந்து சற்று லேட்டாக போனால் காலை வெய்யில் கூட சுட்டெரிக்கும்!
     நாங்கள் நடப்பதற்கு தேர்ந்தெடுதத ஏரியா அசோக நகர் மே.மாம்பலம் பார்டர் சாலைகள்நாங்கள் நடக்க காரணம் உடல் எடை குறைப்பு/அதிகரிப்பு ஆகாமல் இருக்க. .ஷ்யாமும் நானும் மாட்ச் ஆனதற்கு நாங்கள் நீண்ட கால நாகை நண்பர்கள் என்ற காரணம் மட்டுமில்லைஷ்யாம் நிறைய பேசுவார்நான் நிறைய கேட்பேன் தவிர இருவருக்கும் டயபெடிஸ் உண்டு!! பேசாமல் வாக் செய்ய வேனண்டுமென்று சிலர் சொல்வார்கள்ஷ்யாம் நிறைய்ய செய்திகள் சொல்வார்டாபிக் இது அது என்று கிடையாதுதெரு கிசுகிசுஆஃபிஸ் கிசு கிசுபாலிடிக்ஸ் என்று எல்ல விஷயங்களையும் அலசுவோம். inspiration for walk is talk! மற்ற நேரங்களில் வெளியில் போனால் ஊர் சுற்றுகிறாயென்னும் வீட்டினர், காலையில் நடந்தால் ஒன்றும் சொல்வதில்லை
     இப்போது நிறைய பேர் வாக் செய்கிறர்ர்கள். டாக்டர்கள் சர்வ ரோக நிவாரணியாக இதை பரிந்துரைப்பதாலும்அதிக செலவில்லா சமாச்சாரம் என்பதாலும்ஒருவிதமான தப்புதல்(escape) காரணி என்பதாலுமோ(?) வயதானவர்கள் பெரும்பாலும் துணைவியருடன் வருகிறார்கள்அவர்களைப் பர்ர்த்தால் நமக்கும் உத்வேகம் வரும்வழக்கமாக நடப்பவர்களைப் பார்க்கும்போது உடனே பேசமாட்டோம்சில காலம் சென்று முறுவலித்து பின் ஹெல்லோ சொல்லும் அளவிற்கு கடந்த பின் அளவளாவலாம் என்ற ஸ்டேஜ் வரும்போது அனேகமாக இருவரில் ஒருவர் வர இயலாமை ஏற்பட்டுவிடும்இரயில் ஸ்னேகிதம் போல்தான் இந்த வாக் ஸ்னேகமும்!
        சாலையில் நடப்பவர்களைவிட பார்க்குகளில் உலாத்துபவர்கள் சற்றே வித்யாசப்படுவார்கள். எப்படி? இவ்வளவு சுற்றுதான் என்று கணக்கிட்டு நடப்பர்வண்டிகள் தொந்திரவு இல்லாததால் ஹெட்செடடுடன் நடை பழகுவர்நடக்கையில் மீண்டும் மீண்டும் ஒருவரை கடந்து செல்கையில் பார்க்க வேண்டியிருப்பதால் இவர்கள் இளமுறுவல்கூட காண்பிக்கமாட்டார்கள்.
        சில பெரியவர்கள் சற்றே அசட்டு தைர்யத்துடன் வயதுக்கு பாந்தமில்லாத பயிற்சிகளை செய்வார்கள். சொன்னாலும் ஒப்பபுக்கொள்ளமாட்டார்கள்அவர்கள் வேகமாக தலையை சுழற்றும்போது எங்கே தலைசுற்றி மயக்கமாகப் போகிறார்களோ என்று பயம் வரும்
    வயதான பெண்களும் காலையில் பார்க்குக்கு வருவார்கள். அவர்கள் சற்றே கூச்சத்துடன் சிறார்களுக்கான ஊஞ்சலில் அமர்ந்து ஆடுவார்கள்இளமைக்காலத்திலோசிறு பிராயத்திலோ நேரமோசுதந்திரமோ இல்லாமல் இருந்திருப்பார்களோஅவர்கள் ஒருவருக்கு ஒருவர் அளிக்கும் அட்வைஸ்களைத் தொகுத்தால் பல டீவி மெகா சீரியல்களுக்கான கரு கிடைத்துவிடும்தொடர்ந்து வாக் போவதால் அங்கு வருபவர்களைப்பற்றி ஓரளவிற்கு அனுமானம் உண்டாகும்வெவ்வேறு பென்சுகளில் அமர்ந்து செல்லில் உரையாடியவர்கள் (பிறர் யாரும் அறியமாட்டார் என்ற நெருப்புக்கோழி நம்பிக்கைசில காலத்திற்குப் பின் கைகோர்த்து செல்வர்.. வாழ்த்துக்கள்! பார்க்கில் பிறிதோரிடத்தில் RSS ஷகா நடக்கும்சிறுவர்களை எப்படி கவ்ர்ந்து அவர்கள் இயக்கத்தில் ஈடுபடுத்துகிறார்கள் என்பது புரியாத புதிர்.


