புதன், 31 மார்ச், 2010

ஐ.பி.எல்லும் ஹர்ஷா போக்ளேயும்...

எப்போதோ உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி சரியாக விளையாடாத போது வீரர்களை உருவாக்குகிறேன் என்று கபில் ஐ.சி.எல் என்று ஒன்று தொடங்கப் போக அது செல்லாது, அதில் விளையாடுபவர்கள் இந்திய அணியில் விளையாட முடியாது என்றெல்லாம் மிரட்டிய இந்திய கிரிக்கெட் போர்ட் பின்னர் தானே அந்தச் செயலைச் செய்வதாய்க் கூறி ஐ.பி.எல் தொடங்கியது. வீரர்களை ஆடு மாடு வாங்குவது போல ஒப்பந்தத்தில் கையெழுத்து வாங்கி, கண்ட மேனிக்கு காசு கொட்டி ஏலத்தில் எடுக்கத் தொடங்கியது. முதலில் எதிர்த்த சில வீரர்கள் கூட இதில் கொட்டிய பணத்தைக் கண்டு வாய் மூட, தத்தமது நாட்டு அணியிலிருந்து ஓய்வு அறிவித்து நிறைய வீரர்கள் இதில் சேர்ந்தார்கள்.

வீரர்கள் இதன் மூலம் ஏதாவது கற்றுக் கொண்டார்கள் என்றால் அது எப்படி சுருக்கு வழியில் பணம் சேர்க்கலாம் என்பதாகத்தான் இருக்கும்.

எந்த அணியாவது வெற்றி பெறுகிறது என்றால் அந்த வெற்றியின் பங்குக்கு இந்திய வீரர்களை விட வெளி நாட்டு வீரர்கள் பங்குதான் அதிகம் இருக்கிறது..!

ஷாருக் கான் தனது இன்கம் டேக்ஸ் கணக்குக்கு நஷ்டம் காட்டதான் கொல்கத்தா அணியை வாங்கியிருக்கிறாரோ என்று தோன்றும் அளவே இருக்கிறது அந்த அணியின் ஆட்டம்.

ப்ரீத்தி ஜிந்தாவுக்கு, ஆட்டத்தில் யுவராஜின் லொள்ளை சமாளிக்கவே நேரம் போதவில்லை. தனது அணி ஆடும் லட்சணத்தைப் பார்த்து ஷில்பா கண்ணீர் விடாத குறை. இதெல்லாமும் நடிப்புதானோ..?

இதில் இன்னும் இரண்டு டீம் வேறு அடுத்த வருடத்துக்கு புதிய அறிமுகம்..

நமது பதிவுகளுக்கு பின்னூட்டம் போடுவது போல ஆட்டக் காரர்கள் பந்தை அடித்தவுடன் திரையில் அதற்கான கமெண்ட் வருகிறது. Sweet, wow, என்றெல்லாம். சமீபத்தில் பார்த்த ஆட்டத்தில் யாரோ ஒரு பேட்ஸ்மேன் பந்தை அடித்த வுடன் திரையில் வந்த கமெண்ட் "Agriculture"....!

ரஞ்சி டிராஃபி போன்ற உள்ளூர் பந்தயங்களில் சச்சினும் கங்குலியும் திராவிடும் எதிரெதிர் ஆட்டங்களில் விளையாடுவதைப் பார்த்திருக்கிறோம். ஹெய்டன், ப்ரெட் லீ, ஷேன் பான்ட் என்று வெளி நாட்டு வீரர்களை வைத்துக் கொண்டு அதை எப்படி சென்னை டீம், பெங்களூர் டீம் என்றெல்லாம் சொல்ல முடியும்? சச்சினோ கங்குலியோ, அவுட் ஆவதை ஆவலுடன் எதிர்பார்க்கவும் முடியவில்லை.

இரண்டு டீம் விளையாடினால் கில்லியின் ஆட்டத்தை ரசிக்கும் அதே நேரம் பந்து போடும் ஷேன் வார்னேயின் ஆட்டத்தையும் ரசிக்க முடிகிறது. பஃபே உணவு போல எல்லாவற்றையும் தனித் தனியாக ரசிக்க முடிகிறதே தவிர, ஒரு முழுமை கிடைப்பதில்லை. ஆனால் நம் மக்கள் அங்கு கூடி ஆதரவு கொடுக்கத் தவறுவது இல்லை.

