Wednesday, June 9, 2010

மூளைப் புயல் வாசகர்களின் முத்துக்கள்

I ) நாஞ்சில் பிரதாப் (பிரதாப் குமார்) http://vimarsagan1.blogspot.com எழுதியவை:
இந்த ஊக்கின் மாற்று பயன்கள்
அதாவது இந்த ஊக்கினை நேராக நிமிர்த்தினால் பல வகைகளில் உபயோகமாக இருக்கும்.
1. இந்த ஊக்கினை நேராக நிமர்த்தி, சாவி தொலைந்து போன சூட்கேசை திறக்கலாம்.
2. அலுவலகத்தில் சாப்பிட்டு வந்தபிறகு... இந்த ஊக்கினை நேராக நிமிர்த்தி பல் குத்தலாம்.
3. டேமேஜர் இருக்கும் நாற்காலியில் சொருகி வைக்கி விசுவாசத்தை காண்பிக்கலாம்.
4. கீபோர்டில் மாட்டிக்கொண்டிருக்கும் குண்டுசி, மற்றும் ஸ்டேப்லர் பின்களை இதை வைத்து எடுக்கலாம்
5. நேரம்போகவில்லையென்றால் சுவற்றிலோ, மேசையிலோ இதைவைத்து குத்தி குத்தி காலத்தால் அழியாத பல ஓவியங்களையும் உங்கள் பெயரையும் செதுக்கலாம்.
போதுமா???

II) சித்ரா எழுதியது: 
/////உங்களுக்கான கேள்வி, இதன் பெயரோ அல்லது இதன் வடிவமைக்கப்பட்ட பயனோ அல்ல. இந்த பிடிப்பு ஊக்கினை, வேறு என்னென்ன வகைகளில் பயன்படுத்திக் கொள்ளலாம் என்று வேற்று உபயோகங்களை மட்டும் எழுதவேண்டும். ////

...... ஒரு பிடிப்பு ஊக்கினை வைத்து,  இந்த மாதிரி, வாசகர்களை யோசிக்க வைக்கும் ஊக்க  பதிவு போடலாம்.  ஹி,ஹி,ஹி,ஹி,ஹி....

III) கக்கு மாணிக்கம் எழுதியவை:


சரி, இனி பட்டியலிடலாமா?(இதுக்கு பட்டியலா வேணும்?)

1. டெலிபோன் கார்டு நம்பர் சொரண்டலாம்
2. சொன்ன மேரிக்கி காகிதங்கள் ஒன்னா சேத்து சொருவி வைக்கலாம்
3.நெறைய இருந்தா ஒன்னு உள்ள ஒன்ன கோத்து மாலையா பன்னி கழுத்தள போட்டு 
புதுசா ஒரு பாஷன் உண்டாகலாம்.(ஆபீஸ்ல இருந்து கொண்டாந்தது தானே )
4.காந்த துண்டோட வெச்சி அது மேல இதுகள போட்டு திரும்ப எடுத்து வெளாடலாம்.
5.ஒரு மொனைய விரிச்சு கம்பியா ஆக்கி stuck ஆனா computer  dvd/cd player சரி பண்ணலாம்.
6.கால்குலட்டர  re set பண்ணலாம்.
7.ஐயோ ..முக்கியமானது மறந்து போச்சே...ஆஹா ...காலையில சாப்ட இட்லி மொளகா பொடி 
கடலை பருப்பு /உளுத்தம்பருப்பு நம்ம வாயி ஓட்ட பல்லு குள்ள குந்திகிசின்னா அந்த சனியன 
நோண்டி வெளியில எடுக்க இதை விட வேற ஒரு ஆயுதமும் இன்னா தேதி வரைக்கும் இல்ல! 
8.நெறையா இருந்தா (ஆபீஸ்ல இருந்து "தள்ளிகினு" வந்ததுதான் ) சேத்து வெச்சி பழைய இரும்பு 
வாங்கறவன் கிட்ட போட்டு போரீச்சம்பழம் வாங்கி துன்னலாம்.
9.புதுசா ஒரு சோப்பு எடுத்து டேபிள்  மேல வச்சி அதுமேல இதுகள விரிச்சி குத்தி குத்தி வெச்சா வாசன அடிக்கும். 
modern flower vase ready.
10. வீட்ல மரச்சேர்ல ரகசியமா குத்தி வெச்சி, பிடிக்காதவங்க வந்தா உட்கார சொல்லி பழி வாங்கலாம்

அப்பா ......பத்து ஆயி பூடிச்சி போதும்.
அவ்வ்ளவுதா அடிக்க வராதீங்க, ஆளவுடுங்க .

