வியாழன், 17 டிசம்பர், 2009

படைப்பாற்றல் படப் போட்டி !

ங்கே, நீங்க பார்க்கும் படத்தில் இருப்பவை எல்லாவற்றையும் இணைத்து, சம்பந்தப்படுத்தி, எங்கள்  வாசகர்கள் பின்னூட்டம் இடவேண்டும். படைப்பாற்றல் மிக்க கருத்துரைகள், கவிதைகள், வித்தியாசமான பார்வைகள், அதிக பொருட்கள் இணைத்து எழுதப்படும் இணைப்புரைகள் எல்லாவற்றிற்கும் பாயிண்டுகள் உண்டு. (க்ளூ : சக்கர இனிக்கிற சக்கர - அதுல, எங்களுக்கென்ன அக்கறை?) 



34 கருத்துகள்:

  1. இருப்பதை மட்டும் என்ன. இல்லாததையுமே சேர்த்துச் சொல்லிவிடுகிறேன்!

    பச்சைக் காய்கறி, கீரைவகைகள், பயறுவகைகள் அதிகம் சேர்ப்பது, தினசரி நடைப்பயிற்சி செய்வது, நன்றாகத் தூங்குவது, அமண இறுக்கம் இல்லாமல் இருப்பது, அப்புறம் பல்லில் பிரச்சினை என்றால், ஆரம்ப நிலையிலேயே கவனித்துச் சரி செய்வது, நொறுக்குத்தீனி என்ற பெயரில் எண்ணைப் பலகாரங்களையும், அஜினோமோட்டோ சேர்த்த நவீன ஐட்டங்களைத் தவிர்ப்பது எல்லாமே, ரத்தத்தில் சர்க்கரை அளவைக் கட்டுப் படுத்தும்!

    சுருக்கமாக பெண்டிர்க்கழகு உண்டி சுருங்குதல் என்று சொன்னார்களே அது இப்போது எல்லோருக்குமே, உணவுக் கட்டுப்பாடு, அல்லது சமச்சீராக மாற்றிக் கொள்வது, மன இறுக்கத்தைத் தவிர்ப்பது இப்படி!

    பதிலளிநீக்கு
  2. இரண்டாவது பத்தியில்அமண என்று தவறாக வந்து விட்டது, 'மன இறுக்கம் இல்லாமல்' என்பதே சரி.

    பதிலளிநீக்கு
  3. கிருஷ் சார்! மெய் சிலிர்க்க வைத்துவிட்டீர்கள், எங்களை!
    வாழ்த்த வயதில்லை, வணங்குகிறோம்; அமண பார்த்து - சாய்க்கு - ஜீனத் பற்றி ஏதோ சொல்லி இருக்கிறீர்களோ என்று சந்தேகம் வந்தது - குழப்பத்தை போக்கியதற்கு நன்றி. (உங்களுக்கெல்லாம் நாங்க பாயிண்டு கொடுக்கறோம்னு ஏதாவது சொன்னோம்னா, - பல வலைகளின் ஆசிரியர்கள் எங்களுக்குக் கண்டனக் கூட்டங்கள் நடத்துவார்கள்! - நீங்க யாரு அவருக்கு பாயிண்டு கொடுக்க? என்று.)

    பதிலளிநீக்கு
  4. Piperine derived from black pepper increases the plasma levels. it is used for diabetes. Protein glycation is a process in which sugar molecules bond to protein molecules without enzymatic control. The result is the accumulation of end products that speed aging and the degeneration caused by diabetes.green leaves contains insulin.

    பதிலளிநீக்கு
  5. *வாழ்கை சர்க்கரையாக இனிக்க வேண்டுமென்றால் உங்கள் உடலில் சர்கரையின் அளவை கட்டுக்குள் வைத்திடுங்கள்.

    *இனிக்கிற எல்லாம் சர்க்கரையும் அல்ல நீரிழிவு என்பதும் நோயும் அல்ல.