சில வருடங்களுக்கு முன் ஸைக்கிளில் அருகம்புல் ஜூஸ் கொண்டு வந்த பெண்மணி, இன்று மாருதி வானில் பல வேறு பாத்திரங்களில் கலர் கலரான திரவங்களை கொண்டு வந்து வியாபாரம் செய்கிறார்அவர் எங்கு புல் வளர்க்கிறார்எப்போது புல் பறிக்கிறார்?? எப்போது அரைக்கிறார்?? நல்ல தண்ணீர்தானா?? என்றெல்லாம் கேள்விக் கணைகள் மனதில் தோன்றினாலும் மக்கள் அருகம்புல் ஜூஸ் குடித்தால் உடம்பிற்கு நல்லது என்று தீவிரமாக நம்புவதால் மேற்கொண்டு ஆய்வதில்லை!
தினமும் நடந்து பழகி விட்டால் பின் ஒரு நாள் வாக்கிங் போகாவிட்டால் கூட ஒரு வெறுமை தோன்றும்!
with love and affection,
ரங்கன்.






வியாழன், 24 செப்டம்பர், 2009

ஒட்டுக் கேட்ட அனுபவம்.

அண்மையில் ஒரு ஐந்து நட்சத்திர மருத்துவ மனைக்குச் சென்றிருந்தேன். நான் அனுப்பப்பட்ட பகுதியில் ஒரு இருபது வயதுப் பெண் பொறுப்பில் இருந்தாள் நான் வெளியில் காத்திருக்கும் வேளையில் ஒரு இளைஞன் அவளை வெளியே அழைத்து அரட்டை அடிக்க ஆரம்பித்தான்.  சரிதான் காதலன் காதலி சம்பாஷணையைக் கேட்கும் அரிய வாய்ப்பு என்று எண்ணிக் கொண்டேன். நிறையப் பேசிக்கொண்டிருந்தார்கள். அது என்ன என்று சொல்வது சரியல்ல.  இடையில் தற்செயலாக அந்தப் பெண்ணின் காலில் மெட்டி இருந்தது என் கண்ணில் பட என் கண்ணோட்டம் திடும் என்று மாறியது.  ஐயோ பாவம், கணவன் மனைவி வீட்டில் பேசிக்கொள்ள சந்தர்ப்பம் கிடைக்கவில்லை போல் இருக்கிறது இங்கு வந்து சல்லாபம் செய்கிறார்கள் என்று எண்ணிக் கொண்டேன்.
ஊம். நீ ரொம்பப் படிச்ச பொண்ணு என்று அந்த இளைஞன் கிண்டலாகக் கூறியதைக் கேட்டதும் எனக்குள் மீண்டும் ஒரு கேள்வி. (இதென்னடா புதுக் குழப்பம்? ) அண்ணாத்தே இந்தக் கிண்டல் எல்லாம் வேண்டாம். என்று செல்லமாக அவன் முதுகில் அவள் தட்டியதும் என் குழப்பம் இன்னும் அதிகம் ஆகியது.  ஒருவேளை அண்ணன் தங்கையோ? ஆனால் பேச்சின் உள்ளடக்கம் அப்படி இல்லையே! சரி பாக்க வரப்போறே என்றால் முதல்லேயே போன் பண்ணிட்டு வா, திடும் என்று வராதே என்று சொல்லி அந்தப் பெண் தன வேலையை கவனிக்கப் போனாள். அவள் செல்வதை நேசமாகப் பார்த்தவாறு அந்தக் கணவன், அல்லது அண்ணன் அல்லது கள்ளக் காதலன் (?) மெதுவாக வெளியேறினான்.
என் கண்ணோட்டத்தை மாற்றியது இரண்டு விஷயம். ஒன்று காலில் அணிந்திருந்த மெட்டி.  அடுத்தது அண்ணாத்தே என்ற விளி.  இப்போதெல்லாம் மெட்டி அணிவதற்கும் திருமணம் ஆவதற்கும் தொடர்பு இல்லையோ.  அண்ணாத்தே என்ற பதம் யாருக்கு வேண்டுமானாலும் பயன் படுத்தலாமோ.  வித விதமான கற்பனைகளுக்கு இடமளிக்கும் இந்த நிகழ்ச்சி எனக்கு ஒரு புதுமையாகப் பட்டது.

ராமன்

புதன், 23 செப்டம்பர், 2009

பேச்சு.

சிலர் பேசிக் கொண்டே இருப்பார்கள்.
சிலர் கேள்வி கேட்டால் மட்டும் பதில் சொல்வார்கள்.
சிலர் என்ன subject கொடுத்தாலும் அதில் உடனே பேசத் தொடங்கி விடுவார்கள்.
சிலர் பேசவே மாட்டர்கள்.
என்ன subject கொடுத்து இரண்டு நாள் Time கொடுத்தாலும் ஒன்றும் பேச வராது சிலருக்கு
எதிராளிக்கு வாய்ப்பே கொடுக்காமல் பேசுவார்கள் சிலர். எதிராளி இன்னதுதான் பேசப் போகிறார் என்று தாமாகவே ஒன்றை நினைத்து அதற்கு பதிலும் இடைவிடாமல் பேசத் தொடங்கி விடுவார்கள்.
Subject எதுவும் இல்லாமலேயே பேசுவார்கள் சில பேர்.
Subject இல் பேசுவதாக நினைத்து சம்பந்தம் இல்லாமல் பேசுவார்கள் சிலர்.
பேச ஆரம்பித்து இல்லாத பதிலை உருவாக்கி வாதம் செய்து சண்டையாக மாற்றுவார்கள் சிலர்.
பேசவே பயப்படுவார்கள் சிலர்.
மௌனம் சம்மதமா மௌட்டீகமா என்று தெரியாத அளவு மெளனமாக இருந்து குழப்புவார்கள் சிலர்.
நாம் பேசுவது ஒன்று அவர்கள் அர்த்தம் எடுத்துக் கொள்வது ஒன்று என்று ஆகி மனவருத்தம் அடைவார்கள் சிலர்.
வேலை நேரத்தில் பேசுவார்கள் சிலர்.
வெறுப்பு ஏற்றுவதற்காகவே பேசுவார்கள் சிலர்.
காயப் படுத்துவார்கள் சிலர், தடவிக் கொடுப்பார்கள் சிலர்.
பேச்சு....பேச்சில்தான் எத்தனை வகை...

