சனி, 20 மார்ச், 2010

தலைப்புச் செய்திகள் - கலகலப்பு கமெண்ட்டுகள்..

மதுரையில் ஒரு அண்ணா பல்கலைக் கழகம்....
திருக்குவளைத்தம்பி அறிவிப்பு..!

விமானத்தைக் கடத்தினால் மரண தண்டனை..
ரெயிலைக் கடத்தினால் ஆயுள் தண்டனையா...

கொசு கடித்தால் மலேரியா வராது..விஞ்ஞானிகள் புதுத் தகவல்..
அப்போ மலேரியா வந்தால் கடித்தது கொசுவாக இருக்காது...கொசுவெல்லாம் பசுவாகிவிட்டதாம்...அது சரி அவர் விஞ்ஞானியா மேற்கு மாம்பல ரியல் எஸ்டேட் விற்பனையாளரா?

மத்திய அரசு ஊழியர்களுக்கு டீ ஏ 8% அதிகரிப்பு
டீயே எட்டு சதவிகிதமா? அப்போ காஃபி?

தாசில்தார் மகன் திருமணம்..தாசில்தார் அலுவல்கள் காலி...
ஏங்க..மண்டபம் கிடைக்கலையா? அலுவலகத்திலேயே திருமணம் வச்சிட்டாங்களா?

பிரபல ரௌடி "பாம்" கணேசன் கைது!
-------------------------------------------------------------------------(வாசகர் கமெண்ட்டுக்காக இந்த இடம் வாடகைக்கு விடப் பட்டுள்ளது)

பிள்ளைகள் முன்னிலையில் தாய்க்கு தாலி கட்டினார் தந்தை.
முன்னிலையில் கட்டியவர்...முன்பே கட்டியிருக்கலாம்.

கேரளாவில் மீன் மழை...
சென்னை வெயிலுக்கு கருவாடு மழைதான்..

விஷம் குடித்த பத்தாம் வகுப்பு மாணவியின் காதலன் தற்கொலை முயற்சி...
பிஞ்சுக் காதல்...நஞ்சுக் காதல்.

ஹைடன் அதிரடி...சென்னை வெற்றி...
சின்ன பேட்.... பெரிய ரன்...

காவலர் பிறந்தநாள்..வாழ்த்துடன் அரை நாள் ஓய்வு...
மாமூல் வாழ்க்கைக்கு(ம்) அரை நாள் ஓய்வு..!

36 கருத்துகள்:

  1. //கேரளாவில் மீன் மழை...
    சென்னை வெயிலுக்கு கருவாடு மழைதான்..//

    :-))))))

    மீனுக்கும் உங்களுக்கும் நிறைய சம்பந்தம் இருக்கு போல...

    அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்

    பின்னாடி நாந்தான் மீனுன்னு என் கூட யாராச்சும் சண்ட போடாம இருந்தா சரி

    பதிலளிநீக்கு
  2. //கொசு கடித்தால் மலேரியா வராது..விஞ்ஞானிகள் புதுத் தகவல்..
    அப்போ மலேரியா வந்தால் கடித்தது கொசுவாக இருக்காது...கொசுவெல்லாம் பசுவாகிவிட்டதாம்...அது சரி அவர் விஞ்ஞானியா மேற்கு மாம்பல ரியல் எஸ்டேட் விற்பனையாளரா?//

    அடிபொளி கேட்டோ? :))

    பதிலளிநீக்கு
  3. //பிரபல ரௌடி "பாம்" கணேசன் கைது!
    -------------------------------------------------------------------------(வாசகர் கமெண்ட்டுக்காக இந்த இடம் வாடகைக்கு விடப் பட்டுள்ளது)
    //

    பொதுவா தலைவலிக்கு பாம். இங்க பாமுக்கு தலைவலியா?

    பதிலளிநீக்கு
  4. // பின்னாடி நாந்தான் மீனுன்னு என் கூட யாராச்சும் சண்ட போடாம இருந்தா சரி. //
    வசந்த் - 'எப்பவுமே நாந்தான் மீனு'ன்னு சண்டை போடுபவர் ஒருவரை எனக்குத் தெரியும். - ஆனா நீங்க சொல்லியிருப்பவர் - இந்திய நேரப்படி இன்னும் இரண்டு அல்லது மூன்று மணி நேரத்தில் - இங்கே சண்டை போட வருவார் என்று நினைக்கிறேன்.

