Tuesday, May 17, 2011

உள் பெட்டியிலிருந்து 2011 05


கவித... கவித...
   
மரத்தில் 
உயர இருக்கும் பூக்களை
பறிக்கும் முயற்சியில்
தவறி தண்ணீரில் விழுந்தவன், 
சுற்றிலும் இருந்த
அல்லி, தாமரை என்று
அழகிய மலர்க் கூட்டத்தைக்
கண்டதும் தெரிந்து கொண்டேன்
பல சமயம்
கடவுள் நம் கனவுகளை விட
அழகிய
பரிசுகளை அளிக்கிறார் என்று.
ஆகாயக் கனவுகளிருந்து
தவறி விழும்
நம்மை
லட்சியக் குன்றுகளில்
நிறுத்துவது இயற்கை
என்னும் விதி.
       
பணத்தை
விரும்பாதே..
அது   
   
படுக்கையை தரும்,         
தூக்கத்தை அல்ல,

புத்தகங்ககளைத்  தரும்,
அறிவை அல்ல. 

வசதிகளைத் தரும்,
சந்தோஷத்தை அல்ல. 

எனவே,
-
-
-
-
-
-
-

பணத்தை
என் கணக்குக்கு
மாற்றி விடு!

கடவுளே....!

கோவில் வாசலில் வாசகம்..
கடவுளை நம்பு...
ஏனென்றால்
எல்லா கேள்விகளுக்கும்
கூகிளில் விடை கிடைப்பதில்லை!

சரியான பதிலப்பு...

கே : கான்க்ரீட் தரையில் ஒரு முட்டையை எப்படி உடையாமல் போடுவது?
ப: கவலை வேண்டாம்..இதற்கெல்லாம் கான்க்ரீட் உடையாது!
====== 

கே : பாதி ஆப்பிள் போல தெரிவது எது?               
பதி : வெட்டப்பட்ட மறு பாதி.       
====== 

கே : காலை உணவில் சாப்பிடவே முடியாதது எது?
பதி : இரவு உணவு!
====== 

வசதி, சவுக்கியம், நிம்மதி
இவை
மேலும் மேலும்
சம்பாதிப்பதிலோ
நிறைய செலவு செய்வதிலோ,
சேர்த்து வைப்பதிலோ
இல்லை.
இருக்கும் வரை
போதும் என்று
நினைக்கும்
மனதில்
இருக்கிறது.

அப்பாவிக் காதல்

ஒளிந்து பிடித்து
விளையாடிக் கொண்டிருந்த
அவன், அவள்...
       
விளையாட்டின் நடுவே
அவள் அனுப்பினாள்
குறுஞ்செய்தி
அவனுக்கு.. 
     
நீ என்னை
கண்டு பிடித்தால்
இறுக்கி அணைத்து
ஒரு உம்மா...
   
கண்டு பிடிக்க
முடியவில்லை
என்றால்
அதுவரை ஒளிந்திருப்பேன்

-
-
-
-
-
-

தோட்டத்தில்.! 
    
நேரம்...

உங்கள் நேரம் சரியாக இருந்தால் உங்கள் தவறுகள் கூட விளையாட்டாகும்.
நேரம் சரியில்லை என்றால் உங்கள் விளையாட்டுகள் கூட தவறாகும்அவர் ரெடி...நீங்க ரெடியா....

கடவுளுக்கு இருக்கிறது நேரம்
உங்களுக்கு
செவி சாய்க்க..

உங்களுக்கு நேரம் இருக்கிறதா
பிரார்த்தனை செய்ய?  

கவலை...

நான் மிகவும் 
விரும்புபவர்களை 
இழந்து விடுவேனோ 
என்று அடிக்கடி
அச்சப் படும் எனக்குள்
இன்னொரு கேள்வி..
என்னையும்
யாராவது இப்படி யோசிப்பார்களோ?
                       

21 comments:

கக்கு - மாணிக்கம் said...