செவ்வாய், 22 செப்டம்பர், 2009

சின்னஞ்சிறு வயதில் ...!


நான் சின்ன வயசுல ரொம்ப அழகா இருப்பேன்னு எங்க அம்மா அடிக்கடி சொல்லுவாங்க. பெரிய கண்கள் - சிவந்த மேனி - சிரித்த முகம் இப்பிடி எல்லாம் சொல்லிகிட்டே இருப்பாங்க. அந்த நாட்களில் - எங்க வீட்டு ஆஸ்தான புகைப் படக்காரர் - காமிரா வாங்கியிருக்க வில்லை - அப்பொழுதெல்லாம் வண்ணப் படங்கள் எடுப்பதும் - மிக அபூர்வம். பிறகு, அவர் தென்னை மரத்தைப் பின்னணியாக வைத்து நிறைய க வெ படங்கள் சுட்டுத் தள்ளினார்.
அம்மா கூறியிருந்த அங்க அடையாளங்களை வைத்து - இந்தப் படத்தைத் தேர்ந்தெடுத்தேன். என்னை சிறிய வயதில் பார்த்த பெரியவர்கள் யாராவது - இதைப் பார்த்துவிட்டு - நான் இப்படித்தான் இருந்தேனா என்று engalblog க்கு எழுதவும்.
இப்படிக்கு
இளிச்ச வாயன்.

ஞாயிறு, 20 செப்டம்பர், 2009

கம்பூட்டரு அகராதி - சென்னை செந்தமிழ்

via தமிழ் நகைச்சுவை by ரமேஷ் விஜய்

பில் கேட்ஸ் சென்னையில் பிறந்திருந்தால் விண்டோசை ஜன்னல் என்றுஅழைத்திருப்பார்கள். அதன் மெனு அட்டவணை இவ்வாறாக அமைந்திருக்கும்.
Save = வெச்சிக்கோ
Save as = அய்ய! அப்டியெ வெச்சிக்கோ
Save All = அல்லாத்தியும் வச்சிக்கோ
Help = ஒதவு
Find = பாரு
Find Again = இன்னொரு தபா பாரு
Move = அப்பால போ
Mail = போஸ்ட்டு
Mailer = போஸ்ட்டு மேன்
Zoom = பெருசா காட்டு
Zoom Out = வெளில வந்து பெருசா காட்டு
Open = தெற நயினா
Close = பொத்திக்கோ
New = புச்சு
Old = பழ்சு
Replace = இத்த தூக்கி அத்ல போடு அத்த தூக்கி இத்ல போடு
Run = ஓடு நய்னா
Execute = கொல்லு
Print = போஸ்டர் போடு
Print Preview = பாத்து போஸ்டர் போடு
Cut = வெட்டு - குத்து
Copy = ஈயடிச்சான் காப்பி
Paste = ஒட்டு
Paste Special = நல்லா எச்ச தொட்டு ஒட்டு
Delete = கடாசு
anti virus = மாமியா கொடுமை
View = லுக்கு உடு
Tools = ஸ்பானரு
Toolbar = ஸ்பானரு செட்டு
Spreadsheet = பெரிசிட்டு
Database = டப்பா
Exit = ஓடுறா டேய்
Compress = அமுக்கி போடு
Mouse = எலி
Click = போட்டு சாத்து
Double click = ரெண்டு தபா போட்டு சாத்து
Scrollbar = இங்க அங்க அலத்தடி
Pay Per View = துட்டுக்கு பயாஸ்கோப்பு
Next = அப்பால
Previous = முன்னாங்கட்டி
Trash bin = கூவம் ஆறு
Solitaire = மங்காத்தா
Drag & hold = நல்லா இஸ்து புடி
Do you want to delete selected item? = மெய்யாலுமே தூக்கிறவா?
Do you want to move selected item? = மெய்யாலுமே கடாசிடவா?
Do you want to save selected item? = மெய்யாலுமே வெச்சிக்கவா?
:: sent by N. கிருஷ்ணமுர்த்தி (follower of Engalblog)::

தூறல்கள்!