கக்கு. மாணிக்கம்.

IV) பிரியமுடன் வசந்த் எழுதியது: 
எங்கள் பிளாக் நண்பர்களுக்கு அரும் பொருள் பிடிப்பு ஊக்கை ஒரு வால் ஹேங்கராக யூஸ் பண்ணலாம் பார்க்க படம்.....

ஏதோ நம்மளால முடிஞ்சது.....

--
priyamudan வசந்த்

V) சாய்ராம் கோபாலன் எழுதியது: 
அட கடவுளே.  நான் என்னவொரு எங்கள் ப்ளாக் படைப்பாற்றல் கேள்விக்கும் என் இல்லாத மூளையை கசக்குவதில்லை என்று இருந்தேனே !

அ)  ஒரு பக்கம் பிரித்த பிறகு நான் போஸ்டல் லெட்டரை ஓபன் செய்ய யூஸ் செய்திருக்கின்றேன்!
ஆ) காது நோண்டலாம் !! ஆனால, காது கேட்காமல் போனால் என் மிது கேஸ் போடாதீர்கள் !
இ) டை பறக்காமல் இருக்க டைபின் இல்லாதவர்கள் இது வெளியில் தெரியாமலேயே ஷிர்டுடன் இதை பயன் படுத்தலாம். (என்னுடைய மெடிக்கல் ரெப் காலங்களில் (1986-88) இரண்டே ஷர்ட், இரண்டே டை மற்றும் ஒரே ஷுவுடன் திருவல்லிக்கேணி மேன்ஷனில் பாத்ரூம் அளவே ரூமில் தங்கி இருந்தபோது இப்படி உபயோகித்து இருக்கின்றேன் !!)
ஈ) ஆடவர் பேண்டில் பணத்துக்கான தனி ரகசிய பாக்கெட்டில் துட்டை ஒன்று சேர சேர்த்து வைத்துக்கொள்ளலாம்.
உ) இளம் பெண்கள் பஸ்ஸில் வம்பு செய்யும் ஆணை அவருக்கே தெரியாமல் சரக்கென்று கிழிக்கலாம்  !!  (சாயி, இனிமே பஸ்ஸில் போகாதே !!)

அவ்வளவு தாங்க யோசிக்க முடிஞ்சுது.  காபி வாங்கி குடித்துவிட்டு வந்து எதாவது தோணுதான்னு பார்ப்போம் !

(Sai)
+ 1 732 771 5621
Blog: http://tamizhkirukkan.blogspot.com/

VI) திவ்யா எழுதியது: 
(இவர் ஜெம கிளிப் பயன்கள் எழுதவில்லை. ஜெம கிளிப் பற்றி சிறு குறிப்பு எழுதியுள்ளார்)
Norwegian, Johan Vaaler ------the inventor of the paper clip.
A paper clip image is a symbol for an attachment in an email(compose).
1st generation i Phones and the iPhone 3G require a paper clip to eject the SIM card and some Palm PDAs advise the use of a paper clip to reset the device.

During World War II, Norwegians were prohibited from wearing any buttons with the likeness or initials of their king on them. In protest they started wearing paperclips, because paperclips were a Norwegian invention whose original function was to bind together. This was a protest against the Nazi occupation .
VII) பெயர் சொல்ல விருப்பமில்லை எழுதியது: 
அன்புள்ள எங்கள் ப்ளாக்,
என் மனத்தில் தோன்றும் சில பயன்கள்:-
1 . இந்த பின்னை ஒரு பேப்பரில் வைத்து அதன் பக்கவாட்டில் எல்லாம் கோடுகளை இழுத்து Gem Clip படம் வரையலாம்.
2 .  இந்த பின்னை அப்படியே பிரித்தால் இரு முனை கொண்ட ஒரு குச்சி போல் இருக்கும். இரண்டு முனைகளையும் பல் குத்த பயன்படுத்தலாம்.
3 . நான் அனுப்பியுள்ள படத்தைப் பார்க்கவும். ஆங்கில எழுத்து "S " இப்படித் தான் இருக்கும் என்று குழந்தைகளுக்கு பாடம் நடத்தலாம்.
நன்றி!
பெயர் சொல்ல விருப்பமில்லை 
VIII) ஜெகநாதன் எழுதியது: 
அன்பு எங்கள்-பிளாக்,

