Thursday, April 7, 2011

அழகிய மந்திரி!

மந்திரிக்கழகு வரும் பொருள் மறைத்தல் ..... மன்னிக்கவும் 'மந்திரிக்கழகு வரும் பொருளுரைத்தல்' என்று ஒரு தமிழ் சொற்றொடர் ஆத்திச்சூடியோ மூதுரையோ கொன்றை வேந்தனோ நினைவில்லை. ஆனால் ஒரு அழகிய மந்திரியை தம் வீட்டில் வைத்திருக்கும் நண்பரை அண்மையில் சந்தித்தேன்.

"ஸார், நீங்கள் இதை நம்பமாட்டீர்கள், ஆனால் இது உண்மை. நேற்று நாங்கள் எல்லாரும் வீட்டில் உட்கார்ந்து டிவியில் இந்திய வெஸ்ட் இண்டீஸ் மேட்ச் பார்த்துக் கொண்டிருந்தோம். திடீரென்று என் பேரன், 'தாத்தா சட்னு வா, யூசுப் பதான் சிக்ஸ் அடிக்கப் போறார்.' என்று கூவினான். வேகமாக ஓடிப்போய் டிவியை கூர்ந்து கவனித்தேன். ஆம். பதான் ஆறு விளாசித் தள்ளினார். ரி ப்ளே அல்ல, லைவ் தான்!! அது மட்டுமா, பதான் அவுட் ஆனது, அடுத்த பவுண்டரி என்று என் பேரன் ஞான திருஷ்டியோடு எல்லாவற்றையும் சொல்லச் சொல்ல அப்படியே நடந்தது. ஐந்து அல்லது பத்து வினாடிகளுக்கு முன்பாக பின்பு நடக்க இருப்பதை அப்படியே சொல்லி என்னை பிரமிக்க வைத்தான் பேரப்பிள்ளை. ஒரு வேளை அடுத்த இந்தி பேசும் அலைவரிசையில் சற்று முன்பாகவே படம் வருகிறதோ என்று பார்த்தாலும் அவன் வேறு சேனல் பார்க்க எங்கள் வீட்டில் இலவச டி வி இல்லையே!"  
            
ஒரே மூச்சில் பட படவென்று சொல்லி முடித்தார், என் நண்பர்.
   
குழம்பிப் போன எனக்கு கொஞ்ச நேரம் கழித்துதான் விஷயம் விளங்கியது.
                
அது என்ன மர்மம்? ஊகியுங்கள் பார்க்கலாம்.   
    

21 comments:

அப்பாவி தங்கமணி said...

ஆன்லைன்ல எதுனா பாத்துட்டானோ.. இல்லேனா வேற என்ன... ஆஹா... இப்படி சஸ்பென்ஸ் வெச்சுட்டீங்களே...:))

Madhavan Srinivasagopalan said...
This comment has been removed by the author.
Madhavan Srinivasagopalan said...

எங்க ஊட்டுல டிஷ்-டி.வி கனெக்ஷன்..
பக்கத்து வீட்டுல கேபிள் கனெக்ஷன்..
மேச்சு பாக்கச்சே.. இந்தியா பேட்டிங் பண்ணபோது, பவுலிங் போடுறதுக்கு முன்னாடியே (ஜஸ்ட் ரன் அப் பண்ண தயாராகும் சமயத்துல) பக்கத்து வீட்டுலேருந்து சத்தம், கைத்தட்டல் வந்திச்சின்னா போடவிருந்த பால் பவுண்டரி.. அல்லது சிக்சர்.. ..

அதாவது அவங்க கனேக்ஷணுல சில செகண்டுகளுக்கு முன்னால லைவ் மேச்சு ஓடிக்கிட்டு இருந்திச்சு..

