செவ்வாய், 9 மார்ச், 2010

திமிர்க் கேள்விகளும், தெனாவட்டு பதில்களும் !


கே:  பெரிய வீடு சின்ன வீட்டைப் பார்த்து என்ன சொல்லும்?
பதில்:ரொம்ப அலட்டிக்காதே.  வெள்ளையடிச்சு மினுக்கறதெல்லாம் என் வயசு வரும்போது என்னாகும் தெரியுமா என்று கேட்கும்.

கே: விலைவாசி குறைப்பில் அரசியல்வாதி ஏன் அதிகம் அக்கறை காட்டுவதில்லை?
பதில்: யார் சொன்னது?  வோட்டு விலை ஏறி எகிறிப்போய் அவனவன் படற பாடு உங்களுக்கு எங்கே தெரிகிறது என்று அரற்றுகிறார் அரசியல்வாதி. 

கே:   பெரிய நடிகைக்கு என்ன அடையாளம்?
பதில்: ரொம்பச் சின்ன உடைகள்.

கே:   ஒரு கவிதை சொல்லுங்களேன்:
பதில்:   குட்டிக் கதை சொல்லி கும்பலைக் கவர்ந்தார்
              குட்டி மலை போல குவித்தார் செல்வத்தை
              குட்டி அடக்கவோ கூட யாருமில்லை
              குட்டி உறவால் குப்பையாய்ப் போனார்.

கே: விகடனிலிருந்து சினிமா பகுதியை தனிப் படுத்தி சினிமா விகடன் என்று ஏன் புதுப் பத்திரிகை பிரசுரம்  செய்யக் கூடாது? 
பதில்: அப்புறம் மீதி விகடனுக்கு 'சோனி விகடன்' என்றுதான் பெயர் வைக்க வேண்டும்.

கே:  கல்கி சுஜாதா சாவி மீண்டும் உயிர் பெற்று வந்தால் . . . ?
பதில்:  கல்கி:  கல்கி ரொம்ப மாறிவிட்டது, வருத்தமாக இருக்கிறது.
            சுஜாதா: டெக்னாலஜி ரொம்ப மாறி விட்டது. சந்தோஷமாக இருக்கிறது.
             சாவி:   ஜோக் மாறவே இல்லை. ஆச்சரியமாக இருக்கிறது.

கே: மக்கள் சக்தி மகத்தானது என்கிறார்கள். ஒன்றும் சாதிக்க முடியவில்லையே!
பதில்: மக்கள் சக்தியை முன்வைத்து முன்னேறி வரும் சித்த வைத்தியர்கள் இதை ஒப்புக் கொள்ள மறுக்கிறார்கள். 

கே: மந்திரோபதேசம் வேத பாராயணம் இதற்கெல்லாம் பெண்களை அந்தக் காலத்தில் சேர்ப்பதில்லையாமே அப்படியா?
பதில்: அதை இந்தக் காலத்திலும் வைத்திருக்கலாமே, இப்படியா!

கே: அஞ்சு பைட்டு, மூணு லவ் சீன், பன்ச் டயலாக் என்று தமிழ் சினிமா ஆனது எப்போது மாறும்?
பதில்: கவலைப் படாதீர்கள்.  பத்து பைட்டு, இருபது லவ் சீன், ஆபாச காமெடி என்று மாறி வருகிறதே கவனிக்க வில்லையா? 

கே: உப்புமாவை எப்படி சாப்பிட வேண்டும்?
பதில்: வயிறு உப்புமா என்று பார்த்து சாப்பிட வேண்டும்.

கே: புனர் ஜன்மத்தில் நம்பிக்கை இருப்பவர்கள் என்ன செய்யலாம்?
பதில்: செட் தோசை, மக்மல் பூரி சாப்பிடலாம்.

கே: டி வி யில் முன்பு பார்த்தது இப்போது பார்க்க முடியாதது எது?
பதில்: ' தடங்கலுக்கு வருந்துகிறோம் ' கார்டு.

கே: விலகி இருப்பது, விலகி இருக்க வேண்டியது, விலகாதிருப்பது, விலகாதிருக்க வேண்டியது எது?
பதில்: விலகி இருப்பது: கதா நாயகிகளின் மேலாடை.
            விலகி இருக்க வேண்டியது, உதடும் சிகரெட்டும்
            விலகாதிருப்பது: அதிகாரமும் லஞ்சமும்.
            விலகாதிருக்க வேண்டியது: சீரியலும் சோகமும்.

கே: நீங்கள் எதை தொடர்ந்து படித்தாலும் நடை முறைப் படுத்துவதில்லை?
பதில்: சமையல் குறிப்புகள்.

கே: தோற்றத்தில் கவர்ச்சியும் நல்ல பேச்சுத் திறனும் இருப்பவர் எந்தக் கட்சியில் சேரலாம்?
பதில்: அவரே புதிதாக ஆரம்பிக்கலாம் -- கட்சியை அல்ல.  சாமியார் மடத்தை. 

