திங்கள், 30 மே, 2011

அனுப்பியவர் அப்பாதுரை; எழுதியவர் யார்?


இன்னொரு கனவு

"உக்காருங்க, டாக்டர் வருவார்!"
         
உட்கார்ந்தான். சுவரில் மாட்டியிருந்த சித்திரத்தைப் பார்த்தான். முன்பே பரிச்சயம் ஆனாற்போல் ஒரு நெருக்கம் அந்த ஓவியத்தில் தோன்றியது. இந்தப் பரிச்சயம் தான் மிகவும் ஹிம்சைப்படுத்துகிற சமாசாரம். முன்பே வந்து போன உணர்வு. நடக்கப் போகும் ஒவ்வொரு நிகழ்ச்சியும் மனதுக்குள் முதல் நாளே பதிந்து விடும் பரிதாபம். இப்போது கூட டெலிபோன் மணி அடிக்கும், டாக்டர் வருவார்.
   
அடித்தது. டாக்டர் வந்தார். இவனுக்குக் கொஞ்சம் கூட ஆச்சரியம் ஏற்படவில்லை. கடந்த ஒரு மாதமாகவே இப்படித்தான். இப்போது டாக்டர் டெலிபோனை வைத்துவிட்டு இவனைப் பார்த்துச் சிரிப்பார். "எஸ், ப்ளீஸ்?" என்று புருவத்தை உயர்த்தி விசாரிப்பார்...

"எஸ், ப்ளீஸ்?"

"டாக்டர், எனக்குக் கொஞ்ச நாளா ராத்திரியில் வித்தியாசமான கனவுகள் வருது டாக்டர்"

"சொல்லுங்க"

"ராத்திரி என்ன கனவு வருதோ, அது மறுநாள் அப்படியே நடக்குது டாக்டர்!"

"அப்படின்னா?"

"ஒரு நாள் ராத்திரி ப்ளேன்ல போறதா கனவு கண்டேன்; மறுநாள் ஆபீஸ்ல அவசர வேலையா பம்பாய்க்கு பிளேன் டிகெட் கொடுத்து அனுப்பிச்சாங்க. பிளேன்ல  ஏர்ஹோஸ்டஸ், அவ சிரிப்பு, பக்கத்து சீட் பெரியவர், அவர் இருமல்... எல்லாம் என் கனவுல வந்தது டாக்டர்"

"ம்.."

"இன்னொரு நாள் சின்னவயசுல என்னோட படிச்ச ராஜாமணி வீட்டுக்கு வர்ற மாதிரி கனவு கண்டேன். மறுநாள் கதவைத் திறந்து பாத்தா ராஜாமணி நிக்கறான்!"

"ம்.."

"அப்புறம் ஒரு நாள் மேனேஜர் எனக்கு இருநூறு ரூபாய் சம்பள உயர்வு குடுக்கற மாதிரி கனவு; மறுநாள் மேனேஜர் கூப்பிட்டு இங்கிரிமென்ட் குடுக்கறார். இன்னொரு நாள் ஒரு கிரிகெட் மாட்ச் முழுக்கப் பாத்தேன். ஸ்கோர், விகெட், எல்பிடபிள்யூ.. எல்லாம் அப்படியே இருந்தது. பைத்தியம் பிடிச்சுடும் போலிருக்கு டாக்டர்!"

"உங்க கனவுல அமானுஷ்யமா ஏதாவது வருதா? நம்ப முடியாதபடி.. நீங்க பறக்கற மாதிரி.."

"கிடையாது டாக்டர். ஆனா நினைச்சுக்கூட பாக்காதது எல்லாம் வந்திருக்கு"

"எப்படி?"

"எங்க ஆபீஸ்ல விமலான்னு.. நாப்பது வயசு இருக்கும். அவங்க ஒரு நாள் என் கனவில் வந்தாங்க.. இந்த மாதிரி.. வீட்டில யாருமே இல்லை.. அப்படின்னாங்க"

"உங்களை வீட்டுக்குக் கூப்பிட்டாங்களா?"