பிளாட் பாரத்தில் கண் தெரியாத கணவன், மனைவி, இரு குழந்தைகள் - உலகமே அந்தத் தம்பதியர்க்கு இருட்டு - அந்தப் பக்கம் போகும்போதெல்லாம் அவர்கள் சிரித்து மகிழ்ந்து பேசிக் கொண்டிருப்பதைப் பார்க்கிறேன்; அடுத்தவேளை அவர்களுக்கும் அந்தக் குழந்தைகளுக்கும் யார் மூலம் என்ன கிடைக்கும் என்று எந்த நிச்சயமும் இல்லாத நிலையில்கூட!'
"கருத்துக் குருடர்கள்' என்கிற தலைப்பில் ஹேமலதா பாலசுப்ரமணியம் எழுதியுள்ள "தூறல்கள்' என்கிற புத்தகத்தில் உள்ள ஒரு பதிவுதான் மேலே குறிப்பிடப்பட்டவை.
ஒரு கணவன், தனது மனைவியை எந்த அளவுக்கு நேசிக்க முடியும்? இதற்கு யாரும் ஷாஜகான்களைத் தேடி அலைய வேண்டாம். தனது மனைவியின் மரணத்தைத் தாங்கிக்கொள்ள முடியாமல் தற்கொலை செய்துகொண்ட எழுத்தாளர் ஸ்டெல்லா புரூஸ் ஒரு சமீபத்திய உதாரணம்.
எழுத்தாள அன்பர் கே.ஜி.ஜவகர் ஆண்டுதோறும் தமது மனைவியின் நினைவு நாளன்று, தனது உற்ற நண்பர்களை எல்லாம் தனது வீட்டுக்கு அழைத்து விருந்தளித்து உபசரிக்கிறார். மனைவியே அன்று விருந்து கொடுப்பதாக அவருக்கு மன நிறைவு.
அந்த வரிசையில் பாலசுப்ரமணியம் சற்று வித்தியாசமானவர். பாலசுப்ரமணியம் ஹேமலதா என்று மனைவியின் பெயரைச் சேர்த்துதான் கையொப்பம் இடுகிறார். "பாஹே' என்கிற புனைப்பெயரில்தான் எழுதுகிறார். தனது மனைவியின் பெயரால் பல அறப்பணிச் சேவைகளைத் தொடர்ந்து செய்து வருகிறார். எல்லோரும் "ராமஜெயம்' எழுதுகிறார்கள் என்றால், இவர் "ஹேமஜெயம்' என்றுதான் வார்த்தைக்கு வார்த்தை முணுமுணுக்கிறார்.
ஈரமுள்ள நெஞ்சத்தில்தான் காதல் துளிர்க்கும். காதலிக்கத் தெரிந்தவர்களிடம்தான் ரசனை இருக்கும். ரசனை இருந்தால் மட்டுமே எழுத்தாளனாக முடியும். மறைவுக்குப் பிறகும் தனது மனைவியை நேசிக்கத் தெரிந்த மனிதனின் எண்ணத்தில் தூய்மையும், எழுத்தில் ஈர்ப்பும் இல்லாமலா போய்விடும்!
நன்றி: தினமணி 20-09-2009 இந்தவாரம் - கலாரசிகன். (பக்கம் எண் எட்டு)


நகைச்சுவைக் கோட்பாடுகள்

நமது பத்திரிக்கை மற்றும் ஊடகங்களில் வரும் ஜோக்குகள் சில அடிப்படை களை ஆதாரமாகக் கொண்டவை. அவற்றில் சிலவற்றை பார்க்கலாமா?

மருத்துவமனை மற்றும் மருத்துவர் ஜோக்குகள்:
டாக்டருக்கு தொழிலே தெரியாது. மருத்துவ மனை புகுந்தவர் மரணிப்பது நிச்சயம். நர்ஸ் மிக்க அழகி. நோயாளியின் முதல் குறிக்கோள் நர்சை கணக்கு பண்ணுவதுதான். ஆபரேஷன் செய்யும் எந்த மருத்துவரும் அதற்கு முன் கத்தி பிடித்தது இல்லை. உறவினர்கள் நோயாளி சாக வேண்டும் என்பதில் குறியாக இருப்பர்.

ஹோட்டல் ஜோக்குகள்:
இங்கு எதுவும் சுவையாக இருக்காது. இருந்தால் பழையதை புது மேருகேற்றியதாக இருக்கும். சப்ளையர் மக்கு மண்ணாந்தை. எதை ஆர்டர் செய்தாலும் பயங்கரமாக தாமதம் ஆகும்.

மாப்பிள்ளை மாமனார் ஜோக்குகள்:
மாப்பிள்ளை மாமனார் வீட்டில் டேரா போட விரும்புபவர். மாமனார் அவர் எப்போதடா தொலைவர் என்று காத்திருப்பவர். மாப்பிள்ளை மாமனாரை மொட்டை அடித்து பணமாகவும் பொருளாகவும் வங்கிச் செல்பவர்.

மாமனார் மாட்டுப்பெண் ஜோக்குகள் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.

மாமியார் நாட்டுப் பெண் ஜோக்குகள்:
மாமியாரை நாய் / பாம்பு / தேள் கடித்தால் ஆனந்தக்
கூத்தாடுபவள் மருமகள். மாமியாருக்கு ஊசிப்போனதும் தீங்கு செய்யக்கூடியதையும் மட்டுமே தருபவள். இருவரும் பரஸ்பரம் சண்டை போடுவதில் அபார சுவாரசியம் காட்டுபவர்கள்.

