Friday, November 13, 2009

படைப்பாற்றல் - மிகவும் எளிது

இந்தப் பதிவை ஊன்றிப் படியுங்கள். கீ ... ழே இரண்டு கேள்விகள் கேட்கப்பட்டுள்ளன.
முதல் கேள்விக்கு சரியான பதில் ஒன்றுதான் இருக்க முடியும். 
அந்த பதில் சரியாகவும் இருக்கலாம்; தவறாகவும் இருக்கலாம்.
சரியான பதிலைக் கூற - உங்களுக்குக் கொஞ்சம் படைப்பாற்றல் இருந்தால் போதும் (கவனமாக இருப்பதும் படைப்பாற்றல்தான் - ஆனால் அது மட்டுமே அல்ல)
தவறான பதிலைக் கூறிவிட்டு, அதை சரி என்று நிரூபிக்க உங்களால் முடியும் என்றால் - முதல் பதில் கூறியவரைவிட உங்கள் படைப்பாற்றல் இரண்டு மடங்கு அதிகம்.
இரண்டாவது கேள்விக்கு பதில் - நூற்றுக் கணக்கில் இருக்கிறது. எல்லாமே சரியான பதில்தான். உங்களுக்கு அதில் எவ்வளவு தெரிகிறது என்று பார்க்கலாம்; ஒவ்வொரு பதிலுக்கும் பத்து மதிப்பெண்கள். உங்க மொத்த மதிப்பெண் என்ன என்று உடனுக்குடன் பதிவோம்.
இதில் எதற்குமே பதில் தெரியவில்லை என்றால், என்னைப் போலவே - தமிழிஷ் சென்று அதில் ஒரு வோட்டு தட்டிவிட்டு - யார் சரியான பின்னூட்டம் இடுகிறார்கள் என்று - என்னோடு சேர்ந்து பார்த்துக் கொண்டிருங்கள்!
இதோ இரண்டு கேள்விகள் :
1) இதற்கு முந்தைய 'எங்கள்' கபில் தேவ் பதிவில் - கபில் தவிர, எவ்வளவு கிரிக்கட் வீரர்கள் பெயர்கள்  உள்ளன?
2) நீங்க கேட்கின்ற  கேள்வி(களு)க்கு - எங்கள் சரியான பதில் 'ஐந்து' என்றால், உங்க கேள்வி(கள்) என்ன/எவை ?

மறுபடியும் சொல்கிறோம் -
உங்களால் முடியும்.
(சூப்பர் படைப்பாற்றல் உள்ளவர்களுக்கு, ஒரு கேள்வி - படைப்பாற்றல் பற்றிய எங்கள் அடுத்த பதிவில் - யாருடைய படம் இடம்பெறும், ஏன்?)
** சூப்பர் படைப்பாற்றல் சரியான பதிலுக்கு ஆயிரம் மதிப்பெண்கள் உண்டு.

28 comments:

கேசவன் .கு said...

நான் இரண்டாவது கேள்வியை எடுத்துக்கிறேன் ?

க்கும்... க்கும்... ( ஒன்னும் இல்ல செருமிக்கிறேன் )

பஞ்ச பூதங்கள் எத்தனை :

நான்கிற்கு அடுத்த எண் என்ன :

ஆறிற்கு முந்தைய எண் என்ன :

1+ 4 எவ்வளவு :
2+ 3 எவ்வளவு :
3+2 எவ்வளவு :
4+ 1 எவ்வளவு :

9-4 எவ்வளவு :
8-3 எவ்வளவு :
7-2 எவ்வளவு :
6-1 எவ்வளவு :

என்ன ஜோக்கா ?????????
வகுத்து, கழிச்சு, கூட்டி எவ்வளவு கேள்வி வரும்னு பார்த்துக்கங்க !

எங்கள் said...

கேசவன் - நூற்றுப்பத்து மார்க்.

எங்கள் said...

இனிமே வருகின்ற ஒவ்வொரு புதிய பதிலுக்கும் பதினைந்து மதிப்பெண்கள்.

பின்னோக்கி said...

மனிதனுக்கு வலது கையில எத்தனை விரல் இருக்கும். ?
மனிதனுக்கு இடது கையில எத்தனை விரல் இருக்கும். ?
மனிதனுக்கு வலது கால்ல எத்தனை விரல் இருக்கும். ?
மனிதனுக்கு இடது கால்ல எத்தனை விரல் இருக்கும்.?