"இல்லை. அப்ப முழிச்சிக்கிட்டேன். ஒரு டம்ளர் தண்ணியைக் குடிச்சுட்டுப் படுத்தேன். மறுபடி அந்தக் கனவு வரலை!"

"மறுநாள் ஆபீஸ் போனீங்களா?"

"போனேன். விமலா எங்கிட்டே வந்தாங்க. அவங்க வீட்டுல யாரும் இல்லனு சொன்னாங்க. கனவுல வந்த மாதிரியே அந்த இடத்துலயே கட் ஆயிடுச்சு!"

"ஏன்?"

"அந்த சமயத்துல அவங்களுக்கு டெலிபோன் வந்தது. நானும் நழுவிட்டேன்"

"கவலைப்படாதீங்க. இந்த மாதிரி இன்ட்யூஷன்.. மூளை கூர்மையா இருக்கிற சிலபேருக்கு ஏற்படுவதுண்டு. சில பேருக்கு ஊகங்கள் சரியா அமைந்து விடுவதுண்டு. சில மாத்திரைகள் எழுதித் தரேன். நல்லா தூக்கம் வரும். இந்த மாதிரி கனவுகள் வராது!"

"இல்லை டாக்டர். இது வேறே ஏதோ சக்தி.  இப்படியே போனா - எனக்குப் பயமா இருக்கு டாக்டர்!"

"இதுல பயப்பட ஒண்ணுமே இல்லை". டாக்டர் மருந்துச்சீட்டில் எழுத ஆரம்பித்தார்.

"ஈக்விப்ரோம்! அந்த மாத்திரைதானே எழுதுறீங்க? அப்புறம் படுக்கப் போகுமுன் வேலியம்-5. இதை எழுதிக் கொடுத்த பிறகு நான் குடுக்கப் போற ஃபீஸ் ஐம்பது ரூபாய்! கரெக்ட்?"

"..."

"இதைத்தானே இன்ட்யூஷன் அது இதுன்னு சொல்றீங்க? என் கனவுல நேத்து ராத்திரியே வந்தாச்சு!"

"அப்புறம் வேறென்ன கனவில் வந்தது?"

"இன்னிக்குக் காலைல வீட்டைவிட்டுக் கிளம்பும்போது கத்தியை எடுத்துக்கறேன்"

"கத்தி?"

"பாகெட் நைஃப். அப்புறம் ஒரு ஹோட்டல்ல போய் மசால் தோசை, காபி சாப்பிடறேன். வெளிய வந்து ஒரு பாக்குப் பொட்டலத்தைப் பிரிச்சு வாயில போட்டுக்கறேன்.  அப்புறம் ஒரு வில்ஸ் ஃபில்டர். ஒரு ஆட்டோ பிடிச்சு இங்கே வரேன். உங்க கிட்டே என் கனவுகள் பற்றிச் சொல்றேன். நீங்க ப்ரிஸ்க்ரிப்ஷன் தரீங்க. அதுக்கபுறம் கொஞ்ச நேரம் பேசிக்கிட்டு இருக்கேன். உங்களை ஒரு தம்ளர் ஐஸ் வாட்டர் கேக்கறேன். உங்க அசிஸ்டென்டைக் கூப்பிட்டு ஐஸ் வாட்டர் கொண்டுவரச் சொல்றீங்க. குடிக்கறேன். அவன் போன பிறகு நான் பாக்கெட்டில் இருக்கற கத்தியை எடுத்து உங்க மேலே பாயறேன். மாத்தி மாத்திக் குத்தறேன். கத்தியைத் துடைச்சு பாக்கெட்ல வச்சுக்கிட்டு வெளியில் ஓடறேன்!"
           
"இந்த மாத்திரை ஒரு வாரம் சாப்பிடுங்க. அப்புறம் என்னை வந்து பாருங்க, ஓகே?". டாக்டர் சிரித்துக் கொண்டிருந்தார்.