    பதிலளிநீக்கு
  5. //பிரபல ரௌடி "பாம்" கணேசன் கைது!//

    தண்டோரா போட்டு சொல்லாம 'பாம், பாம்'னு ஹாரன்(horn) அடிச்சு சொல்லுரான்களோ ?

    All comments are enjoyable (including mine too ?)

    பதிலளிநீக்கு
  6. //பிரபல ரௌடி "பாம்" கணேசன் கைது!//

    "பாம்" வைத்ததால் ரௌடி ஆனாரா ?

    ரௌடி ஆனதால் "பாம்" வைத்தாரா ?

    என்ன இருந்து என்ன புண்ணியம் இரண்டுக்குமே போலீஸ் "வேட்டு" வைத்து விட்டது !

    பதிலளிநீக்கு
  7. கொசு கடிப்பதால் மலேரியா வராது என்று போடவில்லை.

    கொசு கடித்தால் மலேரியா வராது என்று தான் போட்டிருக்கிறார்கள்.

    அதாவது மலேரியா வராமலிருக்க கொசு உங்களைக் கடிக்க வேண்டும்!

    மரபணு மாற்றத்துக்கு உட்படுத்தப்பட்ட கொசுக்கள் உங்களைக் கடித்தால் உங்களுக்கு மலேரியா வராது!

    அப்போ கான்சர் வருமோ?

    பதிலளிநீக்கு
  8. மதுரையில் ஒரு அண்ணா பல்கலைக் கழகம்....

    மானாமதுரையில் தம்பி பல்கலைக்கழகம் வருமா ?

    விமானத்தைக் கடத்தினால் மரண தண்டனை..

    ஏர் இந்தியா / இந்தியன் ஏர்லைன்ஸ் விமானங்களுக்கு பிரச்னை இல்லை - கிழவிகள் ஏர் ஹோஸ்டஸ் என்பதால் ஒரு பய கடத்தமாட்டான் !

    கொசு கடித்தால் மலேரியா வராது..விஞ்ஞானிகள் புதுத் தகவல்..

    நாம கொசுவை கடித்தால் என்று தப்பாக நினைத்து விட்டார் போலிருக்கு !!

    மத்திய அரசு ஊழியர்களுக்கு டீ ஏ 8% அதிகரிப்பு

    சம்பளம் பாதி கிம்பளம் பாதி வாங்காரண்டி !

    தாசில்தார் மகன் திருமணம்..தாசில்தார் அலுவல்கள் காலி...

    சரியா விசாரிங்க அன்றைய மொய் (லஞ்சம்) போனதே என்று தர்ணா போயிருப்பாங்க !

    பிரபல ரௌடி "பாம்" கணேசன் கைது!

    சிறையில் போய் மனித மொச்சை "பாம்" கொஞ்சம் அனுபவிக்கட்டும் !

    பிள்ளைகள் முன்னிலையில் தாய்க்கு தாலி கட்டினார் தந்தை.

    அதே நினைவில் "முதலிரவு" அவர்கள் முன்னாடி பண்ணாமல் இருந்தால் சரிதான் !

    கேரளாவில் மீன் மழை...

    சாரி நான் ஐயர் பையன் !!

    விஷம் குடித்த பத்தாம் வகுப்பு மாணவியின் காதலன் தற்கொலை முயற்சி...

    தெய்விக காதல்

    ஹைடன் அதிரடி...சென்னை வெற்றி...

    சாய்ஸ் question !

    காவலர் பிறந்தநாள்..வாழ்த்துடன் அரை நாள் ஓய்வு...

    சாய்ஸ் question !

    பதிலளிநீக்கு
  9. மரபணு மாற்றும் பொழுது அப்படியே கொசுவின் வண்ணத்தையும் மாற்றி விட்டார்களானால் நல்ல கொசு கடிக்குமிடமாகப் பார்த்துக் குடியேறலாம் இல்லையா?

    ஒரு நாளில் உங்களை மூன்று கொசு கடித்தால் அவற்றில் ஒன்று மலேரியா தடுப்புக் கொசுவாக இருக்க வாய்ப்பு உள்ளது!

    பதிலளிநீக்கு
  10. ""எங்கள் ப்ளாகில் பாராட்டு மழை ""


    எங்கயாவது மழை பெஞ்சா சரி

    பதிலளிநீக்கு
  11. //ஹைடன் அதிரடி...சென்னை வெற்றி...

