செவ்வாய், 23 பிப்ரவரி, 2010

எஸ் எம் எஸ் ஆபத்துக்கள்.


என்னுடைய இரண்டு அலைபேசி எண்களுக்கு, ஒரு நாளைக்கு குறைந்த பட்சம் ஐந்து எஸ் எம் எஸ், அதிகபட்சம் இருபது எஸ் எம் எஸ் என்கிற எண்ணிக்கையில் குறுஞ்செய்திகள் வந்து குவிகின்றன. இந்தக் குறுஞ்செய்திகளில் அரும் செய்திகள் என்று பார்த்தால், ஒரு வாரத்தில் மூன்றோ நான்கோ தேறலாம். மற்றவை உபயோகமில்லாத செய்திகள்.  சில குறுஞ்செய்திகள் நாம் எப்பொழுதோ வெப் சைட்டில் பதிந்துகொண்டதால் வருபவை. அவைகளுக்கு எஸ் எஸ் எஸ் என்று பெயர் இடலாம் (சொந்த செலவில் சூனியம்)  
என் உறவினர் ஒருவர் தவறாமல் (அவர்) விழித்திருக்கும் நேரங்களில் இரண்டு மணிக்கு ஒரு எஸ் எம் எஸ் என்று அனுப்புவார். எஸ் எம் எஸ் செய்திகளை, பொதுவாக கீழ்க்கண்ட வகைகளில் பிரிக்கலாம்.  

# காதல் நட்பு - இவற்றின் மேன்மை உயர்வு குறித்து.
# புதிர்க் கேள்விகள்.
# புதிர்க் கணக்குகள்.
# பொது அறிவுத் துகள்கள்.
# ஜோக்குகள். (A + B + C)
# அறிஞர்கள் அன்று கூறியவை.
# நடப்பு செய்திகள்.
சில எஸ் எம் எஸ் மிகவும் பயனுள்ளவை - என் தம்பியிடமிருந்து முன்பு ஒருநாள் வாட்ச் என் டி டி வி என்று எஸ் எம் எஸ் வந்தது. அப்பொழுதுதான் நான் உடனே டீ வி பார்த்து, மும்பை தாக்குதல் தொடர்பான நேரடி கவரஜே பார்த்தேன். சில சமயங்களில் முக்கியமான இசை நிகழ்ச்சி டி வி இல் ஒளிபரப்பாகும்போது கூட, சகோதரர் எஸ் எம் எஸ் அனுப்பியது உண்டு. 


நான் எஸ் எம் எஸ் அனுப்பியது என்று பார்த்தால் ஒரு மாதத்தில் ஒன்று இருந்தால் அதிகம். ஆனால் யாஹூ மெசெஞ்சரில் உள்ள எஸ் எம் எஸ் அனுப்பும் வசதியை அடிக்கடிப் பயன்படுத்திக்கொள்வேன். 


ஒருமுறை எனக்கு எஸ் எம் எஸ் செய்த உறவினரை, தொலைபேசியில் தொடர்புகொண்டு, அவர் அனுப்பிய குறுஞ்செய்தி குறித்து பேச ஆரம்பித்தேன். அவர் அப்படியா, அப்படியா எனத் தொடர்ந்து ஆச்சரியமாக விசாரித்துவிட்டு, இறுதியில் ஓர் உண்மையைக் கூறினார். அவருக்கு வேறு யாரோ அனுப்பிய செய்தியாம். அதைப் படித்துவிட்டு ஒன்றும் புரியாததால் (அந்த உறவினருக்கு ஆங்கிலம் கொஞ்சம் அரைகுறை) அதை வழக்கம்போல் எல்லோருக்கும் பார்வார்ட் பண்ணினாராம்.


