சனி, 5 செப்டம்பர், 2009

அன்புள்ள ஆசிரியர்களே!

இன்று ஆசிரியர்கள் தினம். ஆசிரியர் தினம் அல்ல! என்னுடைய எல்லா ஆசிரியப் பெருமக்களையும் - ஏறு வரிசையில் நினைத்துப் பார்க்கிறேன்.
1) முதல் வகுப்பு - ஆசிரியையின் பெயர் மறந்து போய் விட்டது / தெரியவில்லை. வீட்டில் இருந்த பெரியவர்கள் "பங்காரு " டீச்சர் என்பார்கள். - ஜெ மு சாமி கடையில் வேலை பார்த்த பங்காரு நாயுடு அவர்களின் மனைவி என்பதால் - அவருக்கு அந்த பெயர் - எங்கள் வீட்டில் வைக்கப் பட்டது. 'அ' எழுத எனக்கு சொல்லி கொடுத்து, அதில் ஓரளவு வெற்றியும் கண்டவர். நிறைய பொய்கள் சொல்லுவார் - என் அழுகையை நிறுத்துவதற்காக! (அண்ணன் - இங்கே தான் இருக்கு, இப்ப வரும், அழாதே ...... etc etc.)
2) லில்லி புஷ்பம். - விவரங்கள் வேறு ஒரு வலைப் பதிவில் காண்க. http://kggouthaman.blogspot.com
3) மற்ற ஆசிரியர்கள் - தேசிய, தேர்முட்டி பள்ளிக் கூடங்களில் --- ராமகிருஷ்ணன், தண்டபாணி ஷண்முகசுந்தரம் செ. வா என்கிற சுப்ரமணியன் - ஜெகதீசன் என்று பலர் நினைவுக்கு வருகிறார்கள். வகுப்பில் பேசிக் கொண்டிருந்தேன் என்பதற்காக என்னை பலமாக அறைந்த ஜெகதீசனை - என் ஒரு பக்கக் காது கேட்காமல் போனதற்கு - முக்கியமான காரணமானவரை - மறக்கவே முடியாது.
4) ஆறு முதல் எட்டு வரை - வைத்தியநாதன், சாம்பசிவம், தண்டபாணி :: அட்டிபாயில் நஞ்சன், நுந்தால பீமன், :: லக்ஷ்மண அய்யர் , ராஜசுந்தரம் என்றெல்லாம் நினைவுக்கு வந்தாலும் - வீட்டுக்கு அழைத்து - இலவசமாக டியூஷன் சொல்லிக் கொடுத்த - எவ்வளவோ ஆங்கிலப் பாட - சொற்களை எளிதாக சொல்லிக் கொடுத்த லக்ஷ்மண அய்யர் என்றுமே நினைவில் நிற்கிறார்.
5) JTS - ராமமூர்த்தி, மகாதேவன், சுந்தரம், குமரேசன், பன்னீர்செல்வம், தேவதாஸ் -ஆகியோர் நினைவில் ... மற்றும் நண்பர்களாகப் பழகிய workshop instructors.
6) Polytechnic ச பு பாலஜகன்னாதன், ஜெ கோவிந்தராஜுலு, வாஞ்சிநாதன் (வாவ் - what a man - as a teacher!) , கணபதி, B.C என்று அழைக்கப் பட்ட சவரிமுத்து (சில பெயர்கள் பட்டப் பெயர் மட்டும் ஞாபகம் உள்ளது !) மேலும் என்ன காரணத்தினாலோ - என்னை என்றுமே வெறுத்த ராமசாமி (கெமிஸ்ட்ரி)
ஆசிரியர் வரிசையில் சேராத - உடன் பிறந்த அண்ணன்கள் - அவர்களிடம் நான் கற்றதும் பெற்றதும் ஏராளம்.
அனைவரையுமே - இந்த ஆசிரியர் நாளில் நன்றியோடு நினைத்துப் பார்க்கிறேன். அவர்களைப் பொறுத்த வரையில் (அண்ணன்களைத் தவிர) நான் ஆயிரத்தில் ஒருவன் ---- அனால் எனக்கு அவர்கள் ஒவ்வொருவரும் ஆயிரத்தில் ஒருவர்.

