Thursday, November 26, 2009

படைப்பாற்றல் bits


நடைமுறை வாழ்க்கையில், சிலரது படைப்பாற்றல் அப்ரோச் - மிகவும் எளிமையாக ஆனால் எபெக்டிவ் ஆக இருக்கும்.அந்தக் காலத்தில், எங்கள் கம்பெனியில், மூன்று வகை அப்ரண்டிஸ்கள் உண்டு. முறையே, ஐ டி ஐ முடித்தவர்கள், டிப்ளமா முடித்தவர்கள், டிகிரி முடித்தவர்கள். - டெக்னிகல் அப்ரண்டிஸ், எஞ்சினீரிங் அப்ரண்டிஸ் , கிராஜுவேட் அப்ரண்டிஸ் என்று பெயர். 


நான் அப்ரண்டிஸ் ஆக சேர்ந்த காலத்தில் - பக்தா என்ற பெயரில் ஒரு டெரரிஸ்ட்தான் பயிற்சி நிலைய அதிகாரி. அவர் டெக்னிகல் அப்ரண்டிச்களை அதிகம் கண்டிக்கமாட்டார். அதற்கு எத்தனையோ காரணங்களை ஆங்காங்கே பல டிபார்ட்மென்ட் பரந்தாமர்கள் கூறியிருந்தார்கள். டிகிரி படித்த அப்ரண்டிஸ்களையும் - அதிகம் சீண்ட மாட்டார். ஆனால் டிப்ளமா படித்துவிட்டு வந்து சேர்ந்த எங்களை மட்டும் சந்தர்ப்பம் கிடைத்தபோதெல்லாம் போட்டுத் தள்ளிவிடுவார்.


கம்பெனி டைம் காலை ஏழரை முதல் மாலை நான்கு மணி வரை. 
காலையில் யார் எப்படி வருகிறார்களோ - ஆனால் மாலையில் - நான்கு மணிக்கு, (சரியாகச் சொன்னால் மூன்று ஐம்பத்தைந்துக்கு) பயிற்சி நிலையத்தின் குத்து கடிகாரத்திற்கு (ஹி ஹி - பஞ்ச களாக்குங்க)  முன் அரை வட்ட வடிவில் அத்தனை டெக்னிகல் அப்ரண்டிஸ் தோழர்களும்   கூட்டம் கூடி கும்மியடிக்கத் தயாராக நின்றுகொண்டிருப்பார்கள். மணி மூன்று ஐம்பத்தைந்து தொடங்கி மூன்று ஐம்பத்தாறுக்குள் அவர்கள் எல்லோரும் படபடவென்று, பஞ்ச கிளாக்கில் அவரவர்களுடைய அட்டையை சொருகி, படார் படார் என நேரத்தைப் பஞ்ச செய்து - அவைகளை அவசரம் அவசரமாக ராக்கில் செருகிவிட்டு - நாற்பது தோழர்களும், நாலுகால் பாய்ச்சலில், மெய்ன் கேட்டை அடைந்துவிடுவார்கள். நாலு மணி சங்கு காதில் கேட்டதும் - வேகமாக ஓடி, எண்ணூர் ஸ்டேஷனில் காத்திருக்கும் லோக்கல் டிரைன் ஏறி - இடம் பிடித்து, சென்ட்ரல் இறங்கி - அங்கேயும் ஓடி -- அப்பப்பா அப்ரண்டிஸ் வாழ்க்கையில் - என்றும் எங்கேயும் ஓட்டம்தான்! 


