Sunday, September 6, 2009

தீவிர தொண்டர்கள் தற்கொலை.

ராஜசேகர ரெட்டி அவர்களின் அகால மரணம் மிகவும் விசனிக்கக் கூடியதே. இம்மாதிரியான விபத்துக்கள் ஏற்படுத்தும் திகைப்பு அதிர்ச்சி புரிந்து கொள்ளக் கூடியதே.
 
ஆனாலும் தொலைக் காட்சி காமிரா என் முகத்துக்கு முன்பாக இருக்குமானால் நான் முகத்தை மூடிக் கொண்டு வேறு புறம் திரும்பி அழுதால் என் துக்கம் உண்மையானது.  மாறாக நான் இன்னும் கொஞ்சம் பலமாக க்ளோஸ் அப்பில் அழுதால் என் துக்கம் கேள்விக்கு உரியதாகி விடுகிறது.  
 
பந்தலிலே பாவக்காய் என்று தமிழில் ஒரு வழக்கு உண்டு. அதை நினைவு படுத்தும் வகையில் அடுத்து ரெட்டியின் மகன் தான் பதவிக்கு வர வேண்டும் என்பதை அதிகப்படி வருத்தத்துடன் அழுத்தமாக சொல்லிக் கதறி அழுதார் ஒரு தொண்டர்.  அப்படி ஜகன் மோகன் ரெட்டி பதவிக்கு வரும் பட்சத்தில் இந்த கதறி அழுதவருக்கு ஒரு அமைச்சர் பதவி தர வேண்டி இருக்குமோ என்னவோ!  கையெழுத்து வேட்டையில் முதல் நூறு கைஎழுத்தாளர் யாவருக்கும் வாரியத் தலைமை அடுத்த தேர்தலுக்குப் பிறகு கிடைக்க வேண்டும். காரணம் இப்போது திரு ஓய. எஸ். ஆர அவர்கள் நியமித்த நபர்களை மாற்றுவதற்கில்லை.
 
அனுபவக் குறைவு காரணமாக திரு ஜகன் மோகன் முதல்வர் ஆவதற்கு வாய்ப்பு ஏற்படாமலும் போகலாம்.  திரு ராம ராவ் பெயரை சொல்லியும், நம் ஊரில் அண்ணா நினைவைப் போற்றியும் கொஞ்ச காலம் அரசியல் சுறுசுறுப்பாக நடந்தது நினைவுக்கு வருகிறது.  காந்தி நேரு பெயர்களை காங்கிரஸ் கட்சி தன ஏக போக உரிமையாக பயன் படுத்தியதும் இன்றும் எம்.ஜி.ஆர பெயர் பயன் படுவதும் காணக் கிடக்கிறது.
 
இந்தியர் யாவரும் ஹீரோக்கள் பலருக்கும் தாசானு தாசர்கள். விஜய் விஜயகாந்த் அமிதாப் பச்சன் என நமக்குத் தான் எவ்வளவு ஹீரோக்கள்?  ரசிகர்கள் விரும்புவதால் அரசியலில் குதிக்கிறேன் என்று ஆழம் பார்க்காமல் குதித்து காலை உடைத்துக் கொள்ளும் பண்பாடு நம் ஹீரோக்களுக்கு நிறையவே உண்டு.  நேரடியாக அரசியலில் குதிக்காமல் காவிரி நீர் பிரச்னை ஈழம் என்று அவ்வப்போது issue based noises எழுப்புவதும் உண்டு.
 
ஆனால் நான் சொல்ல வந்தது இதெல்லாம் இல்லை.  ராஜ சேகர ரெட்டியின் அகால மரணத்தை துக்கித்து பலரும் தற்கொலை செய்து கொண்டார்கள்  என்ற செய்திகளைக் கேட்டு வியப்பும் வேதனையும் தான் மிஞ்சுகிறது.  வாழ்வின் ஆதர்சம் ஒரு அரசியல் தலைவனின் வெற்றியாகவும் வாழ்வை முடித்துக் கொள்ள ஒரு காரணம் ஒரு அரசியல் தலைவனின் மரணமும் தோல்வியும் ஆகவும் பலரும் ஏற்றுக் கொள்வது பரிதாபம். 

2 comments:

kggouthaman said...

எந்த ஒரு தனி நபரின் மீதோ அல்லது தனி ஸ்தாபனத்தின் மீதோ வைக்கப்படும் கண் மூடித்தனமான நம்பிக்கையோ, அல்லது காட்டப் படும் கண்மூடித்தனமான ஆதரவோ - ஆரோக்கியமானது அல்ல.

Anonymous said...

Hi iam karthikeyan.I like this post.I agree your thoughts.Many political party followers admire without any sense,and they expect the successor should be the blood relationship only.Its one type of ignorance.

Post a Comment

இந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க!