செவ்வாய், 6 ஜூலை, 2010

கூகிள் பிரச்னை.

வாசகர்கள் எல்லோருக்கும் இந்த விஷயம் தெரிந்திருக்கும். இருந்த போதிலும், நாங்கள் இதை ஒரு பதிவாகவே போட்டுவிடுகிறோம்.

கூகிள ப்ளாகர் - கருத்துரை பதிவு செய்வதில், ஒரு பிரச்னை இன்று (ஜூலை ஆறு ) காலை முதல் இருந்து வருகிறது.

கமெண்ட் பதிவு செய்வது, ஜி மெயிலில், ஆசிரியர் உள் பெட்டிக்கு நகல் வருகிறது. ஆனால், பதிவில் கருத்துரை வரவில்லை. 

எங்கள் பதிவு பற்றிய செட்டிங் எல்லாவற்றையும் மறுபடியும் சோதனை செய்து பார்த்து விட்டோம். நாங்கள் கொடுத்த செட்டிங் எல்லாம் சரியாக உள்ளன. கூகிள நிறுவனத்தின் ப்ளாகர் அமைப்பில் அவர்கள் 'பார்த்தவர் விவரங்கள்' பற்றி புதிய டாப் (tab) ஒன்றை சேர்த்திருக்கிறார்கள் - இதனால் எதுவும் ஏடா கூடம் ஏற்பட்டிருக்குமோ என்ற ஐயமும் உள்ளது. இதுவரை பல பதிவர்கள், அநேகமாக இந்த தடங்கல் பற்றி கூகிள நிறுவத்தினருக்கு எழுதியிருப்பார்கள் என்று தோன்றுகிறது. 

இதைப் படிக்கும் கூகிள ப்ளாகர்கள் உங்கள் பதிவுகளிலும், இந்தப் பிரச்னை உள்ளதா என்பது குறித்து எங்களுக்கு ஜி மெயில் அனுப்பவும். நன்றி. 

25 கருத்துகள்:

  1. ஸ்டாட்ஸ் சேர்த்திருப்பதால் வந்த பிரச்சினை மாதிரித் தெரியவில்லை.

    நிறையப் பதிவுகளில் கூகிள் கணக்கில் லாகின் ஆகியிருக்கும்போதே ஐ டி, பாஸ்வோர்ட் எல்லாம் திரும்பக் கேட்கிற மாதிரியான புகார்களைத் தான் நிறையப் பார்த்துக் கொண்டு இருக்கிறேன்.

    கும்மியடிப்பவர்கள் சங்கங்கள் எல்லாம் ஒன்று சேர்ந்து கூகிள்/ப்ளாக்கர் அலுவலகங்கள் முன்னால் தர்ணாசெய்யப் போவதாக அறிவித்தால் ஒருவேளை உடனடியாக நடவடிக்கை எடுப்பார்களோ?

    :-))

    பதிலளிநீக்கு
  2. எனக்கும் அந்த சோதனை நடந்து கொண்டு இருக்கிறது. காலையில் இருந்து வந்த பின்னுடங்கள் எல்லாம் ஈமெயில் இருக்கிறது ஆனால் பதிவில் இல்லை.

    பதிலளிநீக்கு
  3. எல்லோருக்குமே இன்று காலை முதல் இதே பிரச்சனைதான். சீக்கிரம் சரி செய்வார்கள் என நம்புவோம்.

    பதிலளிநீக்கு
  4. அட, இப்போது சரியாகி விட்டது போலிருக்கே:)!

    பதிலளிநீக்கு
  5. பல பிரச்சனைகள் உள்ளன. இரண்டு அல்லது மூன்று முறை காண்பிக்கிறது ஆனாலும் பதிவில் வரவில்லை

    பதிலளிநீக்கு
  6. குரோம்பேட்டைக் குறும்பன்6 ஜூலை, 2010 அன்று PM 9:08

    ஏற்கெனவே வந்த கமெண்ட்ஸ் கூட இப்போ காணாமல் போய்விட்டன !!
    கூகிள அலுவலகத்தில் ஏதோ கோஸ்ட் புகுந்துவிட்டது போல இருக்கு !!