மூளைப்புயல் படைப்பாற்றல் பயிற்சியில் வெளியிட்ட 'ஏடுகள் பிடிப்பு ஊக்கு' மாற்று பயன்பாடுகள் பகுதிக்கான என் பதில்:
சட்டை பட்டன் / ​சேலை​ஸேப்டி பின்
சாவி (சில பூட்டுகளுக்கு)
பக்கங்காட்டி (புக்மார்க்)
ஊசி
கழுத்துச் சங்கிலி (பல ஊக்குகளை இணைத்து..)
கொசுவர்த்திச் சுருள் தாங்கி (ஒரு முனையை மட்டும் விரித்து மேலாக நீட்டுவதன் மூலம்)
கீ செயின்
பல்குத்தி (toothpick)
ஒருமுறை அலுவலக மூளைப்புயல் பயிற்சி வகுப்பில், செங்கலின் மாற்றுப் பயன்பாடுகள் பற்றிக் கேட்கப்பட்டது.
49 பயன்பாடுகள் அனைவரும் குறிப்பிட்டபின், அரை சத ஆசையில் நான் சொன்னது:
செங்கலை மூளைப்புயல் பயிற்சிக்கு பயன்படுத்தலாம் (it can be used for brainstorming session)
கொஞ்ச​நேரம் என்னை உற்றுப்பார்த்தப் பயிற்சியாளர் அப்புறம் அதையும் சேர்த்துக் கொண்டார்.
உங்களுக்கு ​வசதி எப்படி என்று ​தெரியவில்​லை :))
இன்னொரு சமயம் ஒரு இலையின் படத்தைக் காண்பித்து இதைப் பார்த்தால் என்னென்னத்​தோன்றுகிறது என்றார்.
எனக்கு Adams underware என்று தோன்றியது. ஆனால் மூளைப்புயலில் இந்தமாதிரியான கன்னாபின்னா சிந்தனைகளும் (wild ideas) முக்கியமானவை என்று அறிகிறேன். உங்களின் இந்தப் பதிவு படைப்பாற்றலுக்கு சிறகு கட்டிவிடும் என்பதில் ஐயமில்லை.
வாழ்த்துக்கள்!
அன்பாக,
ஜெகன். IX) ஸ்ரீமாதவன் எழுதியது: 


 • இந்த பின்னை அப்படியே பிரித்து ஒரு முனையை, 'POWER OFF' நிலையில் உள்ள கம்ப்யூட்டர், லேப்டாப் DVD / CD டிரைவ் பக்கத்தில் உள்ள சிறிய துவாரதினுள்ளே செலுத்தி, ஓபன் செய்து, உள்ளே  மாட்டிகொண்டிருக்கும், DVD / CD யை  வெளியே  எடுக்கலாம்.... • கிளிப்பினை அதே நிலையில் (எந்த முனையையும் பிரிக்காமல்) மிகுந்த கவனத்துடன், மெதுவாக,காதில் விட்டு அழுக்கை எடுக்கலாம்  (காதின் துவாரம் பெரியதாக இருந்தாலோ, அல்லது, பின் சின்னதாக இருந்தாலோ..) • ரொம்ப காலம், கழித்து, காகிதமே பயன்படாத நிலைமை வந்தால் (Paper less world due to e-technology), இந்த கிளிப்பினை, 'மியூசியத்தில்' வைக்கலாம்.   

