Tuesday, July 20, 2010

என்ன சொல்லப் போகிறாய் எண்காலியே? 02


டிர்ரிங் ....டிர்ரிங்........ 

"ஹலோ இந்தப் பக்கம் ..... பால் கொண்ட பரந்தாமன். அந்தப் பக்கம் யாரு?"

"என்ன? பால் கொண்ட பரந்தாமனா? யாருடா உனக்கு அந்தப் பட்டம் கொடுத்தது?"

"பட்டம் எல்லாம் யாராவது கொடுப்பார்களா? நம்பதான் ஒரு கையால கொடுத்து, இன்னொரு கையில வாங்கிக்கணும். வலது கை கொடுப்பதை இடது கை அறியாமல் வைத்துக்கொள்ளவேண்டும். எல்லா நாளும் அரசியல்வாதிங்களுக்கு நடுவே ஜல்லி அடிச்சுகிட்டு இருக்கற உனக்குத் தெரியாதா?"

"சரி, என்ன ஆச்சு எண்காலி? வந்துடுச்சா?"

"அது வந்து சேர்ந்து ஒரு மணி நேரம் ஆயிடுச்சு. நீ வந்து கலெக்ட் பண்ணிக்கிறயா அல்லது டோர் டெலிவரியா?"

"எவ்வளவு செலவு ஆச்சு?"

"செலவா? அது ஆச்சு ஒன்றரைக் கோடி. பில் அனுப்புகிறேன்."

"பில் எல்லாம் எனக்கு அனுப்பாதே. பில் அமவுண்டை நீ சம்பாதிக்க ஒரு வழி சொல்லுகிறேன். அந்த ஐடியா வெச்சி நாம்ப செலவு பண்ணியதற்கு மேலாக சம்பாதிச்சிடலாம். ஆமாம் அது ஒரிஜினல் பால் தானே? டூப்ளிகேட் இல்லையே?"

"ஏண்டா போலி சான்றிதழ், போலி டாக்டர், போலி சாமியார், போலி மருந்து போல இதுலயும் போலி இருக்கும்னு நெனக்கிறியா? ஆனா போலி இல்லை ஒரிஜினல்தான் என்று வந்தவுடனேயே அதுக்கு ஒரு டெஸ்ட் வெச்சி தெரிஞ்சுகிட்டேன்."

"அட! என்ன டெஸ்ட் வெச்சே?"

"இன்றைக்கு நடக்கற வாய்ச் சண்டையில் யார் ஜெயிப்பாங்க என் மனைவியா அல்லது அம்மாவா என்று தெரிந்துகொள்ள, இரண்டு பேருங்க பெயரையும் ஒவ்வொரு சீட்டில் எழுதி, ஆக்டோபஸ் இருக்கின்ற புட்டியில் போட்டேன். அது என் மனைவி பெயர் கொண்ட சீட்டை, பவ்யமாக எடுத்து என்னிடம் எடுத்துக் கொடுத்தது."

"அப்புறம்?"

"அப்புறம் என்ன? அம்மா வாய்ச்சண்டையில் தோற்று, பக்கத்துத் தெருவில் இருக்கின்ற என் தங்கை வீட்டுக்குப் போய்விட்டார்கள்"

"அட! அப்போ உன்னிடம் இருப்பது ஒரிஜினல் பால்தான்!"

"இந்த ஆக்டோபஸ்சை  வெச்சிகிட்டு, நான் எப்படி ஒன்றரைக் கோடிக்கு மேல் சம்பாதிப்பது? அதைச் சொல்லு முதலில்."

"இரு. அமைச்சர், பி ஏ வோட வெளிநாடு டூர் போயிருக்காரு, நான் உன் வீட்டுக்குத்தான் வந்துகிட்டு இருக்கேன். ஒரு விளம்பரம் தயார் பண்ணியிருக்கேன். அதை எல்லா தினசரிப் பத்திரிகைகளிலும், ஒரு வாரம் தொடர்ந்து வெளியிடுவோம். பிறகு பாரு நமக்கு வருமானம் எப்படி வருகிறது என்று."

இருவரும் சேர்ந்து விவாதம் பண்ணி, பிறகு தயார் செய்த விளம்பரம் இது:
(தொடரும்) 

28 comments:

LK said...

hahahha kalyil siripu thangala

வானம்பாடிகள் said...