நண்பர்கள் ஜோக்குகள்:
மனைவியிடம் படும் இம்சை மட்டுமே நட்பை வாழ வைக்கிறது. அல்லது கடன் வாங்கி திரும்பத் தராமல் கழுத்தறுப்பது நண்பர்களுக்கிடையில் சகஜம்.

அப்பா பிள்ளை.
அப்பா மண்டு. பிள்ளை அதை அறிந்துவைத்திருக்கும் மண்டு.

அம்மா பெண்:
இந்த வகை ஜோக்குகள் அபூர்வம்.

ஆபீஸ் ஜோக்குகள்;
டைபிஸ்ட் என்பது ஒரு பெண் மட்டுமே. ஆண் டைபிஸ்டுகள் கிடையவே கிடையாது. ஸ்டேனோக்கள் ஆபீசில் ஒருவரை கணக்கு பண்ணுபவர்கள் அல்லது மானேஜருக்கு வைப்பாக விளங்குபவர்கள். ஆபீஸில் பல பேரும் தூங்குபவர்கள். லஞ்சம் வாங்குபவர்கள்.

அமைச்சர் அரசியல்வாதி ஜோக்குகள்:
மக்கு முண்டமாக விளங்குவது அரசியல்வாதியின் இலட்சணம். ஆனாலும் பதவியில் இருப்பவர். எதிலும் லாபம் பார்ப்பவர். பெண்ணாசை பொன்னாசை மண்ணாசை மிக்கவர். மகளிரணித் தலைவிகளை சைட் அடிப்பவர். இரண்டுக்கு மேற்பட்ட மனைவிகளைக் கொண்டவர். தம் கொள்ளுப்பேரன் வரையில் பதவி சொத்து வாங்கித் தர அயராது முனைபவர். தலைவருக்குக் கப்பம் கட்டுவதில் துடியானவர்.

மன்னர் ஜோக்குகள்:
மன்னர் புறமுதுகிட்டு ஓடி வந்தாலும் பிடிபடாதவர் . அந்தப் புர சுவாரசியங்கள் நிரம்பவே கொண்டவர். அமைச்சரிடம் தம் அறியாமையை வெளிப்படுத்தத் தயங்காதவர். பயந்தான்குள்ளி. மகாராணிக்கு பயந்த சாது ஜீவி. விசிறி வீசும் பெண்களிடம் தனிப்பட்ட பிரேமை வைத்திருப்பவர். புலவர்களிடம் கடன் சொல்லி பாட்டுக் கேட்பவர்.

சினிமா கதாநாயகி ஜோக்குகள்:
ஆடைகளை அவிழ்த்துதற ஆயத்தமானவர். தன வயதை இருபது முப்பது குறைத்துச் சொல்பவர். படிப்பறிவே இல்லாத பட்டிக் காட்டுக் குப்பாயி. பெயரை நவீனமாக மாற்றிக்கொண்டு முட்டாள்தனத்தின் சிகரமாக விளங்குபவர்.
raman

ஞாயிறு-10


சனி, 19 செப்டம்பர், 2009

குழப்ப அழைப்புகள்!








சென்ற வாரம் - சன் டி வி இல் நினைத்தாலே இனிக்கும் பட - கலந்துரையாடலைப் பார்த்து, கேட்டுக் கொண்டிருந்தேன். நடிகர்கள், நடிகை ப்ரியாமணி டைரக்டர் - எல்லோரும் அமர்ந்து - பழைய ஆனந்தவிகடன் பாணியில் - 'எனக்கு பிடிச்சிருக்கு - எனக்கும் பிடிச்சிருக்கு - எனக்கு கூட' என்று அரட்டை அடித்துக் கொண்டிருந்தனர். அப்பொழுது போன் பண்ணிய ஒரு அம்மணி - "நான் அமுல் பேபி கிட்ட பேசணும்" என்றார்.  காமிரா முன் உட்கார்ந்திருந்த எட்டு பேரும் குழம்பிப் போனார்கள். பிறகு ஒருவாறாகச் சமாளித்த ப்ரியா மணி - மைக்கைக் கையில் வாங்கி - நானா? என்பது போல் கேட்டார். போனில் அழைத்த அம்மணி - 'இல்லைங்க' என்றார். உடனே மைக் ப்ரித்விராஜ் கைக்குச் சென்றது - அவருக்கு ப்ரியாமணி நம்பிக்கையில் பாதி கூட 'தான் ஒரு அமுல் பேபியாக இருக்கலாம்' என்பதில் இல்லை. ஆரம்பத்திலிருந்தே பாக்யராஜ் தான் ஒரு அமுல் பேபி இல்லை என்று தீர்மானித்துவிட்டார் - எனவே அவர் மைக்குக்கு கை நீட்டவே இல்லை. அதற்குப் பிறகும் கூப்பிட்ட அம்மணி உங்களில் யார் அமுல் பேபி என்று நீங்களே கண்டுபிடிங்க என்று சொல்லி குழப்ப - கடைசியில் வேறு வழியில்லாமல் - மைக் அங்கு இருந்த வில்லன் (?) நடிகரைத்  தவிர்த்து  மீதி  இருந்த  ஷக்தியிடம்  கொடுக்கப்பட்டது. பிறகு அழைத்த அம்மணி அந்த (வழிச்சல்) உரையாடலைத் தொடர்ந்தார்.  என்  மனதில் ஓடிய சந்தேகங்கள் - 
1) போன் - இன் நிகழ்ச்சியில் கூப்பிடுகின்ற அழைஞர்கள் - 'எங்க ஊருக்கு ஒரு டிக்கெட் கொடுங்க' பாணியில் பேசாமல் ப்ளைன் பேச்சு பேசுபவர்களாக இருக்கக் கூடாதா?  
2) அவர்கள் ஊரில் இருக்கும் பேபிகள் - மீசை தாடியுடன்தான் காணப் படுவார்களா?
3) அழைத்தவர்  ஒருவேளை 'அமுல்' கம்பெனியில் விளம்பரப் பிரிவில் வேலை செய்பவரா?


