Monday, May 24, 2010

படைப்பாற்றல் பயிற்சி: கற்பனை வளம்.

இந்த வார படைப்பாற்றல் பயிற்சி, கொஞ்சம் வித்தியாசமானது. இது படைப்பாளியின் கற்பனை வளத்தை வளர்க்கக் கூடியது.

நாங்க ஒரு வடிவம் மட்டும் தந்திருக்கிறோம். இந்த வடிவத்தை ஒரு காகிதத்திலோ அல்லது எம் எஸ் பெயிண்ட் கோப்பாகவோ எடுத்துக் கொள்ளுங்கள்.  இதனோடு உங்கள் கற்பனைக்  கீறல்களைச் சேர்த்து (நன்றி : ஹேமா) யாவரும் வியக்கும் வண்ணம் ஓர்  ஓவியமாக்கி, வர்ணம் பூசி, பட்டை தீட்டி எங்களுக்கு அனுப்புங்கள். 

வருகின்ற எல்லா படைப்புகளையும் வெளியிடுகிறோம். பார்க்கின்ற வாசகர்கள் பாராட்டு மழை பொழிவார்கள்.  (என்று நம்புகிறோம்!)


பதிவிட நாங்கள் ரெடி, பங்கேற்க நீங்க ரெடியா?


இதுதான் அந்த வடிவம்.  (ஒரு வால்பேரி உங்களுக்காக சிரசாசனம் செய்கிறது.) 
இதோ சில உதாரணங்கள். (இது போன்று அல்லது இதை விட சிறப்பாக வரைய உங்களால் முடியும்.) (இவை இரண்டும் எங்கள் கைவண்ணம். வாசகர்கள் கற்பனைகள் தனியே வெளியாகும்.)

21 comments:

meenakshi sps. said...

எனக்கு தோணினத வரைஞ்சு தைரியமா அனுப்பி இருக்கேன். அந்த தைரியம் நான் வரைஞ்சத பாக்க போறவங்களுக்கு இருக்கணுமேன்னு ஒரே கவலையா இருக்கு. ம்ம்ம்ம்...

சும்மா கிடைச்ச பட்டத்தை விடலாமா! அதான் பெயருக்கு பின்னாடி ஒரு தடவை போட்டுண்டாச்சு.

தமிழ் உதயம் said...

தொடரட்டும் உங்கள் படைப்பாற்றல் பயிற்சி. ஆனா இதுக்கு ஏதாவது பாட்டுன்னா கொஞ்சம் சிரமம் தான்.

விஜய் said...

ஒரிஜினல் SPS மீனாக்ஷிக்கு வாழ்த்துக்கள்

நானும் எதாவது வருதான்னு ட்ரை பண்றேன்

விஜய்

Madhavan said...

I appreciate the initiative taken by you on developing different skills, subsided inside the individual.

I will try it out leisurely.

அநன்யா மஹாதேவன் said...

நம்ப முடியலை! அருமையான படைப்பாற்றல் பயிற்சி! மீனாக்ஷி அவர்கள் வரைந்த ரெண்டும் சூப்பர். எனக்கும் முதன் முதல்ல பார்த்தப்போ பல்பு தான் தோணிச்சு! ஆனா மாடு ரொம்ப அழகா இருக்கு!

அநன்யா மஹாதேவன் said...

நானும் கார்த்தால இருந்து வித விதமா வரைஞ்சு பார்த்துண்டு இருக்கேன்! தலை சுத்தாம இருந்தா மட்டும் போடுங்க! அப்புறம் அனானிமஸ் ஐடியில இருந்து வந்து தான் கமெண்ட வேண்டியதா போயிடும்!

ராமலக்ஷ்மி said...

கழுத்தில் மணியாட கோமாதா அழகோ அழகு. சிரசாசன பேரிக்காயைப் பார்த்ததும் பளிச்னு என ஐடியா பல்பு மிளிர்ந்து விட்டது மீனாக்ஷி sps அவர்களுக்கு:)! நல்ல படங்கள்.

அநன்யா, சேம் ப்ளட். நாய்க்குட்டி, ஐஸ்க்ரீம் கப் ம்ம்ம் ஒண்ணும் சரியா வரலை:(!

அடுத்து அசத்தப் போவது யாருன்னு வெயிட்டிங்:)!

எங்கள் said...