இந்த கேள்வி போதுமா ?

எங்கள் said...

பின்னோக்கி - உங்களுக்கு அறுபது மார்க்!
அடுத்து வரும் புதிய பதில் ஒவ்வொன்றுக்கும் இருபது மார்க்குகள்!

meenakshi said...

உங்கள் முதல் கேள்விக்கான விடை 'பதிமூன்று பேர்'.

இரண்டாவது கேள்விக்கான கேள்விகள்:

நம் தமிழ் மொழியில் பெரும் காப்பியமாக கருதப்படுவது எத்தனை?
நம் முழு முதற் கடவுள் விநாயகருக்கு எத்தனை கரங்கள்?
________ வளையாதது ஐம்பதில் வளையுமா? (கோடிட்ட இடத்தை நிரப்பவும்)
மகாபாரத்தில் வரும் திரௌபதிக்கு எத்தனை பதிகள்?
சங்க காலத்தில் நிலப்பகுதியை எத்தனை வகைகளாக பிரித்தார்கள்?

நான், இந்த பின்னூட்டத்தில், இதை தவிர்த்து, மேலே எத்தனை கேள்விகள் கேட்டிருக்கிறேன்?

ஹேமா said...

1)இயான் போத்தம்,ரிச்சர்ட் ஹாட்லீ,இம்ரான்கான்,விவியன் ரிச்சர்ட்ஸ்,பீட்டர் கிறிஸ்டன்,கவாஸ்கர்,ஸ்ரீக்காந்த்,ஹிர்வானி......போதும்.

2)பஞ்ச பூதங்கள் எத்தனை ?

ஸ்ரீராம்,உங்க ஒரு கையில எத்தனை விரல் ?

3)இந்த மாதத்தில் M.G.R தினம் வருகிறது என்று நினைக்கிறேன்.(சரியா)அவர் படமாய் இருக்குமோ ?

எங்கள் said...

மீனாக்ஷி, ஹேமா -- புல்லரிக்க வெச்சுட்டீங்க. இரண்டு பேருமே - இதுவரையிலும் யாரும் எய்யாமல் இருக்கின்ற முதல் கேள்விக்கான பதிலை - சொல்ல முயன்றிருக்கிறீர்கள். இந்த வகையில் இருவருக்குமே ஆளுக்கு நூறு மதிப்பெண்கள்.
ஆனால் - இருவருடைய பதில்களுமே சரியான / முழுமையான பதில் இல்லை.
இரண்டாவது கேள்விக்கு வித்தியாசமாக யோசிப்பவர் - என்கிற வகையில் மீனாக்ஷி - முதல் மதிப்பெண் பெறுகிறார் (இந்த இருவருக்குள்) ஹேமா அவர்கள் கூறியிருப்பது - கேசவன்,
பின்னோக்கி ஆகியோர் மேலே ஏற்கெனவே கூறியிருப்பவை.
மூன்றாம் கேள்வி என்று ஒன்று இருக்கிறது என்பதையே - இதுவரையில் ஹேமா தவிர யாரும் கவனித்ததாகத் தெரியவில்லை. எனவே - ஹேமா அவர்களுக்கு ஐந்நூறு மதிப்பெண்கள் - மூன்றாம் கேள்விக்கு பதில் முயற்சித்ததால்!
நெட் ரிசல்ட் : மீனாக்ஷி 200.
ஹேமா : 600.

எங்கள் said...

எங்கள் வலை வாசகர்களே!
இந்தப் புதிர்ப் பதிவின் விடைகளுக்கான இறுதி தேதி நவம்பர் முப்பது. இதில் அதிக மதிப்பெண் பெறுபவர்களது படமும் விவரங்களும், எங்கள் 'படைப்பாளர் நீங்க' பகுதியின், டிசம்பர் மாத முதல் பதிவில் வெளியிடுவோம். ஏற்கெனவே பதில் பதிந்தவர்கள், மீண்டும் பதியலாம் (புதிய பதில்களுடன்)- தவறு இல்லை.

புலவன் புலிகேசி said...

நண்பரே முதல் கேள்வியின் விடை 13

இரண்டாவது....

1 என்றால் எத்தனை?
2 என்றால் எத்தனை?
3 என்றால் எத்தனை?
4 என்றால் எத்தனை?
5 என்றால் எத்தனை?
6 என்றால் எத்தனை?
7 என்றால் எத்தனை?
..................................

எங்கள் said...

