வெள்ளி, 29 அக்டோபர், 2010

விளம்பரம் செய்யத் தெரியுமா?


படைப்பாற்றல் நிரம்ப உபயோகமாவது, விளம்பர உலகத்தில்தான். எங்கள் வாசகர்கள் நிறைய பேர் படைப்பாற்றல் மிக்கவர்கள் என்பது, பதிவுலகம் அறிந்த விஷயம். 

இதோ ஒரு பொருள். 

இதை உற்பத்தி செய்பவர் ஒருவர், உங்களை அணுகி, எல்லோரும் இந்த பிராண்டு குன்டூசிகளையே வாங்கும்படி செய்யவேண்டும், அந்த வகையில் உங்களை விளம்பரம் ஒன்றை வடிவமைக்கச் சொல்கிறார் என்று வைத்துக்கொள்வோம். 

பிராண்டு பெயர் தொடங்கி, விளம்பர வாசகங்கள், விளம்பரப் படம் (யார் நடித்தது, என்ன தீம -- etc etc ... ) எல்லாவற்றிற்கும் உங்களுக்கு முழு சுதந்திரம்.  

இந்த விளம்பரத் திடலில் இறங்கி, பாட் செய்ய, பந்து போட, ஃபீல்ட் செய்ய உங்கள் எல்லோருக்கும் ஒரு வாய்ப்பு. Free wheeling இருக்கவேண்டும் என்பதற்காக, நாங்கள் அதிகம் நிபந்தனைகள் விதிக்கவில்லை. 
  
அப்படி ஏதாவது அவசியம் ஏற்பட்டால், பின்னூட்டத்தில் அவ்வப்போது சொல்கிறோம். 

வழக்கம் போல, ரொம்பப் பெரிய, நூறு வார்த்தைகளுக்கு மேற்பட்ட கருத்தாக இருந்தால், engalblog@gmail.com மின்னஞ்சலுக்கு அனுப்புங்கள். தனிப்பதிவாகப் போட்டுவிடலாம். 

சும்மா போட்டி மட்டும் வைக்காமல், ஒரு சுவையான கதையும்:  

ஓர் ஊரில் ஒரு புதை பொருள் ஆராய்ச்சியாளர். அவர் ஒரு இரும்பு நகரத்தில் ஒரு புதையல் கண்டு பிடித்தார். சுமார் ஒவ்வொரு கிலோ எடை உள்ள இரும்புக் கட்டிகள், பத்துப் பதினைந்து ஓரிடத்தில் அவருக்குக் கிடைத்தது. அவைகளை அவர், அந்த ஊரில் இரும்பு வேலை செய்யும் உழைப்பாளிகளிடம், ஆளுக்கு ஒரு கட்டி கொடுத்தார்.

கட்டிகளைப் பெற்றுக் கொண்ட உழைப்பாளிகள், ஒவ்வொருவரும் அதை வெவ்வேறு உருமாற்றங்கள் செய்தனர். 

முதலாமவர், ஒரு கிலோ இரும்பில் ஓர் இரும்புலக்கை செய்து, அதை இருபது ரூபாய்க்கு விற்றார்.

இரண்டாமவர், அந்த இரும்பில் ஒரு கிலோ எடைக்கல் ஒன்று செய்து, அதை முப்பது ரூபாய்க்கு விற்றார். 

மூன்றாமவர், அந்த இரும்பில் நான்கு சுத்தியல் செய்து, ஒவ்வொன்றும் முப்பது ரூபாய் என்று விற்றார்.

இன்னொருவர் அந்த இரும்பில் ஆணிகள் செய்து, அவற்றை இருநூறு ரூபாய்க்கு விற்றார். 

ஒருவர் மட்டும், அந்த ஒரு கிலோ இரும்பில் குண்டூசிகள் செய்து அவற்றை ஆயிரம் ரூபாய்க்கு விற்றார். 

(இந்தக் கதையின் நீதி என்ன?) 