முக்கிய அறி(வி)ப்பு !
மீனாக்ஷி அவர்கள் வரைந்து அனுப்பிய படம் இன்னும் வெளியாகவில்லை. இங்கே உள்ள மாடும் பல்பும் எங்கள் கைவண்ணம். ஆனா, மீனாக்ஷி அவர்கள் வரைந்து அனுப்பியுள்ளது இவைகளைவிட சூப்பர் கற்பனை.

ராமலக்ஷ்மி said...

@ எங்கள் ப்ளாக்,
ஓகே:)! உங்கள் கைவண்ணத்துக்கு வாழ்த்துக்கள்.

ஹேமா said...

நானும் படம் கீறப்போறேன் !
என்ன நேரம்தான்...!

எங்களை ஊக்கப்படுத்தும்
"எங்கள்" குழுவுக்கு நன்றி

meenakshi said...

ஆஹா! நான் வரையாத படத்துக்கு எனக்கு இவ்வளவு பாராட்டா! எங்கள் சார், சீக்கிரமா நான் வரைந்த படத்தை போட்டுடுங்க. இல்லைன்னா, நான் இந்த ரெண்டு படத்திலேயும் என் கோழி கிறுக்கல் கையெழுத்தை போட்டு, இந்த பாராட்டுக்களை அப்படியே சிரம் தாழ்த்தி அபேஸ் பண்ணிடுவேன். ;)
சரி, உண்மையிலேயே நான் வரைந்த படத்துக்கு இப்படி பாராட்டு வருமா?? ம்ம்ம்ம்.... பாக்கலாம்!

நறுமுகை said...

நல்லதொரு முயற்சி.

அன்புடன்,
www.narumugai.com
செய்திகளை உடனுக்குடன் அறிய, கருத்துகளை விவாதிக்க மற்றும் உங்கள் வலைபூவை இணைக்க...நமக்கான ஓரிடம் - நறுமுகை.காம்

அஹமது இர்ஷாத் said...

நல்ல போட்டி அசத்துங்க..நமக்கு ஒன்லி பார்வையாளர் அந்தஸ்து? மட்டுமே பிடிக்கும்...(எஸ்கேப்)

சாய்ராம் கோபாலன் said...

//அஹமது இர்ஷாத் said...

நல்ல போட்டி அசத்துங்க..நமக்கு ஒன்லி பார்வையாளர் அந்தஸ்து? மட்டுமே பிடிக்கும்...(எஸ்கேப்) //

You are not alone. Join the club.

Engal Blog:

I am very disappointed that my brilliant "Roja" picture has been removed so quickly.

அது என் தயாரிப்பு இல்லை - அவரின் பெற்றோரின் கூட்டு தயாரிப்பு என்றாலும் - நான் சமயோசிதமாக யோசித்து அனுப்பியதை ஒரே நாளில் எடுத்ததை வன்மையாக கண்டிக்கிறேன்.

k_rangan said...

//நான் சமயோசிதமாக யோசித்து அனுப்பியதை ஒரே நாளில் எடுத்ததை வன்மையாக கண்டிக்கிறேன்.//

சாய் சார், நம்ம ஏரியாவுக்குப் போய்ப் பார்க்கவில்லையா ?

எங்கள் said...

சாய்ராம் - உங்க ரோஜா எங்கேயும் போய்விடவில்லை. engalcreations ப்ளாக் ல - மெயின் போஸ்ட் ஆயிடுச்சு.
இதோ லிங்க்:

http://engalcreations.blogspot.com/2010/05/blog-post_24.html

குரோம்பேட்டைக் குறும்பன் said...

பல்பு பசுமாடு எல்லாம் நீங்களே வரஞ்சுட்டீங்க - இனிமே நான் வரைவதற்கு ....(ஹாங் ஒன்று இருக்கு - வரைந்து அனுப்பறேன்.)
பாத்து பயந்துடாதீங்க, ஆமாம் சொல்லிபுட்டேன்!

சாய்ராம் கோபாலன் said...

// சாய்ராம் கோபாலன் said...

நான் சமயோசிதமாக யோசித்து அனுப்பியதை ஒரே நாளில் எடுத்ததை வன்மையாக கண்டிக்கிறேன்//

அது !!

நன்றி

Parthiban said...

How to post my creation?

எங்கள் said...

பார்த்திபன்
உங்கள் படைப்புகளை,
engalblog@gmail.com
என்னும் மெயில் விலாசத்திற்கு அனுப்புங்கள். நன்றி.

Parthiban said...

i have send my post for ur view.
More over how to typw in tamil?
plz help me.

Post a Comment

இந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க!