செவ்வாய், 12 ஏப்ரல், 2011

வாக்களிப்பது முக்கியம்.


                   
பொதிகைத் தொலைக்காட்சியில், அவ்வப்போது, கீழ்க்கண்டவர்கள் தலையைக் காட்டி, மக்கள் எல்லோரும் வோட்டுப் போடவேண்டும். வோட்டுப் போடுகின்ற ஜனநாயகக் கடமையிலிருந்து மக்கள் தவறி விடக் கூடாது என்றும் கேட்டுக் கொள்கின்றனர். (நம்மில் எவ்வளவு பேர் பொதிகை அல்லது தூர்தர்ஷன் தொலைக்காட்சி போன்றவற்றை பார்க்கிறோம் என்பது பெரிய கேள்வி. )

அ) அப்துல் கலாம் அவர்கள்.

ஆ) சுகாசினி

இ) இன்று காலையில், தோனி கூறினார். கடைசி இரண்டு வாக்கியங்கள் மட்டும், தமிழிலேயே கூறினார். "நம்முடைய வாக்கு, நம்முடைய எதிர்காலம்!"
     
சினிமா, சீரியல்கள் மட்டும்தான் மக்களில்  பெரும்பாலானவர்களின் கவனத்தைக் கவர்ந்த விஷயம். இப்பொழுது கிரிக்கட்டும் வெகுஜன கவனம் கவருகின்ற அம்சமாக இருக்கின்றது.
தேர்தல் என்பது, வெகுஜனங்களை அவ்வளவாகக் கவர்வது இல்லை. அதற்குப் பல காரணங்கள் இருக்கலாம்.  
                                                 

தேர்தலில் வாக்களிப்பது என்பது, நாம் வேட்பாளர்களுக்கோ அல்லது அவர்கள் சார்ந்துள்ள அரசியல் கட்சிகளுக்கோ அளிக்கும் ஆதரவோ அல்லது எதிர்ப்போ அல்ல. வேட்பாளராக நிற்பவர்களுக்குள், இவர் வந்தால் பரவாயில்லை - மற்றவர்களை விட இவர் வருவது நல்லது என்று "நான்" நினைக்கின்றேன் என்பதுதான் நாம் போடுகின்ற வோட்டு.

இந்த ஒவ்வொரு வோட்டும், நாட்டின் மீது, நம் மாநிலத்தின் மீது, நம் எதிர்காலத்தின் மீது நாம் வைக்கின்ற அக்கறையை, உலகிற்குக் காட்டுகின்றது.

ஒரு தொகுதியில் பதினைந்து சதவிகிதம் வோட்டுகள்தான் பதிவாகின்றது என்று வைத்துக் கொள்வோம். அங்கு நிற்கின்ற யாராவது ஒரு வேட்பாளர், பதிவான வோட்டுகளில் பெரும்பான்மை பெற்று, வெற்றி பெற்றவராக அறிவிக்கப் படுவார். ஆனால், யார் ஆட்சிக்கு வந்தாலும், இந்தத் தொகுதி மீது விஷேஷ கவனம் எதுவும் செலுத்தமாட்டார்கள். அவர்களைப் பொறுத்த வரையில், இந்தத் தொகுதி மக்கள் உறக்கத்தில் உள்ளவர்கள் அல்லது சமூகத்தின் மீது அதிக அக்கறை இல்லாதவர்கள்.

வேறொரு தொகுதியில், எண்பத்தைந்து சதவிகிதம் வாக்குகள் பதிவாகின்றன, அதில் வெற்றி பெறுகின்ற வாக்காளர் தமக்கு அடுத்து வந்த வேட்பாளரை விட ஆயிரம் வோட்டுகள் / அல்லது அதற்கும் குறைவான வித்தியாசத்தில்தான் ஜெயிக்கிறார் என்று வைத்துக் கொள்வோம். இந்தத் தொகுதி மீது, ஆளும் கட்சி, எதிர்க் கட்சி இரண்டுமே எப்பொழுதும் அக்கறை செலுத்தும். தங்கள் கட்சி பக்கம், இந்தத் தொகுதியை இழுக்க, முழு கவனம் செலுத்துவார்கள்.

தப்பித் தவறி (அன்னா ஹசாரே புண்ணியத்தில்) இப்பொழுது வரைவு வடிவம் பெற்று வருகின்ற, லோக்பால் / லோகாயுக்த் அமைப்புகள் சட்டமாக்கப் பட்டு, இந்த சட்டங்கள் மக்களுக்கு / மக்கள் சக்தி ஆயுதமாக மாறினால், அரசியல்வாதிகளைக் கண்டு சாதாரண மக்கள் பயந்து வந்த காலம் மாறி, மக்களைக் கண்டு பயப்பட வேண்டிய காலத்தின் கட்டாயம், அரசியல்வாதிகளுக்கு ஏற்படும். இந்த நிலைமை, நாட்டின் ஒட்டு மொத்த வளர்ச்சிக்கு நிச்சயம் வித்திடும்.

வாக்களிக்கும் நிலையில் உள்ள அனைத்து வாக்காளர்களும், உங்கள் தொகுதியில், உங்கள் வோட்டை, நீங்களே போடுங்கள். யாருக்கு வேண்டுமானாலும் வோட்டுப் போடுங்கள். ஆனால், வோட்டுப் போடுங்கள்.
                 
வோட்டுச் சாவடியில் விழுகின்ற ஒவ்வொரு வோட்டும், நம் எதிர்காலத்தின் மீது நமக்கு அக்கறை இருக்கின்றது என்பதை உலகுக்கு உணர்த்தும்.
         

6 கருத்துகள்:

  1. //வாக்களிக்கும் நிலையில் உள்ள அனைத்து வாக்காளர்களும், உங்கள் தொகுதியில், உங்கள் வோட்டை, நீங்களே போடுங்கள். யாருக்கு வேண்டுமானாலும் வோட்டுப் போடுங்கள். ஆனால், வோட்டுப் போடுங்கள்.
    வோட்டுச் சாவடியில் விழுகின்ற ஒவ்வொரு வோட்டும், நம் எதிர்காலத்தின் மீது நமக்கு அக்கறை இருக்கின்றது என்பதை உலகுக்கு உணர்த்தும்.//

    அப்படியே வழிமொழிகிறேன். அவசியமான பதிவு.

    பதிலளிநீக்கு
  2. நல்ல பதிவு..
    என்ன செய்ய.. நானந்த ௧௩ ஆளுகளுக ஒருத்தன்..

    பதிலளிநீக்கு
  3. வாக்களிப்பது நம் கடமை. கடமையை சரிவர செய்பவனே உரிமைகள் கேட்கிற உரிமையும் பெறுகிறான்.

    பதிலளிநீக்கு
  4. வந்தேன் ஓட்டும் போட்டேன் !

    பதிலளிநீக்கு
  5. நம்ம சைடும் வந்து படிச்சுட்டு ஒரு பின்னூட்டம் போடுங்க>>> அன்புடன் காத்திருக்கிறோம்!!

    http://sagamanithan.blogspot.com/

    பதிலளிநீக்கு

இந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க!