26 கருத்துகள்:

  1. Its not quantity (எடை ) - but quality of the idea that matters???
    ha,ha,ha,ha,ha...

    பதிலளிநீக்கு
  2. நீதி: பிரிவினைகள் அதிகமானால் பாஸுக்கு, அதிக "லாபம்" :))

    பதிலளிநீக்கு
  3. குரோம்பேட்டைக் குறும்பன்30 அக்டோபர், 2010 அன்று PM 12:23

    இதோ ஒரு விளம்பரப் படம்:

    நடிகர் பிரகாஷ்ராஜ வருகிறார். இதோ குரும்பூசி அளிக்கும் ஒரு கோடி ரூபாய் சாலஞ்ச் --
    எங்கள் குரும்பூசி ஒன்றை எடுத்துக்கொண்டு, அதைப் போலவே இருக்கின்ற வேறு எந்த பிராண்ட் குண்டூசியையாவது உங்களால் காட்டி நிரூபிக்க முடிந்தால் உங்களுக்கு ஒரு கோடி ரூபாய். பரிசளிக்க நாங்கள் தயார், பரிசு பெற நீங்கள் தயாரா?

    (நிச்சயம் யாராலும் முடியாது. ஏன் என்றால், உலகில் ஒரு குண்டூசியைபோல, இன்னொன்று கிடையவே கிடையாது. அளவில் அல்லது எடையில் அல்லது பாலிஷ் ஃபினிஷ் எதிலாவது ஒரு இம்மி மாற்றமாவது நிச்சயம் இருக்கும்.)

    பதிலளிநீக்கு
  4. (இந்தக் கதையின் நீதி என்ன?)

    எதையும் ப்ளான் பண்ணி பண்ணனும். ப்ளான் பண்ணாம பண்ணப்படாது. :))

    பதிலளிநீக்கு
  5. //வானம்பாடிகள் said...எதையும் ப்ளான் பண்ணி பண்ணனும். ப்ளான் பண்ணாம பண்ணப்படாது. :))//

    Super

    பதிலளிநீக்கு
  6. கதையோட நீதி என்னன்னா நீங்க நல்லா பிளாக் நடத்தறீங்க

    பதிலளிநீக்கு
  7. ஐந்தாமவர் இருந்திருந்தால், கைக்கடிகாரத்துக்கு ஹேர் ஸ்பிரிங் செய்திருப்பாரோ?

    பதிலளிநீக்கு
  8. இரும்பில விக்கிரகம் செய்து அஞ்சாயிரத்துக்கு
    வித்துடலாமே.:)

    பதிலளிநீக்கு
  9. ஊசி விற்பது எப்படி என்று காப்பிரைடிங் ஏஜென்சி கிட்ட யோசனை கேட்டுச் சொல்கிறேன்.:)

    பதிலளிநீக்கு
  10. சூப்பர் கதை.. நீதின்னு கேட்டீங்கன்னா....
    புத்தி உள்ளவன் பிழைப்பான்-ஆ?

    குண்டூசி செய்தவருக்கு கூர்மையான அறிவா??
    :-))

    பதிலளிநீக்கு
  11. மகன்: அம்மா school-க்கு நேரமாச்சு சீக்கிரம் டிபன் குடுங்க..

    அம்மா: இன்னைக்கு லீவுடா... republic day

    மகன்: அதாம்மா.. கொடி ஏத்துவாங்க..நான் போகணும்... கொடியைக் குத்திக்கிறேன்..

    அம்மா: இருடா கண்ட ஊசியில் குத்திக்காதே.. குமரன் குண்டூசி குத்திக்கோ

    அசரீரி: கொடி காக்கும் குமரன் குண்டூசிகள்..

    பதிலளிநீக்கு
  12. மேற்படி விளம்பரத்தில் வியாபாரம் அமோகமாக நடக்கவே, குமரன் நிறுவனத்தினர் புதிய product அறிமுகம் செய்கின்றனர்.


    நிருபர்: உலக அழகியான நீங்கள்.. இந்தியப் பண்பாட்டை மறக்காமல் புடவையும் கட்டிக்கொள்கிறீர்களே.. உங்களுக்கு புடவை வேகமாக கட்டத்தெரியுமா?

    ஐஸ்வர்யா ராய்: புடவை கட்டுவது பெரிதல்ல.. அதற்கு சரியான safety pins குத்திக்கொள்ள வேண்டும். நான் பயன்படுத்துவது குமரன் safety pins தான்..!

