Saturday, May 29, 2010

சுட்டிப் பயல்

சுரேஷுக்கு அப்பொழுது ஐந்து வயதிருக்கும்.  இன்னும் பள்ளி செல்ல ஆரம்பிக்கவில்லை. வீட்டில் பம்ப் ரிப்பேர்.  பிளம்பர் வந்து வேலை செய்து கொண்டிருந்தார். பழைய ரெசிப்ரோகேடிங் ரக பம்ப்.

பிளம்பர் செய்யும் வேலைகளை எல்லாம் ஓர் ஓரமாக நின்று நன்று கவனித்துக் கொண்டிருந்த சுரேஷ், ஓரிரண்டு முறை அவர் கழட்டிக் கழட்டி மாட்டுவதைப் பார்த்ததும், தனக்குத் தானே ஏதோ பேசிக் கொள்வது போல் தோன்றியது.  

சற்று அருகில் போய் என்னதான் சொல்கிறான் என்று கவனித்துக் கேட்டால், "மேலே இருக்கிற சதுர நட்டைக் கழட்டனும்.  பிறகு பக்கெட்டிலிருந்து ஒன்று இல்லேனா இரண்டு குவளை தண்ணீர் ஊத்தணும். பின் நூல் கயிறு எடுத்து நட்டு மேல் சுற்றி விட்டு, திரும்ப எல்லாத்தையும் மாட்டணும்.  பிறகு சுவிட்ச் போட்டால் நாம் ஊத்தினதை விட அதிகம் தண்ணீர் வருதுன்னா .... தண்ணிக்குப் பதிலா "தம்ஸ் அப்" ஊத்தினா எல்லோரும்  நிறைய தமஸ் அப் வரும். அப்போ எல்லாரும் நிறைய தமஸ் அப் குடிக்கலாம் இல்லையா?" பையனின் கற்பனை வளம் எப்படி ? 

உங்க ஊருல குடிநீர் வாரியம் எதற்காவது தலைவர் பதவி காலியாக இருந்தால் எங்களுக்குச் சொல்லுங்கள். சுரேஷை அனுப்புகின்றோம்.   

20 comments:

LK said...

hahaha enna thinking payyanukku

நாஞ்சில் பிரதாப் said...

நல்லவேளை தம்ஸ் அப்-போட நிறுத்தினானே...

சாய்ராம் கோபாலன் said...

//நாஞ்சில் பிரதாப் said...

நல்லவேளை தம்ஸ் அப்-போட நிறுத்தினானே...//

நம் மக்கள் "குடி"மக்கள், இன்னும் வயசு ஆனபிறகு பரந்த (பறக்கும்) சிந்தனை வரும் ?

Thomas Ruban said...

//நல்லவேளை தம்ஸ் அப்-போட நிறுத்தினானே...//

பையன் நல்ல பையன் அதுதான் தம்ஸ் அப்-போட நிறுத்திட்டான்.இல்லேனா பால்,தயிர்,...
பையனை லிப்ட் பக்கம் எல்லாம் கூட்டிட்டு போயறாததிங்க....

நியோ said...

// சுரேஷுக்கு அப்பொழுது ஐந்து வயதிருக்கும். //

இப்போ சார் ..?

தமிழ் உதயம் said...

ஒரு குட்டி பையனின் மலரும் நினைவுகள்.

அநன்யா மஹாதேவன் said...

ரொம்ப ரசிச்சேன். குழந்தைகளின் க்யூரியாஸிட்டி ரொம்ப அழகா இருக்கும். அதே மாதிரி அவங்க intrepretations! தம்ஸப்பா? அப்போ ரொம்பவும் பழைய மலரும் நினைவுகள் போல இருக்கே?

padma said...

சின்ன வயசுல இப்படிலாம் நிறைய தோணும். நா எங்க வீட்லேந்து பள்ளிக்கு HOSE PIPE ல சாத்துக்குடி ஜூஸ் வராதான்னு ஆசைபட்டு இருக்கேன் .
GOOD BOY

ஹேமா said...

குட்டிப் பையனுக்கு சுத்திப் போடுங்க.இப்பவும் குட்டிப் பையனாவே இருந்தா !

வானம்பாடிகள் said...

நியாயம்தானே:))

விஜய் said...

@ பத்மா

ஹா ஹா ஹா

விஜய்

Anonymous said...

சம்பந்தம் இல்லாம ஒரு ஜோக் சொல்லத் தோணுது!