  • *** இவைகள் யாவும் எங்களுக்கு, 'மூளைப் புயல்' பதிவு வெளியிடப்பட்ட இருபத்துநான்கு மணி நேரத்திற்குள் வந்து சேர்ந்த விவரங்கள். இன்னும் பயன்கள் எழுதுவோர் இந்தப் பதிவிற்கு பின்னூட்டமாக பதியலாம். *** 

   17 comments:

   அநன்யா மஹாதேவன் said...

   :)))
   எல்லாமே சூப்பர் பயன்கள். இதில் நான் கொசுவத்திச்சுருளுக்கு பயன் படுத்தி இருக்கேன்.

   கர்டன் லாக்காக பயன் படுத்தி இருக்கேன். (அதாவது கர்டனை சுருக்கி ஜெம் க்ளிப் போட்டு இருக்கேன்)

   துணி காயப்போட்டு ப்ளாஸ்டிக் க்ளிப்புக்கு பதிலா ஜெம் க்ளிப் போட்டு இருக்கேன்.

   சில சமயம் ஆஃபீஸ் போகும் வழியில் பூ வாங்கினால் ஹேர்ப்பின் இருக்காட்டி ஜெம்க்ளிப் யூஸ் பண்ணி பூ வெச்சுண்டு இருக்கேன்.

   வேற ஒண்ணும் தோணலை. :(

   நாஞ்சில் பிரதாப் said...

   இதில் என்னைக்கவர்ந்தது


   நெறையா இருந்தா (ஆபீஸ்ல இருந்து "தள்ளிகினு" வந்ததுதான் ) சேத்து வெச்சி பழைய இரும்பு
   வாங்கறவன் கிட்ட போட்டு போரீச்சம்பழம் வாங்கி துன்னலாம்.

   =====

   டை பறக்காமல் இருக்க டைபின் இல்லாதவர்கள் இது வெளியில் தெரியாமலேயே ஷிர்டுடன் இதை பயன் படுத்தலாம்.

   அநன்யா மஹாதேவன் said...

   நாஞ்சில்,
   இந்த வயசுலேயே டையா? :P :P :P

   Anonymous said...

   வலையுலகின் இன்றைய டாப் ட்வென்டி பதிவுகளை WWW.SINHACITY.COM இல் வாசியுங்கள்

   ஹேமா said...

   நான் சின்னச் சின்னப் பக்கட் சாமான்களைப் பாவித்தது போக மிஞ்சினதை அப்படியே கிளிப்பால் இணைத்து மூடி வைத்திருக்கிறேன்.

   சாய்ராம் கோபாலன் said...

   கக்கு மாணிக்கம் - Superb

   LK said...

   /சில சமயம் ஆஃபீஸ் போகும் வழியில் பூ வாங்கினால் ஹேர்ப்பின் இருக்காட்டி ஜெம்க்ளிப் யூஸ் பண்ணி பூ வெச்சுண்டு இருக்கேன். //

   :P

   பத்மா said...

   எல்லாரும் chain தான் சொல்லி இருக்கீங்க .இந்த gem கிளிப்ஸ் use பண்ணி அழகான
   காதணிகள் செய்யலாம் .ஒன்றுக்குள் ஒன்று மாட்டி .என்னிடம் தற்போது கைவசம் gemclips இல்லாததால் மாலை ஒரு பாக்கெட் வாங்கி செய்து படம் பிடித்து அனுப்புகிறேன் . colour gem clips ஆக இருக்கும் பட்சத்தில் உடைக்கு match ஆகவும் இருக்கும்

   புலவன் புலிகேசி said...

   :))

   ஜெகநாதன் said...

   பங்கேற்ற அனைவரும் கலக்கியிருக்கிறார்கள்.
   கக்கு மாணிக்கம்.. கலக்கு மாணிக்கம்.. அவருக்கு ஒரு செயினும் அதில் ஒரு காந்த டாலரும் இணைத்து அனுப்பலாம் :))
   பத்மாவின் நகைப்படம் வேற வருதா.. குட்!

   ஹுஸைனம்மா said...

   ஆனாலும் நம்ம ஆட்கள் மாதிரி வராது!! ஒரு பொருளை அதற்குரிய பயனோடு, மேற்கொண்டு எப்படியெல்லாம் பயன்படுத்தலாம்னு “யோசிச்சு” செயல்படுறாங்க!! நல்ல சிக்கன/சிந்தனாவாதிகள்!!

