Saturday, November 21, 2009

தங்கம் - விலை!


நகரம் 


1கி்
10 கி்
சென்னை
1614
17360
மும்பை
1482
17341
டெல்லி
1488
17398
கோல்கட்டா
1493
17455 


இன்றைய எங்கள் கேள்வி - இதோ:
ஒரு கிராம் தங்கம் - மற்ற நகரங்களைவிட - சென்னையில் நூற்று இருபது ரூபாய்கள் விலை அதிகம் -- ஏன்?

11 comments:

malar said...

yarukku therium

எங்கள் said...

Malar,
As compared to other cities,
is the demand for gold more
or less in Chennai?

mix said...

நண்பர்கள் கவனத்திற்கு

தமிழர்ஸ் தளத்தில் உங்கள் பதிவை இணைக்கலாம் வாங்க....

ஆங்கிலம் | தமிழ் | SEO Submit
காணொளி தேடல் | வலைப்பூக்கள் | இங்கே நீங்கள் இருக்கிறீர்களா?

கிருஷ்ணமூர்த்தி said...

தங்க விலையை நிர்ணயம் செய்யும் மும்பை பில்லியன் மார்கெட்டுக்கு அருகே உள்ள ஊர்களில் தங்கத்தின் விலை மும்பையை விட மிகக் குறைந்த வித்தியாசத்திலேயே உயர்ந்து இருக்கும். தூரம் அதிகமானால், கையாளும் செலவு, காப்பீடு முதலியவை சேர்ந்து விலை இன்னும் கொஞ்சம் அதிகமாக இருக்கும் என்பது தியரி.

நடைமுறையில், சென்னையில் தங்க விலையை சர்வதேச விலைகளோ, சந்தையில் இருக்கும் சப்ளை அண்ட் டிமாண்ட் முதலான காரணங்களோ தீர்மானிப்பதில்லை. ஜனங்களுடைய பைத்தியக்காரத்தனம், ஏமாளித்தனம் தான் தீர்மானிக்கிறது.

சென்னையை விட, மதுரையில் க்ராமுக்குக் குறைந்தது இருபது ரூபாயாவது அதிகம் இருக்கும் தெரியுமோ? அதுவும், 19 அல்லது 20 காரட் மாற்று மட்டுமே இருக்கும் தங்கத்துக்கு!

ஆபரணத் தங்கம் என்று வரும் போது அதன் தரத்திலும் விலையிலும் ஆபத்து நிறைய உண்டு என்றறி என் ஞானத் தங்கமே!

எங்கள் said...

கிருஷ் சார், நீங்க சொல்லியிருப்பது, பெரும்பாலும் சரியாகத்தான் படுகிறது.
மார்க்கெட்டுக்கு அருகிலேயே கிடைப்பது - விளையும் பொருள் என்றால் சரி - விலை ஏற்ற இறக்கம் புரிந்துகொள்ளலாம். ஆனா தங்கம்?
இன்னும் விளக்க முடியுமா?
இன்றைய தினமலர் முதல் பக்கப்படி, தங்கம் தமிழ் நாட்டின் எல்லா நகரங்களிலும், ஒரே விலைதான் காணப்படுகிறது.
நான், இன்று ஒரு கிலோ தங்கம் மும்பையில் வாங்கி, அதை சென்னைக்குக் கொண்டு வந்து இன்றே விற்க முடியுமா? விற்றால் - எனக்கு என்ன லாபம் கிடைக்கும்?
சும்மா விவாதத்திற்குதான்.

கிருஷ்ணமூர்த்தி said...

தியரிக்கு அப்பால சொன்னதையும் படிச்சுப் பாருங்க!வடக்கை விட தெற்கில் நகைகளின் மீது மோகம் அதிகம் என்பதும், அந்த மோகத்தையே மூலதனமாக வைத்துக் கொண்டு....

ஒரு தபா, கல்யாண் ஜ்வேல்லர்ஸ் விளம்பரத்துக்காக, சிவாஜி மகன் பிரபுவும் ஹனீபாவும் சேர்ந்து நடித்த விளம்பரப் படத்தைப் பாருங்க!

ஒரே விலை, அல்லது கொஞ்சம் கம்மியான விலை, செய்கூலி, சேதாரம் இல்லை, சவரனுக்கு எண்ணூறு அல்லது ஆயிரம் ரூபாய் தள்ளுபடி, இதெல்லாம் அல்லது இருக்கும் மேலே என்பதெல்லாம் வியாபாரத்தில் நேரத்துக்குத் தகுந்த மாதிரிப் போட்டுக் கொள்ளும் உத்தமர் வேஷம்!

எங்கள் said...

கிருஷ் சார் - இன்னும் ஒரு கேள்வி.
தங்கம் விலைக்கும், வர்த்தகக் குறியீட்டு எண்ணுக்கும் (sensex) மற்றும் பெட்ரோல் விலைக்கும் ஒன்றுக்கொன்று தொடர்பு உண்டா?

கிருஷ்ணமூர்த்தி said...

தங்கம், பணத்தின் மதிப்பை அளவிடும் கருவியாக இருப்பதால் சம்பந்தம் இருக்கிறது. உதாரணமாக, அமெரிக்க டாலரை எப்போது வேண்டுமானாலும் தங்கமாக மாற்றிக் கொள்ள முடியும்.
Gold parity என்று அதை சொல்வார்கள்.

இந்தியப் பங்குச் சந்தை தொண்ணூறு சதவீதம் புரட்டும் புரட்டலும் தான்! தங்கத்தோடு சம்பந்தம் இல்லையென்றாலும், இதில் சூதாடத் தெரிந்தவர்கள், தங்கத்தில் கொழிக்கிறார்கள் என்ற அளவுக்கு சம்பந்தம் இருக்கிறது. இந்த இடத்திலும் தங்கம் செழிப்பாக என்பதன் அடையாளமாக மட்டுமே, கட்டிகளாகவும் பாலைந்களுமாகவும் இருக்க வேண்டிய அவசியம் இல்லை.

எங்கள் said...

கிருஷ் சார் - நிறைய தகவல்கள் அளித்துள்ளீர்கள். 'எங்கள்' வலை வாசகர்களுக்கு, அவை நிச்சயம் உபயோககரமாக இருக்கும் என்று நம்புகிறோம். அடிக்கடி இங்கே வந்து உங்க கருத்துக்களைக் கூறுங்கள். நன்றி.

ஹேமா said...

இது சிம்பிள்.நம்மவங்கதான் நகைப்பிரியர்கள்.ஆனா நான் அப்பிடி இல்லை உண்மையா !சொல்றேன் நம்புங்க.மணிக்கூடுன்னா ரொம்பப் பிடிக்கும்.25 - 30 வகைகள் வச்சிருக்கேன்.

rangan ngt said...

the purity of gold is lowest in chennai but passed on 22ct whereas the purity in other places are higher and prices are lower.obviously the reason is our craze for the yellow metal.though one can argue it is a good investment.if it is held as ornament the value gets lower and lower and purity depends on the intricate design.Nrmally no woman would like to part with her jewels with sentiments playing big role if one is to dispose it at times of crisis

Post a Comment

இந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க!