உபயோகமில்லாத செய்திகளை அனுப்புபவர்களை நான் வேண்டிக்கொள்வதெல்லாம் காசு செலவழித்து எனக்கு எஸ் எம் எஸ் அனுப்பாதீர்கள். அதற்கு பதில்  எல்லோரும், அதற்காகும் செலவை, ஓர் உண்டியலில் போட்டு வைத்திருங்கள். என்னை எப்பொழுதாவது நேரில் பார்க்கும்பொழுது, சேர்த்துவைத்திருக்கும் பைசாவை என்னிடம் காட்டுங்கள். நான் மேற்கொண்டு அதே அளவுக்கு பைசா உங்களுக்குக் கொடுக்கிறேன். இவ்வாறு செய்வதால், அனாவசியமாக ஏதோ ஒரு செல் கம்பெனி சம்பாதிக்கின்ற பைசா, உங்க நேரம், என்னுடைய நேரம் எல்லாமே நிறைய மிச்சமாகும்.  மேலும் எஸ் எம் எஸ் அனுப்பியே ஆகவேண்டும் என்னும் உந்துதல் உள்ளவர்கள் இரண்டு மொபைல் போன் வாங்கி வைத்துக்கொண்டு - இதிலிருந்து அதற்கும், அதிலிருந்து இதற்கும் மாற்றி மாற்றி எஸ் எம் எஸ் அனுப்பி - அதைப் படித்து ஆனந்தம் அடையலாம் என்றும் எனக்குத் தோன்றுகிறது.


நம் வாசகர்கள் எல்லோருக்கும் ஒரு செய்தி சொல்கின்றேன். ஒருவர் நேற்று எனக்கு அனுப்பியிருந்த செய்தி ஒன்றில், தெருவில் பிச்சை எடுக்கும் சிறுவர்கள் யாரையாவது பார்த்தால், உடனே ------- என்ற செல்லுக்கு சொல்லுங்கள். அவர்கள் அந்த சிறுவரின் படிப்புக்கு ஏற்பாடு செய்வார்கள். என்று இருந்தது. சும்மா இதைப் பற்றி கொஞ்சம் கூகிளிட்டுப் பார்ப்போமே என்று பார்க்கும் பொழுது, இந்த செல் எண்ணை தொடர்பு கொள்ளச் சொல்லி - ஒரு பிரபல இரண்டாம் கட்ட நடிகரின் இரசிகர் என்று கூறிக்கொண்டு, ஒருவர் இரண்டாயிரத்து ஏழாம் வருடம் - அந்த நடிகரின் இரசிகர் மன்ற பெயர் கொண்ட டாட் காம் வலைப் பதிவில் தன பெயரைக் குறிப்பிட்டு எழுதியிருந்தார். அந்த எண்ணைத் தொடர்புகொண்டு எதுவும் விசாரிக்க முடியவில்லை. வேறு எங்கோ ரி-டைரக்ட் ஆகிறது. இதில் மேற்கொண்டு மர்மங்கள் ஏதாவது இருக்குமா அல்லது இருக்காதா என்று தெரியவில்லை. பெயர் குறிப்பிடாமல், ஏதாவது செல் எண் மட்டும் குறிப்பிடப்பட்டு வருகின்ற எண்களை யாரும் தொடர்புகொள்ளாமல் இருப்பது (குறிப்பாக பெண்கள்) மிகவும் நல்லது. 


சென்ற வருடம் எனக்கு வந்த போலீஸ் கமிசனர் ஆபீஸ் எஸ் எம் எஸ் ஒன்று, சென்னை நகர போலீஸ் மொபைல் எண் 9500099100 என்பதைத் தொடர்புகொண்டு புகார் எதுவும் கொடுக்கலாம் என்று கூறியிருந்தது. நமக்குத் தெரிந்த யாராவது இந்த எண்ணைப் பயன்படுத்தி இருப்பார்களா என்று அறிய ஆவலாக உள்ளது.