///நான் மிகவும்
விரும்புபவர்களை
இழந்து விடுவேனோ
என்று அடிக்கடி
அச்சப் படும் எனக்குள்
இன்னொரு கேள்வி..
என்னையும்
யாராவது இப்படி யோசிப்பார்களோ?///

இதுவும் நல்லாத்தான் இருக்கு.

தமிழ் உதயம் said...

ஒவ்வொன்றும் சிந்திக்கவும், ரசிக்கவும் வைத்து விட்டது.

HVL said...

//பணத்தை
என் கணக்குக்கு
மாற்றி விடு!
//
ரைட்

HVL said...

//கே : பாதி ஆப்பிள் போல தெரிவது எது? பதி : வெட்டப்பட்ட மறு பாதி. //

கே: ஒரு வருடத்தில் எத்தனை செகண்டுகள் (seconds)இருக்கின்றன?

எல் கே said...

உள்பெட்டி அருமை

ராமலக்ஷ்மி said...

எல்லாமே அருமை:)!

//காலை உணவில் சாப்பிடவே முடியாதது எது?பதில் : இரவு உணவு!

----------------
பணத்தைஎன் கணக்குக்குமாற்றி விடு!
----------------
எல்லா கேள்விகளுக்கும் கூகிளில் விடை கிடைப்பதில்லை!//

அதிகம் ரசித்தவை:)!

HVL said...

பதில்: 12 (Jan 2nd, feb 2nd, March 2nd . . .)

எங்கள் said...

HVL அவர்களே! சரியான பதில்: 24. ஒரு வருடத்தில் இருபத்துநான்கு செகண்டுகள். எப்படி? ஜனவரி 2nd, 22nd முதல், டிசம்பர் 2nd, 22nd வரை.

! ❤ பனித்துளி சங்கர் ❤ ! said...

/////படுக்கையை தரும், தூக்கத்தை அல்ல,
புத்தகங்ககளைத் தரும்,அறிவை அல்ல.
வசதிகளைத் தரும்,சந்தோஷத்தை அல்ல.
////////

ரசிக்க வைத்து சிந்திக்க தூண்டிய வரிகள் அருமை

ஹுஸைனம்மா said...

//என்னையும்
யாராவது இப்படி யோசிப்பார்களோ?//

இந்த ஆற்றாமையில்தான் சிலர் “ஒருநாள் நான் போய்த் தொலைஞ்சாத்தான் தெரியும் என் அருமை” என்று அடிக்கடி புலம்புவார்களோ?

இராஜராஜேஸ்வரி said...

பணத்தை
என் கணக்குக்கு
மாற்றி விடு!/
அருமயான அறிவுரை.

வானம்பாடிகள் said...

உள் பெட்டி மேஜிக் பாக்ஸ்:)

வல்லிசிம்ஹன் said...

everything very good .enjoyed.enjoyed. thanks.

ஜீவி said...

//கண்டு பிடிக்க
முடியவில்லை
என்றால்
அதுவரை ஒளிந்திருப்பேன்
-
-
தோட்டத்தில்.! //

-- இது தான் குறும்பு என்கிறது!..

Madhavan Srinivasagopalan said...

You can't have Dinner in the morning.. HA.. HA.. HA..

superb..

தேனம்மை லெக்ஷ்மணன் said...

கடைசிதான் ரொம்ப சூப்பர் ராம்...:)

ஹேமா said...

கடவுளே...சூப்பர் !

கடைசி மனதைத் தொட்டது.
உண்மையும்கூட.
நானும் நினைப்பதுண்டு !

அப்பாதுரை said...

fantastic! ஒன்று ரஜனிகாந்த் வசனம் மாதிரி இருக்கிறது. எல்லாமே சுவாரசியம்.

சிவகுமாரன் said...

எல்லாம் அருமை. கடைசி மனதைத் தொட்டது.

பத்மநாபன் said...

குறுஞ்செய்தியாய் கவிதைகளும் துணுக்குகளும் அருமை....

meenakshi said...

எல்லாமே மிகவும் அருமை! கடைசி கவிதை இன்னும் அருமை!

Post a Comment

இந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க!