    பதிலளிநீக்கு
  7. அண்ணே, நான் இந்த பதிவுலகத்துக்கு புதுசுங்னா, எனக்கும் காலையிலிருந்து இதே பிரச்சினைதான். எனக்கு மட்டும்னு நெனைச்சேன் எல்லோருக்கும்ன்ரது இபோதான் தெரியுது. எதாவது பண்ணி சரிபண்ணுங்னா.

    பதிலளிநீக்கு
  8. இன்று போட்ட பதிவிற்கு ஒரு பின்னூட்டமும் வராதது கண்டு பயந்தே போனேன். பிறகு அனுமானிக்க முடிந்தது பிரச்சனைகளை.

    பதிலளிநீக்கு
  9. ஹும்... எனக்கும் இதே பிரச்சனை தான்.. இது தெரிஞ்சு இருந்தா என்னோட வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த பதிவை ரெண்டு நாள் தள்ளி போட்டு இருப்பேன்..

    பதிலளிநீக்கு
  10. எல்லோருக்குமே இன்று காலை முதல் இதே பிரச்சனைதான். சீக்கிரம் சரி செய்வார்கள் என நம்புவோம்.

    பதிலளிநீக்கு
  11. இதுக்குத் தான் பதிவெழுதறதே இல்லை.

    பதிலளிநீக்கு
  12. இன்னும் சரியாகவில்லை:(! இங்கே மட்டுறுத்தல் இல்லாததால் பின்னூட்டங்கள் பப்ளிஷ் ஆகியுள்ளன போலும்.

    பதிலளிநீக்கு
  13. அதே..பிரச்சனைதான் எனக்கும் !

    பதிலளிநீக்கு
  14. செஞ்சுரி அடிச்ச சாய்ராம்.. ஹூரே! எங்கள் ஸ்கோர்கீபிங் ஆடிட் செய்யணும்... எனக்குப் பின்னாலிருந்தவர் எப்படிங்க கபால்னு தாண்டிப் போனாரு? அப்படி ஒண்ணும் பவுண்டரி சிக்சர் அடிச்ச மாதிரி காணோம்? இன்னா கண்ணா வெள்ளாட்டு இது?

    பதிலளிநீக்கு
  15. ஆங்கிலத்தில் எழுதினால் உடனே பதிவாச்சு.
    இரன்fடாம் தடவை பார்த்தால் அதுவும் போச்சு.
    ஏற்கனவே என் இணையத் தொடர்பில் ,கணினியில் என்று மல்டிபிள் பிரச்சினை இருப்பதால் இதுவும் எனக்கு மட்டும் என்று நினைத்துக் கொண்டிருந்தேன்.:(
    இப்போ உங்கள் எல்லாருடைய மெயிலையும் பார்த்த பிறகு மஹா சந்தோஷம்:)))

    பதிலளிநீக்கு
  16. அப்பாதுரை சார். கருத்துரைத்தவர்கள் டாப் இருபது பட்டியலில், கடந்த ஒரு மாதத்திற்குள் (இன்றைய தேதி அடிப்படையில்) கணக்கில் எடுத்துக்கொள்ளப்பட்டு, கூகிள் புள்ளி விவரங்கள் அளிக்கின்றது என்று நினைக்கிறோம். என் பெயரை பட்டியலிலிருந்து நீக்கிவிடுங்கள் என்று சாய்ராம் கருத்து பதியும் பொழுதெல்லாம், அவர் கணக்கில் ஒரு கருத்து பதிவு சேர்ந்துவிட்டது. எனக்கு புகழுரையே பிடிக்காது. என்னை யாரும் புகழாதீர்கள் என்றெல்லாம் சொல்லி சொல்லியே அரசியல்வாதிகள் புகழுரைகளை அறுவடை செய்துகொள்வது போல, சாய்ராம் சாமர்த்தியமாக உங்களை முந்திவிட்டார். அது மட்டும் அல்ல - இந்த டாப் இருபது பட்டியலில் உள்ள பெயர்களின் மீது சுண்டெலியை சொடுக்கினால், அந்த அந்த வலைப பதிவுகளை உடனே மேய முடிகிறது. பதிவர்களுக்கு இப்படி ஒரு இலவச விளம்பரம் கிடைக்குமா!! சந்தர்ப்பத்தைப் பயன் படுத்திக்கொள்ள எவ்வளவு SPS கள் இருக்கிறார்கள் பார்த்தீர்களா !

