Friday, March 19, 2010

நேற்று

 வீட்டுக்கு கடிதம் கொடுக்க வந்தவர் வேறு ஏதோ விலாசத்தை சொல்லி கேட்டுக் கொண்ட பின்
 "சார், இந்த வீட்டில் லக்ஷ்மி தாண்டவம் ஆடுவாள் என்று சொல்வார்களே உங்களுக்கு அது மாதிரி விஷயங்களில் நம்பிக்கை உண்டா?" என்றார். 
இவருக்கு நம் மனைவி பெயர் எப்படித்தெரிந்தது என்று வியந்து கொண்டே "அது எப்படி உங்களுக்குத் தெரியும்? " என்று நான் கேட்க, " "இதெல்லாம் ஸ்கூல் வைத்தா சொல்லித் தருவார்கள்?  அங்கங்கே கேள்விப்படுவதுதான் "  என்று அவர் சொல்ல 'இதென்னடா விபரீதம்! ஏதோ இரண்டு பக்கத்து வீடுகளுக்கும் முன்னே பின்னே இருக்கும் வீடுகளுக்குமாக ஒரு நாலு அல்லது போனால் போகிறது என்று ஆறு வீட்டுக்குத் தெரிந்திருக்க முடிந்த ஒரு சமாச்சாரம் நம் பேட்டை எல்லையையும் தாண்டி பரவி இருக்கிறதே என்றெண்ணிக் கொண்டே 'அப்படி என்ன கேள்விப் பட்டீர்கள்?'  என்றதும் அவர்,
"அதோ அங்கிருப்பதேல்லாம் வெற்றிலை தானே?" என்று கேட்டுவிட்டுப் பின்னர் 'வெற்றிலை இப்படி செழித்து வளர்ந்தால் செல்வம் கொழிக்கும் என்று சொல்வார்கள். அதனால் தான் அப்படிக் கேட்டேன் என்றதும் தான் . பரவாயில்லை நாம் நினைத்தது போல் நம் உரத்த குரல் அவ்வளவு பேருக்குக் கேட்கவில்லை என்று எனக்கு ஒரு நிம்மதி பிறந்தது.

18 comments:

தமிழ் உதயம் said...

உங்க வீட்டுக்கதை.

புலவன் புலிகேசி said...

சொந்தக் கதையா.........

சைவகொத்துப்பரோட்டா said...

இது கதைதானே..............:))

வானம்பாடிகள் said...

:)). இப்படி வெத்திலை காசு குடுத்தாலும் கிடைக்காது

padma said...

அப்பிடியா ?ஒரு நல்ல சாப்பாடு சாப்பிட்டு அப்பிடியே நம் வீடு கொல்லையில் புதுசா இளம் வெத்தலை நாலு பறிச்சு கொஞ்சம் பாக்கு சுண்ணாம்போடு மென்று கிணத்தடிலேந்து வர ஜிலு ஜிலு காத்துல கண்ணசறது ஆஹா சொர்க்கம்

அப்பாதுரை said...

லக்ஷ்மி தாண்டவத்துக்கு மயங்கி (பயந்து?) வளந்திருக்குதா? பார்த்ததே இல்லை இந்த வளர்ச்சியை. வெற்றிலை மணம் என்பார்களே - இந்த மரப்பக்கத்தில் நின்றால் நுகரமுடியுமா? வெற்றிலை மரமா கொடியா? பூக்குமா?

எங்கள் said...

அப்பாதுரை சார். வெற்றிலைக் கொடி வகைத் தாவரம். பூக்கும், காய்க்கும், வெற்றிலைக் காய் படங்கள் - கொடியிலும், தனியாகவும் உள்ளவை - பதிவில் சேர்த்துள்ளோம்.

அநன்யா மஹாதேவன் said...

:-))
அருமையான பதிவு!

சாய்ராம் கோபாலன் said...

KGG

Bengaluro ? Neat. I remember visiting somebody estate near Sringeri. It was fascinating to roam around their estate and remember seeing this then. I am talking about 1998 when I was in Bangalore

எங்கள் said...

// சாய்ராம் கோபாலன் said...
KGG
Bengaluro ?//
kggouthaman said:
ஹி ஹி
raman said:
ஹி ஹி
sriram said:
ஹி ஹி
kg said :
ஹி ஹி
kasusobhana said:
ஷி ஷி

சாய்ராம் கோபாலன் said...
This comment has been removed by the author.
thenammailakshmanan said...

நல்ல மதிய உணவுக்குப் பின் எங்கள் அம்மா தோட்டத்தில் வெற்றிலை பறித்து போடுவாங்க இளந்தளிரான வெற்றிலை பற்றிப் படித்ததும் ஊர் ஞாபகம் வந்து விட்டது

meenakshi said...

'வெத்தலை கொடி மாதிரி இருக்கா' அப்படின்னு பெண்களை வர்ணிப்பது கூட வழக்கில் இருக்கு.
வெற்றிலை, பாக்கு, சுண்ணாம்பு இந்த மூன்றின் கலவையில் லக்ஷ்மி வாசம் செய்யறான்னு ஒரு ஐதீகம் இருக்கறதா எங்க பாட்டி சொல்லி கேள்வி பட்டிருக்கேன். அதனால சுமங்கலிகள் வாய் நிறைய வெத்தலை போடணும்னு சொல்லுவாங்க. உங்க வீட்டுக்கு கடிதம் கொண்டு வந்தவர் அதனாலதான் இப்படி சொல்லி இருக்கார். மேலும் நாள் கிழமைகளில் தாம்பூலமாக வெற்றிலை, பாக்கு கொடுக்கும்போது, ஐந்து வெற்றிலை வெச்சு கொடுத்தா, ஐஸ்வர்யம்னு சொல்லுவாங்க. 'வெறும் வெற்றிலை (பாக்கு இல்லாம) வேண்டாதவங்களுக்கு' அப்படின்னு ஒரு பழமொழி வேற இருக்கு. இதெல்லாம் எந்த அளவு உண்மை, இதுக்கெல்லாம் எதவாது அர்த்தம் இருக்கான்னே தெரியல.

ஆனால் வெத்தலை ஜீரணத்துக்கு நல்லது.

Vels said...

அவ்வ..ளவு சத்தமா..வா கேக்கு...து ?

Chitra said...

வெத்திலை கொடி அழகா இருக்கு.

பிரியமுடன்...வசந்த் said...

கிழவன் கிழவியெல்லாம் ஏதோ பேசிக்கிறீங்க மீ த எஸ்கேப்பு....

:)))

எங்கள் said...

வசந்த் - ஒரே ஒரு கமெண்ட் அடிச்சு யாருமே இந்தப் பதிவுப் பக்கம் வராமப் பண்ணிட்டீங்களே! இது நியாயமா? விசா கிளியர் வந்தவுடன் பஸ்சுல சொல்லுங்க.

ஜீவி said...

// "சார், இந்த வீட்டில் லக்ஷ்மி தாண்டவம் ஆடுவாள் என்று சொல்வார்களே உங்களுக்கு அது மாதிரி விஷயங்களில் நம்பிக்கை உண்டா?" என்றார்.
இவருக்கு நம் மனைவி பெயர் எப்படித்தெரிந்தது என்று வியந்து கொண்டே "அது எப்படி உங்களுக்குத் தெரியும்? " என்று நான் கேட்க//

ஹி..ஹி... இயல்பான நகைச்சுவை கைவந்த கலையாக இருக்கிறது, உங்களுக்கு..

Post a Comment

இந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க!