    சாய்ஸ் question !//

    சாய்,
    நீங்கள் ஒன்றும் கேட்ட மாதிரி தெரியவில்லையே?

    பதிலளிநீக்கு
  12. எப்படி இப்படியெல்லாம் யோசிக்கிறீங்க !

    பதிலளிநீக்கு
  13. // Anonymous said...ஹைடன் அதிரடி...சென்னை வெற்றி...சாய்ஸ் question !// சாய், நீங்கள் ஒன்றும் கேட்ட மாதிரி தெரியவில்லையே? //

    I left it as Choice Question is what I meant !!!

    ஒரு மனுஷன் காலங்கார்த்தலே எவ்வளவு யோசிக்கறது !!

    பதிலளிநீக்கு
  14. இனிமேயாவது கணேசன் "காம்" ஆகா இருப்பாரா ?

    பதிலளிநீக்கு
  15. கணேசன் கைதா? அச்சச்சோ, மைலயே கை வச்சுட்டாங்களே?!

    பதிலளிநீக்கு
  16. >>கொசு கடித்தால் மலேரியா வராது

    அதாவது அடுத்தவரைக் கடித்தால் நமக்கு வராது.

    பதிலளிநீக்கு
  17. எனக்கு ஒரு "பாம்" கணேஷ் தெரியும்.

    பத்து பேரு இருக்கும்போது கரெக்டா பாம் வப்பாரு.

    அந்த கணேஷோன்னு நினைச்சுட்டேன்.

    உங்கள் கமெண்ட்ஸ் எல்லாம் நல்லாருக்கு ஸ்ரீ.

    பதிலளிநீக்கு
  18. வருக வசந்த்..ஊர் கிளம்பியாச்சா? மீனை வம்பிழுத்துகிட்டே இருக்கீங்க..ஏன்?

    அவ்வளவு பயங்கரமாவா இருக்கு சைவகொத்துபரோட்டா?

    அநன்யா மஹாதேவன், திட்டலையே...என்ன சொல்றீங்க...

    நல்ல முயற்சி பெயர்சொல்லவிருப்பமில்லை.

    நன்றி வானம்பாடிகள்.

    நன்றி மாதவன்..உங்க பின்னூட்டமும் சூ...ப்பர்.

    போலீஸ் வேட்டுதான் பெரிசு சாய்ராம் கோபாலன்.

    ரவி...பயமுறுத்தறீங்களே ..

    சாய்ராம்..மறுபடி வந்து அசத்திட்டீங்க...உங்க கமெண்ட்ஸ் நல்லா இருக்கு.

    பதிலளிநீக்கு
  19. அனானி, நீங்க சொல்றதைப் பார்த்தா ஒவ்வொருவரும் வீட்டுல மூணு கொசு வளர்த்து கடி வாங்கறது நல்லதுன்னு சொல்வீங்க போல...

    நன்றி பத்மா, பாராட்டுமழைல எங்களோடு சேர்ந்து நனைய அடிக்கடி வாருங்கள்..

    எப்படியோ யோசிச்சோம் பனித்துளி...அது சரி, எங்க உங்க வாக்குறுதி 'மீண்டும் வருவான் பனித்துளி..'யைக் காணோம்..

    சாய்..சாய்ஸ்ல விடற உரிமை உங்களுக்கு உண்டு.

    நன்றி விஜய்...

    நன்றி தேனம்மை.

    மைல கைவச்சுட்டாங்களா ?... அப்படின்னா..கொசு அடுத்தவரைக் கடித்தால்...ஆஹா அப்பாதுரை சார்... ஜோர்.

    நன்றி வேல்ஸ்

    பதிலளிநீக்கு
  20. பாம் வெடிச்ச கணேசன்
    இனி பாம் தடவ போறார்

    பதிலளிநீக்கு
  21. "அடடா! பாம் வெக்கறவரே புஸ் ஆயிட்டாரே!"

    என்ன வசந்த், ரொம்ப நாளா ஆளையே காணோம்! இவ்வளவு நாள் ஜூட் விட்டுட்டு வந்ததும் வராததுமா மீனை வம்புக்கு இழுக்கறீங்க!

    பதிலளிநீக்கு
  22. என்னடா கொடுமை இது வரலைன்னா காணமப்போயிட்டதா அர்த்தமா?