4) உண்மையிலேயே ஷக்திக்கு பால் வடியும் முகமாக இருந்தால் எப்படி இருக்கும் என்று கற்பனை செய்து பார்த்தேன். அதன் விளைவு - ஐயோ பயமா இருக்கு! --->



ஒரு தகவல் - அடுத்த சில வாரங்களுக்கு - சன் டி வி இல் டாப் டென் நிகழ்ச்சியில் நம்பர் ஒன் ஆக - இனி எந்த பாட்டு / படம் இடம்பெறும் என்பதை - சுலபமாக எந்த குப்பனும் சுப்பனும் அனுமானித்து விடலாம்!

நேரம் மிச்சப்படுத்துதல்!


இன்று சன் டி வி இல - சுகி சிவம் இரண்டாவது முறையாக - நேரம் வீணாக்காமை பற்றிப் பேசினார். முக்கியமாக - பொது நிகழ்ச்சிகளில் ஒரு கும்பல் குத்துவிளக்கேற்றி - கூட்டத்தில் உள்ளவர்களது நேரத்தை வீணடித்தல் - மற்றும் பள்ளிக்கூடம் போன்ற ஸ்தாபனங்களில் கூட நிறைய பேச்சாளர்களை அழைத்து - அவர்கள் ஒவ்வொருவரும் - பேசிப் பேசி - அறுவடை செய்வது - மேலும் வரவேற்புரை - அறிமுக உரை - இணைப்புரை - என்று ஆளுக்காள் - அவரவர் செய்யும் உரைகள் (நேர விரயம்) எல்லாம் விளக்கிக் கூறினார். இணைப்புரை கூறுபவர் - பேச்சாளர் பேசிய பேச்சுக்கு மறுப்புரை கூறிய அபத்தம் - ஆகியவை குறித்தும் அவர் கூறினார்!
எங்கள் blog படிக்கும் வாசகர்கள் - அவர்கள் பின்பற்றும் - நேரம் மிச்சப் படுத்தும் யுக்திகள் குறித்து engalblog@gmail.com என்ற ஈ மெயில் விலாசத்திற்கு எழுதினால் - எல்லோருக்கும் பயன்படும் விதமாக - அதை ஒரு கட்டுரையாக வெளியிடுவோம்.

புதன், 16 செப்டம்பர், 2009

சிக்கனமாய் வாழவேண்டும்!

சிக்கன நடவடிக்கைகளில் வழி காட்டிச் செல்லும் தலைவர்கள், முன்னுதாரணமாக இருக்க வேண்டும் - அப்பொழுதுதான், "மன்னன் எவ்வழி மக்கள் அவ்வழி" என்று மக்களும் அந்த வகையில் சிந்திக்க ஆரம்பிப்பார்கள்; செயல்படுவார்கள். (வாழ்க மு இ இ இ அ !)

