திங்கள், 8 மார்ச், 2010

சர்வதேச மகளிர் தினம்.

சர்வதேச மகளிர் தினம் - இன்று (மார்ச் எட்டு)
இது, நூறு ஆண்டுகளாகக் கொண்டாடப்படுகின்ற தினம்.
முன்னேற்றம் அடைந்துள்ள நாடுகளிலும், முன்னேற்றம் அடைந்து வரும் நாடுகளிலும், மகளிர் உரிமை என்பது பாதுகாக்கப் பட்டு வருகிறது என்பதற்கு பல உதாரணங்கள் எடுத்துக் கூறலாம்.
அன்னையும் பிதாவும் முன்னறி தெய்வம் என்ற அவ்வை சொல்லில் உள்ள உண்மையை அவ்வை காலத்திலிருந்தே நாம் (அதாவது எழுநூறு ஆண்டுகளுக்கு மேலாக) உணர்ந்து போற்றி வருகிறோம். அவ்வையும் பெண்தான், அந்தக் காலத்து அம்பாசடர் (சமாதானத் தூதுவர்) கூட. நம் எல்லோருடைய அம்மாவும் பெண்தான். தமிழ்ச் சமுதாயம், எழுநூறு ஆண்டுகளுக்கும் மேலாக மகளிர் உரிமையை அங்கீகாரம் செய்துள்ளது என்பது நமக்கு தெரிகிறது.
மகளிர் சம உரிமை, மகளிர் மேம்பாடு - என்பதை எந்த அளவுக்கு மக்கள் புரிந்துகொண்டிருக்கிறார்கள் என்பது மற்றொரு கேள்வி. இந்தக் கேள்விக்கு - ஒவ்வொருவரும் கூறும் பதில்தான், இந்தக் காலக் கட்டத்திற்கு இன்றியமையாதது.
இதில் அரசியல்வாதிகள் தனி ஜாதி. அவர்களின் வியாக்கியானங்களைப் படித்தால் நாம் எல்லோரும் மொத்தமாகக் குழம்பிப் போவோம். 
ஆண்களைப் போல, கெட்டுக் குட்டிச்சுவர் ஆவதற்கு, எங்களுக்கும் சம உரிமை, வாய்ப்பு வேண்டும் என்று மகளிர் கொடி பிடித்தால், அது விவேகமாகுமா?
முன்னேற்றத்தில், வேலை வாய்ப்புகளில், உயர் பதவிகளுக்கு, தலைமைப் பொறுப்புகளுக்கு, ஆணுக்கு பெண் சளைத்தவர்கள் இல்லை என்பது நம் எல்லோருக்கும் கண் கூடாகத் தெரிகின்ற உண்மை. இதை ஏற்றுக்கொள்வதும், ஏற்றுக் கொள்ளாததும் அவரவர் மனோபாவம்.
இணையத்தில், பெண் பதிவாளர்கள் மிக மிக சிறப்பான பதிவுகள் இடுகிறார்கள். உபயோககரமான பல பதிவுகள் எங்களை ஈர்த்தது. எங்கள் பிளாகில் - பின்னூட்டம் இடுகின்ற (/இடாத) எல்லோருடைய பிளாகுக்கும் - நாங்கள் ஒருமுறையாவது குறைந்த பட்சம் விசிட் செய்து படித்துப் பார்த்ததுண்டு. அவற்றில் பெண் பிளாகர்களின் பிளாகுகள், இங்கே குறிப்பிடப் பட்டுள்ள பல வகைகளில் சிறப்பானவையாக இருந்தன.
* தமிழ் - நல்ல தமிழ். இலக்கண சுத்தமானது.
* பதிவுகளின் நம்பகத் தன்மை.
* பதிவுகளின் உபயோககரம்.
* பதிவுகளில் நகைச் சுவை.
* பதிவுகளில் வட்டாரத் தமிழ்.
* கவிதைகள்.
எங்களுக்குப் பெயர் தெரிந்த, இந்த சமயத்தில் நினைவுக்கு வருகின்ற பெண் பதிவாளர்கள், எழுத்தாளர்கள், (எம் ஏ சுசிலா மேடம், ஹேமா, மீனாக்ஷி, ராமலக்ஷ்மி, தேனம்மை லக்ஷ்மணன், உங்கள் தோழி கிருத்திகா, அனன்யா,  கீதா சந்தானம், சினேகிதி, ஹுஷைனம்மா, திவ்யா, திவ்யா ஹரி, நினைவுகளுடன் நிகே, ஹேமா துவாரகாநாத் - காசு சோபனா)  மற்றும் இணைய உலக இண்டரஸ்ட் உள்ள மகளிர் எல்லோருக்கும், முன்னேறிக் கொண்டிருக்கும் எல்லாப் பெண்ணின மக்களுக்கும், எங்கள் வாழ்த்துக்களுடன்,
எங்கள் Blog.

