Monday, November 2, 2009

டும் டாம் - வாக்கெடுப்பு!

ரசிகர் பெருமக்களே!
உங்க நீடித்த ஆதரவுக்கு நன்றி.
இதை 'எங்கள்' ப்ளாக் என்று நாங்க சொல்லிகிட்டாலும், நீங்களும் அதையே சொல்லுவதால் - இது நம்ம ப்ளாக்.
முன்பு நான் வேலை பார்த்த தொழிற்சாலையில் - அடிக்கடி - சில பிரச்னைகளுக்கு - வேண்டும் / வேண்டாம் - வாக்கெடுப்பு நடைபெறும். அது, தொழிற்சங்கம் தொடர்ந்து எந்த திசையில் செல்வது என்ற முடிவிற்கு பேருதவியாக இருக்கும்.
அந்த வகையில், இங்கே நாங்க - ஒரு வாக்கெடுப்பு - இதோ இங்கே மேலே - இடப்பக்கம் பாருங்க -- ஆமாம் - அதுதான் - எங்கள் ப்ளாக்ல வார ராசி பலன் பகுதி வேண்டுமா? - அல்லது வேண்டாமா? என்ற கேள்விக்கு நீங்க ஏதாகிலும் ஒன்றுக்கு வோட்டுப் போடலாம். 
இது, எங்க பதிவு (வே)வலையை மேம்படுத்திக் கொள்வதற்காக.
 எங்கள் அளவுகோல்கள்:
ஒன்று : தமிழிஷ் வோட்டுகள்
இரண்டு : பின்னூட்டங்களில் வருகின்ற கருத்துக்கள்.
மூன்று: reactions box - markings - "Very Good / Good / No good" 
ஆகியவை.
வார ராசி பலன் பகுதிக்குத் தான் - இது வரையில் - இந்த மூன்று  அளவு கோல்களில், குறைந்த அளவு ரீடிங். எனவேதான் இந்த வாக்கெடுப்பு.
வோட்டுப் போடுபவர்கள் - தயங்காமல் - உங்கள் வோட்டைப் போடுங்கள். இது பற்றி உங்க கருத்து ஏதாவது இருந்தால் அதை இங்கே பின்னூட்டமாகப் பதியுங்கள். இயன்றவரை அனானி - முகமூடி வேண்டாமே - இங்கே மட்டும்.
வாக்கெடுப்பு நடந்து முடிந்த பின் - உங்கள் அனுமதியோடு - இதில் மேற்கொண்டு சில முடிவுகள் நாம் எடுப்போம்.
ஆசிரியர் குழு 

5 comments:

நாளும் நலமே விளையட்டும் said...

வார ராசிபலன் வேண்டாமே!

ஊரே சேர்ந்து செய்யறது போதும் நாமும் ஏன்?

வெண்ணிற இரவுகள்....! said...

நண்பரே வேண்டவே வேண்டாம்

ஹேமா said...

எனக்குப் பிடிக்காது.
மத்தவஙகளுக்குப் பிடிச்சா போடலாம்.

Anonymous said...

ராசி பலன் படிப்பவர்கள் பலரும் நல்ல பலன்களை நம்பி அல்லாத பலன்களை " இது எல்லாம் சும்மா ஒரேயடியா அதிகப் படுத்தி சொல்றது " என்று புறந்தள்ளி விடுவது சகஜம். எனவே காழியூர் நாராயணன் போன்ற ஜோதிடர்கள் நல்லதை அழுத்திச் சொல்லி பிறவற்றை மேல் போக்காக விட்டுவிடுவர். இந்த பார்முலா பின்பற்றத் தக்கது என்று சொல்வேன். ஆனால் சிலர் ராசி பலனை ஒரேயடியாக நம்பி குட்டிச் சுவராகப் போவது உண்டு. புதையல் கிடைக்கும் என்று பூசாரி சொன்னதால் சொந்த மகனை பலி கொடுக்கும் முட்டாள்கள் நிறைந்த நாடல்லவா நமது பொன்னாடு.

இல்லஸ்டிரேடெட் வீக்லி ஆசிரியராக திரு குஷ்வந்த் சிங் இருந்த போது ஒரு முறை ராசி பலன் உரிய நேரத்தில் வரவில்லை என்றதும் ஒரு பழைய இதழிலிருந்து மீண்டும் எடுத்துப் பிரசுரம் செய்ய, அந்த வாரம் பலன்களை பாராட்டி நிறைய கடிதம் வந்ததாக குறிப்பிட்டிருந்தார். (இது உடான்ஸ் ஆகவும் இருக்கலாம்.)

எனவே மனைவி துரோகம் செய்வாள் ஜாக்கிரதை, மாமியார் சாப்பாட்டில் விஷம் வைத்து விடலாம் என்கிற மாதிரி பலன் சொல்லாத வரை எல்லா பலனும் ஒன்றே நன்றே.

ஆசிரியர் குழு said...

எல்லா கருத்துக்களும் - மதிப்பு மிகுந்தவைகளாக உள்ளன. எல்லாவற்றையும் - ஊண்றிப் படித்துக் கொண்டிருக்கிறோம். இன்னும் தொடர்ந்து இங்கே நாங்க வந்து படிப்போம். நா. ந வி, வெ.இ - ஹே - அ -- எல்லோருக்கும் இதுவரை நன்றி. இன்னும் கருத்துக்கள் வரவேற்கப்படுகின்றன.

Post a Comment

இந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க!