Tuesday, January 18, 2011

நடைபாதை புத்தகக் கடை (அ)நியாயங்கள்

முப்பத்து நான்காவது புத்தகக் காட்சி நடந்த அரங்கத்திற்கு வெளியே, நடைபாதை புத்தகக் காட்சி.

சமீபத்தில், (இரண்டாயிரத்துப் பத்தில்) அண்ணாசாலையில், நடைபாதை புத்தகக் கடை ஒன்றில், (எல் ஐ சி அருகே) JOE GIRARD எழுதிய HOW TO SELL YOURSELF என்ற புத்தகம், வேறு ஒரு புத்தகம் விலை விசாரிக்கும் பொழுது, கடை போட்டிருக்கும் அய்யப்பசாமி, நூறு ரூபாய்க்கு எனக்கு விற்றார். அட பரவாயில்லையே, புத்தகமும் புதியதாக உள்ளது, விலையும் குறைவாக உள்ளதே என்று சந்தோசப் பட்டு வாங்கி வந்தேன்.

அந்தப் புத்தகத்தில், பக்கம் எண் 114 க்குப் பிறகு, பக்கம் எண் 147 இருக்கின்றது. மொத்தமாக முப்பத்திரண்டு பக்கங்கள் காணோம்!

பாடம்:
* பழைய புத்தகக் கடையில், புதிய புத்தகங்களை வாங்கக் கூடாது.

* அப்படி வாங்கினாலும் எல்லா பக்கங்களையும், எச்சில் தொட்டு எண்ணிப் பார்த்து வாங்க வேண்டும்.

* நடைபாதை கடைக்காரரின் நடை, உடை, பாவனைகளை அப்படியே நம்பக் கூடாது. 
                           

19 comments:

தமிழ் உதயம் said...

புத்தகத்தின் மூலமும் பாடம் கற்கலாம். புத்தக கடைக்காரர் மூலமும் பாடம் கற்கலாம்.

ஹேமா said...

இங்கயும் ஊழலா !

Chitra said...

அந்தப் புத்தகத்தில், பக்கம் எண் 114 க்குப் பிறகு, பக்கம் எண் 147 இருக்கின்றது. மொத்தமாக முப்பத்திரண்டு பக்கங்கள் காணோம்!

......ஒரே புத்தகத்தை, வாசகருக்கும் சுண்டல் விற்பவனுக்கும் விற்கும் வித்தை தெரிந்தவர்....... :-)

Gopi Ramamoorthy said...

\\......ஒரே புத்தகத்தை, வாசகருக்கும் சுண்டல் விற்பவனுக்கும் விற்கும் வித்தை தெரிந்தவர்....... :-)\\

சூப்பர் ட்வீட்

HVL said...

நல்லவேளை சொல்லிட்டீங்க!

அப்பாதுரை said...

joe girardன் கணக்கு வாத்தியார் 14க்கப்புறம் 47னு சொல்லிக்கொடுத்தார்.

எங்கள் said...

// அப்பாதுரை said...
joe girardன் கணக்கு வாத்தியார் 14க்கப்புறம் 47னு சொல்லிக் கொடுத்தார். //
அப்படி இருந்தால் 114 க்குப் பின் 147 என்று சொல்லிக் கெ(!)டுத்திருப்பார்! இந்தப் புத்தகத்தில் பதினான்காம் பக்கத்திற்குப்பின், பதினைந்து, பதினாறு - எல்லாம் சரியாக இருக்கின்றதே!

ஜீவி said...

காலத்தின் வேக மாற்றத்தில், ஒவ்வொரு விற்பனையும் அதற்கேயான தன்மையைக் கொண்டிருக்கின்றன.. இது அநேகமாக அச்சான பிறகு பைண்ட் செய்யும் பொழுது ஏற்பட்ட தவறாக இருக்கலாம். ஒன்று சேர்த்து தைக்கும் பொழுது ஒரு ஃபாரம் விட்டுப் போய் விட்டது. அவ்வளவு தான்.

நீங்கள் இதே மாதிரியான தவறை தினசரி பேப்பர்களிலும் பார்க்கலாம்.
சப்ளிமெண்டுகளெல்லாம் தனித்தனியாக வந்திறங்கும். காலை
ஐந்து மணி இருட்டில் பேப்பர் போடும் பையன்கள் அரைகுறை வெளிச்சத்தில் உட்கார்ந்து கொண்டு மெயின் பேப்பரோடு தனித்தனியாக இருக்கும் இதையெல்லாம் சேர்த்துக் கொண்டிருப்பார்கள். இந்த மாதிரி சேர்ப்பது விட்டுப் போய் விட்டால், அது போய்ச்சேரும் அந்த குறிப்பிட்ட
நபருக்கு ஏமாற்றமாய் இருக்கும்.
அதனால் பேப்பர் வாங்கும் பொழுதே பக்க எண்களைச் சரிபார்த்துக் கொள்வது நல்லது.