    பதிலளிநீக்கு
  13. வியாபாரம் மேலும் பெருகிவிட்டது.. இனி வரும் விளம்பரங்கள் அச்சு பிச்சாகத்தான் இருக்கும்

    பதிலளிநீக்கு
  14. மோ சி பாலன் - அசத்திட்டீங்க! விளம்பர ஏஜென்சி ஏதாவது வைத்திருக்கிறீர்களா!!

    பதிலளிநீக்கு
  15. ஒருத்தி: ஐயோ அப்பா கீழே விழுந்துட்டீங்களே...

    தோழி: ....என்ன ஆச்சு..?

    ஒருத்தி: எங்க அப்பா படம் கீழே விழுந்துடிச்சி.. house owner ஆணி அடிக்கக் கூடாதுன்னு கண்டிஷன் போட்டதுனால பழைய ஆணில மாட்டினேன். அதான்..

    தோழி: ..ப்பூ இதுதானா விஷயம்.. நான் குமரன் குண்டூசிகளில் தான் படங்களை மாட்டுவேன். ஆணியை விட strong-ஆக்கும்..

    அசரீரி: house owner க்குத் தெரியாமல் ஆணி அடிக்க .. குமரன் குண்டூசிகள்..

    பதிலளிநீக்கு
  16. மோ சி !!!
    அடுத்த பந்திலும் சிக்சரா!!!
    வெரி குட்!

    பதிலளிநீக்கு
  17. துரியோதனன்: தம்பி..திரௌபதியின்.. சேலையைப் பிடித்துகொண்டு ஏன் நிற்கிறாய்..?

    துச்சாதனன்: அண்ணா இவள் சேலையை இழுக்க முடியவில்லை..

    திரௌபதி: எப்படிடா முடியும்..? கிருஷ்ணன் தந்த குமரன் safety pins குத்தியிருக்கிறேனடா..


    கிருஷ்ணன் (நம்மிடம் மெதுவான குரலில்): முன்பு போல் நிறைய சேலைகள் விடமுடிவதில்லை. cost cutting. அதனால் தான் குமரன் safety pins..!

    பதிலளிநீக்கு
  18. பத்து மணியாச்சு office கிளம்பாமல் blog- எதற்கு? என்று வீட்டம்மாள் குண்டூசியில் (குமரன் குண்டூசிதாங்க) குத்துவதால் நான் கிளம்புகிறேன்...!
    எங்கள்-ஐ மாலை மீண்டும் சந்திக்கிறேன்...!

    பதிலளிநீக்கு
  19. ஆறு பந்துகளிலும் ஆறு அடித்த மோ சி பாலன் அவர்களுக்கு,
    தங்கத்தில் செய்யப்பட்ட குமரன் குண்டூசி பரிசளிக்கலாம் போலிருக்கிறது!!
    வெல் டன் !!

    பதிலளிநீக்கு
  20. மோ.சி.பாலன், தூள் கிளப்பிட்டீங்க. உங்கள்
    க(வி)ற்பனைத் திறன் சூப்பர்.

    பதிலளிநீக்கு
  21. Request to reader(s): If you are marking 'no good' in the reaction box for any blog post, please provide your view in the comments column, (even as anonymous) the reason for your reaction rating. This will help us to improve the quality of our future blogs. Thank you.

    வாசகர்களுக்கு ஒரு வேண்டுகோள்:
    பதிவுகளின் கீழே உள்ள மூன்று பெட்டிகளில், (Very good / Good / No good) ஏதேனும் ஒன்றை தெரிவு செய்து டிக் அளிப்பவர்களுக்கு எங்கள் நன்றி. எப்பொழுதாவது சில பதிவுகளுக்கு No Good பெட்டியும் மார்க் செய்யப்படுவது காண்கிறோம். அப்படி மார்க் செய்பவர்கள், அந்தப் பதிவு தங்களுக்கு ஏன் பிடிக்கவில்லை என்பதை, 'அனானி' யாகவாவது கமெண்ட் எழுதி தெரிவித்தால், எங்களின் பதிவுகளின் தரத்தை உயர்த்த, எதிர்காலத்தில் எங்களுக்கு உதவியாக இருக்கும். தயவு செய்து, ஏன் பிடிக்கவில்லை என்பதை, எங்களுக்கு, கருத்துரையாக தெரிவியுங்கள்.
    நன்றி.

    பதிலளிநீக்கு

இந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க!