Thursday, February 18, 2010

என்ன தோணுது?

ரொம்பப் பேருங்க - படம் பார்க்க முடியவில்லை என்று பின்னூட்டம் இட்டதால், அதை இப்போதைக்கு நிறுத்தி விட்டோம். ஆறுதலாக ஒரு படம் இங்கே.
பார்த்துவிட்டு,
உங்களுக்குத் தோன்றும் கருத்துகளைப் பதியுங்கள்.
நன்றி.

26 comments:

தமிழ் உதயம் said...

மாலை நேரம்,
கடல் அலை,
கால் தடம்.

கிருஷ்ணமூர்த்தி said...

படம் தெரியணும்னா யாகூ கணக்கு இருந்திருக்கணும், அப்புறம் யாஹூ க்ரூப்சில் மெம்பரா சேந்துக்கணும்! அதுக்கப்புறம்தான் படமே தெரியும்!

இதைக் கவனியாமல், படத்தை இணைத்தால் நிறையப் பேருக்கு அல்ல, பதிவிட்டவருக்கே யாகூ லாகின் செய்யாமல் படம் திறக்காது!

படம் அவ்வளவு நல்லாவா இருந்துச்சு!?

k_rangan said...

காலையோ மாலையோ புரியவில்லை
நண் பகலாகவுமிருக்கலாம்
இருவர் தடம் பதித்துச் சென்றிருக்கின்றனர்
பேசிக்கொண்டு மெதுவாக அல்ல
நன்கு கை வீசி - ஆனால் ஓடவில்லை

நினைவுகளுடன் -நிகே- said...

அதிகாலை நேரம்
அலையடிக்கும் கடல்
இருவர் நடந்து சென்றதை
படம் பிடித்து காட்டும்
அந்த கால் தடங்கள்
இதுவே இந்த படம் சொல்லும் கதை

ராமலக்ஷ்மி said...

பதித்து விட்டோம் தடமென
கால்கள் மகிழ்ந்திருக்க
அழித்துச் சென்றுவிடுகின்றன
அலைகள் அடுத்தநொடிப்பொழுதே
திரும்பிப் பார்க்கும் மனதுக்கு
இதுதெரிந்தாலும் புரிந்தாலும்
ஓயாமல்அடித்துக் கொண்டேதானிருக்கிறது அலைபோல
ஒவ்வொரு இடத்திலும்
ஒவ்வொரு கட்டத்திலும்
தன்அடையாளத்தைப் பதித்திட!

ராமலக்ஷ்மி said...

வாழ்க்கையின்
ஒவ்வொரு கட்டத்திலும்:)!

meenakshi said...