"டாக்டர், தாகமா இருக்கு, ஒரு தம்ளர் ஐஸ் வாட்டர் கிடைக்குமா?" 

                  ================ X =========================          
       
எங்கள் கமெண்ட்: ரைட்டு நாங்க ஒண்ணும் கேக்கறதா இல்லை. நாங்க கேள்வி கேட்டா அப்பாவி, 'அவ்வ்வ்வவ்வ்வ்வ்' சொல்லுவாங்க; சாய் - ரிப்பீட்டு சொல்லுவாரு. எங்களுக்கு ஏன் வம்பு.  ;-) 
              

31 கருத்துகள்:

  1. அடிச்சு சொல்லுவேன் இதை எழுதியது அப்பாதுரைதான். இந்த மாதிரி லைன்ல எழுதக் கூடியவர் அவர் ஒருவர்தான்

    பதிலளிநீக்கு
  2. // எல் கே said...
    அடிச்சு சொல்லுவேன் இதை எழுதியது ...//
    எல் கே - யாரை அடிச்சு?
    எங்களை என்றால் - ஐயோ வலிக்குதே!
    அப்பாதுரையை என்றால், - அய்யா ஜாலி!

    பதிலளிநீக்கு
  3. மிடில்கிளாஸ் மாதவி. ஐயோ பயமா இருக்கே! கனவுல நாங்க யாரும் வரவில்லையே?

    பதிலளிநீக்கு
  4. இன்னொருத்தர் அடி வாங்குறார்னா என்ன ஒரு சந்தோஷம்பா..!

    [எழுதினவரைப் பத்தி ஒரு க்ளூ கொடுத்திருக்கலாமோ நீங்க?]

    பதிலளிநீக்கு
  5. அப்பாதுரை சார்!
    :))))))))))அது இன்னொருத்தர் அடிவாங்குறார் என்கிற சந்தோஷம் இல்லை; நாங்க அடியிலிருந்து தப்பிச்சதால வந்த சந்தோஷம்!

    க்ளூதானே? இதோ இங்கேயே கொடுத்துடறோம்!
    அந்தக் கதையை எழுதியவர் பெயர் 'சு' என்று ஆரம்பிக்கும்.

    பதிலளிநீக்கு
  6. அப்பப்பா...அபாரமா இருக்கு... ;-))

    பதிலளிநீக்கு
  7. இதென்னங்க, இது சுஜாதா எழுதினதுதானே. நம்ப பத்மநாபன் சார் வந்தா கன்ஃபர்ம் பண்ணுவார்.

    பதிலளிநீக்கு
  8. ஆர வி எஸ் அவர்கள் அகில உலக அப்பாதுரை ரசிகர் மன்றத் தலைவர் ஆகிவிட்டார் போலிருக்கு! அப்பாதுரை 'வருகின்ற' ஜூலையிலாவது ஆர வி எஸ் அவர்களை 'கவனி'யுங்க!

    பதிலளிநீக்கு
  9. //ங்களை என்றால் - ஐயோ வலிக்குதே!
    அப்பாதுரையை என்றால், - அய்யா ஜாலி! /

    இருவருக்குமே சரி சம அளவில் அடி விழும்

    பதிலளிநீக்கு
  10. வர வர திகில் கதையா, சஸ்பென்ஸ் கதையா போடுறிங்க. அப்புறம் அவரை சாகறமாதிரி கனவு காண சொல்வோம். மறுநாள் செத்துடுவார். யாருக்கும் பயமில்ல.

    பதிலளிநீக்கு
  11. எங்கள் புளொக்ல்ல இப்பிடியெல்லாம் எழுதமாட்டாங்க.இது சத்தியமா அப்பாஜியேதான்.அங்கயும் நாடகம் ஒண்ணு எழுதிக் கலக்கி புரியாம வச்சிருக்கார்.இந்தக் கதை புரிஞ்சுது.

