வியாழன், 11 மார்ச், 2010

ஜே கே

அன்னி பெஸண்ட் அம்மையாரால் உலகை உய்விக்க வரப்போகும் ஆசிரியர் World Teacher என முன்னரே அறியப் பட்டு, அவரால் எடுத்து வளர்க்கப் பட்டு, ஆரம்ப கல்லூரி கல்வி வரை கொடுக்கப் பட்டு, ஒரு ஆன்மிக ஸ்தாபனத்தின் தலைவராய்த் தொடங்கிய ஜிட்டு கிருஷ்ணமூர்த்தி (JK) (மே 12 - 1895 to பெப்ரவரி 17 - 1986) பிறப்பால் ஆந்திராவைச் சேர்ந்தவர். பின் காலங்களில் ஆங்கிலம் மற்றும் பிரஞ்ச் மொழி தவிர இதர மொழிகள்  ஏதும் அறியாதவரானார். 

தான் தலைமை ஏற்ற ஸ்தாபனத்தைக் கலைத்ததுடன், “ சத்தியம் என்பது வழித்தடங்கள் இல்லாத பாதை. அங்கு எவரும் எதுவும் யாரையும் இட்டுச் செல்ல இயலாது “ என்று அறிவித்து அதுவரை நன்கொடையாகப் பெறப் பட்ட மதிப்பு மிக்க சொத்துக்களையும் பணத்தையும் மிகச் சரியாக திருப்பித் தந்தது அவரது தனித் தன்மைக்கு மேன்மை சேர்த்தது. 

அதன் பின் ஆங்காங்கு சென்று சொற்பொழிவு செய்வதும் எழுதுவதும், நேரடி சம்பாஷணைகளில் ஈடுபடுவதுமாக அவர் வாழ் நாள் கழிந்தது.  அவருக்கு ஏற்பட்ட ஆன்மீக அனுபவங்கள் சில மர்மமானவை ஆனாலும் அவை குறித்து அவர் அதிகம் பேச முனையவில்லை.  “ அவை எல்லாம் கடந்து போனவை. மறந்துவிடப் பட்டவை “ என்று சொல்லி இருக்கிறார். 

யாராலும் மறுக்க முடியாத ஸ்தூலமாகிய உண்மையைப் பற்றி வாழ்வின் பிரச்சினைகள் பற்றி மட்டுமே விவாதிப்பது / அலசுவது அவரது இயல்பு.  வாழ்க்கையின் பல அம்சங்கள் குறித்து அவர் விளக்கியுள்ளது நம் அனைவருக்கும் பயன்படக் கூடும்.  உங்கள் பதில் பதிவுகளை ஆராய்ந்தபின் என்ன மாதிரியான பதிவுகள் தரலாம் அல்லது தராமலே இருக்கலாமா (!) என முடிவு செய்வோம்! 

(ஜே கே அவர்கள் பற்றியும், அவருடைய விவாதங்கள் மற்றும் கருத்துகள் குறித்தும் தமிழில் அறிய விரும்புவோர், இங்கே பின்னூட்டமிட்டால், எங்களுக்கு முடிவெடுக்க வசதியாக இருக்கும்.)
இங்கேயே இடது பக்கம் மேலே ஒரு வோட்டு சாவடி உள்ளது. உடனே வோட்டுப் போடுங்க!

20 கருத்துகள்:

  1. 1952 இலிருந்து தேர்தல்கள், ஓட்டுப் போடுகிற லட்சணத்தைப் பார்த்துக் கூட தெரிந்து கொள்ள முடியவில்லைய?

    :-(((

    நல்ல விஷயங்களை சொல்லவேண்டும் என்று நினைத்தால், சொல்லி விட வேண்டும்! நாள் நட்சத்திரம் பார்க்கக் கூடாது! ஓட்டுப் பெட்டி வைக்கக் கூடாது!

    ஒட்டுக்குக் காசு கேப்பாங்கன்னு மாத்திரம் இதைச் சொல்லவில்லை :-))

    பதிலளிநீக்கு
  2. கிருஷ் சார் - நீங்களாவது ஒரு டாப் வோட்டுப் போட்டிருக்கலாமே !!

    பதிலளிநீக்கு
  3. குரோம்பேட்டைக் குறும்பன்11 மார்ச், 2010 அன்று AM 10:16

    குறைந்த பட்சம் வாரம் ஒரு கட்டுரை தமிழாக்கம் செய்யுங்கள். எனக்கு ஆங்கிலத்தில் படித்தது முழுவதும் புரிந்ததே இல்லை.

    பதிலளிநீக்கு
  4. நல்ல விஷயங்களைப் படிக்கும் அரிய வாய்ப்புகளை விட்டுவிடலாமா? என் ஓட்டைப் போட்டுவிட்டேன். சீக்கிரம் ஆரம்பியுங்கள்.--கீதா

    பதிலளிநீக்கு
  5. I voted for 1 or 2 articles in a month. (b'cos i want to follow leisurely). if u publish every week, i may miss some articles, due do my work schedule, these days.

    பதிலளிநீக்கு
  6. நல்ல விஷயங்களை சொல்லவேண்டும் என்று நினைத்தால், சொல்லி விட வேண்டும்! நாள் நட்சத்திரம் பார்க்கக் கூடாது! ஓட்டுப் பெட்டி வைக்கக் கூடாது!