 இறுதியாக நான் கூறுவது இவைகள்தாம்:
$ அனாவசிய எஸ் எம் எஸ் யாருக்கும் அனுப்பாதீர்கள். நேரமும், செலவும் மிச்சமாகும்.
$ பெயர் இல்லாத செல் எண் மட்டும் எங்கேயாவது பார்த்தால் அதைத் தொடர்பு கொள்ளாதீர்கள்.
$ உள்ளூர் போலீஸ் மொபைல் எண் எப்பொழுதும் கை(பேசி) வசம் வைத்திருங்கள். 
$ பெண்கள் உங்கள் கைபேசி எண்ணை, யாருக்கும் எந்த சந்தர்ப்பத்திலும் கொடுக்காதீர்கள். 


முடிக்கும்  முன்பு வாசகர்களுக்கு ஒரு பொது அறிவு கேள்வியோடு முடிக்கிறேன். பெரும்பாலான அலை பேசிகளில், குறுஞ்செய்தி வரும்பொழுது, கீழ்க்கண்டவகையில் சத்தம் (டிஃபால்ட்) செட்டிங் இருக்கும்.
மூன்று குறுகிய சத்தம் (பிப் பிப் பிப்)
இரண்டு நீண்ட சத்தம் (பீப் பீப்)
திரும்பவும் மூன்று குறுகிய சத்தம் (பிப் பிப் பிப்)
இப்படி கேட்கும் : " பிப் பிப் பிப் --- பீப் பீப் --- பிப் பிப் பிப்."
இதன் விளக்கம் என்ன? யாருக்காவது தெரியுமா? 

24 கருத்துகள்:

  1. //மேலும் எஸ் எம் எஸ் அனுப்பியே ஆகவேண்டும் என்னும் உந்துதல் உள்ளவர்கள் இரண்டு மொபைல் போன் வாங்கி வைத்துக்கொண்டு - இதிலிருந்து அதற்கும், அதிலிருந்து இதற்கும் மாற்றி மாற்றி எஸ் எம் எஸ் அனுப்பி - அதைப் படித்து ஆனந்தம் அடையலாம் என்றும் எனக்குத் தோன்றுகிறது.//

    KG Gouthaman I like it very much yaar...hahahaha...

    useful issue
    nalla sevuula adicha mathiri solli irukiingka...

    பதிலளிநீக்கு
  2. நானும் யாருக்கும் SMS அனுப்புவதில்லை. (ஒரு SMSக்கு 0.60 காசாம்) எனக்கும் SMS வருவதில்லை.

    பதிலளிநீக்கு
  3. The pressure applied at the tip of the thumb is magnified at the base of the thumb, according to a report on Forbes.com. Repetitive motion can cause pain and inflammation of the basal joint. It can even lead to thumb arthritis.

    பதிலளிநீக்கு
  4. மிக மிக அவசியம் தவிர்த்து நான் அதை பயன் படுத்துவதில்லை..:)

    மிஸ்டு கால் மாதிரி மிஸ்டு SMS இருக்கா?? பொது அறிவு கேள்வில இதையும் போடுங்க..ஹி ஹி

    பதிலளிநீக்கு
  5. //$ பெண்கள் உங்கள் கைபேசி எண்ணை, யாருக்கும் எந்த சந்தர்ப்பத்திலும் கொடுக்காதீர்கள். //

    ஏன் இப்பிடி சே... நாங்க காதலிக்கப்போற பொண்ணு கூடவா எங்களுக்கு நம்பர் தரக்கூடாது,..?

    பதிலளிநீக்கு
  6. ஏன் பொண்ணுக மட்டும்தான் உசத்தியா ஆண்பிள்ளைகள் நாங்களும் யார் கிட்டவும் நம்பர் குடுக்க கூடாதுன்னு சொன்னா என்னவாம்?

    பதிலளிநீக்கு
  7. //பெயர் இல்லாத செல் எண் மட்டும் எங்கேயாவது பார்த்தால் அதைத் தொடர்பு கொள்ளாதீர்கள்.//

    இப்பிடியெல்லாம் கூடவா இருக்கு?