எங்களுக்கும் கூட முதலில் ஆயிரம் சிக்கன நடவடிக்கை மனதில் தோன்றின. அப்புறம் தீவிர சிக்கன நடவடிக்கை என்றதுடன் ஐநூறாகக் குறைந்து, பிறகு அதி தீவிர சிக் ந வ என்றதும் இரு நூறாகக் குறைந்து - இப்படி ஒவ்வொரு நிமிடத்திற்கும் குறைந்து குறைந்து ------ கடைசியில் மிஞ்சியவை இவை:
வலைப் பதிவர்களுக்கான சிக்கன நடவடிக்கைகள் - எங்கள் பரிந்துரைகள்.
ஒன்று : இருப்பதிலேயே சிறிய எழுத்துக்களை உபயோகியுங்கள் - உங்கள் வலைப் பதிவைப் படிப்பவர்கள் யாரேனும் இருந்தால் - அவர்கள் படிக்காமல் போய்விடுவார்கள் - இதனால் அவர்கள் நேரம் மிச்சமாகும்.
இரண்டு : முடிந்தவரை - lighter shade fonts - உபயோகியுங்கள். - அதே நேர மிச்சம்.
மூன்று : contravention இல்லாத விஷயங்களை மட்டும் பதியுங்கள் - உதாரணம் : நெல்லுக்குள்ள அரிசி இருக்கு ! - இதனால் படிப்பவர்கள் கமெண்ட் கந்தசாமியாக மாறி - வச வச வென்று - எதையாவது எழுதி - அவர்களின் நேரத்தையும் - மட்டறுக்க உங்கள் நேரத்தையும் - வீணாக்கமாட்டார்கள்!
நான்கு : படங்கள் மட்டும் இருந்தால் - அதைப் பதியுங்கள் - one picture = 1000 words. இதனால் இடம், எழுத்துப் பிழைகள் - இலக்கணப் பிழை - திருத்தங்கள் - எவ்வளவு நேரம் மிச்சம் பார்த்தீர்களா! மேலும் மௌனம் = சர்வ அர்த்த சாதகம். ஆனால் செப்டம்பர் ஆறாம் தேதி பதிவிடப் பட்ட ஞாயிறு-8 போன்ற படங்கள் வேண்டாம் - அது என்ன என்று யோசிக்கும் வாசகர்களுக்கு - நேரம் அதிக விரயம் - முடியைப் பிய்த்துக் கொள்வா ...... அட - முடி வெட்டிக் கொள்ளும் செலவு குறையுமே -- ஒ கே ஒ கே!
ஐந்து : மௌன விரதம் போன்று - எழுதா விரதம் - வாரத்தில் ஒரு நாளாவது இருங்கள் - உங்கள் வாசகர்களை வாரம் ஒரு நாள் படிக்கா விரதம் இருக்கச் சொல்லுங்கள் (படிக்கச் சொல்லி நீங்க வற்புறுத்தினா மட்டும் - அவங்க உங்க வலை புகுந்து - படிச்சிடப் போறாங்களா என்ன!:-)
ஆறு: நீங்களும் உங்கள் வாசகர்களும் ESP, Claivoyance போன்ற வித்தைகளை - தெரிந்து வைத்துக் கொள்ளுங்கள் (How to make ESP work for you - By Herald Sherman) - ஒவ்வொரு நாளும் - ஒவ்வொரு மணி நேரத்தில் - நீங்கள் பதிய நினைப்பதை - மனதுக்குள் - நினைத்துக் கொண்டே இருங்கள் - வாசகர்கள் எல்லோரும் நீங்க எழுத நினைப்பதை, எண்ண அலைகள் மூலமாகப் பெற்றுக் கொள்வார்கள் - internet charges உட்பட - எல்லாமே மிச்சமாகும்!
எங்கள் அடுத்த எண்ண அலைகள் அலைபரப்பு - இன்று மாலை நான்கு மணி தொடங்கி ஒவ்வொரு இரண்டு மணி நேரங்களுக்கு ஒரு முறை !!

செவ்வாய், 15 செப்டம்பர், 2009

வெற்றி வெற்றி - மாபெரும் வெற்றி!

வெற்றி வெற்றி - மாபெரும் வெற்றி - இலங்கையிலே!
நாமும் வாழ்த்துகிறோம் - தோணி கரைசேர்ந்துவிட்டார்!
புகைப் படக்காரரை அடித்தவரையும் பாராட்டுகிறோம் --
விக்கெட்டுகள் கணக்கை - நேற்று ஆரம்பித்துவைத்தவரே அவர்தான்!
நாம் தோனியை - வெற்றி வெற்றி என்று கொண்டாடினாலும் -
இந்தியாவில் ஒருவர் மட்டும் - தோனியை தோ(ல்வி) நீ என்று சொல்லிக்கொண்டே 
இருக்கிறார் ! அவர், ஒரு கல்லூரி முதல்வர் - St Xavier College - Ranchi - Jharkand!