சாதாரணமாகவே நம் டீவிக் காரர்கள் விளம்பரம் காட்டும் வேகத்தை சொல்ல முடியாது. கடைசி பந்து போட்டு அது நான்கானதா, ஆறு ஆனதா அவுட் ஆனதா என்று பார்க்கும் முன்னரே விளம்பரம் வந்து விடும். இதில் விளம்பரம் அடிக்கும் லூட்டி தாங்க முடியவில்லை. ஒரு பந்துக்கும் அடுத்த பந்துக்கும் இடையிலேயே மைதானத்தின் பெரிய திரையிலேயே சிறு சிறு விளம்பரங்கள்..அந்த டைம் அவுட் இந்த டைம் அவுட், என்று காசு பார்க்க ஆயிரம் வழிகள். விளம்பர யுகம். டிவி சேனல்கள் முதல் விளையாட்டுகள் வரை. புத்தியுள்ளவன் பிழைக்கிறான்.

நாட்டுப் பற்றோ ஆட்டப் பற்றோ, அரசியல் பற்றோ பாகிஸ்தான் ஆட்டக் காரர்களை காணோம் எதிலும். நடுவில் தீம் மியூசிக் போல ஒன்று போடுகிறார்கள்...உடனே மக்கள் அனைவரும் ஆர்ப்பரிக்கிறார்கள். யார் எப்படி சொல்லித் தந்ததோ? எப்போது ஆரம்பித்ததோ..?

ஆட்ட அரங்குக்குள் செல் கொண்டு போகக் கூடாது, தண்ணீர் பாட்டில் கொண்டு போகக் கூடாது..என்று ஆயிரம் கண்டிஷன்கள்...ஆனாலும் மக்கள் கூட்டத்துக்குக் குறைவில்லை. இதோடு இரண்டு ஐ.பி.எல் தொடர்கள் முடிந்து விட்டது என்று ஞாபகம். இந்திய அணி இதனால் என்ன புதியதாய் சாதித்தது என்று ஒன்றும் சொல்ல முடியவில்லை.

அரை குறை ஆடை அணிந்த கவர்ச்சிப் பெண்கள் (சியர் லீடர்ஸ் என்பதற்கு தமிழில் என்ன கூறுவது? உற்சாகத் தலைவிகள்?) எப்போதும் மேடை மேல் ஆடிக் கொண்டிருப்பார்கள் என்று நினைத்திருந்தேன். நான்கோ ஆறோ அடிக்கப் பட்டதுமோ அல்லது யாராவது அவுட் ஆனதுமோ அவசர அவசரமாக பெண்கள் மேடை மேல் ஏறுகிறார்கள் தங்கள் ஆடும்(?) திறமையைக் காட்ட.. அந்த நடனத்தை வடிவமைக்க பெரிய திறமை ஏதும் தேவை இருக்காது என்று நம்புகிறேன்.

ஐ.பி.எல்லை கவனிக்கும் அவசியம் ஏன் வந்தது என்பது தனி சுவாரஸ்யம். பரிச்சயமான குரல் ஒன்று காதில் விழுந்தது. நிமிர்ந்து திரையைப் பார்த்தால் கண்ணில் பட்ட உருவம் பார்த்த மாதிரியும் இருந்தது. கீழே உள்ள படத்தைப் பாருங்கள்.
                                                                      

...ஏதோ வித்யாசம்...ஹர்ஷா போக்ளே...அட! ஆமாம் முன்னால் முடியுடன் இருந்தார்..காலப் போக்கில் முடி கொட்டிப் போய் வழுக்கையுடன் இருக்கிறார் என்றால் இயற்கை...! இங்கு தலைகீழ். (கீழே காணப்படும் தலை அப்போ இருந்தது.)
                                                          
முன்பு அவரைப் பார்த்தபோது முன் வழுக்கையுடன் காட்சி அளித்த அவர் இப்போது நெற்றியில் புரளும் முடியுடன் காட்சி அளித்தது கண்டு ஆச்சர்யப் பட்டுப் பார்த்ததால் எழுந்த சிந்தனைதான் இது..!


