புதன், 25 நவம்பர், 2009

அதாகப் பட்டது ... அனானியான நான்




பேசும் ஸ்டைல் நபருக்கு நபர் மாறுபடும். எனவே ஒவ்வொருவரும் ஒரு தனிப்பிறவி என்று துணிந்து சொல்லலாம்.  எனக்குத் தெரிந்த ஒரு நண்பர் இந்த விஷயத்தில் சற்று விசித்திரமானவர்.  ஒரு விஷயத்தில் ஆரம்பித்து கிளை பிரிந்து எங்கேயோ போய் விடுவார். அவர் சொல்ல வந்தது என்ன என்பதை நாம் இடை மறித்துக் கேட்டுக் கொண்டால்தான் ஆயிற்று. இல்லையேல் அரோகரா.



"சார் நேத்து ஒரு பயங்கரமான அனுபவம். என்ன புதுசா இருக்கப் போவுது நம்ம பொழைப்பே பயங்கரமாத்தான் மாறிப் போச்சு என்கிறீங்களா?  அப்படியெல்லாம் பயந்தா ஒன்னும் வேலைக்கு ஆகாது சார்,  அவனவன் என்னென்னவோ செஞ்சூட்டு ஜாலியா இருக்கானுவ.  இந்த ....... (ஒரு தலைவர் அல்லது நடிகனின் பெயரை சொல்லி) இருக்கானே அந்தப் பயபுள்ள ஏன்னா தில்லா சுருட்டுறான் பாத்தீயளா?   ஒரு ரெண்டு மாசம் முன்னாடி இவன் கிட்ட ஒரு சோலியா போ வேண்டி வந்துது. .... "   இப்படி வண்டி நிற்காமல் போய்க் கொண்டே இருக்கும்.
ஜோக் சொல்பவர்கள் வேறு விதம். அவர்கள் ஜோக் ஆரம்பித்து சொல்ல முடியாமல் சிரித்து, சிரித்து கண்ணில் நீர் வந்து .. கடைசியில் அந்த ஜோக் தண்ணியில் விழுந்த பொரிச்ச அப்பளம் மாதிரி இருக்கும்.  இதுக்குப் போய் இவ்வளவு அமர்க்களமா என்று அவருக்கே தோன்றும். " நேற்று பிரண்டு சொல்லும் போது படா தமாசா இருந்துச்சு சார் எனக்கு சொல்லத் தெரியல " என்று சொதப்புவார்.



என் நெருங்கிய உறவினர் எல்லாம் சரியாகச் சொல்லுவார். எழுவாயை மட்டும் சொல்ல மாட்டார்.  " காலைலே கிளம்பி போனானா திடீர்னு தந்தி வந்துடுச்சாம். அவசரம் அவசரமா ரயிலுக்கு ஓடினா டிக்கட் கிடைக்கலியாம். கடைசீலே ...  என்ன யார்னா கேக்கறீங்க?  அதான் நம்ம இவன் இருக்கானே அவன்தான் சார், நம்ம கூட பஸ்லே வருவானே வழுக்கைத் தலையா... " இப்படி போய்க் கொண்டு இருப்பார்.






பயங்கரமான விலாவரியாக சினிமா சீரியல் கதைகளை விவரிப்பவர் ஒரு ரகம்.



சும்மா எதிர் மறையா மட்டும் சொன்னா எப்படி?  சிலர் இருக்கிறார்கள் இன்னும் கொஞ்ச நேரம் இருந்து பேசி விட்டுப் போக மாட்டார்களா என்று தோன்றும். அவ்வளவு சுவாரசியமாக பேசுவார்கள்.  சொன்ன ஜோக்கையே திருப்பிச் சொன்னால் கூட ரசித்துக் கேட்கலாம்.  அதாவது என்மாதிரியான மேதாவிகள்.



கை தட்டாதீங்க எனக்கு அப்லாஸ் பிடிக்காது!!!



அனானி

15 கருத்துகள்:

  1. // " நேற்று பிரண்டு சொல்லும் போது படா தமாசா இருந்துச்சு சார் எனக்கு சொல்லத் தெரியல "//

    அதானே...,

    பதிலளிநீக்கு
  2. ம்ம்..சுவாரஸ்யமாத்தான் சொல்றீங்க...

    பதிலளிநீக்கு
  3. "பேசுகிறவன் தலைவன், கவனிக்கிறவன் தொண்டன்" என்றும் மொழிவழக்கு இருக்கிறது. பேசுவதில் தவறில்லை. கவனிக்கிற விதத்தில் பேசுவதில் தவறில்லை. ஆனால் கவனிப்பவர்கள் பேசவே இல்லையென்றால் கொஞ்சம் தகராறு தான். பல வருடங்களுக்கு முன் என்னுடன் வேலை பார்த்த மூத்த நண்பர் எதற்கெடுத்தாலும் மற்றவர்களைக் குற்றம் சொல்லிக்கொண்டே இருப்பார். "ராமனா, சுத்த உதவாக்கரையாச்சே? இவனெல்லாம் மானேஜர் இப்ப... உருப்பட்டாப்ல தான்" என்று ராமனை விளாசிக் கொண்டு போவார். நாம் பதில் ஏதும் சொல்லாமல் கவனித்தபடியே இருந்தால் அவருக்கு பயம் வந்துவிடும், எங்கே நாம் ராமனிடம் சொல்லிக் கொடுத்து விடுவோமோ என்று - டக்கென்று திருப்புவார் "இவ்வள்வு சொன்னாலும் - ஆனா ராமனுக்கு மனசிருக்கு பார், தங்கம்னா தங்கம்!" . மூத்த நண்பரை வீம்புக்காகக் கிளப்பி விட்டு வேடிக்கை பார்ப்போம். எண்பதுகளின் தொடக்கத்தில் நெஸ்லே சென்னையில் வேலை செய்தவர்களுக்கு நான் சொல்வது புரியும்.