கே: கடைச் சங்க காலம் என்று சொன்ன பின்பு இனி தமிழ்ச் சங்கம் தோன்ற வாய்ப்பிருக்கிறதா?
பதில்: சங்கமம் தோன்ற நிறைய வாய்ப்பு வந்து போகிறதே போதாதா? 

(மேலும் கேள்வி கேட்போர் engalblog@gmail.com என்ற ஜி மெயிலுக்கு மெயில் அனுப்பவும்.)

18 கருத்துகள்:

  1. எங்கள் ப்ளாக்கை நீங்கள் வெளியிலிருந்து விமர்சனம் செய்தால் என்ன சொல்வீர்கள்?

    பதிலளிநீக்கு
  2. //கே:..., விலகாதிருக்க வேண்டியது எது?
    பதில்:.... விலகியிருக்க வேண்டியது: சீரியலும் சோகமும்.//

    பருப்பிருக்கா என்றால் உப்பிருக்கு என்பார்களாமே கடைக்காரர்கள் ..உங்கள் கடையில் என்ன விற்கிறீர்கள்?

    பதிலளிநீக்கு
  3. நன்றி சைவகொத்துப்பரோட்டா
    ரவி உங்களுக்கு பதில் தனி பதிவில்.
    அனானி நன்றி - திருத்திவிட்டோம்.

    பதிலளிநீக்கு
  4. //குட்டிக் கதை சொல்லி கும்பலைக் கவர்ந்தார்
    குட்டி மலை போல குவித்தார் செல்வத்தை
    குட்டி அடக்கவோ கூட யாருமில்லை
    குட்டி உறவால் குப்பையாய்ப் போனார்//

    என்ன ஒரு டைமிங்கான கவிதை. சூப்பர் .பொழுது போகுது

    பதிலளிநீக்கு
  5. இப்படி வேற கலக்கியாறதா:)) பலே!

    பதிலளிநீக்கு
  6. கே: பெரிய வீடு சின்ன வீட்டைப் ...
    பதில்:ரொம்ப அலட்டிக்காதே. வெள்ளையடிச்சு ...

    நித்யானந்தா இஷ்டைல்ல இன்னாவோ சொல்வியாங்காட்டியும்னு பாத்தா..ரூட்டு மாத்துறியே நைனா?
    -அப்பாதுரை

    பதிலளிநீக்கு
  7. நித்யானந்தா இஷ்டைல்ல இன்னாவோ சொல்வியாங்காட்டியும்னு பாத்தா..ரூட்டு மாத்துறியே நைனா?
    -அப்பாதுரை
    ஐயா சாமி, துரைமாரே, அப்பா, நித்யம் ஒரே ஆனந்தத்தைக் கட்டிக் கிட்டு கஷ்டப் படணுமா என்ன?

    பதிலளிநீக்கு
  8. கிண்டலான கேள்விகள்...
    கேலியான பதில்கள்...

    பதிலளிநீக்கு
  9. குரோம்பேட்டைக் குறும்பன்9 மார்ச், 2010 அன்று PM 5:58

    MAMATA DERAILS SONIA VICTORY - We are not taken into confidence - but Left were taken into confidence - for the 33% reservation bill. Says Mamata.
    பெண்களுக்குப் பெண்தான் எதிரி என்பது சரிதானோ?

    பதிலளிநீக்கு
  10. //ஐயா சாமி, துரைமாரே, அப்பா, நித்யம் ஒரே ஆனந்தத்தைக் கட்டிக் கிட்டு கஷ்டப் படணுமா என்ன?//

    அவன் தானே ர...வை கட்டிக்கொண்டான் ? நமக்கு அந்த கொடுப்பினை இல்லையே !!! அப்பறம் எங்கே நித்யம் ஆனந்தம் !

    ரைட்டு ரைட்டு ...

    பதிலளிநீக்கு
  11. //குட்டிக் கதை சொல்லி கும்பலைக் கவர்ந்தார்
    குட்டி மலை போல குவித்தார் செல்வத்தை
    குட்டி அடக்கவோ கூட யாருமில்லை
    குட்டி உறவால் குப்பையாய்ப் போனார்//

    ம்ம்ம்... சூப்பர் கவிதை ஸ்ரீராம்

    பதிலளிநீக்கு
  12. சோனி விகடந்தான் சூப்பர்

    :)))))))))))))

    கலக்குங்க எங்கள் ப்ளாக்

    பதிலளிநீக்கு
  13. //கடைச் சங்க காலம் என்று சொன்ன பின்பு இனி தமிழ்ச் சங்கம் தோன்ற வாய்ப்பிருக்கிறதா?//

    உங்கள் வாழ்நாளில் எத்தனை கடைசி சிகரெட், கடைசி கிளாஸ் விஸ்கி, கடைசி சண்டை பார்த்திருக்கிறீர்கள்? பிறகென்ன, இன்னொரு சங்கம் வந்து கடைச் சங்கத்தை இரண்டாம் இடைச் சங்கமாக்கி விடும்.

    பதிலளிநீக்கு

இந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க!