சரி, மணி எட்டு ஆயிடுச்சு. இன்னைக்கு யாருக்கும் யாருக்கும் மாட்சு? டீ வி யை ஆன் பண்ணு !  

16 கருத்துகள்:

  1. அளவுக்கு மிஞ்சினா எல்லாமே விஷம் தான். கிரிக்கெட் மட்டும் விதிவிலக்காகுமா.

    பதிலளிநீக்கு
  2. ஆமா சைடு பாரில் உள்ள, "நாளை சொல்லப்போவது"
    மெய்யா இல்லை லொள்ளா........:))

    பதிலளிநீக்கு
  3. சைவகொத்துப்பரோட்டா - மெய்யாலும் தாங்க சொல்லியிருக்கோம்.

    பதிலளிநீக்கு
  4. எனக்கு கிரிக்கெட் அவ்வளவு பிடிக்காது ஆனால் ராம் அருமையா எழுதி இருக்கீங்க நன்றி

    பதிலளிநீக்கு
  5. இந்த இரு ஆண்டுகளில் இந்திய அணி நம்பர் ஒன் இடத்தைப் பிடித்திருக்கிறது..,

    பதிலளிநீக்கு
  6. IPL மேட்ச் பற்றிய தங்களின் லொள்ளு பார்வை, நல்லா இருக்குங்க. :-)

    பதிலளிநீக்கு
  7. விக் வச்சுருப்பார் ஹர்ஷா போக்ளே

    பதிலளிநீக்கு
  8. அவரு கிட்ட பெர்மிஷன் வாங்கிட்டீங்களா?

    பதிலளிநீக்கு
  9. மண்டை வீங்கி மயில்சாமி ஹர்ஷா....

    பதிலளிநீக்கு
  10. ஐ.பி.எல்-லை திட்டித்தீர்த்துக்கொண்டே பார்க்கிறவர்களில் நீங்களும் ஒருவரா?

    பதிலளிநீக்கு
  11. தமிழ் உதயம் - ஆமாம்; ஆனா அளவு எது என்பதுதான் சந்தேகம்.
    தேனம்மை நன்றி - பிடிக்காவிட்டாலும் பின்னூட்டமிட்டதற்கு!
    சுரேஷ் சார் - இரண்டு ஆண்டுகளில் 'இந்திய' அணியா? எங்கே?
    நன்றி சித்ரா.
    ஜெய்சங்கர் - நாங்க அது ஏதோ ஸ்பெஷல் ட்ரான்ஸ்பிளாண்டேஷன் என்று நினைக்கிறோம்.
    அனானி, யாரு கிட்ட? ஓ அவரு கிட்டயா ? பெர்மிஷன் எல்லாம் கேட்டுகிட்டு இருந்தா வேலைக்கு ஆகாது.
    ரோமியோ - ஹா ஹா !!
    மன்னார்குடி - அவன் கெடக்கான் குடிகாரன் எனக்கு ரெண்டு மொந்தை போடு என்பது போல இருக்கிறதோ?!!

    பதிலளிநீக்கு
  12. எது எப்படியோ எப்பதாங்க இந்தியா உலக கோப்பையை வெல்லும் சீக்கரம் யாராச்சும் சொல்லுங்க ?

    பதிலளிநீக்கு
  13. இந்த கர்மத்தை இன்னுமா பார்க்கறீங்க ? ஓஹோ ஓஹோ அந்த cheer லீடர்ஸ்காகவா ? புரிஞ்சிது புரிஞ்சிது

    பதிலளிநீக்கு
  14. நல்ல பதிவு. அப்படியே நம்ம வலை பக்கங்களுக்கும் வந்து பாருங்களேன்

    http://moo-vie.blogspot.com - Movies in all Languages

    http://scripthere.blogspot.com -Java Scripts for blog, Website

    http://adults-page.blogspot.com - Adults pages with celebrities(no porno)

    http://tech-nologi.blogspot.com - Latest technology news gathered from other websites

    பதிலளிநீக்கு

இந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க!