    கிருஷ்ணமூர்த்தி அவர்களின் கருத்தை ஆமோதிக்கிறேன்

    பதிலளிநீக்கு
  7. //கிருஷ் சார் - நீங்களாவது ஒரு டாப் வோட்டுப் போட்டிருக்கலாமே !!//

    :))

    ஏன் இன்னும் அரசியல்வாதியாகவே இருக்கிறீர்கள்...

    தத்துவ, ஆன்மிகம் சார்ந்து சிந்தனையை வளப்படுத்திக்கொண்டால் அனைத்தும் அதனுள் அடக்கம்...

    ஓட்டுப்போட்டுவிட்டேன், ஆரம்பியுங்கள் தொடரை...

    பதிலளிநீக்கு
  8. நானும் ஓட்டு போட்டாச்சு. பதிவை ஆவலோட விரைவில் எதிர்பாக்கறேன். சீக்கிரம் ஆரம்பியுங்கள்.

    பதிலளிநீக்கு
  9. ஓட்டு போட்டாச்சி.. பதிவை எதிர்பார்த்து இருக்கிறேன் நண்பா..

    பதிலளிநீக்கு
  10. ஓட்டு போட்டாச்சி.. பதிவை எதிர்பார்த்து இருக்கிறேன் நண்பா..

    பதிலளிநீக்கு
  11. யாராலும் மறுக்க முடியாத ஸ்தூலமாகிய உண்மையைப் பற்றி வாழ்வின் பிரச்சினைகள் பற்றி மட்டுமே விவாதிப்பது / அலசுவது அவரது இயல்பு. வாழ்க்கையின் பல அம்சங்கள் குறித்து அவர் விளக்கியுள்ளது நம் அனைவருக்கும் பயன்படக் கூடும். உங்கள் பதில் பதிவுகளை ஆராய்ந்தபின் என்ன மாதிரியான பதிவுகள் தரலாம் அல்லது தராமலே இருக்கலாமா (!) என முடிவு செய்வோம்!


    ........... ஏதோ எழுதினோம் என்று இல்லாமல், பயனுள்ள பதிவுகளை தர கருதும் உங்கள் நல் எண்ணங்களுக்கு பாராட்டுக்கள்.

    பதிலளிநீக்கு
  12. //அதுவரை நன்கொடையாகப் பெறப் பட்ட மதிப்பு மிக்க சொத்துக்களையும் பணத்தையும் மிகச் சரியாக திருப்பித் தந்தது அவரது தனித் தன்மைக்கு மேன்மை சேர்த்தது. //

    இந்த காலத்துல இவரை மாதிரி எவனும் இல்ல..தல நீங்க இவரப் பத்தி எழுதுங்க. நல்ல மனிதரைப் பற்றி தெரிந்து கொள்கிறோம்...

    பதிலளிநீக்கு
  13. Please do it as quick as possible.I am a great fan of J.K.

    பதிலளிநீக்கு
  14. உண்மை எங்கள் ப்ளாக் அவரைப் பற்றிக்கேள்விபட்டுசில கட்டுரைகள் படித்து இருக்கிறோமே தவிர முழுமையாகப் படித்தது இல்லை எனவே நீங்கள் சீக்கிரம் தொடங்குங்கள்

    பதிலளிநீக்கு
  15. ஜேகேயைப் பத்திக் கேள்விப்பட்டதோட சரி (அதுவும் சுஜாதா எழுத்தினாலே); வேறே விவரம் எதுவும் தெரியாது. "ஏற்பட்ட ஆன்மீக அனுபவங்கள் சில மர்மமானவை" கொக்கி போல இழுக்கிறது.

    எழுதுறது உங்க உரிமை (கடமை?). வாரத்துக்கு ஒண்ணு கொஞ்சம் கஸ்டப்படுங்க. எழுதுறதுக்குத் தான் சொல்றேன் :)

    பதிலளிநீக்கு
  16. Intellectuals are discussing....why me !! Taataa, Bye Bye....Seriyooo....

    டேய், "சாயி" கொஞ்ச நாள் "எங்கள் ப்ளாக்" பக்கம் வராதே என்றால் எனக்கு புரியாதா ?

    சரி சரி. வ்ரட்டா............

    பதிலளிநீக்கு
  17. தமிழ் உதயம் அவர்களுக்கு,

    உங்கள் பதிவுகள் எல்லாமே அருமையாகவும், சில பதிவுகள் மனதை தொடும் வண்ணமும் இருக்கிறது. நன்றி! தொடர்ந்து படித்து வருகிறேன். நான் google account வைத்துக் கொள்ளாததால் என்னால் உங்கள் பதிவில் பின்னூட்டம் அளிக்க முடியவில்லை. அதனால் 'எங்கள் ப்ளாக்' நம்ம ப்ளாக்தானே (சரிதானே ஸ்ரீராம்!:)) என்று இதிலேயே உங்களுக்கு எழுதி விட்டேன்.

    பதிலளிநீக்கு
  18. மீனாட்சிக்கு, சில தவிர்க்க முடியாத காரணங்களால், தாமதமாக தான் உங்கள் பின்னூட்டத்தை காண முடிந்தது. மிக்க நன்றி. எல்லாமே நம்ம பிளாக் தான்.

    பதிலளிநீக்கு

இந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க!