சனி, 20 நவம்பர், 2010

யாரோ? அவர் யாரோ?

1) தன்னுடைய துறையில், தெற்கே நடந்த ஒரு விபத்திற்குப் பொறுப்பேற்று ராஜினாமா செய்துவிட்டு, வீட்டுக்கு நடந்தே வந்தவர். 

2) கட்சிப் பணி ஆற்றுவதற்காக சிலர் பதவி விலகவேண்டும் என்று கூறி, முன் உதாரணமாக, தான் வகித்து வந்த பதவியைத் துறந்தவர். 

3) பதவியில் இருந்த நாட்களில், தன் வீட்டிற்கு அளிக்கப் பட்ட மேசை நாற்காலி இன்னபிற பொருட்கள் தேவையில்லை என்று நிராகரித்தவர். 

4) ஏழை மாணவர்கள் படிப்பிற்காக, தன் சொத்து முழுவதையும் எழுதி வைத்தவர். 

5) தன் பெயரிலோ, உற்றார், உறவினர், சந்ததியினர் பெயரிலோ, எந்த சொத்தும் இல்லாதவராக இருந்து, மறைந்தவர். 
              

21 கருத்துகள்:

  1. லால் பகதூர் சாஸ்திரி

    இவரும் ஒரு காங்கிரஸ் காரர்தான் அப்படிங்கறது பெரிய ஆச்சர்யம். இப்படியும் அரசியல்வாதிகள் இருந்திருக்கிறார்கள்.

    பதிலளிநீக்கு
  2. ராசா ராஜினாமா சமயத்துல, இத ஏன் ஞாபகப்படுத்துறிங்க.

    பதிலளிநீக்கு
  3. இரண்டாவது , காமராஜ்
    ஐந்தாவது கக்கன்

    பதிலளிநீக்கு
  4. தலைப்பை பார்த்தவுடன், பைரவி ராகம் நினைவில் வந்தது.. ஆவலோடு ஓடோடி வந்தேன்.. கடைசியில் இன்றைய தலைமுறைக்கு தெரியாத ஒரு விஷயத்தை பற்றி சொல்லியதை காண முடிந்தது.... இன்றைய சூழ்நினையில் அன்னாரைப் போன்றோரை நினைவில் கொள்வது கண்டிப்பாகத் தேவையான ஒன்று தான்.

    பதிலளிநீக்கு
  5. 1. லால் பகதூர் சாஸ்திரி (அரியலூர் ரயில் விபத்து)
    2. காமராஜர் (K Plan)
    3. காமராஜர்(?)
    4. பச்சையப்பர் (பச்சையப்பன் கல்லூரி)
    5. கக்கன்.

    பதிலளிநீக்கு
  6. இன்றைய தேதியில் அவர்களுக்கு ஒரே பெயர் தான் "பிழைக்கத் தெரியாதவர்"

    :(

    பதிலளிநீக்கு
  7. //Madhavan Srinivasagopalan said...

    கடைசியில் இன்றைய தலைமுறைக்கு தெரியாத ஒரு விஷயத்தை பற்றி சொல்லியதை //

    Class Madhavan

    பதிலளிநீக்கு
  8. //பெயர் சொல்ல விருப்பமில்லை said... இன்றைய தேதியில் அவர்களுக்கு ஒரே பெயர் தான் "பிழைக்கத் தெரியாதவர்" //

    அதுனால தாங்க நான் அரசியில் வரவேண்டாம் என்று முடிவு எடுத்துவிட்டேன். நிறைய செய்ய ஆசை, விடுவார்களா !!

    இங்கே ஒரு கோவிலில் சுப்ரமணிய சாமி அவர்களை சந்தித்து அவரின் தில் பற்றி பேசி, எனக்கு அரசியலில் நுழைந்து எதாவது செய்ய ஆசை என்றேன். அவர், "அது சாக்கடை சாய்" வேண்டாம் என்றார் !!

    சில வருடங்களுக்கு முன், என் பழைய பாஸின் அண்ணன் ஆந்திராவில் ராஜசேகர ரெட்டியுடன் போட்டியிட்டு தோற்றார். அவர் ஆர்.இ.சி. திருச்சி மற்றும் இங்கே சான்பிரான்சிஸ்கோ ஸ்டான்போர்ட் பல்கலைகழகம் இரண்டிலும் படித்து அமெரிக்காவில் சில பல டெக்னாலஜி கம்பெனிகளை உருவாக்கியவர். அரசியலில் மாறுதலை கொண்டு வரவேண்டும் என்று பண பலம், ஆள் பலம், பொறுக்கிகளின் பலம் இல்லாமல் இருந்த பணத்தையும் விட்டு இருக்கின்றார் !

    - சாய்

    பதிலளிநீக்கு
  9. //5) தன் பெயரிலோ, உற்றார், உறவினர், சந்ததியினர் பெயரிலோ, எந்த சொத்தும் இல்லாதவராக இருந்து, மறைந்தவர். //

    Anna Durai or Kamaraj ?

    பதிலளிநீக்கு
  10. //ஏழை மாணவர்கள் படிப்பிற்காக, தன் சொத்து முழுவதையும் எழுதி வைத்தவர் //

    இன்னும் இருபது வருடங்களில் - சாய்ராம் கோபாலன் !!!

    பதிலளிநீக்கு
  11. லால் பகதூர் சாஸ்திரி.

    இதையெல்லாம் ஏங்க ஞாபகப் படுத்துறீங்க:(?

    பதிலளிநீக்கு
  12. இப்போதுதான் தமிழ் உதயம் கருத்தைக் கவனிக்கிறேன். பாருங்க, எத்தனை பேருக்கு இப்படித் தோணுது என:)?

    பதிலளிநீக்கு
  13. ///
    @பெயர் சொல்ல விருப்பமில்லை said...

    இன்றைய தேதியில் அவர்களுக்கு ஒரே பெயர் தான் "பிழைக்கத் தெரியாதவர்"
    /////
    ஹிஹி

    பதிலளிநீக்கு
  14. /
    இன்னும் இருபது வருடங்களில் - சாய்ராம் கோபாலன் !!! ///

    பாரட்டுக்கள்

    பதிலளிநீக்கு
  15. //
    இன்னும் இருபது வருடங்களில் - சாய்ராம் கோபாலன் !!! //

    Classic of all classics

    பதிலளிநீக்கு
  16. 'கும்மி' சொல்லியிருக்கும் பதில்களில், மூன்றாவது பதிலைத் தவிர மீதி எல்லாம் சரி. மூன்றாவது கேள்விக்கான பதில், திரு அண்ணாதுரை.

    பதிலளிநீக்கு
  17. ஹூம்...னு ஒரு பெரிய பெருமூச்சுதான் வருது போங்க. :-(

    பதிலளிநீக்கு

இந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க!