    *காய்களும் கனிகளும் சேர்த்துடு - உணவில்.

    *சர்கரையின் அளவு குறைந்திடும் - உடலில்.

    பதிலளிநீக்கு
  6. திவ்யா உங்க www.divyancm.blogspot.com நன்றாக இருக்கிறது. உங்களுக்கு எங்கள் வாழ்த்துகள். நீங்க சொன்ன பெப்பர் விஷயம் புதியதாக உள்ளது.

    பதிலளிநீக்கு
  7. ஆதிமனிதன் - பல ஸ்லோகன் சொல்லி அசத்திட்டீங்க. ஆனா படத்துல நீங்க சொன்ன எதையுமே காணோமே !!!

    பதிலளிநீக்கு
  8. //ஆனா படத்துல நீங்க சொன்ன எதையுமே காணோமே !//

    என்ன இப்படி சொல்லி விட்டீர்கள் ? படத்தின் இடது மேல் கோடியை இன்னொரு தடவை நன்றாகப் பாருங்கள்! அந்த ஒரே ஒரு வார்த்தை போதுமே எல்லாவற்றையும் இணைக்க!

    பதிலளிநீக்கு
  9. படத்தில் diabetes இருக்கிறது என்பது உண்மைதான் - ஆதிமனிதன் அதைச் சொல்லி இருப்பது பாராட்டுக்குரியது.
    ஸ்லோகன் நன்றாக இருப்பதையும் சொல்லிட்டோம்; மற்ற படங்களையும் இணைத்து அவர் எழுதியிருந்தால் இன்னும் நன்றாக இருக்கும். ஆனாலும் அனானி எங்களுக்கு எடுத்துக் கூறிய அறிவுரைக்கு மதிப்பளித்து திவ்யாவுக்கு இருநூறு பாயிண்டுகளும், ஆதிமனிதனுக்கு நானூறு பாயிண்டுகளும் அன்போடு அளிக்கிறோம்.

    பதிலளிநீக்கு
  10. நீங்க மிளகு படம் போட்டிருக்கீங்க! கோபன்ஹெகனில், ஆர்ப்பாட்டக்காரர்கள் மீது மிளகு ஸ்ப்ரே அடித்தார்கள் என்று செய்தி வந்துள்ளது. ஜெயராம் ரமேஷ் தும்மாமல் இருந்தாரா என்று தெரியவில்லை!

    பதிலளிநீக்கு
  11. கௌதமன் உங்களுக்கு ௦ சைபர் பாயிண்டு. மிளகு தவிர வேறு எந்தப் படத்தையும் இணைத்து எழுதவில்லை.

    பதிலளிநீக்கு
  12. //ஜெயராம் ரமேஷ் தும்மாமல் இருந்தாரா என்று தெரியவில்லை! //

    நீங்க என்ன நம்ம மந்திரியைப் போய்...

    பதிலளிநீக்கு
  13. நான் நம்ம மந்திரியை ஆர்ப்பாட்டக்காரர் என்று சொல்லவில்லை. அமைதியான சுற்றுச் சூழலுக்கு ஆசைப் படுபவர் - எனவே ஆர்ப்பாட்டக்காரர்கள் மீது ஸ்ப்ரே செய்யப்பட்ட மிளகுப்பொடி - அவரைப் படுத்தியிருக்குமோ என்று பயம் அங்கு பங்கேற்ற மீசை தாடிக்காரருக்கு இயற்கையாகவே மூக்கு வாய்ப் பகுதிகள் பாதுகாப்பு. அரண்களோடு உள்ளன. தடுப்பு தாண்டி அவரை நெடிகள் ஒன்றும் செய்யாது. ஆனா மீசை தாடி இல்லாத மந்திரி நெடியிலிருந்து தப்பிக்கமுடியுமா?

