Thursday, May 27, 2010

ஒரு சின்னஞ்சிறு உண்மைக் கதை

டிரைவர் நல்ல திறமைசாலி.  குறுகிய சாலையில் சாமர்த்தியமாக வண்டியை செலுத்தினார்.  கஷ்டப் பட்டு பின் தொடர்ந்தோம் நாங்கள் மூவரும்.
இதோ  வந்து சேர்ந்து விட்டோம்.  .
வேகமாக போய் இடம் பிடித்து . . அந்த க்ஷணமே அடுத்த கிராக்கி வந்து சேர்ந்தது. .
" நல்ல வேளை!  அடிச்சு பறந்து வந்தோமோ பிழைத்தோமோ! நாம் தான் முதல். இல்லாட்டா தாத்தா முந்தியிருப்பார் " என்றார் உடன் வந்த பாலு.
கூல் ஆனதும் உள்ளே புகுந்து எரியத்   தயாராக முதல் மேடையில் கிடந்தாள் அக்கா. 
அடுத்துப  புக யாரோ  கிழவரின் உடல் காத்திருக்கிறது.
மாம்பலம் மின் சுடு காடு சுற்றுப் புறத்தை ஆராய அங்கும் இங்கும் பராக்குப் பார்க்க ஆரம்பித்தேன்.
 

18 comments:

padma said...

இது கதையல்ல உண்மை ...இப்படி பேசிய ஒரு தந்தையே நான் அறிவேன் .
காலம் கார்த்தால போங்கப்பா !மனசு கஷ்டமா இருக்கு இந்த மனிதர்களை நினைத்தால்

Chitra said...

......... ஹூம்...... நடத்துங்க..... :-)

புலவன் புலிகேசி said...

இது நிஜம் தான்...

அநன்யா மஹாதேவன் said...

வித்தியாசமான கோணத்தில் எழுதப்பட்ட உண்மை! வலிக்கிறது!

தமிழ் உதயம் said...

எல்லோரும் மனிதர்கள் தான். அவரவர் அவசரம் அவரவருக்கு.

வானம்பாடிகள் said...

ம்ம்

Anonymous said...

ஒரு உண்மையை அனைவரும் புரிந்து கொள்ள வேண்டும். இவ்வாறு சம்பவங்கள் நடக்க கரணம் நமது வாழ்க்கை முறை முற்றிலும் மாறியதுதான். யாருக்கும் நின்று யோசிக்க கூட நேரமில்லை, எஅனெனில் இது ஆசை படுத்தும் பாடு. அனைவர்க்கும் அனைத்தின் மேலும் ஆசை. ஆசை என்னும் புலி வாலை பிடித்தாயிற்று எனவே ஓடித்தான்ஆகவேண்டும்.

ஹுஸைனம்மா said...

:-(((

ஹேமா said...

அவசர உலகத்தில கடைசியாக் கட்டையில....இப்போ கரண்ட்ல போறதுக்கும் அவசரம்தா(ன்)னா !

meenakshi said...

ஒரு மாசத்துக்கு முன்னாடி என்னோட தோழியின் மாமா இறந்து விட்டார். மின் சுடுகாட்டில் ரெண்டு நாள் காத்திருக்க சொல்லிட்டாங்க. பிறகு அவர்கள் ஒரு பெரிய மனிதரோட சிபாரிசை பிடிச்சு, அஞ்சு மணி நேரம் வெயிட் பண்ணி, அன்னிக்கே அந்த இறுதி சடங்கை முடிச்சாங்க. இதுக்கு கூட சிபாரிசு! என்னத்த சொல்றது!

சாய்ராம் கோபாலன் said...

If all of us believe that death is a natural process. Of course think that other living things don't burn & do all of the rituals that we waste money, time, space - we wont have this feeling.

Problem is humans have created lot of stuff because we have sixth sense and make money out of rituals we get in to this !!

வல்லிசிம்ஹன் said...

aththanaiyum unmai.

அப்பாவி தங்கமணி said...

அடப்பாவமே... அங்கயுமா?

Anonymous said...

சாய்ராம் கோபாலன் சொல்வது

If all of us believe that ...

சடங்கு வேண்டாம் என்று சொல்லலாம். எரித்தல் புதைத்தல் வேண்டாம் என்று இந்தக் காலத்தில் எப்படிச் சொல்ல முடியும்? சடங்கு ஏதுமில்லாதிருப்பினும் எரிக்க காத்திருத்தல் சாத்தியமே.

எனக்கு சடங்குவேண்டாம் தான். ஆனால் என்னைச் சார்ந்தவர்களை நிர்ப்பந்திக்க எனக்கு மனம் இல்லை. அவ்வாறே நான் விழும்போது என்னைச் சார்ந்தவர்கள் செய்யக் கூடிய சடங்குகளை என்னால் தடுக்கவோ ஆட்சேபிக்கவோ ஆமோதிக்கவோ இயலாது! சடங்கு தொடரும். சங்கடங்களும் தொடரும். செலவு தொடரும். கடன் வளரும். இதுதான் காலத்தின் கட்டாயம்.

LK said...

உங்களை என் தளத்தில் அறிமுகம் செய்துள்ளேன்
http://lksthoughts.blogspot.com/2010/05/iii_28.html

Kousalya said...

கடைசியில் அதுக்கும் அவசரம் தானா...!! உண்மை சில நேரம் சுடும்

நியோ said...

மனசு வலிக்குது சார் ...
இதுக்குத் தானா ...

அப்பாதுரை said...

சடங்குகளில் அப்பட்டமாக நம்பிக்கையில்லை, அதேசமயம் சார்ந்தவர்கள் செயலையும் தடுக்க வேண்டும் என்றால் - உயிலெழுதும் பொழுது இது போல் நடந்தால் சொத்தில் பங்கு கிடையாது என்று எழுதி will executioner பொறுப்பில் விட்டுப் போகலாமே? (சடங்காவது ஒண்ணாவது? நாறடித்து விடுவார்கள்).

சொத்தில்லாதவரென்றால் உடலைத் தானம் செய்து விடலாமே? (இதற்கு அடுத்தவர் தயவு வேண்டும்).

Post a Comment

இந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க!