12 கருத்துகள்:

  1. எனக்கு நினைவு வராவிட்டாலும் பரவாயில்லை! பதிவு எழுதிக் குழப்பாவிட்டாலும் பரவாயில்லை!

    சின்னஞ்சிறுமியாய், வாலைக் குமரியாய், மனைவியாய், சகோதரியாய், எல்லாவற்றிற்கும் மேலாகத் தாயாக உயர்ந்து நிற்கும் பெண்மைக்கு நமஸ்காரம்!

    மகளிர் தினம் என்று எங்கெங்கோ அர்த்தமில்லாத சடங்காகக் கொண்டாடப்படும் தினமாக இன்று ஒருநாள் மட்டுமல்ல--என்றைக்கும்!

    பெண்மைக்கு நமஸ்காரம்!

    பதிலளிநீக்கு
  2. உங்கள் வாழ்த்துகளோடு நாங்களும்:)

    பதிலளிநீக்கு
  3. நானும் என் பங்குக்கு வாழ்த்துகளைச் சொல்லிக் கொள்கிறேன்.
    (என்னுடைய பதிவையும் பாருங்க, ப்ளீஸ்!)

    பதிலளிநீக்கு
  4. நிச்சயம் மகளிர் பெருமை படக்கூடிய பதிவு. வாழ்த்துக்கள்

    பதிலளிநீக்கு
  5. எங்களோடு சேர்ந்து, எனது வாழ்த்துக்களும்.

    பதிலளிநீக்கு
  6. பெயர் : பெயர் சொல்ல விருப்பமில்லை.
    வலைத் தளம் : வந்துட்டான்யா வந்துட்டான்.
    பிளாக் முகவரி : http://ulagamahauthamar.blogspot.com
    பதிவு : பெண்ணே நீ என்றும் வாழ்க.
    எங்கள் விமரிசனம்: வெரி குட்.
    போதுமா - பெ சொ வி ?

    பதிலளிநீக்கு
  7. உங்கள் எங்களோடு என் வாழ்த்துக்களும்

    பதிலளிநீக்கு
  8. வாழ்த்தியமைக்கு நன்றி ஸ்ரீராம் ... தங்கள் அன்னைக்கும் எங்களின் வாழ்த்துக்களை சொல்லுங்கள் நண்பா..

    பதிலளிநீக்கு
  9. அட, என் பெயரும் உங்களின் பாராட்டுக்குரியதாகக் குறிப்பிடப்பிட்டிருக்கிறது!! மிகவும் மகிழ்கிறேன், நன்றி ஐயா!!

    /மகளிர் சம உரிமை, மகளிர் மேம்பாடு - என்பதை எந்த அளவுக்கு மக்கள் புரிந்துகொண்டிருக்கிறார்கள் என்பது மற்றொரு கேள்வி//

    மில்லியன் டாலர் கேள்வி என்றுதான் சொல்லவேண்டும்!!

    பதிலளிநீக்கு
  10. மகளிர் தின வாழ்த்துக்களுக்கு நன்றி. ---கீதா

    பதிலளிநீக்கு
  11. மகளிர் தின வாழ்த்துக்களுக்கு நன்றி.
    இந்த தினத்தில், பெண்களை வாழ வைத்த திரு. ராஜாராம் மோஹன் ராய் அவர்களையும், பெண்கள் உயர்ந்தே
    ஆகவேண்டும் என்று தம் எழுத்துக்களாலேயே எழுச்சி ஏற்படுத்திய திரு. பாரதியார் அவர்களையும் நன்றியோடு நினைக்கிறேன்.

    பதிலளிநீக்கு
  12. என்னையும் கௌரவப்படுத்தியதற்கு நன்றி எங்கள் ப்ளாக் ( பார்த்துக்குங்க நானும் ஒரு கவிஞிதான் )

    பதிலளிநீக்கு

இந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க!