    பதிலளிநீக்கு
  14. வட போச்சே! நான் போட்டிய சரியா புரிஞ்சிக்கலையா?

    இப்படிதான் அடுத்த பின்னூட்டம் போடலாம்னு எழுதிட்டு பார்த்தா எனக்கு 100 மார்க்கா? நன்றி ஐயா. நன்றி(வெளியில திவ்யாவுக்கு 200-னு சொல்லமாட்டேன்).

    பதிலளிநீக்கு
  15. ஆதிமனிதன் - உங்களுக்கு 400 (நானூறு) பாயிண்டுகள் என்றல்லவா சொல்லியிருக்கிறோம்!!

    பதிலளிநீக்கு
  16. தூங்காதே தம்பி தூங்காதே
    என்று சொன்னது தூர
    போனதே !

    கண்டதை தின்னு
    கஷ்ட்டபடுவதை விட,
    நல்லதை தின்று
    நலமாய் இரு;

    நன்றாய் சுவைப்பது
    நல்ல உணவும் இல்லை;
    உண்ண கசப்பது
    உருப்படாத உணவும் இல்லை;

    சகட்டு மேனிக்கு சாப்பிட்டு
    சக்கரை வியாதியா,
    சரிவர சாப்பிட்டு
    சகாவரமா !

    பதிலளிநீக்கு
  17. ஆஹா சாய்! கொன்னுட்டீங்க! / எங்கியோ போயிட்டீங்க! ...
    ஒவ்வொரு வரிக்கும் நூறு பாயிண்டுங்க - மொத்தம் ஆயிரத்து ஐநூறு. உங்க கிட்டே மூன்றாம்சுழி லெட்டர் ஹெட் ரெகமண்டேஷனும் இருப்பதால் ஐம்பது போனஸ் பாயிண்டுங்க. !!! உங்க பிளாக் ரெகமண்டேஷன் உங்களுக்கு வாலிட் இல்லை!

    பதிலளிநீக்கு
  18. இந்த கருத்து ஆசிரியரால் அகற்றப்பட்டது.

    பதிலளிநீக்கு
  19. //ஆஹா சாய்! கொன்னுட்டீங்க! //

    "கொலையா, இல்லீங்களே, நானா, இல்லையே"

    "ஊட்டி வரை உறவு" படத்தில் - பாலையாவும் / வி.கே. ராமசாமியும் ஒரு காட்சியில் தொலைபேசியில் நன்றாக தீட்டிக்கொண்ட பிறகு; நடிகர் முத்துராமன் இங்கிலிஷில் ஏதோ தஸ், புஸ் என்று பேசியவுடன் - நான் மேலே சொன்னபடி தான் உளறுவார்.

    எனக்கும் அப்பாதுரைக்கும் ரொம்ப பிடித்த காட்சி அது.

    // எங்கியோ போயிட்டீங்க! ...//

    "யோவ் நீ கல்யாணம் ஆனவுடனே எங்கியோ போய்டுவே"

    அப்ப என் பெண்டாட்டி யாரோட இருப்பா !! எஸ்.வி.சேகர் ஒரு நாடகத்தில் அடித்த ஜோக் இது !


    - Sai

    பதிலளிநீக்கு
  20. //உங்க கிட்டே மூன்றாம்சுழி லெட்டர் ஹெட் ரெகமண்டேஷனும் இருப்பதால் ஐம்பது போனஸ் பாயிண்டுங்க//

    இது திருவிளையாடல் படத்தில்

    "கவிதை நீங்க எழுதியது தானா, இல்லே மண்டபத்தில் யாராவது எழுதி கொடுத்து" அப்படி இல்லையே இது !

    என்னிடம் ஏதோ எழுதும் திறமை இருக்கு என்று வெளியே கொண்டுவந்தவரே "அப்பாதுரை" மற்றும் அவரின் நண்பர் "அரசன்" தான்.

