Friday, June 4, 2010

போட்டார் அய்யா ஒரு போடு !

அன்பு எங்கள் ப்ளாக்,

இது சாதரண எண் கணக்கில் நிறைய விடை சாத்தியக் கூறு இருப்பதால்....நான் பைனரி எண் கணக்கில் விடை சொல்கிறேன் .....
செல்லுமென்றால் ` சரி``   என்று சொல்லுங்கள்.

                                               S=E=N=M = Y=1
                                               R=D= O =0

  அன்புடன்

  பத்மநாபன் @ aanandhavaasippu.blogspot.com 

எங்கள் கமெண்டுகள்:
1) என்னது பைனரியா? எங்களுக்கு டிக்சனரி தெரியும் - இப்போ வலைகளை ஓராண்டு காலமாக மேய்வதால் நெருப்பு நரி தெரியும். நீங்க சொல்கிற பைனரி சற்றேறக்குறைய முப்பது ஆண்டுகளுக்கு முன் எங்கேயோ படித்தது. இப்போ சுத்தமா மறந்து போச்.

2) உங்க விடைக்கு, இதோ நாங்க சலாமியா பாஷையில அது சரியா தவறா என்று கூறியிருக்கிறோம்: :: %&*$#@(( ::

19 comments:

குரோம்பேட்டைக் குறும்பன் said...

// எண் கணக்கில் நிறைய விடை சாத்தியக் கூறு இருப்பதால்...//

நிறைய விடைகள் சாத்தியக் கூறா?
ம்ஹூம் - ஒரே ஒரு சரியான செட தான் இருக்கிறது என்று தோன்றுகிறது.
அது என்ன என்றால், ....... (இதுவரை சரியான விடை அளித்த நண்பர்களைக் கேட்டுத் தெரிந்துகொள்ளுங்கள். எனக்குத் தெரிந்திருந்தால் நான் அப்பவே சொல்லி வடையைக் கௌவிச் சென்றிருப்பேனே !)

பத்மநாபன் said...

நான் முருகன் மாதிரி உலகத்தை சுத்தி பழம் வாங்க பார்க்கிறேன்...வினாயகர் மாதிரி சார்ட் கட் பிடிபடலை ....( அப்ப கேள்வியில சின்னக்கோளாறு இருக்கு...அதுவும் சரி கோளாறு இருந்தா தானே புதிரே.....)

ஹேமா said...

ஸ்ரீராம்....கொடுமை !

meenakshi said...

ஏற்கெனவே எனக்கு கணக்குன்னா பயம். நீங்க வேற இப்படி எல்லாம் பயமுறுத்தணுமா?

பத்மநாபன் said...

நானே கேள்விய, சரி பண்ணி ..விடை அனுப்பியாச்சு... வடை கிடைக்குமா...

பத்மநாபன் said...
This comment has been removed by the author.
Anonymous said...

எல்லாமே 1 அல்லது 0 என்றால் தனித்தனிக் குறியெழுத்தை உபயோகிப்பானேன் பத்மநாபன் ? (எனக்கும் கேள்வி கேட்கத் தான் தெரியும்)

பத்மநாபன் said...

நல்ல கேள்வி நண்பரே......இப்பவும் பத்தாங்கிளாஸ் கணக்கு பாடத்தை துணைக்கு இழுத்துக்கிறென்...கண்க்கில் ஆங்கிலஎழுத்துக்கள் மாறிலின்னு சொல்லி, மதிப்பு போட்டுக் கொள்ளலாம்.
நான் 1,0 ன்னு போட்டுகிட்டேன்..(சப்பைக்கட்டு)...
அகடு,முகடு பைனரி உலகத்தில் இந்த இரண்ட வச்சுட்டு தான் இந்த் ஆட்டம்..
ஒரே சரியான விடை அனுப்பியாச்சு...

சாய்ராம் கோபாலன் said...

எனக்கு தமிழ்ல, ஆங்கிலத்துல ஏன் கன்னடாவிலும் பிடிக்காத ஒரே வார்த்தை கணக்கு தான் !! வர்ட்டா !

அப்பாவி தங்கமணி said...

நான் ரெம்ப odinary ஆளுங்க... எனக்கு குள்ளநரி கூட தெரியாது... இதுல binary நெருப்பு நரின்னு எல்லாம் பயபடுத்தினா எப்படி???????????

சாய்ராம் கோபாலன் said...

//தனசேகரபாண்டியன் படிப்புக்கு உதவுங்கள்//

I am ready to take care of his + 2 education.

Sriram,

Can you check on my behalf with the head master as I am in the US on what will be the damage and I will organize a DD to be delivered

Medical Seat cost will be tough with Indian colleges fleeing you and with the fact that I got to get ready for Adithya's college fee !

எங்கள் said...

மதுரையில் இருக்கின்ற எங்கள் ப்ளாக் / இட்லிவடை ப்ளாக் வாசகர்கள் யாராவது ஒருங்கிணைப்பு செய்தால், தனசேகர பாண்டியனின் படிப்புக்கு உதவ பலர் முன் வந்துள்ளனர்.

சாய்ராம் கோபாலன் said...

//எங்கள் said...