புலவரே - எங்களுக்கு என்னவோ பதின்மூன்று சரியான பதில் என்று தோன்றவில்லை - பதிவாசிரியர் எண்ணிக்கொண்டிருக்கிறார் - அனேகமாக முப்பதாம் தேதிக்குள் சரியாக எண்ணி விடுவார் என்று தோன்றுகிறது. இல்லையேல் இருக்கவே இருக்கிறது - மறு வாக்கு எண்ணிக்கை !!
உங்க இரண்டாவது பதிலைப் படித்துவிட்டு நாங்க பாயைப் பிறாண்டிக்கொண்டே பாடிக் கொண்டிருக்கிறோம் "எத்தனை எத்தனை - துன்பமடா - இவை எல்லாம் எங்களுக்கே சொந்தமடா!"
கோவிச்சுக்காதீங்க - ஒரு ஜாலிதான்!

ஹேமா said...

எனக்கே எனக்கு 600.
எப்பிடிப்பா ஹேமா !
அதான் நம்ம M.G.R

எங்கள் said...

ஹேமா - சற்றுமுன் கிடைத்த தகவல் - நம் வலை வாசகர் ஒருவர் - ஐந்து என்கிற விடை வருகின்ற கேள்விகளை - இது வரை - ஆயிரத்துத் இருநூற்றுக்கு மேல் எழுதிவிட்டாராம் - இன்னும் இலட்சக் கணக்கில் பதில் இருக்காம் - எல்லாவற்றையும் மெயிலில் தனியாக engalblog@gmail.com க்கு அனுப்பப் போகிறேன் என்று சொல்லி ஒரு மெயில் அனுப்பி இருக்கிறார். போற போக்கைப் பார்த்தால் - அவரு இரண்டு லட்சம் மதிப்பெண்களுக்கு மேலே எடுத்து, அவருடைய படம் வரும்போலிருக்கு. சும்மா பீலா விடுகிறாரா அல்லது மெய்யாலுமா என்று தெரியலை.

ஹேமா said...

கவிதைதான் கவலையா எழுதறேன்னு பார்த்தா இப்பிடி பின்னூட்டத்திலயாச்சும் சந்தோஷப்படன்னு பாத்தேன்.
அட...ச்ச...என் சந்தோஷத்தைக் கெடுக்கன்னே ராஜபக்ச மாதிரி எங்காச்சும் வில்லன்னுங்க முளைச்சுக்கிட்டே இருக்காங்க ஸ்ரீராம்.

எங்கள் said...

ஹேமா - கவலையை விடுங்க! இன்று, இந்தக் கணம் வரை நீங்கதான் டாப் ஸ்கோரர் - அப்பப்ப தோணுகின்ற பதில்களை - முப்பதாம் தேதி வரையிலும் எழுதிகிட்டே இருங்க - மொத்த மதிப்பெண்கள் கூடிகிட்டே வரும். மெயில் பூதங்களைப் பார்த்து அச்சப்படாதீர்கள்!

எங்கள் said...

மற்றக் கேள்விகளுக்கான பதில்கள் - இறுதித் தேதி, நவம்பர் முப்பது. சூப்பர் படைப்பாற்றல் கேள்விக்கான பதில் இறுதித் தேதி நவம்பர் பதினெட்டு.
க்ளூ : நவம்பர் பத்தொன்பது + ஹேமா அவர்களின் பின்னூட்டத்தில் இங்கே, மேலே - அவர்கள் கூறியுள்ள ஒரு பெயர் + ஒரு விவரம்.

raman said...

எட்டில் மூன்று போனால் எவ்வளவு/ ஒன்பதில் நாலு போனால் எவ்வளவு என்று சொல்லிக் கொண்டே போனால் லட்சம் என்ன கோடி கூட சொல்லலாம். எனவே இந்த வகை விடைக்கு ஒரு மார்க், அதிலிருந்து முளைத்த கேள்விகளுக்கு மார்க் இல்லை என்று வைத்துக் கொள்ள வேண்டும்.

பாண்டவர்கள் ஐந்து அல்ல ஆறு, கர்ணன் ஒருவன் இருக்கின்றான் என்பது போல் விடைகளை எதிர்த்துச் சொல்லி சரியாக எதிர்த்தால் ஒரிஜினல் விடைக்கு மார்க் குறைத்துவிட வேண்டும்.

பஞ்சாபில் எவ்வளவு ஆப் இருக்கிறது என்று கேட்டால் இருபது மார்க் கொடுக்கலாமே!