என்னதான் ஆக்டபஸ்னாலும் மாமியார் மருமக சண்டையில யாரு ஜெயிப்பான்னு கரெக்டா சொல்ல முடியும்னு தோணலை:))

Paul said...

வானம்பாடிகள், அதுக்குத் தான் என்னை மாதிரி ஆக்டபஸ் ஆக இருக்கணும் என்கிறது!

தமிழ் உதயம் said...

வெகுநாள் கழித்து ஒரு நகைசுவை பதிவு. சிரித்தேன்.

திவ்யாஹரி said...

ஹா..ஹா..ஹா.. நல்ல நகைச்சுவை..

meenakshi said...

நல்ல நகைச்சுவையா எழுதி இருக்கீங்க. சூப்பர்!

ஹேமா said...

என்ன ...பால் இவ்ளோ மலிவாயிட்டார்.
ஆக 100 ரூபாதானா !

பாவம் அது சாத்திரம் சொல்லி உங்க வாயில அகப்பட்டு ...!

Ananthi said...

எண்காலி (paul ) கிட்ட இந்த தொடர் பதிவு எவ்ளோ நாள் நீடிக்கும்னு கேட்டு சொல்லுங்க...ஸ்ரீராம்??

சும்மா விளையாட்டுக்கு சொன்னேன்.. நல்லா இருக்குங்க.. :-))

Ananthi said...

உங்கள் நட்பிற்கு ஒரு விருது (பரிசு) வழங்கி இருக்கிறேன்..
பெற்றுக்கொள்ளுங்கள்.. நன்றி :-)

http://anbudanananthi.blogspot.com/2010/07/blog-post_15.html

அப்பாதுரை said...

நடிகை சொப்பன சுந்தரி போட்டோ இருக்குங்களா?

அப்பாதுரை said...

கேள்விக்கு கட்டணம் செலுத்துறது நல்ல நோட்டிலா கோயமுத்தூர் நோட்டிலா?? எப்போதோ கிடைத்த ஜி.டி.நாயுடு நோட்டு ஒண்ணு இன்னும் கிடக்கு (GDNநோட்டுனு ஏன் பெயர் வந்துச்சு?)

அப்பாதுரை said...

ரெண்டு கேள்விங்களையும் ஓடு.. ஐ மீன்.. எண்காலி கிட்டயே கேட்டு சொல்லுங்க.

அப்பாதுரை said...

இந்த மாதிரி அடாவடி செஞ்சா தான் செஞ்சுரி அடிக்க முடியும் போலிருக்கே?

எங்கள் said...

// அப்பாதுரை said...
நடிகை சொப்பன சுந்தரி போட்டோ இருக்குங்களா?//

கட்டண விவரத்திற்குப் பக்கத்தில் இருக்கும் படம், மேக்கப் இல்லாத சொப்பன சுந்தரி படம்தான்.

அப்பாதுரை said...

அது வெள்ளை சுந்தரி படம் போல இருக்கே? சொப்பன சுந்தரி டெக்னிக் கலர் இல்லையா ஸ்வாமி?

எங்கள் said...

// அப்பாதுரை said...
கேள்விக்கு கட்டணம் செலுத்துறது நல்ல நோட்டிலா கோயமுத்தூர் நோட்டிலா?? எப்போதோ கிடைத்த ஜி.டி.நாயுடு நோட்டு ஒண்ணு இன்னும் கிடக்கு (GDNநோட்டுனு ஏன் பெயர் வந்துச்சு?)//

பால் கூறிய பதில்: கோயமுத்தூர் நோட்டு நூறு ரூபாய் (ஆயிரத்துத் தொள்ளாயிரத்து அறுபதுகளில்) அடித்தவர் பெயர் G. Krishnan. அந்த நோட்டுகளின் அபரிதமான,அசலுடன் ஒத்துப் போகும் தன்மையைப் பார்த்து வியந்தவர்கள், எதையும் எளிதாக, சிக்கனமாக உருவாக்கக் கூடிய தொழில் அறிவு கொண்ட மேதை திரு GDN அவர்கள் பெயரை அந்த நோட்டுகளுக்கு, அறிந்தோ அறியாமலோ சேர்த்துவிட்டனர். விவரங்களை அறிய, G Krishnan, counterfeit currency என்ற கீ வோர்ட்ஸ் கொடுத்து, கூகிளிட்டு தெரிந்துகொள்ளவும்.

