செவ்வாய், 10 நவம்பர், 2009

நீங்களும் படைப்பாற்றல் மிக்கவர்தான்!

Creativity - என்பதை, படைப்பாற்றல் - னு சொல்லலாம் என்று நினைக்கிறேன். 
அது என்ன படைப்பாற்றல்? 
படைப்பாற்றல் என்பது, நீங்க முன்னர் சிந்தித்து, தேர்ந்தெடுத்த இலக்கை அடைய, நீங்க பயன்படுத்துகின்ற யுக்திகள். Creativity is generation of ideas, to achieve a pre-determined goal.
எல்லா உயிரினங்களும், படைப்பாற்றல் பெற்றவைதான், மனித இனம், இதில் அதிக படைப்பாற்றல் உடையது. சில பயிற்சிகளால், இந்த படைப்பாற்றலை மென்மேலும் விருத்தி செய்துகொள்ளலாம். பயிற்சிகள் நிறைய வரும், காத்திருங்கள்.


நீங்க படைப்பாற்றல் மிக்கவர் என்று எப்படி சொல்கிறேன் தெரியுமா?
உங்க சிறு வயதில், நீங்க பள்ளிக்குச் சென்று கொண்டிருந்த நாட்களில், ஏதோ ஒரு காரணத்திற்காக, ஒருநாள் உங்களுக்கு - பள்ளிக்குச் செல்ல விருப்பம் இல்லை. அப்போ, மறுநாள் பள்ளிக்கு லீவு போடணும் - என்பது உங்க இலக்கு. அதை அடைய - நீங்க பின்பற்றிய யுக்திகள் எவ்வளவு உண்டோ, அவை அனைத்துமே, உங்க படைப்பாற்றலுக்கு உதாரணங்கள்.


அந்த திரிஷா விளம்பரம் பார்த்திருப்பீர்கள் --
"அழகு உங்க கைகளில்,
உலகம் உங்க காலடியில்"


இதை நான் கொஞ்சம் மாற்றியமைத்து,
"அழுக்கு உங்க காலடியில்"
இது இரண்டாவது வரி,  என்றால் - முதல் வரி என்ன என்று கேட்டேன். 
அதற்கு என் மனைவி கூறிய முதல் வரியைக் கேட்டு - நிஜமாகவே திகைத்துப் போனேன். நீங்க முதல் வரிக்கு முயற்சி செய்து, இங்கே இடுங்கள்.
உங்களால் முடியும்.

22 கருத்துகள்:

  1. உலகம் உங்கள் கையில்....
    அழுக்கு உங்கள் காலடியில்...

    சரியாப்பா?

    பதிலளிநீக்கு
  2. உலகம் உங்கள் கையில்....
    அழுக்கு உங்க காலடியில்...

    sollunka seekkiram

    பதிலளிநீக்கு
  3. முயற்சி உடையார்,
    இகழ்ச்சி அடையார்!

    அது எப்புடி - ரெட்டைக் கொம்பு எழுத்தோட பேரு ஆரம்பிக்கரவங்க ரெண்டு பேரும் ஒரே மாதிரி சிந்திச்சிருக்கீங்க? ஆச்சரியமா இருக்கு!

    ஒரு சின்ன க்ளூ : இந்தப் பதிவிற்கு ஒரு பதில்தான் சரி என்று எதிர்பார்க்காதீர்கள். பத்துக்கு மேலே சரியான பதில்கள் உள்ளன.

    பதிலளிநீக்கு
  4. கர்சீப் என் மூக்கில்
    அழுக்கு உங்கள் காலடியில்..
    கப்பு தாங்கலை :(
    சரியா???

    பதிலளிநீக்கு
  5. இன்னமும் சிரித்துக் கொண்டிருக்கிறோம் கிருத்திகா!
    மூக்கிலேருந்து கர்சீப்பை எடுத்து எங்க கண்ணைத் தொடச்சிக்கணும்!

    பதிலளிநீக்கு
  6. செருப்பு உங்கள் கைகளில்

    http://kgjawarlal.wordpress.com

    பதிலளிநீக்கு
  7. அட !! பிச்சிட்டீங்க ஜவஹர்! அதனாலதான் அப்படியா?

    பதிலளிநீக்கு
  8. தொடப்பம் உங்க கையில்
    அழுக்கு உங்க காலடியில்

    கரெக்ட் ஆ.. அதுவும் தொடப்பம் யார் கிட்ட இருக்குங்கறத பொறுத்து :)

    பதிலளிநீக்கு
  9. பிரசன்ன குமார்!
    ஐயோ பயமா இருக்கே!
    அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்

    பதிலளிநீக்கு
  10. அன்பு உங்கள் உன்மனதில்
    அழுக்கு உங்கள் காலடியில்

    பதிலளிநீக்கு
  11. அன்பு உங்க உள் மனதில் -
    அட - அனானி! - எங்கியோ போயிட்டீங்க!

    பதிலளிநீக்கு
  12. ஆத்துக்காரர் உங்கள் கையில்
    அழுக்கு உங்க காலடியில்...

    ஒழுக்கம் உங்கள் கையில்...
    அழுக்கு உங்க காலடியில்...

    பதிலளிநீக்கு
  13. ரெண்டாவது ரிதமிக்கா இருக்கு ஹேமா...

    பதிலளிநீக்கு
  14. ALUKKU UNGAL KAIYIL
    KIRUKKU UNGA MANDAYIL

    பதிலளிநீக்கு
  15. நன்றி ரகுநாதன்!
    அனானியாக வந்ததும் தாங்கள்தான் என்று நினைக்கிறேன்!
    உங்களுக்கு ஏன் எங்கள் மீது இந்த கொலைவெறி!!

    பதிலளிநீக்கு
  16. சோப்பு உங்கள் கையில்
    அழுக்கு உங்கள் காலடியில்....
    http://nenjinadiyil.blogspot.com/

    பதிலளிநீக்கு
  17. வாங்க நெஞ்சின் அடியில் - நீங்க வெச்ச அடியில், எங்கள் நெஞ்சு ஒரே சோப்பு வழுக்கலாக - எங்கியோ போயிடுச்சு!

    பதிலளிநீக்கு
  18. காவிரியில் முழுக்கு!
    காலடியில் அழுக்கு!

    பதிலளிநீக்கு
  19. மாலி - உங்க இஷ்டத்துக்கு இரண்டாம் அடியை மாத்திக்கிட்டீங்க!
    மூன்று வார்த்தைகளை வேற இரண்டு வார்த்தைகளா சுருக்கிட்டீங்க. மறுபடியும் பரீட்சை எழுதணும் - TNPSC - Thirumbavum Neenga Paritchai Sariyaa Cheyyunga!

    பதிலளிநீக்கு
  20. எங்க' படைப்பாற்றலில்' மூன்று வரியை ரெண்டு வரியா சுருக்கிட்டோம். இருப்பினும் fall in line என்றதால் இதோ 3 வரி.
    கொழுக்கு மொழுக்கு என்றாலும்
    அழுக்கு உங்கள் காலடியில்

    பதிலளிநீக்கு
  21. ஆஹா - இது சூப்பரா இருக்கு.

    பதிலளிநீக்கு

இந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க!