செவ்வாய், 10 ஆகஸ்ட், 2010

என்ன ஒரு ஆச்சரியகரமான கண்டுபிடிப்பு!


அமெரிக்காவில் இருக்கின்ற எங்கள் சிறப்பு நிருபர் அளித்த தகவல்களின் அடிப்படையில் இந்தக் கட்டுரை.

இது ஒரு விஞ்ஞானக் கண்டுபிடிப்பு. அதுவும் நம்மூர்க்காரர் கண்டுபிடித்த எந்திரன் ... இல்லை, இல்லை எந்திரம்(!) என்பது நமக்குக் கூடுதல் மகிழ்ச்சியளிக்கும் சமாச்சாரம். அது என்ன? இந்த எந்திரம் என்ன செய்யும்?

எந்திரம் பார்ப்பதற்கு ஒரு எம் ஆர் ஐ ஸ்கானர் போல இருக்கும்.

அப்புறம்?
இந்த ஸ்கானர்ல உள்ளே ஒரு மனிதனை உச்சி முதல் பாதம் வரையிலும் ஸ்கான் பண்ண வேண்டியது. 

அதற்கப்புறம்?
அதோ வலதுகோடியில் தெரிகின்ற சிவப்பு விளக்கும், பச்சை விளக்கும் மாறி மாறி எரிந்து அணையும்.

உம் அப்புறம்.
ஒரு பச்சை பட்டன் அமுக்கினால், வெளியே வரும் ஒரு எக்ஸ் டி கார்ட். 
(கீழே இருப்பது மாதிரி) 


இதுல என்ன விசேஷம்?
இதுக்கு மேலே ஒரு இருபது இலக்க எண் இருக்கின்றது அல்லவா? அதுதான் ஸ்கான் செய்யப்பட்டவரின் அடையாள எண். 

ஆமாம், இன்றளவில் உலக ஜனத்தொகை, எழுநூற்று மூன்று கோடி என்றல்லவா கேள்விப் படுகிறேன்? அதற்கு பத்து இலக்கங்கள் போதுமே? ஏன் இருபது இலக்கங்கள்? 
அதுதான் சஸ்பென்ஸ். மீதி இருக்கின்ற பத்து இலக்கங்களில், ஸ்கான் செய்யப்பட்டவரின் ஒவ்வொரு நுண்ணிய விவரமும், இந்த எக்ஸ் டி கார்டில் பதிவாகிவிடும். 

அட சுவாரஸ்யமாக இருக்கின்றதே! அந்த விவரங்களை வைத்துக்கொண்டு என்ன செய்யலாம்?
இந்த எக்ஸ் டி கார்டை, ஒரு கம்பியூட்டரில் செலுத்தினால், ஸ்கான் செய்யப்பட்டவரின் முழு விவரங்கள் - அவர் யார்? எங்கு பிறந்தார்? தாய் தந்தை யார்? என்ன இரத்த வகை? எங்கு படித்தார்? என்ன படித்தார்? என்ன மொழி பேசுபவர், இன்னும் அவர் உள்மன நினைப்புகள் உட்பட எல்லாவற்றையும் பிட்டுப் பிட்டு வைத்துவிடும். 

அப்போ தீவிரவாதிகளைப் பிடிப்பது சுலபமான காரியம் ஆகிவிடும்?
இதையும் விட ஒரு சூப்பரான சமாச்சாரம் இருக்கின்றது. இந்த எக்ஸ் டி சிப்பை வைத்துக்கொண்டு .....(பக்கத்தில் யாரும் இல்லையா என்று உறுதிப் படுத்திக்கொள்ளுங்கள். உங்களுக்கு மட்டும் ரகசியமாக சொல்லுகின்றேன்...)
(தொடரும்)

16 கருத்துகள்:

  1. நம்ம ஊர்க்காரர் கண்டுபிடிப்பா? ஹ்ம்ம்ம்.. பலே?

    பதிலளிநீக்கு
  2. சஸ்பென்ஸ் தாங்கலை. திருடி ஃபார்மட் பண்ணிட்டா என்ன பண்றது:))

    பதிலளிநீக்கு
  3. பக்கத்துல யாரும் இல்ல. சிதம்பர ரகசியத்தை சொல்லுங்க.

    பதிலளிநீக்கு
  4. வாழ்த்துக்கள்.அருமையான தகவல்.அதுவும் ....உடனுக்குடன்...!

    பதிலளிநீக்கு
  5. வாவ்...சூப்பர்...நம்ம ஊரு மூளை என்ன சும்மாவா.... நல்ல பகிர்வு நன்றி...

    பதிலளிநீக்கு
  6. சபாஷ் அருமையான கண்டுபிடிப்பு.....நம்ம ஊர் காரரா??? இது என்ன மாசின் பேர் என்னே?

    பதிலளிநீக்கு
  7. உடனே இது குறித்து நந்தன் நீல்கேணிக்கு சொல்லுங்க! அவர் வேலை போனாலும் பொழைச்சுக்குவார் ஆனால் பாடு மிச்சம்.

    பதிலளிநீக்கு
  8. பதிவுக்கேத்த பின்னூட்டங்கள்!
    இதுலே, தமிழ் உதயம் பின்னூட்டியது தான் டாப்!

    சிரிச்சு.. சிரிச்சு.. அம்மாடி, சாமி...

    பதிலளிநீக்கு
  9. இதன் அடுத்த பகுதி (இந்த விவரங்களை நாங்கள் வெளியிட்டதால், எங்களுடன் கோபித்துக் கொண்டு 'டூ ' விட்டுவிட்ட) எங்கள் அமெரிக்க சிறப்பு நிருபர் (சௌஜன்யமாகி) எங்களுக்கு மேற்கொண்டு தகவல்கள் கொடுக்கும் பொழுது வெளியாகும்.

    பதிலளிநீக்கு
  10. //வெளியிட்டதால், எங்களுடன் கோபித்துக் கொண்டு 'டூ ' விட்டுவிட்ட) //

    நேற்று உங்கள் ஆஃபீசிலிருந்து 'அவசரப் பட்டுட்டேண்டா முருகா அவசரப் பட்டுட்டேன் நு கேட்ட புலம்பல் ஆசிரியரது தானா? நான் என்னவோ சிங்காரவேலன் பார்த்துக் கொண்டிருக்கிறீர்கள் தொந்தரவு செய்ய வேண்டாம் என்று பொய் விட்டேன்.

    பதிலளிநீக்கு

இந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க!