    பதிலளிநீக்கு
  8. //அதற்கு பதில் எல்லோரும், அதற்காகும் செலவை, ஓர் உண்டியலில் போட்டு வைத்திருங்கள்//

    எனக்குக் கொடுத்து விடுங்கள்..,

    பதிலளிநீக்கு
  9. பீப் பீப்புக்கு என்ன அர்த்தம் தெரியல ஆனா அந்த சத்தம் கேக்கும் பொது பி.பி எகிறுது.

    அவசிய தகவல்

    விஜய்

    பதிலளிநீக்கு
  10. //சொந்த செலவில் சூன்யம்.//

    அப்பா...டி.என்னமா சிந்திக்கிறீங்க !

    //இரண்டு மொபைல் போன் வாங்கி வைத்துக்கொண்டு - இதிலிருந்து அதற்கும், அதிலிருந்து இதற்கும் மாற்றி மாற்றி எஸ் எம் எஸ் அனுப்பி - அதைப் படித்து ஆனந்தம் அடையலாம்.//

    வர வரக் கிண்டல் கூடிப்போச்சு.பதிவு யாரு ?ஸ்ரீராம்தான்.வேற யாரு !

    ச்ச...கொஞ்ச நாளுக்கு முன்னம் இந்தப் பதிவைப் போட்டிருக்கலாம் நீங்க.நான் ஒருத்தர்கிட்ட என்னோட போன் நம்பர் குடுத்திட்டு கஸ்டப்பட்டுக்கிட்டு இருக்கேன்.

    ஸ்ரீராம் எங்கே அப்பாவைக் காணோம் ?

    பதிலளிநீக்கு
  11. சூப்பட் டோப்பிக் தல...ஒரு நாளைக்கு எனக்கு 50 எஸ்.எம்.எஸ் கிட்ட வருது. பெரும்பாலும் எதையும் படிக்கிறதில்ல. எதாவது தெரிந்த எண்ணிலிருந்து வந்தால் பார்ப்பது.

    பதிலளிநீக்கு
  12. "அப்பாதுரை" தன் அம்மா மற்றும் தங்கைகள் குடும்பம் என்று சென்னையில் சந்தோஷமாக நாளை கழித்துக்கொண்டு இருக்கவேண்டும்.

    ரொம்ப வருடம் கழித்து இந்திய செல்கிறார் என்று நினைக்கிறேன். அதனால், அவர் செல்போன், எஸ்.எம்.எஸ். எதுவும் பார்க்கமாட்டார் என்று நினைக்கின்றேன்.

    அப்பாதுரை, நான் சொன்ன ஹோட்டல் / பார் எல்லாம் உதவியாக இருந்ததா ?

    - சாய்

    பதிலளிநீக்கு
  13. எஸ் எம் எஸ் காரணமாக பாதிக்கப்பட்டவர்கள் அதிகம் பேர் இருப்பது தெரிகிறது. பாராட்டியவர்களுக்கு எங்கள் நன்றி.
    எழுதியவர் யார் என்று ஒவ்வொருவர் ஒவ்வொரு பெயரைச் சொல்லி இருப்பதால் எங்களுக்கே குழம்பிப் போய்விட்டது.
    வசந்த் : நாங்க காதலிக்கப்போற பொண்ணு கூடவா எங்களுக்கு நம்பர் தரக்கூடாது,..?
    வசந்த் - "காதலிக்கப்போற .... ?"
    நீங்க காதலிக்கப்போற பொண்ணுங்க எல்லோருடைய செல் எண்களையும் - எழுதிப்போட்டு குலுக்கல் முறையில் தேர்ந்தெடுப்பீர்களா?:)))
    நீங்க சொன்னாப்புல - ஆண்களும் தங்கள் செல் எண்ணை கொடுக்கக்கூடாது, பெண்களுக்கு!
    இது எப்பிடி இருக்கு ?? !!

