செவ்வாய், 9 நவம்பர், 2010

தீபாவளிக்குத் தங்கமணியின் தயாரிப்புகள்


வலைப் பேச்சின் பொழுது, 'தீபாவளிக்கு என்னென்ன பட்சணங்கள் செய்தீர்கள்?' என்று கேட்டார், நம் நண்பர் வலையாபதி. நான் சமையலறைக்குப் போய், அங்கு கண்ணில் கண்டவைகளை, சோனி டிஜிட்டல் காமிராவால் சுட்டு, படங்களை சுடச் சுட, அவருக்கு மின்னஞ்சல் மூலமாக அனுப்பி வைத்தேன். 

அவர், அவைகள் என்னென்ன என்று தெரிந்துகொண்டார். அவருடன், அறையில் தங்கியிருந்த, ஆங்கிலம் மட்டுமே அறிந்த நண்பர் ஒருவருக்கு, அந்தப் படங்களைக் காட்டியதும், அவர் ஆங்கிலத்தில் கூறிய சொற்கள் இங்கே உள்ளன. 

1. பயோ டிக்ரேடபிள் கோல்ஃப் பால் (Bio degradable golf ball)  
  

2. மாஜிக் பிரிக் (Magic brick)   
  

3 சூப்பர் குளூ (Super glue)   
   

4.பின் குஷன் (Pin cushion)    
      

5 பேர்ட்ஸ் நெஸ்ட் (Bird's nest)    
    
(நாங்கள் அனுப்பிய படங்கள் இவை அல்ல. ஆங்கில நண்பர் கூறிய வார்த்தைகளுக்குத் தகுந்த வகையில் சில படங்கள் தேடிப் பிடித்துப் போட்டுள்ளோம்!)


தங்கமணி செய்தவை என்னென்ன பட்சணங்கள் என்று நீங்க கண்டு பிடியுங்க! கண்டு பிடித்த பட்சணப் பெயர்களை,  பின்னூட்டத்தில் பதியுங்கள்.   
                               

16 கருத்துகள்:

  1. லட்டு
    மைசூர் பாகு
    அல்வா
    பணியாரம்
    இடியாப்பம்

    பதிலளிநீக்கு
  2. குரோம்பேட்டைக் குறும்பன்9 நவம்பர், 2010 அன்று PM 1:49

    எல்லாவற்றிலும் ஒரு சாம்பிள் அனுப்புங்க. (சாப்பிட்டுப்) பார்த்து சரியான பதிலை பதிகின்றேன்!

    பதிலளிநீக்கு
  3. லாடு
    மைசூர் பாக்
    கோதுமை அல்வா
    அப்பம்
    முறுக்கு

    விடை சரியாக இருந்தால்... எல்லாவற்றிலும் சாம்பிள் எனக்கு அனுப்ப வேண்டும்...

    பதிலளிநீக்கு
  4. 1) குலோப்ஜாமுன் அல்லது ரசகுல்லா
    5) சோன் பாப்டி..

    Other's as told by LK, already.

    பதிலளிநீக்கு
  5. ரசகுல்லா
    மைசூர்பாகு
    அல்வா
    ----------
    ----------

    அடுத்த தீபாவளிக்கு பட்சணங்கள் நீங்கள் செய்ய வேண்டும். தங்கமணி பதிவு இட வேண்டும்:)!

    பதிலளிநீக்கு
  6. ரசகுல்லா
    மைசூர் பா
    அல்வா
    குழிப்பணியாரம்
    ஓமப்பொடி

    பதிலளிநீக்கு
  7. லட்டு
    மைசூர்பாக்க்(அழுத்திச்சொன்னாலாவது ஒடையுதான்னு பார்க்கலாம்)
    அல்வா
    அப்பம்,பணியாரம்,அதிரசம்
    ஓமப்பொடி

    பதிலளிநீக்கு
  8. லட்,மைப்க்,அல்,பாஷ்,ஓம்ப் பட் போட் வைத் எர்ச் கொட்.

    பதிலளிநீக்கு
  9. ரசகுல்லா, மைசூர் பாக், அல்வா, நெய் பணியாரம், ஓம்பொடி.

    அப்பாதுரை சூப்பர்! :)

    பதிலளிநீக்கு
  10. இதுக்கு அந்த மைசூர்பாக்ல அடி விழுந்து அடுத்த ஐட்டம் வரப்போறது:))

    பதிலளிநீக்கு
  11. லட்டு.கேசரி,அல்வா,குழிப்பணியாரம்,இடியப்பம்.

    பதிலளிநீக்கு
  12. ஹாஹாஹா அப்படியே ஒரு பார்சல் அனுப்பி இருக்கலாம் ஸ்ரீராம்..:))

    பதிலளிநீக்கு
  13. கண்ணா இது ஜிஜூபி..
    லட்டு/ரசகுல்லா(ச்சே இந்த google editor ராசா குல்லா என்று அடிக்கிறது.. என்ன டைமிங்கோ), மைசூர் பா, அல்வா, பணியாரம், முறுக்கே..
    சாம்பிள் வேண்டாம். (ஓல்ட் ஸ்டாக் ஆகிவிட்டபடியால்!)
    லட்டு/ரசகுல்லா - என்று இரண்டு option கொடுத்ததின் காரணம் லட்டு- படம் மஞ்சள் நிறத்தில் இருந்ததால். description / size படி பார்த்தால் ரசகுல்லா ( ச்சே மறுபடியும் ராசா குல்லா ... !)

    பதிலளிநீக்கு
  14. //ராசா குல்லா என்று அடிக்கிறது.. என்ன டைமிங்கோ//

    ha.. ha.. haa..

    பதிலளிநீக்கு

இந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க!