Thursday, January 27, 2011

உள் பெட்டியிலிருந்து ..2011 01

எதிர் எதிரே...


1) பொறுமை கடலினும் பெரிது.. (All good things come to those who wait)

காலம் யாருக்காகவும் காத்திருப்பதில்லை! (Time and tide wait for none)

2) வாளின் முனையை விட பேனா முனை கூரானது. (The pen is mightier than the sword) 

பேசிக் கொண்டிருப்பதை விட செயல்படுவது நல்லது. (Action speak louder than words)

3) பல கைகள் சேர்ந்தால் வேலை எளிது. Many hands make the work lighter 
பலர் சேர்ந்து சமைக்க, பாழாகும் பண்டம். Too many cooks spoil the broth!

ஒரே வாய்ப்பு...இயற்கையாக நடி... இரண்டு வாக்கியங்களிலும் என்ன முரண்!
   
கிரிக்கெட் ஒரு ஃபிராடு கேம்தானே...!

** நோ பால் னு சொல்வாங்க... ஆனா கைல பால் வச்சிருப்பாங்க...!

**ஓவர்னு சொல்வாங்க...ஆனா திருப்பித் திருப்பிப் போட்டுகிட்டே இருப்பாங்க..

** பதினோரு பேர் விளையாடற ஆட்டத்துல ஆல் அவுட்னு சொல்வாங்க, ஆனா பத்து பேர்தான் அவுட் ஆகியிருப்பாங்க..

** ஒரு ஓவருக்கு ஆறு பாலும்பாங்க...ஆனால் ஒரே ஒரு பால்தான் வச்சிருப்பாங்க..!

** ஒரு பேட்ஸ்மேன் அவுட்டுன்னா அம்பையர் ஒரு கையைத் தூக்குவார்...சரி, ரெண்டு கையையும் தூக்கறாரே, ரெண்டு பேட்ஸ்மேனும் வெளியே போயிடுவாங்கன்னு பார்த்தா 'ஆறு ரன்னுடா'ங்கறாங்க...!  
              
 'ஷா' சொன்னது சரிதான் போல..!


மூன்று கட்டளைகள்...
(அ) சந்தோஷமா இருக்கும்போது சத்தியம் பண்ணாதீங்க...!

(ஆ) சோகமா வருத்தமா இருக்கும்போது பதில் சொல்லாதீங்க...!

(இ) கோவமா இருக்கும்போது எந்த முடிவும் எடுக்காதீங்க..!

20 comments:

எல் கே said...

//ஒரு பேட்ஸ்மேன் அவுட்டுன்னா அம்பையர் ஒரு கையைத் தூக்குவார்...சரி, ரெண்டு கையையும் தூக்கறாரே, ரெண்டு பேட்ஸ்மேனும் வெளியே போயிடுவாங்கன்னு பார்த்தா 'ஆறு ரன்னுடா'ங்கறாங்க...!
///

சரியாப் பார்க்கலை .. ஒரு கையில் ஐந்து விரல்கள் திறந்திருக்கும் .மற்றொன்றில் ஒரு விரல் மட்டுமே .

எல் கே said...

http://www.life.com/image/73656807

chk this picture

பின்னோக்கி said...

கிரிக்கெட் சந்தேகம் எல்லாம் ரொம்ப நல்லாயிருக்கு

தமிழ் உதயம் said...

பிடித்திருக்கிறது எதிர் எதிரே...

Gopi Ramamoorthy said...

நல்லா இருக்கு

Chitra said...

Good.

Whenever you have time:

http://konjamvettipechu.blogspot.com/2010/08/blog-post_17.html

தேனம்மை லெக்ஷ்மணன் said...

ஐயயோ தெரியாம வந்துட்டேன்.. எனக்கு தெரிஞ்ச கொஞ்ச நஞ்ச கிரிக்கட்டும் மறந்து போச்சு..:))

அப்பாதுரை said...

அப்ப ஒரு கை/விரல் உயர்த்தினா ஒரு ரன்னு அர்த்தமோ? ஹி ஹி.

விஜய் said...

சைனாமென்னு சொல்வாங்க ஆனா இந்தியா பௌலர் பௌலிங் போடுவாரு !!!!!

விஜய்

ஹேமா said...