இந்த தினசரிகளின் கதை ஒரு சுவாரஸ்யமான விஷயம். நடு இரவைத் தாண்டி அச்சாகி முடித்து
நமது கைக்கு வந்து சேரும் வரை அந்த ப்ராஸஸ் அனுபவித்து ரசிக்க வேண்டிய ஒன்று.

அதே மாதிரி முன்னால் இருந்த RMS
சமாச்சாரமும். ஓடும் இரயில் வண்டிகளில் புறாக்கூண்டு தடுப்புகளில்--பீஜன் ஹோல்ஸ்-- தாமதமாக வந்து சேர்ந்த கடிதங்களை அடுக்கிக் கொண்டு போவார்கள்.
இரவு வண்டிகளில் இதெல்லாம் பார்ப்பதற்கு கண்கொள்ளாக் காட்சியாக இருக்கும்.

meenakshi said...

இது ரொம்பவே அக்கிரமம்! இப்படி எல்லாம் கூட ஏமாத்துவாங்களா!

கே_ரங்கன் said...

புத்தகம் விற்பவர் படித்துப் பார்த்து தான் விற்க வேண்டும் என்பதில்லை. அவர் ஐயப்ப பக்தர் என்பதாலோ அல்லது நடைபாதையில் அழுக்கானாலும் அருவருப்பாக இருக்காது என்பதனாலோ அவரது உடை தீர்மானிக்கப்பட்டிருக்கலாம்.
அவரிடம் புத்தகம் வந்ததே ஒரு ஃ பாரம் இல்லை என்பதனால் இருக்கலாம். நீங்கள் திரும்ப அவரிடம் சென்று கேட்டிருந்தால் கூட வேறொரு இடம் காணோம் என்ற நிலையிலிருக்கும் புத்தகம் தான் உங்களுக்குக் கிடைத்திருக்கும்.
பழைய புத்தகக் கடையில் இருக்கும் புதுப் புத்தகங்கள் முழுப் புத்தகங்களாக இருக்க வாய்ப்பில்லை.

ராம்ஜி_யாஹூ said...

caveat emptor- let the buyer beware

ராம்ஜி_யாஹூ said...

caveat emptor- let the buyer beware

ராம்ஜி_யாஹூ said...

caveat emptor- let the buyer beware

எஸ். கிருஷ்ணமூர்த்தி said...

இந்தக் கோளாறை ஒரிஜினல் பதிப்பக வெளியீட்டிலேயே நான் நிறையத் தரம் அனுபவித்திருக்கிறேன். ஒரே பாரம் இரண்டு முறை பிந்த் செய்யப்பட்டுவிடும், இன்னொன்று இருக்காது. இது டூப்ளிகேட் அல்லது பைரசியில் வரும் கோளாறு அல்ல. அச்சிட்ட பிறகு, அதை தொகுத்து புத்தகமாக்கும் முறையில் ஏற்படும் சர்வ சாதாரணமான அலட்சியக் கோளாறு!

அநன்யா மஹாதேவன் said...

இதுக்குத்தான் என்னை மாதிரி children's book (மொத்தம் 10 பக்கம் நிறைய வண்ணப்படங்களுடன் கதை புத்தகம்)பக்கங்களை எண்ணிப்பார்த்து வாங்கணும்.

Erode Nagaraj... said...

சில வருடங்களுக்கு முன், giri trading -இல் பாலகுமாரனின் "கண்மணித் தாமரை" வாங்கியபோது நடுவே, பதினேழு பக்கங்கள் இல்லை. நம்ம்ம்...பி, இரசீதைத் தொலைத்து விட்டிருந்ததால், மாற்றவும் இயலவில்லை

Anonymous said...

Erode Nagaraj... said...
சில வருடங்களுக்கு "கண்மணித் தாமரை" வாங்கியபோது நடுவே, பதினேழு பக்கங்கள் இல்லை.//

உதைக்குதே !

Erode Nagaraj... said...

சில வருடங்களுக்கு என்றால் உதைக்கவே செய்யும்!!
சில வருடங்களுக்கு முன் என்றால் சரி. :)

Kavi said...

உங்களது பதிவுகள் அனைத்தும் படிக்க சுவராஷ்யமாய் இருக்கின்றன... என் பக்கம் பார்க்க .... http://www.padugai.com ... நீங்களும் படித்திட்டு சொல்லுங்கள் www.padugai.com ... உங்கள் பதிவுகளுக்காக காத்திருக்கிறேன் ... :)
நன்றி

Post a Comment

இந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க!