Sunday, December 13, 2009

இந்த சங்கீத சீசனில் ....

நண்பர்களே!
சென்னையில், இந்த சங்கீத சீசனில், நீங்களோ அல்லது உங்கள் நண்பரோ அல்லது சொந்த பந்தங்களோ வாய்ப்பாட்டோ அல்லது வாத்தியமோ வாசிப்பதாக இருந்தால், எங்கு, என்று, எப்பொழுது, யார் என்ற விவரங்களை, இதற்குப் பின்னூட்டமாக கூறுங்கள். எங்கள் இசை விமரிசனக் குழு உறுப்பினர்களில் யாராவது ஒருவர், அந்த நிகழ்ச்சியை கேட்டு, எங்கள் விமரிசனத்தை, இங்கு பதிவு செய்ய ஆவன செய்கிறோம்.
அன்புடன்
எங்கள் பிளாக்.

19 comments:

கிருஷ்ணமூர்த்தி said...

நம் எல்லோருக்குமே தெரிந்த, ரத்த சம்பந்தங்கள் தான்!முன்னால் மாம்பலம், கும்பகோணம் என்று மட்டுமே பிரபலமாக இருந்தவை, இப்போது மாநிலம் முழுவதுமே பிரபலம், சென்னையில் மட்டுமல்ல! எல்லா இடங்களிலும் வருஷம் முழுவதுமே சீசன் தான், கச்சேரி நடத்திக் கொண்டிருக்கும் திருவாளர் கொசு!

ரீங்காரம் கேட்கிறதா?

இப்ப என்ன செய்வீங்க! இப்ப என்ன செய்வீங்க?

புலவன் புலிகேசி said...

நான் வேணா பாடவா?

அப்பாதுரை said...

ஹி ஹி ஹி, புலிகேசி, நானும் அதையே தான் கேக்க நெனச்சேன்.
மயில் மாதிரி பாடுவேன்.

அப்பாதுரை said...

புது கலைஞர் யாராவது இருந்தால் (மதியக் கச்சேரி) பார்த்து எழுதுங்களேன்?
குழல் அல்லது வீணை would be great. Thanks.

kggouthaman said...

கிருஷ் சார்!
நான் ஐந்தாம் கிளாஸ் படித்துக் கொண்டிருந்த போது,
'கண்ணன்' பத்திரிக்கையை, என் அண்ணனின் நண்பர் (பாம்பே) கண்ணன் வீட்டில் - நாகையில் படித்துவிட்டு, எழுதிய முதல் கவிதை இதோ:
"இரவில் பாட்டுக் கச்சேரி
இலவசமாய்த் தந்திடுவார்!
இவரைத் தெரியாத ஆள் யாரு?
இவர்தான் நம்ம கொசுவாரு!

பாட்டைக் கேட்டுக்கொண்டிருந்தால்,
பாங்காய் வந்து கடித்திடுவார்
பட்டென்று கை தட்டி பாராட்டின்
சட்டென்று உயிரை விட்டிடுவார்!"

SUREஷ் (பழனியிலிருந்து) said...

//சென்னையில்,//

சென்னையில் மட்டும்தானா....,

எங்கள் said...

புலவன் புலிகேசி, நிஜமாகவே பாடுவீர்கள் என்றால், ஏதாவது பாடி, எம் பி த்ரீ வடிவத்தில்
engalblog@gmail.com க்கு அனுப்புங்கள். நாங்க கேட்டு விமரிசனம் எழுதுகிறோம். (அப்பாதுரையாருக்கும் அதே அதே!) இந்தப் பதிவைப் படிக்கும் பாடகர்கள், இசை ஆர்வம் கொண்டவர்கள் இசைக் கருவி இசைப்பவர்கள் - எல்லோரும் அனுப்பி வையுங்க. சீரியசாத்தான் சொல்கிறோம்.

எங்கள் said...

அப்பாதுரை சார்,
புதுக் கலைஞர்,மதியக் கச்சேரி,
புல்லாங்குழல், வீணை
குறித்துக் கொண்டோம்.
நிச்சயம் எழுதுவோம். ஒரு ஐந்து நிமிட ஒலிப்பதிவை உங்க
ymail க்கும் அனுப்பி வைக்கிறோம்!

எங்கள் said...

சுரேஷ் பழனியிலிருந்து - ஒவ்வொரு சங்கீத சீசனிலும், 'எங்கள்' இசை விமரிசனக்குழு - சென்னையில்தான் டேரா போடுவோம். வேறு எந்த ஊரில், எந்த நாட்டில், யார் பாடினாலும், அல்லது வாத்தியம் இசைத்தாலும், அவர்களின் ஒலிப்பதிவு, (எம் பி த்ரீ) எங்களுக்கு அனுப்பி வைத்தால், கேட்டு விமரிசனம் எழுதவும் நாங்க தயார்.