ஒரு பட்டிக்காட்டுக் கொழுத்த பணக்காரர் பட்டணத்துக்கு மிஷின் வாங்கப் போனார். அவரை வெயிட்டிங் ஹாலில் உட்காரவைத்தார்கள். பராக்குப்பார்த்துக் கொண்டிருந்தார் ப.காரர். லிஃப்டில் நீல உடையணிந்த ஒரு கிழவி மேலே போனாள். சற்று நேரத்தில் அதே போல் நீல உடை அணிந்த ஒரு யுவதி கீழே இறங்கிப் போனாள்.

சற்று நேரத்தில் அலுவலர் வந்து “உங்களுக்கு என்ன மிஷின் வாங்கணும்?” என்று கேட்க,

“பாக்கி எல்லாம் இருக்கட்டும் அந்த சுவற்றில் பதித்த மிஷின் எனக்கு ஒண்ணு அவசரமா வேணும்” என்றாராம் அந்த ரசிகமணி ப.கா.

சாய்ராம் கோபாலன் said...

//“பாக்கி எல்லாம் இருக்கட்டும் அந்த சுவற்றில் பதித்த மிஷின் எனக்கு ஒண்ணு அவசரமா வேணும்” என்றாராம் அந்த ரசிகமணி ப.கா.//

அதான் பட்டிக்காடு. அந்த யுவதியை கேட்க்காமல் ?

Thomas Ruban said...

//Blogger சாய்ராம் கோபாலன் said...

//“பாக்கி எல்லாம் இருக்கட்டும் அந்த சுவற்றில் பதித்த மிஷின் எனக்கு ஒண்ணு அவசரமா வேணும்” என்றாராம் அந்த ரசிகமணி ப.கா.//

அதான் பட்டிக்காடு. அந்த யுவதியை கேட்க்காமல் ?//

வெறும் பட்டிக்காடு இல்லை சார். (புத்திசாலி பட்டிக்காடு!) மிஷின் இருந்தால் எத்தனையோ யுவதிகளை
உண்டாக்கலாம் என அவர் நினைத்திருக்கலாம்!!!. நன்றி.

ஆரண்யநிவாஸ் ஆர் ராமமூர்த்தி said...

பையன் படு கெட்டிக் காரனாய் இருப்பான் போல இருக்கே!!!!

சாய்ராம் கோபாலன் said...

//Thomas Ruban said... வெறும் பட்டிக்காடு இல்லை சார். (புத்திசாலி பட்டிக்காடு!) மிஷின் இருந்தால் எத்தனையோ யுவதிகளை உண்டாக்கலாம் என அவர் நினைத்திருக்கலாம்!!!. //

இதான் எனக்கு கிரியேடிவிட்டி கிடையாதோ ? ஓக்கா....... (எங்கள் திருநெல்வேலி பாஷையில் சொல்லவேண்டும் என்றால் !) இதை யோசிக்காம விட்டேனே ?

வல்லிசிம்ஹன் said...

oru varungaala scientist. Smart boy.


நல்லவேளை தம்ஸ் அப்-போட நிறுத்தினானே...//


:))))

Tamilan said...

பாருடா , இந்த பச்ச பிள்ளைக்கு உள்ள திறமைய !!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!

Madhavan said...

பையனின் சிந்திக்கும் ஆற்றலை கண்டு தலை வணங்குகிறேன்.

அதே வேளையில், தமஸ் அப், கோக், போன்ற சத்தில்லாத, சமயத்தில் கேடு கூட விளைவிக்கும் குளிர் பானங்களை நாம் கூட தவிர்க்கவேண்டும்.. நாம் பழக்கப் படுத்தாமளிருந்தால், குழந்தைகளில் உடல் ஆரோக்கியம்கூடும்.

குளிர் பானங்களுக்கு செலவிடும் பணத்தினை, இயற்கையான பழ சத்துள்ள காய்கறி வகைகளுக்கு செலவு செய்தால், நல்லது என நான் நினைக்கிறேன்.
வீட்டிலேயே கூட பழ ரசம் செய்யலாம்..

முடிந்தவரை 'குளிர்-நீர்' ('Typical Fridge Water ) குடிப்பதைக் கூட தவிர்க்க வேண்டும். குளிர்-நீர் இதயத்திற்கு நல்லதல்ல.

அப்பாவி தங்கமணி said...

பையன் பெரிய ஆள் தான் போல... அநேகமா பிற்காலத்தில் அரசியல்வாதி ஆவார்னு நெனைக்கிறேன்.... !!!!!

Post a Comment

இந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க!