அதனால.. ஃ பைனல் மேட்ச் பாத்தப்ப.. இந்தியா பேட்டிங்க்ள.. பக்கத்து வீட்டுலேருந்து கைத்தட்டல் / சத்தம் வரலேன்னா.. எனக்குள்ள.. ச்ச .. இந்த பந்துல சிக்சர் / ஃபோர் இல்லைன்னு கடுப்பா வந்திச்சு..
---- அந்த வின்னிங் ஷாட்டு சிக்சர் உட்பட.. இப்படித்தான் நான் ஃ பைனல் மேட்ச் பாத்தேன்.. அதாவது 5-8 sec defered லைவ்

அதே பாணில அம்பயர் ரேஃபெரல் நாட் அவுட்லாம் (india batting) முன்னாடியே தெரிஞ்சுது..

தமிழ் உதயம் said...

ஸ்டார் ஸ்போர்ட்ஸஸில் பார்த்திருப்பீர்கள். டி.டி மற்றும் ஸ்டார் கிரிக்கெட்டில் வருவது - ஸ்டார் ஸ்போர்டஸில் சில வினாடிகளுக்கு பிறகு வரும்.

அப்பாதுரை said...
This comment has been removed by the author.
அப்பாதுரை said...

பழைய மேட்ச்?

k_rangan said...

ஆங், எங்க வீட்டிலே கூடத்தான் எஃப் எம் ரேடியோ இருக்கு !

ஹேமா said...

கைத்தொலைபேசியில் இணையத் தொடர்பு வச்சிருக்கார்போல !

Chitra said...

உள்ளேன் ஐயா.

எல் கே said...

மாதவன் சொன்னது சரியா இருக்கும்

meenakshi said...

எல்.கே சொன்னது சரியா இருக்கும்.

எங்கள் said...

மீனாக்ஷி சொன்னது சரியாகத்தான் இருக்கும்!

Madhavan Srinivasagopalan said...

எங்கள் சொன்னா சரியாத்தான் இருக்கும்..

பாலராஜன்கீதா said...

அப்பாதுரை said...
பழைய மேட்ச்?
:-)))

எங்கள் said...

தொலைக்காட்சியில் ஆட்டம் தெரிவதற்கு இருபது வினாடிகள் முன்பே எப் எம் கோல்டில் நேர்முக வர்ணனை வந்தது என்பதுதான் சரியான விடை. ஒலி முதலிலும் ஒளி பிறகும்...

Madhavan Srinivasagopalan said...

//ஒலி முதலிலும் ஒளி பிறகும்... //

நாட்டாமை தீர்ப்ப மாத்தி சொல்லு.
காற்றில் ஒளியின் வேகம் 3x10^8 மீ / செ
ஒலியின் வேகம் 320 மீ / செ

எங்கள் said...

மாதவன் சார், நாங்க சொன்னது என்ன என்றால், ஒலியை முதலில் அனுப்பிவிட்டு (காற்றில் அல்ல - எலக்ட்ரோ மேக்னடிக் வேவ் ஆக)சற்று தாமதித்துத்தான் ஒளியை தொலைக் காட்சி பெட்டிக்கு அனுப்புகின்றார்கள் - அல்லது நமக்கு ஊடகங்கள் மூலமாக தாமதமாக வந்து சேருகின்றது என்பதுதான்!

baaskaran said...

படச்சுருளில்கூட ஒலிக்கொடுகள் சற்று முன்னே இருக்கும்படி செய்திருப்பார்கள். படம் லென்சுக்கு நேரே இருக்கும் ஆனால் ஒளிப்பதிவு ஃ போடோ செல்லுக்கு நேரே இருக்க வேண்டும் இன்பத்தால் இப்படி.

இங்கே விளம்பரங்கள் போட ஒரு டைம் டிலே. அவ்வளவு தான்.

சிவகுமாரன் said...

சே . நான் டூ லேட் .

ஹுஸைனம்மா said...

அப்படியா..

Suresh said...

vidayai sollungal sir

Post a Comment

இந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க!