    அவர்கள் கொடுத்த உற்சாகம் தான் "பூத்தூரிகை" என்ற ப்ளோகில் நான் எழுதி வந்த சில கவிதைகள் மற்றும் சில குட்டி கதைகள் (என்ற உளறல்கள்) !

    - Sai

    பதிலளிநீக்கு
  21. புதினாவை பறித்து, சுத்தம் செய்து, காரத்துக்கு தகுந்த மாதிரி மிளகு, தேவையான அளவு உப்பு, கொஞ்சமாக நீர் சேர்த்து, கெட்டியாக அரைத்து, இந்த விழுதில் சிறிது மோர் கலந்து, இட்லி, தோசை, சப்பாத்தி போன்றவைகளுக்கு சட்னி மாதிரி உபயோகிக்கலாம். இதில் எண்ணெய் கிடையாது, கொழுப்பு சத்து எதுவும் கிடையாது. அதனால் சக்கரை வியாதிக்கு மிகவும் நல்லது. இது மாதிரியான கொழுப்பு சத்து இல்லாத உணவு வகைகளை தொடர்ந்து சாப்பிட்டு, உடலில் உள்ள சக்கரை, கொழுப்பு அளவை குறைத்து கொண்டு ஆரோக்கியமாக வாழலாம். மேலும் அவ்வப்போது உடலில் உள்ள சக்கரை, கொழுப்பு அளவை கண்காணித்துக் கொண்டே இருப்பது, உடலை ஆரோக்கியமாக வைத்துக்கொள்ள பெரிதும் உதவியாக இருக்கும். நம் உடல் ஆரோக்கியமாக இருப்பதை நாமே உணரும்போது, நம் மனமும் ஆரோக்கியமாக இருக்கும். ஆரோக்கியமான மனமும், உடலும் நல்ல உறக்கத்தை கொடுக்கும். 'நோயற்ற வாழ்வே குறைவற்ற செல்வம்' அல்லவா!

    சென்னை தொலைக் காட்சி வந்த புதுசுல 'மனை மாட்சி' அப்படின்னு ஒரு நிகழ்ச்சில இப்படி எல்லாம் தான் சொல்லுவாங்க. நான் எழுதினதை படிச்சு பாத்தபோது எனக்கு அப்படிதான் தோணித்து.

    பதிலளிநீக்கு
  22. Meenakshi Said

    //சென்னை தொலைக் காட்சி வந்த புதுசுல 'மனை மாட்சி' அப்படின்னு ஒரு நிகழ்ச்சில இப்படி எல்லாம் தான் சொல்லுவாங்க. நான் எழுதினதை படிச்சு பாத்தபோது எனக்கு அப்படிதான் தோணித்து.//

    எங்க மீனாக்ஷி, முச்சூடும் எழுதிபுட்டு இதையும் வேறே கடைசியில் சொல்லி இருக்கீங்க !

    பதிலளிநீக்கு
  23. மிளகு + சீரகம் + மல்லி + புதினா + இஞ்சி,பூண்டு = ரசம்.உடம்புக்கு ரொம்ப நல்லது.அதுவும் இந்தக் குளிருக்கு ரொம்ப ரொம்ப நல்லாருக்கு.வேலை இடத்தில குளிருக்கு ஏத்த சாப்பாடுன்னு சீஸ் கலந்த சாப்பாடு தாறாங்க.அந்தக் கொழுப்பைக் கரைக்க நான் ரசம் வச்சு சாப்பிடுறேன் வீட்ல.

    பதிலளிநீக்கு
  24. தேங்க்ஸ் ங்க....இதைப் பார்த்ததும்தான் இந்த மாசம் ரேஷன்ல இன்னும் சர்க்கரை வாங்கலைன்னு ஞாபகம் வந்தது...போய் வாங்கிட்டு வந்துட்டேன்..