2 கருத்துகள்:

  1. என் மிகச் சிறந்த, என் வாழ்வின் திருப்பு முனைகளுக்கு மூலகாரணமாக விளங்கிய ஆசிரியப் பெருமக்களைப் பற்றி மீண்டும் சொல்லப் போவதில்லை. ஆனால், குறைந்த பட்சம் ஒரு நாளைக்கு ஒரு தடவை போல அவர்களை நான் நினைக்காமல் இருந்ததில்லை. மோசமான ஆசிரியர் ஒரே ஒருவர் தான் என் பள்ளி நாட்களில் என் நினைவுக்கு வருகிறார்.

    தற்போது இருக்கும் ஆரம்பப் பள்ளி ஆசிரியர்களைக் காட்டிலும் அந்தக் கால ஆசிரியர்கள் கடமை உணர்விலும் அடிப்படை அறிவிலும் மேம்பட்டு இருந்ததாகத் தோன்றுகிறது. கல்லூரி ஆசிரியர்களைப் பற்றி நான் நேரடியாக ஏதுமறியேன். எனினும் என் தந்தையாரின் நண்பராக விளங்கிய புரபசர் சுப்ரமணியம் ஒரு சிறந்த மனிதர்.

    பதிலளிநீக்கு
  2. அ னா எழுதக் கற்றுக் கொடுத்த ஆசிரியரை யாருமே மறக்க மாட்டர்கள் என்று நினைக்கிறேன். அதைத் தவிர எத்தனை ஆசிரியர்கள் நம் நினைவில் நிற்கிறார்கள் என்பது, அந்த ஆசிரியர் கற்றுக் கொடுத்த திறமையினாலா, நம்மை பாதித்த ஏற்தாவது சம்பவங்களினாலா... ஏதோ ஒன்று...நமக்கு நல்லா நடத்தறார் என்று தோன்றும் ஆசிரியர் நம் நண்பனுக்கு எதிர்மறையாகத் தோன்றுவதும் உண்டு... கருத்துப் பிழை?!
    எனக்கும் Chemistry வைத்திருக்கும் கூட ஏழாம் பொருத்தம்தான்...அமல்ரஜா என்ற அந்த ஆசிரியர் என்னை ஏனோ ஒரு வெறுப்புடனே நடத்தினார்.
    மூன்றாம் வகுப்பில் (ஒன்றாம்,இரண்டாம் வகுப்பு எல்லாம் படிக்காமல் நேராக மூன்றாம் வகுப்புதான்!) தெய்வசிகாமணி டீச்சர், ஜுலி டீச்சர், பிறகு அந்தோனியார் பள்ளியில் என்னை என் பிறந்த நாளன்று வெளுத்து வாங்கிய மங்கள் ராஜ், நன்றாகப் பாடும் ராஜமாணிக்கம் சார், தமிழ் அழகாக எடுக்கும், இலக்கிய மன்றக் கூட்டங்களில் வெளுத்து வாங்கிய தமிழ்ப் பண்டிட் சங்கரன் சார், வரலாறை வெற்றிலையோடு சேர்த்துக் குதப்பிய ஹரிஹரன் சார், கணக்கை என்றுமே என் மண்டையில் ஏறாது என்ற நிலையில் இருந்து இவன் மண்டையிலும் ஏற்ற முடியும் என்று காட்டிய R. J. Earnest சார், இவர்கள் என்னால் மறக்க முடியாதவர்கள். அங்கு என்னுடைய தலைமை ஆசிரியர் S. T. Amalanaathar சாரையும் மறக்க முடியாது. பின்னாளில் தூத்துக்குடி மறைமாவட்ட பிஷப் ஆனவர் அவர். அவர் ஒவ்வொரு மாணவர் பெயரையும் ஞாபகம் வைத்துக் கொண்டு பேசும் அன்பு வார்த்தைகள் மறக்க முடியாதவை.

    பதிலளிநீக்கு

இந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க!