   என் பங்குக்கு இதோ:

   1. சேலை ப்ளீட்ஸ் கலையாமல் இருக்க இதைப் பயன்படுத்தலாம். (ஸேஃப்டி பின் சேலையில் ஓட்டை போடும்; இது கிழிக்காது, அதனால் சேலைக்குப் பாதுகாப்பு!!) ஸ்கார்ஃப் பறக்காமல் இருக்கவும் உதவும்.

   2. கேஸ் பர்னரில் பால் அல்லது கஞ்சி பொங்கி வழிந்து அடைத்துக்கொண்டால், இதைக் கொண்டு சுத்தம் செய்ய வசதியாக இருக்கும்.

   3. (நான்-வெஜ் டிப்ஸ்): மீன் சுத்தம் செய்ய வசதியாக இருக்கும்.

   4. உண்டியலிலிருந்து காசு எடுக்க உதவும்.

   குரோம்பேட்டைக் குறும்பன் said...

   பேப்பர் அல்லது அட்டையில் நுண் துளை இட,

   சுவற்றில் இருக்கும் துவாரம் / விரிசல் இவற்றின் ஆழம கணக்கிட,

   ஒரு ரப்பர் பாண்டுடன் இணைத்து காடாபுல்ட் அம்பாகவும்,

   உறுதியான ரப்பர் நீள் துண்டுடன் சேர்த்து ஸ்ப்ரிங் பாலன்ஸ் பாயிண்டர் ஆகவும் உபயோகித்திருக்கின்றேன்.

   Anonymous said...

   ஜிப் ரைடர் இழுப்பான் உடைந்து வந்துவிட்டால் அவசரப் பிடி
   ரேடியோ [அப்படி ஒன்று இன்னும் உபயோகத்தில் இருந்தால் ] டயல் முள்
   C Clip, ஓலைக் காற்றாடிக்கு அச்சு

   ஹுஸைனம்மா said...

   //Anonymous said...
   ஜிப் ரைடர் இழுப்பான் உடைந்து வந்துவிட்டால் அவசரப் பிடி //

   நல்ல ஐடியா,என் பசங்க இந்தப் பிரச்னையினால சில கால்சட்டைகளை ஒதுக்கி வச்சிருக்காங்க; ட்ரை பண்ணிப் பாக்கணும்!! (பண்ணலாம்தானே?)

   நாஞ்சில் பிரதாப் said...

   //நல்ல ஐடியா,என் பசங்க இந்தப் பிரச்னையினால சில கால்சட்டைகளை ஒதுக்கி வச்சிருக்காங்க; ட்ரை பண்ணிப் பாக்கணும்!! (பண்ணலாம்தானே?) //

   ஏங்க இப்படில்லாம் ரிஸ்க் எடுக்கறீங்க... புதுசா கால்சட்டை வாங்கிக்கொடுங்க...எதுலெல்லாம் காசு மிச்சப்படுத்தனும்னு ஒருஅளவில்லையா???

   T.R. Balu said...

   //எனக்கு Adams underware என்று தோன்றியது. //
   that was eve's underwear; adam's was just air.

   Vidhoosh(விதூஷ்) said...

   //4. உண்டியலிலிருந்து காசு எடுக்க உதவும். //


   கம்பேனி ரகசியத்த இப்டி பப்ளிக்கில் போட்டு உடைச்சுட்டீங்களே ஹுசைனம்மா :))

   ஜெகன்: :)) உங்கள் oob thinking skills கண்டு சிரிச்சதில் ஆபீசே அதிர்ந்து கிடக்கு.. :))


   அனன்யா: பூ வச்சுண்டு போனீங்களா... :)) எப்டியெல்லாம் யோசிக்கிறாங்க..


   //ஜிப் ரைடர் இழுப்பான் உடைந்து வந்துவிட்டால் அவசரப் பிடி //
   சூப்பர்-ங்க அனானி. முதல் முறையாய் அனானி பயனுள்ள தகவல் தருவதைக் காண்கிறேன். :)

   Post a Comment

   இந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க!