    என் கனவில நேத்து அப்பாஜிகிட்ட இப்பிடியெல்லாம் பயமுறுத்தாதீங்கன்னு சொல்றமாதிரிக் கனவு வந்திச்சு.ஒருவேளை பலிக்குமோ !

    பதிலளிநீக்கு
  12. கலக்கல் கதை! ஒரு குட்டி கதையிலேயே இவ்வளவு விறுவிறுப்பு சுவாரசியம்.

    எழுதினவர் 'சு' என்றால் சுரா. சரியா? அப்பாதுரை எழுத்திலும் இந்த ஸ்டைல் இருக்கும்.

    பதிலளிநீக்கு
  13. சுபா எழுதிய கதை என்று நினைக்கிறேன். எங்கேயோ, எப்போதோ படித்த ஞாபகம்.

    பதிலளிநீக்கு
  14. இதில் வாத்தியார் பாணி கொஞ்சம் இருந்தாலும் இது சுப்ரமணியராஜு கதையாக படித்த ஞாபகம்..

    (மீண்டும் அவர் கதையே விடுகதையா )

    பதிலளிநீக்கு
  15. பத்மநாபன் சரியாகச் சொல்லி இருக்கிறார். சுப்ரமண்ய ராஜு என்பது சரியான விடை. முன்பு அப்பாதுரை அவர்கள் அனுப்பி இருந்த சு.ரா சிறுகதை வேறு ஒன்று வெளியிட்டிருந்தோம். மேலும் ஒரு கதை அனுப்புவதாக அப்போதே சொல்லியிருந்தார் அப்பாதுரை. அதுதான் இது!

    பதிலளிநீக்கு
  16. நன்றி... அப்பாதுரை சிபாரிசில் நிங்கள் கொடுத்த க்ளு, பட்டியலை சுருக்க வசதியாக இருந்தது..இக்கதை வாத்தியார் பாணியில் இருந்தாலும், அவர்கதை இல்லை எனது முகவரி பட்டியல் சொன்னது சு.ரா வின் மிக சில கதைகள் இந்த பாணியில் இருக்கும்...அகாலமாக மறைந்த அற்புத எழுத்தாளர் சு.ரா அவர்கள்..பாலகுமாரன் அவர்களின் சிலாகிப்பிற்கு பின்னர் படிக்க ஆரம்பித்தேன்..

    ( வலையுலகக்கு வந்தபின் புரிந்தது வாத்தியாரின் உச்ச ரசிகர் நிறைய இருக்கிறார்கள்.. எழுத்து விடாமல் படித்து வார்த்தைக்கு வார்த்தை அருமையாக அலசும் வாசகர் கூட்டம் ஒன்று அமைதியாக இருக்கும் பொழுது நான் கொஞ்சமே வாத்தியாரை படித்துவிட்டு நிறைய பேசுவதாக தெரிகிறது... இன்னமும் நிறைய படிக்கவேண்டும் எனும் உத்வேகத்தை கொடுக்கிறது.. நன்றி கீதா மேடம்)..

    பதிலளிநீக்கு
  17. எபியை க்ளூ கொடுக்கச் சொன்னால் 'குதிருக்குள் இல்லை' என்று ஒரு க்ளூ!

    "சுஜாதா பாணி என்று சொல்வார்கள்" என்று ஸ்ரீராம் சொன்னது சரியே. எபி வாசகர்களை நன்கு தெரிந்து வைத்திருக்கிறார்.

    இந்தக் கதை சுஜாதா பாணி என்று என்னால் சொல்லமுடியவில்லை. of course, முழுக் கதை படித்த advantageடனான கருத்து என்னுடையது. ஏகத்துக்கு சுருக்கினால் லாண்டரிக் கணக்கு போல் ஆகி விட்டதோ என்னவோ! என் பிழை. என்னுடைய சுஜாதா 'அறிவு' பத்மநாபன், RVS அளவுக்கு இல்லை என்பதும் உண்மை.

