Friday, April 16, 2010

சின்னஞ்சிறு கதை

உள்ளே போகும்போதே ஒரு கோயிலுக்குள் நுழைந்த உணர்வு ஏற்பட்டது.  தம்புராவின் ஒலி சுஸ்வரமாக ஒலித்துக் கொண்டே இருந்தது. மிக ஒழுங்காக அடுக்கி வைக்கப் பட்ட சங்கீதப் புத்தகங்கள். சி. டி க்கள்.  சுவரில் மும்மூர்த்தியின் பிரபலமான ஓவியம்.  பாட்டு வாத்தியார் மனைவி புன்னகையுடன் வரவேற்றார். "அவர் குளித்துக் கொண்டிருக்கிறார். கொஞ்சம் வெயிட் பண்ணுங்க" என்று இனிமையாக சொல்லிவிட்டு உள்ளே போனார்.  அறையை ஒரு தடவை சுற்றி வந்தேன்.  மனம் ஆனந்தத்தால் விம்மியது. கண்ணீர் வந்துவிடும்போல் இருந்தது.  மாமி கையில் காப்பி டம்ளர் டபராவுடன் வந்து வினயமாக மேஜையில் வைத்து விட்டு " எடுத்துக்குங்கோ" என்று மீண்டும் மதுரக் குரலில் சொன்னார்.  மீண்டும் மும்மூர்த்தி படத்தைப் பார்த்துக் கொண்டு நின்றவாறு சொன்னேன். " இந்த வீட்டில் இருக்க அதிருஷ்டம் செய்திருக்கணும்.  சாக்ஷாத் சரஸ்வதி வாசம் செய்கிறாள் இங்கே ". இதை அவர் முகம் பார்த்து நேராகச் சொல்ல என்னை என்ன தடுக்கிறது? 

மாமி பதிலே சொல்ல வில்லை.

" நீங்க அவ கிட்டே பேசறதானா மூஞ்சியைப் பாத்து பேசணும்.  அவளுக்கு சுத்தமா காது ரெண்டும் கேக்காது "  என்று சொன்னவாறு பாட்டு வாத்தியார் பிரசன்னமானார்.  

18 comments:

meenakshi said...

அவர்கள் தாம்பத்யமும் ஒரு சங்கீதம் தான்!

Chitra said...

எதிர்பாராத முடிவு.....!

சைவகொத்துப்பரோட்டா said...

பினிஷிங் டச் நல்லா இருக்கு.

padma said...

இப்படித்தான் ஆகிறது பல விஷயங்கள்

புலவன் புலிகேசி said...

சூப்பர் தல...

LK said...

அருமை . முடிவு எதிர்பாரா திருப்பம்

வானம்பாடிகள் said...

aahaa

அநன்யா மஹாதேவன் said...

Irony!!!

ஹேமா said...

ம்ம்ம்..என்ன சொல்ல !

மன்னார்குடி said...

nice.

சாய்ராம் கோபாலன் said...

//" நீங்க அவ கிட்டே பேசறதானா மூஞ்சியைப் பாத்து பேசணும். அவளுக்கு சுத்தமா காது ரெண்டும் கேக்காது " என்று சொன்னவாறு பாட்டு வாத்தியார் பிரசன்னமானார்//

பெண்டாட்டிக்கு காதைவிட வாயை குறைத்திருந்தால் நன்றாக இருக்கும் என்று நினைக்கும் கணவர்கள் தான் ஜாஸ்தி !! ஒரு வேளை மாமா பாடும் சங்கதியை கேட்டு மாமிக்கு காது போய்விட்டதோ என்னவோ ? பாவம்.