மூன்று ஐம்பத்தாறு தொடங்கி, நான்கு மணிக்குள், யாராவது பயிற்சி நிலைய பஞ்ச கிளாக்குக்கும் மெய்ன் கேட்டுக்கும் இடையே மாட்டினார்கள் என்றால் - டெக்னிகல் அப்ரண்டிஸ் தோழர்கள் அவர்களை இடித்து, கீழே தள்ளி, அவர்கள் மேல் தீமிதி உற்சவம்போல ஓடிவிடுவார்கள். இந்த பஞ்ச கிளாக் கூட்ட விவகாரம் - எல்லா வருடங்களிலும் தொடர்ந்தது - தோழர்கள்தான் ஒவ்வொரு வருடமும் புதியவர்கள் - ஆனால் நடைமுறை எப்பொழுதும் ஒரே மாதிரிதான்!எதற்கு இதை எல்லாம் விலாவாரியாகச் சொல்கிறேன் என்றால் - கண்டிப்பான டிரைனிங் ஆபீசரால் தடுக்க இயலாத ஒரு பஞ்ச கிளாக் கூட்டத்தை - பிறகு வந்த ஒரு டிரைனிங் மேனேஜர் சுலபமாக செய்தார். எப்படி?


நான் சேர்ந்த பத்து வருடங்களுக்குப் பின் எல் எஸ் என் குப்தா என்றொரு மேலாளர், கம்பெனி  பயிற்சி நிலையத்திற்கு தலைவராக ஹெச் எம் டி யிலிருந்து வந்து சேர்ந்தார். நல்ல நகைச்சுவையுடன், அழகான ஆந்திர ஆங்கிலம் பேசுவார். எனக்கு பிறந்த வீட்டு பாசம் அதிகம் - அதாவது, அடிக்கடி டிரைனிங் சென்டர் சென்று - வகுப்புகள் நடத்தி எல்லோருக்கும் இலவச ஞானம் விநியோகம் செய்வதுண்டு. ஒரு நாள் நான்கு மணியிலிருந்து, ஐந்து மணி வரையிலும் - வகுப்பு நடத்த சென்றேன் - என்ன ஆச்சரியம்! மூன்று ஐம்பத்தைந்துக்கு பஞ்ச கிளாக் அருகே எந்த கூட்டமும் இல்லை. நான்கு மணிக்கு அமைதியான முறையில் அப்போதைய அப்ரண்டிஸ் தோழர்கள் - பஞ்ச அடித்து, நடந்து சென்றார்கள். என்னுடைய வகுப்பை நடத்தி முடித்துவிட்டு, நான் திரு குப்தா அவர்களிடம், இது எப்படி சாத்தியமாயிற்று? என்று கேட்டேன்.


அவர் சொன்னார். நான் இங்கே வந்து சேர்ந்த நாளிலிருந்து இதை ஸ்டடி செய்தேன். பஞ்ச கிளாக் கூட்டத்தை கரைக்க, ஒரு சிம்பிள் வழி கடைபிடித்தேன்.


சரியாக - மூன்று ஐம்பத்து நான்கு மணிக்கு என் அறையை விட்டு வெளியே வருவேன். பஞ்ச கிளாக் அருகே நிற்கின்ற முதல் தோழரை பவ்யமாகக் கூப்பிட்டு, அறைக்குள் சென்று, அவரை உட்கார வைத்து - அவர் யார், என்ன, குடும்பத்தில் எத்தனை பேரு என்றெல்லாம் நட்பாகக் கேட்பேன். இந்த மாதிரி ஒரு பத்து நிமிடங்கள் பேசிக்கொண்டிருந்துவிட்டு, மணி நான்கு ஐந்துக்கு, ' சரி நீ போகலாம் ' என்று கூறி அனுப்பிவிடுவேன். இதைத் தொடர்ந்து ஒரு வாரம் செய்தேன் - கிட்டத்தட்ட ஒவ்வொரு நாளைக்கு ஒவ்வொருவர் வந்து மாட்டுவார். அப்புறம் ஒரு வாரம் - மூன்று ஐம்பத்து நான்கு மணிக்கு - என் அறைக் கதவை - என் உதவியாளர் - லேசாகத் திறப்பார். அவ்வளவுதான் - கிளாக் கூட்டம் கலைந்தோடும். தொடர்ந்து நானும், பயிற்சி நிலைய உதவி மேலாளர்களும் இதை செய்துவந்தோம். நாளடைவில் பஞ்ச கிளாக் கூட்டம் - பழைய கதையாகிவிட்டது என்றார் அவர், புன்னகையுடன். 