எங்கள் said...

ராமன் அவர்கள் அஸ்திவாரத்தையே ஆட்டி வைத்துவிட்டார் - ஆமாம் - முழு எண்களை சிந்தித்தவர்கள், பின்னங்களையும் - தசமங்களையும் ஏன் சிந்திக்காமல் விட்டார்கள்?
எனக்கு "விடைகள் வந்து விழுந்து கொண்டே இருக்கிறது " என்று மெயில் அனுப்பிய வாசகர் - ஒரு சி ப்ரோக்ராம் எழுதி, ஐந்து என்கிற விடை வருகின்ற கேள்விகளை உற்பத்தி செய்துவிட்டாராம். விடைகளின் எண்ணிக்கை இதுவரை சுவிஸ் பாங்குகளில் இந்தியர்கள் போட்டு வைத்திருக்கும் அமவுண்டை விட அதிகமாக இருக்கிறதாம்!
அதை அவர் இங்கே பதியவும் முடியாது; குரியர் அனுப்பினால் - அவருடைய சொத்துமுழுவதும் - குரியர் சார்ஜ் க்கு சரியாப் போய்டும். எனவே,
இன்னமும் - ஹேமா தான் லீடிங்.
ராமன் அவர்களின் பாண்டவர் பஞ்சாப் பாயிண்டுகள் - படைப்பாற்றலின் உச்சம்.
வாழ்த்த வயதில்லை ! வணங்குகிறோம்.

meenakshi said...

மும்மூர்த்திகளில் ஒருவரான தியாகராஜர் கீர்த்தனைகளில் ரத்தினம் என்று சொல்லப்படும் கீர்த்தனைகள் எத்தனை?
சரண் சிங் அவர்கள் இந்தியாவின் எத்தனாவது பிரதம மந்திரி?
விஷ்ணுவின் தசாவதாரத்தில் வாமன அவதாரம் எத்தனாவது அவதாரம்?
மாதங்களில் 'மே' மாதம் எத்தனாவது மாதம்?
இப்படியும் ஒரு பழமொழி உண்டு. ________ பெண்களை பெற்றால் அரசனும் ஆண்டியாவான். (கௌதமன் இது 'ஆண்டி', 'aunty' இல்லை.)
சப்த ஸ்வரங்களில் 'பஞ்சமம்' என்று சொல்லும் 'ப' எத்தனாவது ஸ்வரம்?

இப்படி யோசிச்சா இன்னும் நிறைய எழுதிண்டே போகலாம்.

சூப்பர் படைப்பாற்றல் கேள்விக்கு பதில் 'ஸ்ரேயா'. ஏன்னா நீங்க இப்ப இருக்கற கதாநாயகிகள் படங்கள போடறீங்க. த்ரிஷா, பாவனா, இந்த ரெண்டு பெயரும் 'ஆ' அப்படின்னு முடியறதால அடுத்தது 'ஸ்ரேயா'. உங்களோட 'க்ளூ' எனக்கு புரியல. அதான் இப்படி யோசிச்சேன்.

எங்கள் said...

மீனாக்ஷி அவர்களே சூப்பர், சூப்பர்.
திரும்பவும் மெய் சிலிர்க்க வைத்துவிட்டீர்கள். மூன்றாம் கேள்விக்கான உங்க பதில் - பிரமாதம். அதற்கு மட்டுமே ஒரு ஆயிரம்.
ஆக இதுவரை உங்க மொத்த மதிப்பெண் ஆயிரத்து முன்னூற்று இருபது.
இப்பப் பாக்கலாம் - ஹேமா உங்களை முந்துவார்களா என்று - இன்னும் இருபத்தெட்டு மணி நேரங்கள் உள்ளனவே --
(ஆனா - அந்தப் பதிவில் இடம்பெறப் போகும் படம், ஸ்ரேயா இல்லை!)

meenakshi said...

சூப்பர் படைப்பாற்றல் கேள்விக்கு, என்னோட கடைசி முயற்சி.
நவம்பர் 19, மறைந்த பிரதமர் இந்திரா காந்தி அவர்களின் பிறந்த நாள். அதனால் உங்கள் அடுத்த பதிவில் அவருடைய படம் இடம் பெறலாம் என்று நினைக்கிறேன். சரியா?

எங்கள் said...