    பதிலளிநீக்கு
  14. பீப் பீப் - சத்தத்திற்கும் - எஸ் எம் என்ற எழுத்துகளுக்கும், - இருநூறு ஆண்டுகளுக்கு முன் வாழ்ந்த ஒரு அமெரிக்கருக்கும் நெருங்கிய தொடர்பு உண்டு. இப்போ யாராவது பதில் சொல்ல முயற்சி செய்யுங்கள்.

    பதிலளிநீக்கு
  15. நல்ல பகிர்வு...விழிப்புணர்வுடன் கடைபிடிக்க வேண்டியது உபயோகிப்பாளரிடம்...

    பதிலளிநீக்கு
  16. //$ பெண்கள் உங்கள் கைபேசி எண்ணை, யாருக்கும் எந்த சந்தர்ப்பத்திலும் கொடுக்காதீர்கள். //
    அப்போ கை பேசி என்பதே ஆண்கள் சமாச்சாரம் என்கிறீர்களா?

    பதிலளிநீக்கு
  17. //" பிப் பிப் பிப் --- பீப் பீப் --- பிப் பிப் பிப்."//

    இது தந்தி முறையில் SMS எழுத்துக்களுக்கான குறியீடு - சரியா?

    பதிலளிநீக்கு
  18. வெரி குட்! ஹுஸைனம்மாவுக்கு எங்கள் சிறப்புப் பாராட்டும் ஐநூறு பாயிண்டுகளும்.
    ... = S
    -- = M
    ... = S

    பதிலளிநீக்கு
  19. If you buy reliance they will send daily 10 sms and auto call 5 times a day.So anybody like to show as busy plz keep Reliance

    பதிலளிநீக்கு
  20. எஸெமெஸ் ஒரேயடியாக ஒதுக்க வேண்டியதா என்று தெரியவில்லை. சில ஜோக்குகள் மிக நன்றாக இருப்பதால் அவற்றை நான் வரவேற்கிறேன். ஜங்க் வந்தால் பிடுங்கல் தான். உபதேசம் புதிர் ஜோக் அன்பு/ நட்பு / காதலின் மேன்மை இவற்றில் மேன்மை பிராண்ட் மட்டுமே செயற்கையாக இருக்கிறது என்று நினைக்கிறேன். அவல் இடித்தால் உமி வராதிருக்குமா? எனக்கு வந்த சில ஜோக்கு மெஸேஜ் களை சேமித்து வைத்து என் நண்பர்களுக்கு காட்டி மகிழ்விப்பதும் உண்டு. ட்டி யில் தொடங்கி ஐ யில் முடியும் இரண்டு ஆங்கில சொற்கள் கேட்டு வந்த மெஸேஜ் என்னை மிகவும் சிந்திக்க வைத்தது. ஒரு சொல் எளிதில் கிடைத்தது. அடுத்ததுக்கு கொஞ்சம் திண்டாடினேன். Und என்று தொடங்கி அப்படியே முடியும் வார்த்தை ஒன்றே ஒன்றுதான் என்று கேட்பதில் ஒரு திரில் இருக்கிறது.

    பதிலளிநீக்கு
  21. //மேலும் எஸ் எம் எஸ் அனுப்பியே ஆகவேண்டும் என்னும் உந்துதல் உள்ளவர்கள் இரண்டு மொபைல் போன் வாங்கி வைத்துக்கொண்டு - இதிலிருந்து அதற்கும், அதிலிருந்து இதற்கும் மாற்றி மாற்றி எஸ் எம் எஸ் அனுப்பி - அதைப் படித்து ஆனந்தம் அடையலாம் என்றும் எனக்குத் தோன்றுகிறது.//splendid.today i requested my friend to stop forwarding messages since 1.I dont go through them 2 my message box get filled with irrelevent things 3 i delete them by seeing the sender. I am not getting messsages from him !

    பதிலளிநீக்கு

இந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க!