நாகை திரை அரங்குகள்


நாகை திரை அரங்குகள்
           சென்னையில் தற்பொழுது நூற்றுக்கணக்கான  திரை அரங்குகள் இருக்கின்றனபெயர் போன 10 அல்லது 15 அரங்குகளைத் தவிர பெரும்பாலான அரங்குகளுக்கு நான் போனதில்லைஆனால் நாகப்பட்டினத்தில் சிறு வயதில் சினிமா பார்க்கவேண்டும் என்ற ஆசை  அதிகம்.  நாகையில் மூன்றே அரங்குகள்தான் இருந்தனஅதில் ஒரு அரங்கில் அதிக பட்சமாக 10 அல்லது 12 படங்கள்தான் ஒரு வருடத்தில் திரையேறும்பெரும்பாலான படங்கள் மிகப் பழையவைபுதுப் படம் என்பது பெரிய ஊர்களில் 100,150 நட்கள் ஓடிய பின்பு எங்கள் ஊருக்கு மெதுவாக வரும்.  புது(!) படங்கள் பெருவாரியாக தீபாவளிஅல்லது பொங்கல் சமயத்தில் ரிலீஸ் ஆகும்மூன்று தியேட்டர்களிலும் மாற்றி மாற்றி படம் பார்ப்போம்
          நாகையில் 1962 வரை இரண்டு தியேடர்தான் இருந்தது.  ஸ்டார் டாக்கீஸ் மற்றும் ,பேபி டாக்கீஸ்பின் சிவகவி சுப்ரமணிய அய்யர் கட்டிய ஜயலக்ஷ்மி தியேட்டர் வந்ததுபேபி டாக்கீஸ் 1962 வாக்கில் திரு  ADJ அவர்களால் வாங்கப்பட்டு, பாண்டியன் தியேட்டர் என்று நாமகரணம் செய்யப்பட்டதுஇதைத் தவிர நாகூர் ராஜாகீழ்வேளுர் டூரிங்க் டாக்கீஸ் போன்றவைகளும் எங்களூர் கணக்கில் சேர்த்துக் கொள்வோம்!
          புதுப் படம் வருவதை மாட்டு வண்டியில் பேண்டு சகிதம் வீதி வீதியாக வந்து பிட் நோட்டிஸ்களை தருவதன் மூலம் அறிவிப்பார்கள்வண்டியின் பின் பக்கம் அமர்ந்து கொண்டு டகர டகர என்று ஒலி எழுப்பும் முகம் நன்றாக ஞாபகம் இருக்கிறது கதை சுருக்கம் சிறு புத்தகமாக கிடைக்கும்பெரிய சைஸ் கலர் பேப்பரில் கவர்ச்சியாக அச்சிட்டும் பறக்க விடுவார்கள்பெரிய பெரிய் போஸ்டர்களை தட்டியிலும் சுவர்களிலும் ஒட்டுவார்கள்படம் ஆரம்பிக்க சுமார் 1 மணி நேரத்திற்கு முன்பாக பக்தி பாடல் ஒலி பரப்புடன் ஆரம்பித்து புதிய சினிமா பாட்டுடன் முடிப்பார்கள்.
         ரயில் எஞ்சின் டிரைவர் வேலைக்கு சற்று மதிப்பு குறைந்த, ஆனால் எங்களைக் கவர்ந்த வேலை தியேட்டர் மேனேஜர் வேலைதான்ஸ்டார் தியேட்டர் மேனேஜர் ராஜகோபாலைக் கண்டால் கொஞ்சம் பயம்தான்டிக்கட் வாங்க க்யூவில் நிற்பவர்களை மிரட்டியும்சமயத்தில் அடிக்கவும் செய்வார்அதைப்பார்த்து போலிஸ் ரேஞ்சுக்கு அவர்மேல் மரியாதை கலந்த பயம்.
         ஸ்டார் தியேட்டர் மிகப் பழையதுஒரே ப்ரொஜெக்டர்தான்அதனால் 6 இடைவேளை உண்டுசிறு வயதில் தரை டிக்கட்தான்ஒரே பீடி நாற்றத்துடன் படம் பார்க்கவேண்டும்குறுக்கும் நெடுக்குமாக் இஷ்டப்படி உட்காரலாம்முன்னால் இருப்பவர் மறைத்தால் கேட்க பயம்அதனால் இங்கும் அங்குமாக நகர்ந்து பார்க்க வேண்டும்! படம் ஆரம்பிக்குமுன் வார்-ரீல் எனப்படும் நியூஸ் கட்டாயம்அந்தக் குரலும் ம்யூஸிக்கும் நினைத்தாலே  மனதில் கரகரவென்று பிராண்டும்இன்டெர்வெல் விடும் போதெல்லாம் வெளியில் செல்வோம்திறந்தவெளி கக்கூஸ்தான்ஆனால் அப்போது இந்த அளவுக்கு வியாதிகள் பெருகவில்லை
         பாண்டியன் தியேட்டர் இரண்டு ப்ரொஜெக்டருடன் சற்றே நவீனமாக இருந்தது. 3 இடைவேளைகள்அந்த தியேட்டர்  முட்டை வடிவ போண்டா நண்பர்கள் மத்தியில் ப்ராபல்யம். வீட்டினருடன் பாண்டியன் தியேட்டர் போவதென்றால், குதிரை வண்டியில் செல்வோம்குறுக்கே ஒரு ரயில்வே கேட்டும் வரும்எபபவோ க்ராஸ் செய்யும் ட்ரயின் அல்லது கூட்ஸ் ஷண்டிங்காக்க வைத்து சினிமா பர்ர்க்கும் டென்ஷனை உயர்த்தும் .ஸ்கூலில் இருந்து கட் அடித்து செல்லும் போது CSI ஸ்கூல் குறுக்கு வழியில்ரயில் ட்ராக்குகளை தாண்டிரோலிங்க் மில் ஓரமாக ஓடி தாண்டி குதித்து செல்வோம்படத்தை மிஸ் பண்ணலாமா?
       பள்ளியில் வெள்ளிக்கிழமை மேட்னி ஷோவில் ஹிந்தி அல்லது ஆங்கில படம் மாடினீ ஷோவாக வரும். 10வது படிக்கும்போது மஹாலிங்கம் சார் க்ளாஸை கட்டடித்து விட்டுப் போவதில் மிகுந்த த்ரில்படம் அவ்வளவாக புரியாதுஆனாலும் பாட்டு நன்றாக இருந்தது/இல்லை/.ஃபைட்டிங் சுமார் என்ற ரீதியில் பொதுவாக கமண்ட் அடித்து வைப்போம்சோமு ஒரே ஒரு  படத்தை பார்த்துவிட்டு 4 விதமான கதைகள் தயார் பண்ணிவிடுவான்அந்த கால கட்டத்தில் சினிமாவும் தியேட்டர்களும் மிக முக்கியமான விஷயங்கள்.அதனுடன் ச்ம்பந்தப்பட்ட்டவர்களும் முக்கியஸ்தர்களாகக் கருதப்பட்டனர். .

with love and affection,
rangan