கச்சேரியில் ஒருவர் பாடும் போது "ஒன்ஸ் மோர் , ஒன்ஸ் மோர்" என்று பாடகரை பாட சொன்னார்களாம். அவரும் ரசிகர்கள் கேட்க்கிறார்கள் என்று ஆர்வமாய் பாடினாராம். கடைசியில் முதல் வரிசையில் இருந்த ஒருவர் - எவ்வளவு சான்ஸ் கொடுத்தாலும் நீங்கள் சரியாய் பாடபோவதில்லை, போய் தொலையும் என்றாராம் !

தனக்கு காது கேட்கவில்லை என்று என் சித்தி - நல்ல நாளிலேயே உரக்க பேசும் அவர் - நமக்கு காது கேட்கவில்லையோ என்று "ஓவென்று" அலறுவார் !!

போன முறை சிகாகோ வந்த என் சித்தப்பா எங்கள் வீட்டுக்கு (நியூ ஜெர்சி) வந்திருந்தார். அவர், "அடியே - உனக்கு காது கேட்கலை - எங்களுக்கு நீ கத்தியே போய்டும் என்பார்" !!

geetha santhanam said...

ஹைகூ கவிதைகள் போல் முடிவில் ஒரு twist-டோடு நீங்கள் எழுதியுள்ள கதைகளை high class கதைகள் எனலாம். அருமை.--கீதா

geetha santhanam said...

சித்திரை மாதம் என்ன 'சின்னஞ்சிறிய' special-ஆ? பதிவுகளெல்லாம் சின்னஞ்சிறிய கதை, சின்னதாய் கேள்விகள் என்று இருக்கின்றனவே!!---கீதா

எங்கள் said...

பாராட்டிய மீனாக்ஷி, சித்ரா, சைவகொத்துப்பரோட்டா, பத்மா, புலவன் புலிகேசி, எல் கே, வானம்பாடிகள். அனன்யா, ஹேமா, மன்னார்குடி, கீதா, மற்றும் அனுபவத்தைப் பகிர்ந்துகொண்ட சாய் எல்லோருக்கும் எங்கள் நன்றி. கீதா மேடம் சின்னஞ்சிறு கதைக்கு பின்னூட்டங்களும் பெரும்பாலும் சின்னஞ்சிறியவையாக இருக்கின்றனவே, பார்த்தீர்களா?

சாய்ராம் கோபாலன் said...

//பின்னூட்டங்களும் பெரும்பாலும் சின்னஞ்சிறியவையாக இருக்கின்றனவே, பார்த்தீர்களா?//

போடறவங்க மனசு ரொம்ப பெரியது - அதை பாருங்க ?

என்னுடைய பதில் - பெரியதாக இருந்ததாக நினைவு

சாய்ராம் கோபாலன் said...

//மற்றும் அனுபவத்தைப் பகிர்ந்துகொண்ட சாய் எல்லோருக்கும் எங்கள் நன்றி.//

ஐயோ பாவம் என் மனைவி. அவளை எதற்கு இழுக்கின்றீர்கள். இப்படி எல்லாம் எழுதி கூடி இருக்கற எங்க குடும்பத்திலே கும்மி ஆடிதாடீங்க ??

நான் நகைச்சுவைக்காக எழுதியது. என்னுடைய ஒவ்வொரு பதிவும் அந்த நினைப்பில் தான் எழுதுகின்றேன்.

"ஐயோ வடை போச்சே" மாதிரி - ஐயோ பேரு போச்சே ஆகிடிச்சே ?

அப்பாவி தங்கமணி said...

சூப்பர் ட்விஸ்ட்...உண்மை காதலுக்கு புலன்கள் ஒரு பொருடல்லன்னு கவிதையா சொல்லி இருக்கீங்க

Vijis Kitchen said...

முதல் வருகையா வந்தேன், பார்த்தேன், படித்தேன். ரசித்தேன், சிரித்தேன். எழுதினேன். நல்ல முடிவு. நைஸ். நிங்களும் இங்கு வாங்கோ.ஐ மீன் நிங்களும் இவிடே வரு.

Post a Comment

இந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க!