மதுரையில் இருக்கின்ற எங்கள் ப்ளாக் / இட்லிவடை ப்ளாக் வாசகர்கள் யாராவது ஒருங்கிணைப்பு செய்தால், தனசேகர பாண்டியனின் படிப்புக்கு உதவ பலர் முன் வந்துள்ளனர். //

தனசேகரன் தேவை பூர்த்தி இப்போதைக்கு ஆகிவிட்டது என்றால் - மதுரையை தேடி செல்லாமல் சென்னையிலேயே யாராவது தலைமையில் பதிவுலக நண்பர்கள் குழுவின் படிப்பு தேவை நீதி அமைக்கலாமே. நான் ஐம்பதாயிரம் ரூபாய் கொடுக்க ரெடி.

பத்மநாபன் said...

சாய் ராம் ...மிகவும் பாராட்ட வேண்டிய சேவை . வாழ்த்துக்கள்

மிக ஈடுபாட்டுடன் கல்வி கற்று நல்ல மதிப்பெண்ணும் பெற்று , மேல் படிப்பிற்கு மிகவும் சிரமப்படுகிறார்கள் .

ஈரோட்டை சேர்ந்த ஒரு ஆட்டோ ஓட்டுனர் தோழரின் புதல்வன் 1174 /1200 MPC - 599 /600 ... ( என்ன ஈடுபாடு படிப்பில் ? )

நண்பர்கள் குழுவாக சேர்ந்து உதவி புரிய முன் வந்துள்ளார்கள் ...

பத்மநாபன் said...
This comment has been removed by the author.
சாய்ராம் கோபாலன் said...

//ஈரோட்டை சேர்ந்த ஒரு ஆட்டோ ஓட்டுனர் தோழரின் புதல்வன் 1174 /1200 MPC - 599 /600 ... ( என்ன ஈடுபாடு படிப்பில் ? )//

ஆஹா - இந்தியாவுக்கு நல்ல ஒரு எதிர்காலம் இருக்கின்றது. இப்படி எல்லோரும் படித்து, சுய வேலை வாய்ப்பும் மேற்கொண்டால் யாரையும் எதிர்பார்க்க தேவையில்லை (அரசாங்கத்தையும் சேர்த்து !)

என் ஒன்பதாவது படிக்கும் மகனிடம் இந்தியாவில் பிள்ளைகள் வாங்கும் மதிப்பெண்களை பற்றி சொல்லிக்கொண்டே இருப்பேன். அவனுக்கு இங்கே தொண்ணூறு வாங்குவதே ஜாஸ்தி என்று நினைப்பான். அங்கே பத்தாம் / பண்ணிரெண்டாம் வகுப்பு மாணவர்கள் பலர் வாங்கும் 200/200 அருமை. கொஞ்சம் ஐ.ஐ.டி. நுழைவு தேர்வு மாதிரி கேள்விகள் பத்தாம் / பண்ணிரெண்டாம் வகுப்பு இறுதி தேர்வில் மாறிக்கொண்டே இருந்தால் இன்னும் அவர்களை இன்னும் அருமையாக தயார் செய்யும்.

அநன்யா மஹாதேவன் said...

எளியவர்கள் படிப்புக்கு உதவும் சாய்ராம் போன்ற நல்லுள்ளங்களை வணங்குகின்றேன்.

சாய்ராம் கோபாலன் said...

// பத்மநாபன் said...சாய் ராம் ...மிகவும் பாராட்ட வேண்டிய சேவை. வாழ்த்துக்கள் //

//அநன்யா மஹாதேவன் said... எளியவர்கள் படிப்புக்கு உதவும் சாய்ராம் போன்ற நல்லுள்ளங்களை வணங்குகின்றேன்.//


ஐயோ, வேண்டாங்க. ப்ளீஸ். நான் அதற்கு தகுதி அற்றவன்.

என் ப்ளாகில் http://tamizhkirukkan.blogspot.com சமிபத்திய பதிவில் எதையோ கண்டோ அல்லது "எங்கள் ப்ளாகில்" நான் போட்ட செய்தியை கொண்டோ எனக்கு இப்படி

"Anonymous said... தற்பெருமை தலையைச் சுடும் என்று தெரியாதா உங்களுக்கு?"

அறிவுரை வழங்கிய அறிவு சுடர் யார் என்பதை கண்டுபிடிப்பதில் சில பல முன்னேற்றங்கள் அடைந்துள்ளேன். நான் இருபத்து நான்கு வருடங்கள் கணணி துறையில் இருப்பதும் (விற்பனை துறை என்றாலும் !) மற்றும் சில பல வருடங்களுக்கு முன் இங்கே எடிசனில் என் நண்பர்கள் சிலர் பலர் வீடுகளிலும் என் வீட்டிலும் திருடிய பெண்ணை கையும் களவுமாக இன்டர்நெட் கொண்டு கொண்டு கண்டுபிடித்தவன் நான் !!

வெகு விரைவில் இந்த அறிவு சுடர் பற்றி எழுதுவேன் !

உதவி செய்வதை சொல்லகூடாது என்பதை நன்கு உணர்ந்தேன்.

பத்மநாபன் said...

அனாமேதயர்களின் காமெண்ட் களை பொருட்படுத்தவேண்டாம்...நீங்கள் புரிவது பெரும்சேவை ....நாம் பெயர் சொல்வதும், இப்படியெல்லாம் செய்கிறோம் என்பதுவும் , நல்ல உள்ளங்களுக்கு உதவி செய்வதற்க்கு ஒரு தூண்டுகோலாக இருக்கும் ...வழிக்காட்டுதலாகவும் இருக்கும் ...உங்கள் சேவை தொடரட்டும் .

Post a Comment

இந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க!