    பதிலளிநீக்கு
  23. பிள்ளைகள் முன்னிலையில் தாய்க்கு தாலி கட்டினார் தந்தை.
    முன்னிலையில் கட்டியவர்...முன்பே கட்டியிருக்கலாம்.

    ...ha,ha,ha,ha....

    good ones!

    பதிலளிநீக்கு
  24. இந்த கருத்து ஆசிரியரால் அகற்றப்பட்டது.

    பதிலளிநீக்கு
  25. //மத்திய அரசு ஊழியர்களுக்கு டீ ஏ 8% அதிகரிப்பு
    சம்பளம் பாதி கிம்பளம் பாதி வாங்காரண்டி !//

    I object your honour.
    நான் சம்பளம் முக்காலும் (மீதி வருமான வரியா பிடிச்சுக்கறாங்க), கிம்பளம் வாங்காமலும் உள்ள, மத்திய அரசுப் பணியாளன்

    --- என்னதான் சொன்னாலும், 'உங்கள்' (மற்றும் 'எங்கள்') கமெண்டுகள் அனைத்தும் சூப்பர். (@ சாய் ராம் கோபாலன்)

    பதிலளிநீக்கு
  26. ///கொசு கடித்தால் மலேரியா வராது..விஞ்ஞானிகள் புதுத் தகவல்///
    மற்ற நோயெல்லாம் வரும் போல

    பதிலளிநீக்கு
  27. //Anonymous said... சாய்ஸ் question ! சாய், நீங்கள் ஒன்றும் கேட்ட மாதிரி தெரியவில்லையே? //

    Did not even understand this earlier.

    For maramandai like me, "சாய்"ஸ் would have made it easier !!

    பதிலளிநீக்கு
  28. //Madhavan said...நான் சம்பளம் முக்காலும் (மீதி வருமான வரியா பிடிச்சுக்கறாங்க), கிம்பளம் வாங்காமலும் உள்ள, மத்திய அரசுப் பணியாளன்//

    Maddy, I am hoping that younger generation like you bring some change to our inefficient & corrupt central / state government employee base.

    I was just talking about it yesterday after one more visit to NY Indian Consulate General office (this time for kids passport renewal !)

    I was sent back as I did not have address proof (they want one more xerox). The clever lady there said she can't use the Passport Copy of mine. Incidentally it has my US address that they issued last week ?? Just for that I got to go back again and stand in the queue from 7 AM (fortunately the weather god is getting better for us now)

    They surely get on to your nerve.

    பதிலளிநீக்கு
  29. பெயர்க்காரணம் கேட்காதீர்கள், எழுபதுகளின் முடிவில் சைதை/தி.நகர் வட்டாரத்தில் காந்தி என்று ஒரு ரவுடி இருந்தான்(ர்). சமணக்கல்லூரியில் படித்தவர்களுக்கு இவரைத் தெரிந்திருக்கும். சமணக்கல்லூரி மாணவர் சங்க தேர்தல்களின் போது ஹாஸ்டல் பக்கம் கஞ்சா கிடைக்கும். 'மை விக்கிறாண்டா' 'மை ஆத்தலாம் வரியா?' என்பார்கள். காந்தி இதில் விற்பன்னர்! (pun)

    பதிலளிநீக்கு
  30. //பிஞ்சுக் காதல்...நஞ்சுக் காதல்.//

    என்னத்தச் சொல்ல..

    பதிலளிநீக்கு
  31. என்ன அப்படி பார்க்குறீங்க ? புதியதாக பதிவு எதுவும் போட்டு இருக்கீங்களானு பார்க்கவந்தேன் .

    மீண்டும் வருவான் பனித்துளி !

    பதிலளிநீக்கு
  32. நன்றி சிவசங்கர்.

    நன்றி மீனாக்ஷி.

    நன்றி சித்ரா.

    மதிய அரசுப் பணியாளன்..? நன்றி மாதவன்.

    உண்மைதான் நீச்சல்காரன். எல்லா நோயும் வரும்.!

    மறுபடியும் நன்றி,
    அப்பாதுரை, சாய்ராம் ...

    நன்றி ஹுசைனம்மா.

    நன்றி ரோமியோ. அவ்வப்போது எழுதுங்கள்..நீண்ட இடைவெளிவிடாமல்.

    ஆஹா,,இதை இதைத்தான் எதிர்பார்த்தோம் பனித்துளி..

    பதிலளிநீக்கு

இந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க!