மீனாக்ஷி, ஸ்ரேயாவுக்கு அடுத்தபடியா - நல்ல நடிகை - நீங்க இப்போ சொன்னவங்களா இருக்க முடியாது. இதோ இன்னொரு க்ளூ : நவம்பர் பத்தொன்பது - 'ந' வில் பெயர் ஆரம்பிக்கும் ஒரு 'நல்ல' நடிகரின் நினைவு நாள். அவர் இல்லையேல் எம்ஜியாரே இல்லை என்று கூட சொல்லலாம்.

meenakshi said...

ஆஆஹா! நம்பியார் அவர்கள்தானே! எனக்கு மிக மிக பிடித்த அழகான வில்லன். ஆயிரத்தில் ஒருவன் படத்தில் நான் எம்.ஜீ.ஆர். அவர்களின் நடிப்பை விட இவர் நடிப்பை மிகவும் ரசிப்பேன். இவர் நடித்ததில் என்னை மிகவும் கவர்ந்த பாத்திரம் லக்ஷ்மி கல்யாணம் படத்தில் வரும் 'சுருட்டு சுந்தரம் பிள்ளை' என்ற பாத்திரம் தான். இவரை பற்றி சொல்ல ஆரம்பித்தால் சொல்லிக்கொண்டே போகலாம். அப்பறம் பின்னூட்டமே ஒரு பதிவாகி விடும்.

Engalblog said...

Meenakshi ! Very excellent.
In our padaippaatral December blog, we would like to publish more details about you - please forward us, the details, (whichever can be published) - to us - to our engalblog@gmail.com -- if you require guidelines, please send us a mail to this gmail id.
Thank you.
Engal

meenakshi said...

90% சதவிகித விடையை நீங்களே கூறி விட்டீர்கள். அதனால் எனக்கு credit கொடுப்பது நியாயமே இல்லை. இருந்தாலும் மிக்க நன்றி. என்னை பற்றி பெருமையாக சொல்லிக்கொள்ள ஒன்றும் இல்லை. நான் முழுக்க முழுக்க சென்னை வாசி. திருமணத்திற்கு பின் சில வருடங்கள் பெங்களூரிலும், கடந்த ஐந்து வருடங்களாக அமெரிக்காவிலும் இருக்கிறேன். கணவர் Software துறையில் இருக்கிறார். இரண்டு ஆண் குழந்தைகள்.

உங்களிடம் ஒரு வேண்டுகோள். எனக்கு இசை என்றால் உயிர். கர்நாடக சங்கீதம், திரையிசை பாடல்கள் இரண்டையும் கேட்பேன். இருப்பினும், மெல்லிசை மன்னர் திரு. எம்.எஸ்.விஸ்வநாதன் அவர்கள் பாடல்களில் தான் நான் வாழ்வதே. ஒரு நாள் கூட நான் அவர் பாடல்களை கேட்காமல் இருந்ததில்லை. என்னை பொறுத்தவரை என் இசை கடவுள் அவர்தான். அதனால் நீங்கள் உங்கள் பதிவில், என் வேண்டுகோளை ஏற்று, திரு. எம்.எஸ். விஸ்வநாதன் அவர்களை பற்றி, அவர் புகைப்படத்துடன் எழுத வேண்டும் என்று விரும்புகிறேன். மிக்க நன்றி.

எங்கள் said...

மீனாக்ஷி, அப்படியே செய்கிறோம்.
எம் எஸ் வி அவர்கள் பற்றி நிச்சயம் எழுதுகிறோம்.

கிருஷ்ணமூர்த்தி said...

ஆஹா! இதை மொதல்ல பாக்காமப் போனேனே!

நம்பியார் இங்கேயிருந்து தான் சுருட்டு சுந்தரம் பிள்ளையா வந்தாரா?

அப்புறம் மீனாக்ஷி, எம் எஸ் வி பாடலுக்குப் பதிலாக, நம்பியார் கட்டிக் குரலில் குடியிருந்த கோவில் படத்தில் பேசும் "அடேய்! ராமனாதா!" வசனத்தை ஒளிபரப்பிவிடப் போகிறார்கள்!

Anonymous said...

கிருஷ் சார் - இப்பவே எம் எஸ் வீ அவர்களுக்கு எதிராக - ஏதேனும் 'ஆள்வார்க்கடியார்கள்' கருத்துக்கள் கூறியிருக்கிறார்களா என்று பார்த்து வைத்துக்கொள்ளுங்கள். டிசம்பர் முதல் வாரத்திற்குப் பயன்படும்!

Post a Comment

இந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க!