    பதிலளிநீக்கு
  25. சாய்ராம், மீனாக்ஷி, ஹேமா, எல்லோரும் அசத்திட்டீங்க, மறுபடியும். வழக்கம்போல், மீனாக்ஷி அவர்கள், படத்தில் காணப்படும் எல்லாவற்றையும் இணைத்து அழகாக எழுதியுள்ளார். மூன்று பேருக்குமே ஆளுக்கு ஆயிரம் பாயிண்டுகள் கொடுத்துவிடலாம் என்று எங்கள் ஆசிரியர் குழு - தீர்மானித்துள்ளது. எனவே, தற்சமயம், சாய்ராம்தான் லீடிங்!

    பதிலளிநீக்கு
  26. பாஹே மைந்தன் - சர்க்கரையைக் கட்டுப்படுத்துங்கன்னு நாங்க எழுதினா, அதைப் பார்த்து நீங்க ரேஷன் கடைக்குப்போய் சர்க்கரை வாங்கிவந்தது நியாயந்தானா? உங்களுக்கு சைபர் பாயிண்டுதான் போங்க! (ரேஷனில் வாங்கிய சர்க்கரையை வீட்டுக்கு வந்ததும் நிறுத்துப் பார்த்தீர்களா?)

    பதிலளிநீக்கு
  27. //பாஹே மைந்தன் - சர்க்கரையைக் கட்டுப்படுத்துங்கன்னு நாங்க எழுதினா, அதைப் பார்த்து நீங்க ரேஷன் கடைக்குப்போய் சர்க்கரை வாங்கிவந்தது நியாயந்தானா? //

    அவர் ரேஷன் கடைக்கு போனது நியாயந்தான்.....அங்கதான் சர்க்கரையைக் குறைக்க ஐடியா கிடைக்கும்!!!!!!!!!!!!

    பதிலளிநீக்கு
  28. // அவர் ரேஷன் கடைக்கு போனது நியாயந்தான்.....அங்கதான் சர்க்கரையைக் குறைக்க ஐடியா கிடைக்கும்!//
    பெ சொ வி -- அருமையான ஜோக்! பிரமாதம். உங்களுக்கு சர்க்கரைச் சிரிப்பிற்காக நூறு பாயிண்டுகள்!

    பதிலளிநீக்கு
  29. //சகட்டு மேனிக்கு சாப்பிட்டு
    சக்கரை வியாதியா,
    சரிவர சாப்பிட்டு
    சகாவரமா !//

    "சாகாவரமா" என்று படிக்கவும்.

    எவ்வளவு பிழை இருக்கின்றதோ அதற்கு போக மிச்சம் கொடுங்கள் !

    பதிலளிநீக்கு
  30. மிளகுகீரை தினம் சேர்க்க அளவான
    தூக்கமும் விரட்டும் சர்க்கரைநோயை .

    பதிலளிநீக்கு
  31. //பாஹே மைந்தன் said...
    இதைப் பார்த்ததும்தான் இந்த மாசம் ரேஷன்ல இன்னும் சர்க்கரை வாங்கலைன்னு ஞாபகம் வந்தது...//

    Brilliant. Reminded me of my childhood days to be sent to that ritual month on month for Sugar, Some crappy rice, kerosene & palmolein oil !!

    will invariably fight with my elder brother or sister to share that time consuming work that will eat in to our play time !!

    - சாய்ராம்

    பதிலளிநீக்கு
  32. இலைய தின்கின்ற ஆட்டுமாட்டுக்கு... எதுவும் இல்ல. எல்லாத்தையும் தின்கின்ற மனிதனுக்கு எல்லாம் தொல்ல.

    பதிலளிநீக்கு
  33. மகா மற்றும் கருணாகரசு -- சில வார்த்தைகளிலேயே அசத்தீட்டிங்க -- ஆளுக்கு ஐநூறு பாயிண்டுகள்!

    பதிலளிநீக்கு

இந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க!