Friday, January 15, 2010

இயல் இசை நடன சங்கமம்.


அனைவருக்கும்  இனிய பொங்கல் வாழ்த்துக்கள் !  இந்த  பொங்கல் விடுமுறையில் குடும்பத்துடன் " சென்னை சங்கமம்" நிகழ்சிகளை அசோக்நகர் பார்க்கில் பார்த்து ரசித்தோம் .   என் 1 1/4 வயது பேத்தி, கரகாட்டம், நையாண்டி மேளம், ஒயிலாட்டம், பொம்மலாட்டம் ஆகிய கிராமிய நிகழ்சிகளை ரசித்து பார்த்ததுடன் நடுநடுவே அவளும் கையை காலை அசைத்து டான்ஸ் செய்ததை கூட்டத்தில் பலரும் ரசித்தனர். எனக்கும் K.M. Devi புத்தடி மாரியம்மன் கோவில் திருவிழா நினைவிற்கு வந்தது.

  
        மேலும் காயத்திரி கிரிஷ், சைந்தவி & வினயா  ஆகியோரின் "கர்நாடிக் துக்கடா" நிகழ்ச்சிகளும் ரசிக்கும்படியாக இருந்தது. குறை ஒன்றும் இல்லை என்று அவர்கள் பாடினாலும்,  நிகழ்ச்சிக்கு வந்த பெரும் கும்பலை  சமாளிக்க "organaisers "  செய்திருந்த ஏற்பாடு போதாது.  சிறு குழந்தைகளை கையில் வைத்துக்கொண்டு தாய்மார்கள் போவதற்கும் வருவதற்கும் உள்ள குறுகிய ஒரே வழியில் மிகவும் சிரமப்பட்டார்கள்.    
                  சென்னை சங்கமம் நிகழ்ச்சிகள் நடத்துபவர்கள் பொது மக்கள் சௌகரியத்திற்கும் முக்கியத்துவம் தர வேண்டும்.
 மாலி.  
எங்கள் சந்தேகம் : சங்கமம் = Fusion?
இன்று காலை KTV இல், நல்ல தமிழ்ப் பாடல்களை ஒருவர் பாட, மூன்று பெண்கள் நடனமாட, நாதஸ்வரம் தவில் - ஜதி சேர்க்க - மிகவும் இரசிக்கக் கூடிய சங்கமம் நிகழ்ச்சி ஒன்றைப் பார்க்க முடிந்தது. நிகழ்ச்சி தயாரிப்பாளர்களுக்கு எங்கள் பாராட்டுகள்.

4 comments:

Ravichandran said...

சங்கமம் நிகழ்ச்சி செய்திகளில் பார்த்ததோடு சரி. நேரில் பார்க்கும் வாய்ப்பு கிட்டியதில்லை. இது மாதிரிப் பூங்காக்களில் நடத்தும்போது உள்ளே போக ஒரு வழி, வெளியேற வேறு வழி என்று வைக்கலாம். சங்கீத துக்கடா என்றால் மேடை போட்டு மைக் வைத்தா என்றெல்லாம் ஆசிரியர் ஒன்றும் சொல்லவில்லையே.. கிராமப் புறக் களைகள் வளரதான் சங்கமம் என்று கேள்விப் பட்டுள்ளேன்.

mali said...

சென்னை சங்கமம் நிகழ்ச்சிகள் அனைத்துமே பெரிய மேடை
அமைத்தே நடத்தப்படுகின்றன. ஆனால் அவை பார்க்குகளின் வழியை
அடைத்துப் போடப்படுகின்றன. நான் கர்நாடிக் துக்கடா
என்று குறிப்பிட்டது கர்நாடிக் vocal என்ற பெயரில் வித்வான்கள்
பெரும்பாலும் அலைபாயுதே போன்ற கண்ணன் பாட்டுக்கள் , முருகன்
பாட்டுக்கள், தவறாமல்எம்ஸ் இன் " குறை ஒன்றும் இல்லை " போன்றவற்றையே
பாடுவதால்.
சென்னை சங்கமத்தை " பார்க் பாழ் விழா" என்றும் குறிப்பிடலாம். சாதாரண
நாட்களில் அழகான புல்தரையில் நடந்தால் குச்சி கொண்டு விரட்டும் parkman , புல்தரைகளும்
பூச்செடிகளும் கண் முன்னால் அழிவதை பார்த்து ரத்தக்கண்ணீர் வடிப்பது கண்கூடு.

அப்பாதுரை said...

பார்க் பாழ் விழா?!
nice.
கரகாட்டப் படம் நன்றாக இருக்கிறது. எப்படி இவர்களால் செய்ய முடிகிறது என்று வியந்திருக்கிறேன். பிறகு தான் புரிந்தது. அவர்களுக்கெல்லாம் தலையே அப்படித்தான் வளர்ந்திருக்கிறது. பானை போல் கிராப் என்று.

Anonymous said...

Ravi,
//கிராமப் புறக் களைகள் வளரதான் சங்கமம் என்று கேள்விப் பட்டுள்ளேன்.//

pun intended or just a typo at the right spot?

Post a Comment

இந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க!