    பதிலளிநீக்கு
  4. sureஷ் சார் நாங்க ரசிச்சதையே நீங்களும் ரசிச்சிருக்கீங்க!
    பிரியமுடன் வசந்த் - பேச்சு பற்றி நாங்க எழுதினதுக்கு - சுவாரஸ்யமாக சொல்வதாக நீங்க எழுதியிருக்கீங்க - அனானி ரொம்ப சந்தோஷப்படுகிறார்!
    அப்பாதுரை சார் - ராமன் என்கிற பெயரை வெச்சிகிட்டு காமெடி கீமெடி ஒன்னும் பண்ணலைதானே? சுவையான பகிர்வு -- உங்க அந்த நண்பர் போன்றவர்கள் எல்லா அலுவலகங்களிலும் இருக்கிறார்கள்.

    பதிலளிநீக்கு
  5. அப்ப,நெஸ்லே சென்னை ராமன் காமெடி இல்லையா?

    பதிலளிநீக்கு
  6. //அதாகப்பட்டது ...அனானியான நான் //
    .........அனானியாக நான் என்பது இன்னும் சற்று நெருங்கி வருகிறதோ?

    பதிலளிநீக்கு
  7. என்னமோ சொன்னீங்க. ஆனா இந்த மரமண்டைக்கு கடைசி வரைக்கும் ஒண்ணுமே புரியலன்னா பார்த்துங்களேன்.

    பதிலளிநீக்கு
  8. கிருஷ் சார் - நெஸ்லே ராமன் காமெடி இல்லை; அவருக்கு பயந்து பிளேட்டை திருப்பிப் போட்ட (அப்பாதுரையின்) நண்பர்தான் காமெடி நாயகர்.

    பதிலளிநீக்கு
  9. Tamiluthayam நீங்க எல்லாத்தையும் புரிஞ்சிகிட்டு, புரியலேன்னு சொல்றீங்களா - அல்லது மெய்யாலுமே புரியலைங்கறதை புரிஞ்சிகிட்டு புரியலைன்னு சொல்றீங்களா? - புரியலைங்கறது - புரிஞ்சிடிச்சுன்னா - உங்களுக்குப் புரிஞ்சிடும் - இன்னொருதடவை ஊன்றிப் படிச்சீங்கன்னா - அதனால, புரியலைன்னு நீங்க சொன்னது ஏன்னு எங்களுக்குப் புரியலை...

    பதிலளிநீக்கு
  10. மனிதர்களை படித்து.... நீங்க நல்லாத்தான் சொல்றிங்க.... வாழ்த்துக்கள்.

    பதிலளிநீக்கு
  11. கருணாகரசு - எங்கள் பதிவைப் படித்து நீங்க நல்லதாத்தான் சொல்லியிருக்கீங்க! நன்றி!

    பதிலளிநீக்கு
  12. 'ராமன்னு பெயரை வச்சுக்கிட்டு....' சாருக்கு உத்தியோகம் என்ன? சிண்டு முடிவதா?

    நெஸ்லே காமெடி உண்மைக் காமெடி. அங்கே வேலை பார்த்த போது மூத்த நண்பரை சீண்டி விட்டு வேடிக்கை பார்க்காத என் தலைமுறையினரே இல்லையெனலாம். சும்மாவானும் அவரிடம் சென்று, "சார், இந்த சேதுமாதவன் பாத்தீங்களா? எப்படி ஐடியா கொடுத்து எப்படி முன்னேறிட்டாரு பாருங்க" என்று பத்த வைப்போம். உடனே அவர், "சேதுவா? நீ தான் மெச்சிக்கணும். எட்டு வருசத்துக்கு முன்னால நான் தான் அவனுக்கு எல்லாம் சொல்லிக் கொடுத்தேன். அவனுக்கெல்லாம் பிரமோசன்"..........மௌனம்......"ஆனா சேதுவோட மனசு இருக்கே..". வெடிச்சிரிப்புடன் விலகுவோம். பேசுவதும் ஒரு கலை. பேசவைப்பதும் ஒரு கலை.

    பதிலளிநீக்கு
  13. அப்பாதுரை சார் - எங்கள் ஆசிரியர் குழுவில் ராமன் என்று ஒருவர் இருப்பதால் - உங்களிடம் காமெடி சந்தேகத்தை நிவர்த்தி செய்துகொண்டோம் - தப்பா நெனச்சிக்காதீங்க!
    உளவியல் குறித்து, உங்க moonramsuzhi blogspot ல வருகின்ற தொடர் கட்டுரைகள் மிகவும் பயனுள்ளவையாக உள்ளன. பதிவாசிரியருக்கும் உங்களுக்கும் எங்கள் மனமார்ந்த பாராட்டுக்கள்.

    பதிலளிநீக்கு
  14. அது புரியாமலா கேட்டேன் உங்க உத்தியோகம் பத்தி?

    பதிலளிநீக்கு

இந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க!