எங்கள் said...

// அப்பாதுரை said...
இந்த மாதிரி அடாவடி செஞ்சா தான் செஞ்சுரி அடிக்க முடியும் போலிருக்கே?
//
சரியா கண்டுபிடிச்சுட்டீங்க. கெட்டியா புடிச்சுக்குங்க, இந்த யுக்தியை.
ஆனால் என்ன? நீங்க செய்யறது அடாவடி இல்லை. கோயமுத்தூர் நோட்டு பற்றி நீங்க கேட்டிருக்காவிட்டால், எங்களுக்கு அதைப் பற்றிய விவரம் தெரிய வந்திருக்காது. அல்லது சொல்லத் தோன்றியிருக்காது. விவரங்களை வெளிக்கொணர உதவியதற்கு நன்றி.

எங்கள் said...

// அப்பாதுரை said...
அது வெள்ளை சுந்தரி படம் போல இருக்கே? சொப்பன சுந்தரி டெக்னிக் கலர் இல்லையா ஸ்வாமி?//
அலையாதீங்க அப்பாதுரை :))))
விளம்பரத்தில் உள்ள அலைபேசி எண் சொப்பனசுந்தரியின் அலைபேசி எண்தான்.

சொப்பன சுந்தரி said...

ஹல்லோ - என்னுடைய செல் எண்ணைக் கொடுத்ததற்கு நன்றி. பால், எண்காலியிடம், வாசகர்கள் கேட்ட கேள்விகளை, (நேற்றிலிருந்து, இன்று வரையிலும்) engalblog@gmail.com ஜி மெயில் முகவரிக்கு அனுப்பியுள்ளேன். தொடர்ந்து கேள்விகள் வந்து குவிந்தவண்ணம் உள்ளது. அவ்வப்போது அனுப்புகின்றேன். சுதந்திர தினத்தன்று, வரலாறு காணாத கூட்டம் கூடும் என்று தோன்றுகிறது.
சொப்பன சுந்தரி.
(அடுத்த பதிவிலாவது, என்னுடைய மேக்கப்புடன் உள்ள படத்தை வெளியிடவும்.)

வெறுத்துப்போன வெறும் பய said...

என்ன விளையாடுகின்றீர்களா? எப்போது ரிங் பண்ணினாலும், நீங்க கொடுத்திருக்கிற செல் எண்ணில், 'தி நம்பர் யு ஆர் டிரையிங் டு ரீச் இஸ் கரன்ட்லி ச்விட்சுடு ஆப்' என்று ஒரு பெண் சொல்கிறாளே?

எங்கள் said...

வெறுத்துப்போன வெறும்பய சார்! அதுதான் சொப்பனசுந்தரியின் குரல்.

அப்பாவி தங்கமணி said...

ஹா ஹா ஹா சூப்பர்...
(அந்த பால் கிட்ட நான் ஒரு கொஸ்டின் கேக்கணும்... சொப்பன சுந்தரி இன்னுமா இருக்காக.... கரகாட்டகாரன் செட்லையே போய்டாங்கனல்ல நெனச்சேன்... இது என்னோட கேள்வி இல்ல... ரங்க்ஸ் கேக்க சொன்னது...ஹா ஹா)

எங்கள் said...

அப்பாவி தங்கமணி, கரகாட்டக்காரன் படத்தில் செந்தில் கவுண்டமணி ஜோக்கில் சொல்லப்படுகின்ற நடிகை சொப்பன சுந்தரியா அல்லது ஜிகினா ஸ்ரீ யா?

Madhavan said...

Didn't I comment ?

எங்கள் said...

Madhavan sir,
your comments are in part I only. The above is your first comment in this Part II blog post.

Madhavan said...

//பொதுத் தேர்தல் பற்றிய கேள்விகள் -- Rs.10,000.00 //

பொதுவா தேர்தலை பத்தி கேட்டா ?

Madhavan said...

அடாடா.. மேலே ஒரு '0 ' விட்டுப்போயிடுச்சே.... பரவாயில்லை '0'க்குத்தான் மதிப்பில்லையே.. ஒக்கே ஒக்கே..

குரோம்பேட்டைக் குறும்பன் said...

// பொதுவா தேர்தலைப் பற்றி கேட்டா?//
பால் நொந்து போயிடும்.

Post a Comment

இந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க!