Jawahar said...

எங்கயாவது கூட்டம் கலைக்க சிரமமா இருந்தா என்னைக் கூப்பிடுங்க. கண்ணீர்ப் புகை எல்லாம் என்விரோன்மென்ட் பிரெண்ட்லி இல்லை. நான் பாடற பாட்டு சுற்றுச் சூழலுக்கு எந்தக் கெடுதலும் விளைவிக்காம கூட்டத்தை மட்டும் கலைக்கும்.

http://kgjawarlal.wordpress.com

divya said...

http://www.getacd.org/search_listen_songs_2/aruna+sairam

http://new.music.yahoo.com/aruna-sayeeram/

தியாவின் பேனா said...

அருமையான ஆக்கம்
வாழ்த்துகள்

raman said...

இந்த சீசனுக்கு போணியாக நேற்று (திங்கள்) வாணி மகாலில் விஜய் சிவா கச்சேரி கேட்டேன். முன் வரிசை இருக்கை தம்பி உபயம்.
பிரபலமான இந்த பாடகருக்கு பிற பல ருக்கு வரும் கூட்டம் வராதது அவருக்கு துரதிருஷ்டம் அல்ல. அவரது மிக உயரிய இசையைக் கேட்கத் தவறிய ரசிகருக்குதான் நஷ்டம்.

அவர் வடமொழியில் சுலோகம் பாடும் அழகே அழகு. சங்கராபரணம், வராளியில் மிகச் சிறந்த ஆலாபனைகள். உள்ளத்தைக் கொள்ளை கொள்ளும் தமிழ்ப்பாடல்கள் திருப்புகழ் என ஜமாய்த்து விட்டார்.

ஆசார சீலரான விஜய் சிவாவுக்கு அதே போல் சீலரான ஸ்ரீராம்குமார் வயலின். கணேஷ் மிருதங்கம் புருஷோத்தமன் கஞ்சிரா.

நூற்றுக்கு நூறு வாங்கிய அப்பழுக்கற்ற அருமையான கச்சேரி. கேட்காதவர்கள் வருந்தலாம். கேடடவர்கள் பாக்கியசாலிகள்.

Engal said...

Thank you Mr Raman,
We have published your review in
kasusobhana blogspot.

சந்ரு said...

நல்ல முயற்சி வாழ்த்துக்கள் தொடருங்கள்...

எனக்கு பாடவேண்டும் என்ற ஆசைதான் ஆனாலும் பாட வருதில்லையே என்ன செய்யலாம் (சும்மா லொள்ளு)

எங்கள் said...

சந்ரு - உங்க வீட்டு பாத்ரூம் கதவில் உள்ள தாழ்ப்பாளை கழற்றிவிடுங்கள் - அப்போ பாத்ரூம்ல குளிக்கும்போதேல்லாம் - பயத்திலேயே ' பாட்டு வரும், பாட்டு வரும், குளித்துக்கொண்டிருந்தால் பாட்டு வரும்' என்று பாடுவீர்கள்!

kggouthaman said...

// Jawahar said...
எங்கயாவது கூட்டம் கலைக்க சிரமமா இருந்தா என்னைக் கூப்பிடுங்க. கண்ணீர்ப் புகை எல்லாம் என்விரோன்மென்ட் பிரெண்ட்லி இல்லை. நான் பாடற பாட்டு சுற்றுச் சூழலுக்கு எந்தக் கெடுதலும் விளைவிக்காம கூட்டத்தை மட்டும் கலைக்கும்.//
ஜவஹர் சார் - உங்க wordpress வலைப்பதிவில் முன்பு நீங்க சேர்த்திருந்த தாலாட்டுப் பாடலைக் கேட்டு என்னுடைய பேரன் அழுகையை நிறுத்தி உடனே கண்ணயர்ந்து தூங்கினான். எனவே உங்க பாட்டு கண்ணீர்ப்புகை குண்டு அல்ல, கண்ணயர வியக்கும் அழகான தாலாட்டு!

அப்பாதுரை said...

எம்பி3யோட அப்படியே கொஞ்சம் மைசூர் போன்டா அல்வானு ஏதாவது இருந்தா போட்டோவாவது காட்டுங்க.

Erode Nagaraj... said...

I have uploaded my music season schedule here: http://erodenagaraj.blogspot.com/2009/12/december-music-festival-schedule.html

Post a Comment

இந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க!