உள்பெட்டியில் மூன்று கட்டளைகள் சரிதான் !

HVL said...

எல்லாம் நல்லாயிருக்கு. ஆனா மூன்று கட்டளைகள் ரொம்ப பிடிச்சிருக்கு.

Porkodi (பொற்கொடி) said...

இதுக்கு தான் எங்கம்மா ஜாஸ்தி படிக்காதே மூளை வழிஞ்சுரும்னு சொல்வாங்க.

Madhavan Srinivasagopalan said...

ஹி.. ஹி.. நாகூட இதுல ரெண்டு மூனு யோசிச்சு இருக்கேன்.. ஒங்களப் போலவே..
விட்டுப் போனது
கிரிக்கெட்டுலே : பேருதான் French கட், ஆனா அடிச்சது பிரெஞ்ச் மென் இல்லை.

எதிரும் புதிரும் :
௧) கிட்டாதாயின் வெட்டென மற
௨) முயற்சி உடையார் இகழ்ச்சியடையார்..

hema said...

பயனுள்ளதாகவும், சிந்திக்கவும் வைக்கிறது

Jawahar said...

கோபம் மட்டுமில்லை, எந்த உணர்வின் தாக்கத்தில் இருந்தாலும், சந்தோஷம் உட்பட, எடுக்கிற முடிவு சரியாக இருக்காது. முடிவெடுக்கும் போது அஸெர்ட்டிவாக இருந்தால் மட்டுமே, அதாவது அடல்ட் ஈகோவில் இருந்தால் மட்டுமே சரியான முடிவுகளை எடுக்க முடியும்.

http://kgjawarlal.wordpress.com

குரோம்பேட்டைக் குறும்பன் said...

// எல் கே said...
/.....ரெண்டு பேட்ஸ்மேனும் வெளியே போயிடுவாங்கன்னு பார்த்தா 'ஆறு ரன்னுடா'ங்கறாங்க...! /

சரியாப் பார்க்கலை .. ஒரு கையில் ஐந்து விரல்கள் திறந்திருக்கும் .மற்றொன்றில் ஒரு விரல் மட்டுமே .

அம்பயர் கையில் ஆறு விரல்கள் இருந்தால் - மட்டை வீசும் அணிக்கு ஏழு ரன்கள கொடுக்கப்படுமா?

குரோம்பேட்டைக் குறும்பன் said...

// மூன்று கட்டளைகள்...

(அ) சந்தோஷமா இருக்கும்போது சத்தியம் பண்ணாதீங்க...!


(ஆ) சோகமா வருத்தமா இருக்கும்போது பதில் சொல்லாதீங்க...!


(இ) கோவமா இருக்கும்போது எந்த முடிவும் எடுக்காதீங்க..! //

சரி

(அ) ரொம்ப வயித்தெரிச்சலோட சொல்றேங்க : " சத்தியமா நீங்க நல்லா எழுதறீங்க!"

(ஆ) கோவமா பதில் சொல்றேங்க "*சரி!*"

(இ) கோவமா இருக்கும்போது மட்டும் இல்லைங்க நான் எந்த நேரத்திலும் முடிவு எடுப்பதில்லை. திருமதிதான் எல்லா முடிவும் எடுப்பார்.

Madhavan Srinivasagopalan said...

//குரோம்பேட்டைக் குறும்பன் said...
" அம்பயர் கையில் ஆறு விரல்கள் இருந்தால் - மட்டை வீசும் அணிக்கு ஏழு ரன்கள கொடுக்கப்படுமா? " //

ஒங்களுக்கு ரூல்ஸ் தெரியாதா?
அம்பயர் ஆகணும்னா ஒவ்வொரு கைகளிலும் கண்டிப்பாக ஐந்து விரல்கள் இருக்க வேண்டும்.. ஐந்து விரல்கள் மட்டுமே இருக்க வேண்டும்..

தங்கம்பழனி said...

வெளையாட்டா இருக்குது.. !

ஹுஸைனம்மா said...

’ஷா’ சொன்னது ரொம்பச் சரி!! கிரிக்கெட்டின் விதிகளைப் புரிந்துகொள்வதற்குள் வெறுத்துடும்.

Post a Comment

இந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க!