உங்க வாழ்க்கையில் நீங்க கடைபிடித்த அல்லது உங்களுக்குத் தெரிந்தவர்கள் கடைபிடித்த எளிய படைப்பாற்றல் அப்ரோச்களை எங்களுடனும், மற்ற வாசகர்களுடனும் பின்னூட்டம் மூலமாக பகிர்ந்துகொள்ளலாமே!

12 comments:

ஹேமா said...

ஸ்ரீராம் வீட்டில விருந்தாளிங்க.ஒரு வாரம். எனக்கு லீவு தாங்க.vote மட்டும்தான்.

எங்கள் said...

ஹேமா - வீட்டுக்கு வந்திருக்கும் விருந்தாளிகளையும் சேர்த்துக்கொண்டு நீங்க இன்னும் நிறைய பங்களிப்பு செய்யலாமே எங்களுக்கு! சரி, சரி! உங்க சந்தோஷத்துக்கு நடுவே நாங்க வரலை சந்தோஷமா இருங்க, உற்சாகக் கவிதைகள் படையுங்கள்.

அப்பாதுரை said...

புரியலையே? கூட்டத்தை எப்படி சீராக்கினார்?

தியாவின் பேனா said...

நல்லது இன்னும் நிறைய எழுதுங்கள்

ரோஸ்விக் said...

மாத்தி யோசி - இது பல வெற்றிகளை குவிக்கும் என்பதில் ஐயம் இல்லை. :-)

எங்கள் said...

அப்பாதுரை சார் - குப்தா பின்பற்றிய டெக்னிக் என்ன என்றால், கூட்டம் அல்லது பஞ்ச கிளாக் கியூ மாலை மணி மூன்றாம்சுழி -- இல்லை இல்லை - மூன்று ஐம்பது நேரத்தில் உருவானால், கியூவின் முதல் நபரை கூப்பிட்டுக்கொண்டு போய், அவரிடம் பேச்சுக் கொடுத்து - நாலு ஐந்துக்கு அவரை பஞ்ச் செய்ய அனுப்பிவிடுவது. இதனால் நாளடைவில், குப்தா வருகிறார் என்றால், முதல் நபர் விலகி ஓடிவிடுவார். உடனே இரண்டாம் நபர் - முதல் நபர் ஆகிவிடுவதால் - அவரும் ஓடி விடுவார் - பிறகு மூன்று, நான்கு, எல்லோரும் ஓடிவிடுவார்கள். குப்தா அறைக்கதவு திறந்தால், கூட்டம் போயே போச்! கியூ ஃபாரம ஆனால் குப்தா அறைக்கதவு திறக்கும் - கியூ மறையும் - இதுதான் டெக்னிக்.

எங்கள் said...

தியாவின் 'பேனா'வே எங்களை எழுதச் சொல்வதால் - எங்களுக்குத் தடையே இல்லை இன்னும் நிறைய எழுத!

எங்கள் said...

ரோஸ்விக் அவர்கள் சொல்வது சரிதான். மாத்தி யோசி என்பதை லேட்ரல் திங்கிங் என்று சொல்லலாம்; குப்தா அவர்கள் பஞ்ச கிளாக் அருகே கூடுகின்ற கூட்டத்தை - கூடாமல் செய்ய, தன படைப்பாற்றலை பயன்படுத்தி வெற்றி பெற்றார். மாத்தி யோசித்தல் என்பதும் படைப்பாற்றலின் ஒரு முக்கியமான அங்கம்.

புலவன் புலிகேசி said...

நல்ல பகிர்வு...

ராமலக்ஷ்மி said...

நல்ல அனுபவப் பகிர்வு!

எங்கள் said...

நன்றி புலவன் புலிகேசி - உங்க புலவன்புலிகேசி வலைப் பதிவில். பதிவுகளில் இருக்கும் ஒரிஜினாலிட்டி மிகவும் போற்றத்தக்கது.

எங்கள் said...

ராமலக்ஷ்மி மேடம் - உங்க தமிழமுதம் (முத்துச்சரம்) வலைப் பதிவு பார்த்தால் எங்களுக்கு மலைப்பாக இருக்கிறது! தரமும் சுவையும் மிக அருமை. வாழ்த்துக்கள்.

Post a Comment

இந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க!