    பதிலளிநீக்கு
  17. மணி 1/1000. Yes - able to hear you. Loud and clear.

    பதிலளிநீக்கு
  18. எனக்கும் இந்த பிரச்சினை காலையில் இருந்தது.. இப்போ இல்லை.. :)


    ippa kekkuthaa.. ippo...ippoo :)

    பதிலளிநீக்கு
  19. //இந்த டாப் இருபது பட்டியலில் உள்ள பெயர்களின் மீது சுண்டெலியை சொடுக்கினால், அந்த அந்த வலைப பதிவுகளை உடனே மேய முடிகிறது. பதிவர்களுக்கு இப்படி ஒரு இலவச விளம்பரம் கிடைக்குமா!!//

    'எங்கள்' இந்த ரகசியத்தை வெளியே சொல்லி, எங்க மானத்த வாங்கிட்டீங்களே..?

    :-)

    பதிலளிநீக்கு
  20. மாதவன் - பதிவர்கள் விளம்பரம் செய்துகொள்வதில் ஒரு தவறும் இல்லை. பூக்கடைக்குதான் விளம்பரம் தேவை இல்லை என்பார்கள். வலைப்பூக்களுக்கு விளம்பரம் தேவை. அவசியமான ஒன்று. ஆனால் ஒரு விஷயம் - வாசகர்களை ஒரு முறை விளம்பரம் மூலம் நம்முடைய வலைக்கு இழுக்கலாம். அதற்குப் பிறகு அவர்களை நம் வலைப்பூவிற்கு தொடர்ந்து வரவழைப்பதில் நம் பதிவுகளின் தரம் முக்கிய பங்கு வகிக்கிறது.

    பதிலளிநீக்கு
  21. ஓஹோ, அப்படிப் போகுதா கதை? சாப்பாட்டுப் பந்தியில 'இவருக்குப் போடுங்க'னு பக்கத்து இலையை காட்டி தன் இலையை நிரப்பிக்கற டெக்னிக்கா? அடடே... மறந்தே போச்சுபா!

    சுண்டெலியை சொடுக்கறதா? மொதல்ல அதை எப்படி பிடிக்கறதுனு சொல்லுவே.. ('இங்கே rat தொல்லை ஜாஸ்தினு cat வளக்கலாம்னு பாக்கறேன்' - பேரறிஞர் ஜானகி)

    பதிலளிநீக்கு
  22. //வாசகர்களை ஒரு முறை விளம்பரம் மூலம் நம்முடைய வலைக்கு இழுக்கலாம். அதற்குப் பிறகு அவர்களை நம் வலைப்பூவிற்கு தொடர்ந்து வரவழைப்பதில் நம் பதிவுகளின் தரம் முக்கிய பங்கு வகிக்கிறது.//

    நல்லாச் சொன்னீங்க.. இப்பத்தெரியுது, என்னோட வலைப்பூவுல, ரொம்பப் பேரு படிச்சு கமெண்ட்டு போடமாட்டேங்கராங்கனு..v :(

    பதிலளிநீக்கு
  23. அன்பார்ந்த ஜோதிடகளுக்கு வணக்கம். தங்களுக்கு தேவையான அனைத்து வகை மென்பொருட்கள் உருவாக்கி தருவதற்கு உங்களுக்கும் ஜோதிடக் கலைக்கும் கடமைப்பட்டு உள்ளேன். நாங்கள் வாக்கியப் பஞ்சாங்கம், திருக்கணிதப் பஞ்சாங்க முறைப்படி அனைத்து வகை அயனாம்சத்தைப் பயன்படுத்தி ஜோதிட மென்பொருட்கள் உருவாக்கி தருகிறோம்

    பதிலளிநீக்கு

இந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க!