நம் கால் தடங்களை இந்த அலைகள் அழித்தாலும்,
நம் காதல் தடங்களை உன் மன அலைகளால் அழித்து விடாதே!
பொன்னிற வானம், வெண்ணிற அலைகள் சாட்சியாக,
வாழ்கை பாதையிலும் உன்னுடனேயே தான்
நான் நடை பயில வேண்டும்!
பாதை மாறாமல், நம் பயணம் தொடர,
இணையாய் வா நீ என்னோடு!
இனிதாய் வருவேன் நான் உன்னோடு!

~~~Romeo~~~ said...

கால் தடம் எல்லாம் பெருசா விரிவா இருக்கே. ஆதிகாலத்து மனிதன் தடமா ??

சாய்ராம் கோபாலன் said...

எனக்கென்னவோ அந்த ஆளோ அல்லது அந்த பெண்ணோ (இந்த காலத்தில் ஆணும் ஆணும் கூட இருக்கலாம், பெண்ணும் பெண்ணும் கூட இருக்கலாம் !) ஒத்தைக்காலில் பிச்சிக்கிட்டு ஓடற மாதிரி இருக்கு.

இடைவெளி கம்மியாக இருந்து பெரிதாகி கொண்டே இருக்கு பாருங்க ??

ஒரே ஆள் என்றால், இப்படி காலை விரித்து நடந்தால் டங்குவார் கிழிஞ்சுடும் !!!

ஒருவர் பாதத்தில் இன்னொருவர் பாதம் வைத்து நடக்கிறார்கள் என்று வைத்துக்கொண்டாலும் ஒத்து வரவில்லை. மேலே சொன்னமாதிரி ரெண்டு பேரோட டங்குவாரும் அப்பிட்டு ஆகிடும் !!

இவ்வளவு நேரம் பெண் பாண்டி ஆடி கொண்டு வந்தாள் என்று வைத்துக்கொண்டாலும், ஆண்கள் பாண்டி கொஞ்சம் கஷ்டம் தான். அதனால் நீருக்கு அருகாமையில் இருப்பது பெண் (அவ்வளவாக தடம் தப்பவில்லை), இந்த பக்கம் என்னை மாதிரி ஒரு ஆளு !!

இப்படியும் இருக்கலாம், யாரோ நல்ல "மப்பில்" நடப்பதால் நடை தவறுகின்றது !!

மனசாட்சி - "டேய் சாய், நீ மட்டும் எப்படிடா இப்படி கன்னப்பின்னா என்று யோசிக்கற ?"

"எங்கள் ப்ளாக்" பொறுப்பாளர்கள் மனம் திறந்து சிரித்து விடுங்கள்.

அசிங்கம் என்று "டிலீட் பட்டன்" தேடாதீர்கள் !!

புலவன் புலிகேசி said...

கடலோரம் கால்த்தடம்
அது காதலர்களாகத்தான்
இருக்க வேண்டுமா?

ஹேமா said...

தடம் புரண்ட ஈழத் தமிழன்
தடம் பதித்து நடக்கிறான்
தமிழ்நாட்டுக் கரையோரம்.

தொடு வானம்
தொட்டுத தடவும்
தன் வீட்டை எட்டிப் பார்க்க !

Anonymous said...

//இடைவெளி கம்மியாக இருந்து பெரிதாகி கொண்டே இருக்கு பாருங்க ??//

The variation in distance between steps may be due to the size to distance effect on the camera - wide angle/short focal length lenses accentuate the effect.

சாய்ராம் கோபாலன் said...

//ஹேமா said...

தடம் புரண்ட ஈழத் தமிழன்
தடம் பதித்து நடக்கிறான்
தமிழ்நாட்டுக் கரையோரம்.

தொடு வானம்
தொட்டுத தடவும்
தன் வீட்டை எட்டிப் பார்க்க ! //

அழகு ஆனால் சோகம்

கவிதை காதலன் said...

நாம் மறந்துவிட்டு வந்த கால் தடங்களை
நமக்காக சேமித்து வைத்திருக்கிறது
கடற்கறை

Jawahar said...

கடலைப் பார்த்த ஆனந்தத்தில யாரோ குதிச்சி குதிச்சி போயிருக்காங்க. ரெண்டு கால் சுவடுகளும் பக்கம் பக்கமா இருக்கே!

http://kgjawarlal.wordpress.com

ஆதி மனிதன் said...

மலை, அலை, கலை.

சைவகொத்துப்பரோட்டா said...

இதமான காற்று வீசும் கடற்கரையில் நடந்து செல்வது ஒரு சுகமான, எனக்கு பிடித்தமான அனுபவம்.

சாய்ராம் கோபாலன் said...

//சைவகொத்துப்பரோட்டா said...

இதமான காற்று வீசும் கடற்கரையில் நடந்து செல்வது ஒரு சுகமான, எனக்கு பிடித்தமான அனுபவம்.//

எப்போதும் அப்படியே தான் இருக்கும் கடல் என்று நினைத்து அருகில் இருந்தவர்களை தான் அள்ளிக்கொண்டு போனது "சூனாமி" என்ற சூரன் !

அதிவிரைவில் உயிரை குடிப்பதும் தண்ணீர் தான் (நெருப்பை ஒப்பிடும்போது)

சி. கருணாகரசு said...

இதுக்கு ஒரு கவிதை எழுதுறேன்.... அதை அந்த படத்துக்கு கீழே ஒட்டிடுங்க.....


நீ...
சீராக நடந்து செல்கிறாய்.
நான்...
அலையாய்... அலைகிறேன்.

எங்கள் said...

எவ்வளவு கவிஞர்கள் - எங்கள் வாசகர்களில். யாரையும் தனியே குறிப்பிட்டால் - மற்றவர்கள் மனம் நோகும் என்பதால் - கவிதை எழுதிக் கலக்கிய அனைவருமே மிகவும் சிறப்பாக யோசித்திருக்கிறீர்கள் என்று பாராட்டுகிறோம். குறிப்பாக ராமலக்ஷ்மி, ஹேமா, மீனாக்ஷி, கருணாகரசு ஆகியோரின் வரிகள் நயமாக உள்ளன.

thenammailakshmanan said...

சாய்ராம் கோபாலன் சிரிச்சு மாளலை ....:-)

thenammailakshmanan said...

எந்த அலையிலும் அழியாமல் நாங்கள்

தியாவின் பேனா said...

அருமை

Madurai Saravanan said...

vaalvil eththanaiyo
alaikal vanthu pokalaam....
anaal etharkkum thunintha
ungkal payanam
vittu sellum
kaal thadangkal
aliyaathavai ...
santhathikku sollum aayiram ...
aam..
alaikal ooyvathillai !

nagai ranganathan said...

கால சுவட்டில் எண்ணங்களை பதிக்கும் முன் கடல் மண் சுவட்டில் காலடிகளை பதிப்போமே !

குரோம்பேட்டைக் குறும்பன் said...

மண்ணிலே கால் தடம் பதித்துவிட்டு மமதையோடு விண் பார்த்து நடந்து செல்லும் மந்தை மனிதன் --
அந்தக் காலடித் தடங்களை இயல்பாய் அழித்துவிட்டு - இன்னும் சிறப்பான மனிதத் தடம் ஒன்றிற்காக ஏங்கி இருக்கும் கால அலை.

Post a Comment

இந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க!