    சுப்ரமண்யராஜூ நடைக்கு ஒரு க்ளூ: வில்ஸ் பில்டர். அவர் கதையில் எங்கேயாவது சிகரெட் வந்தே தீரும்.

    பதிலளிநீக்கு
  18. கிணற்றுத் தவளை2 ஜூன், 2011 அன்று AM 10:56

    எழுதியவர் பெயர் 'சு' என்று ஆரம்பிக்குமா? ஹய்யா கண்டுபிடித்துவிட்டேன்! சுந்தரராமசாமிதானே?

    பதிலளிநீக்கு
  19. அப்பாதுரை நீங்கள் சுருக்கியது சரியாக தெரிந்ததால் தான் எல்.கே அடித்துச் சொல்லியிருக்கிறார். சுஜாதா ’அறிவை’ பிராக்டிலாக செயல்படுத்துபவர் ஆர்.வி.எஸ் .நான் மெளன கவனிப்பன்.

    சுஜாதாவின் லாண்டரி கணக்கு ஒரு காலத்தில் குமுதத்தில் பெரிய சர்ச்சையை உருவாக்கி ஓய்ந்தது

    வில்ஸ் பில்டர் சு.ரா கதைக்கான சரியான க்ளு

    பதிலளிநீக்கு
  20. சாவி என்று நினைத்தேன், குமுதமா? லான்டரிக் கணக்கும் காபி. பிரபல ஆங்கில எழுத்தாளரை - யாரென்று சட்டென்று நினைவுக்கு வரமறுக்கிறது - இப்படி எழுதச்சொல்லிக் கேட்டு வெளியிட்டது ஒரு பத்திரிகை. (வானகெட், அசிமவ் அல்லது அவர்களுக்கும் மிக முந்தைய ஓ ஹென்றி?) எத்தனையோ மேற்கத்திய பாணிகளைத் தமிழுக்குக் கொண்டு வந்த சு இதையும் செ. (ஐயோ, அடிக்க வராங்களே?)

    பதிலளிநீக்கு
  21. சுஜாதாவின் லாண்டரிக் கணக்கு பட்டியலை வெளியிட்டது, சாவிதான் என்று எங்களுக்கும் ஞாபகம். கைக்குட்டை (இரத்தக் கறையுடன்) என்று இருந்த குறிப்புத்தான் கொஞ்சம் புயலைக் கிளப்பியதாக ஞாபகம்.

    பதிலளிநீக்கு
  22. ஆமாம் .. சாவியில் தான் ஆரம்பித்தது ..அதை பற்றி சர்ச்சையாக குமுதத்தில் வெளிவந்து படித்த ஞாபகம்

    பதிலளிநீக்கு
  23. காப்பியாவது கீப்பியாவது ...அதையெல்லாம் யார் ஆராய்ச்சி செய்தார்கள் .. எதிர்பார்த்தது சுவாரசியமான ரசனை அதை வஞ்சனை இல்லாமல் செய்தார்.... ரசித்தோம் ..ஓரு காலத்தில் எந்த பத்திரிகையில் துணுக்கு எழுதினாலும் படிக்க துடித்தவர்கள் ஏராளம் ... உங்களால் வாத்தியார் எழுத்தை சீண்டாமல் இருக்க முடியாது என்னால் பதில் சொல்லாமல் இருக்க முடியாது..

    பதிலளிநீக்கு
  24. //பத்மநாபன் சரியாகச் சொல்லி இருக்கிறார். சுப்ரமண்ய ராஜு என்பது சரியான விடை.//
    பத்மநாபனுக்கு முன்னாடி நான் சரியான விடை எழுதி இருக்கேனே! என் பேரை விட்டுடீங்களே. நியாயமா இது?

    பதிலளிநீக்கு
  25. உண்மை, பத்மநாபன். சுஜாதா வாசகர் வட்டத்தின் பிரம்மாண்டம் மலைக்க வைக்கிறது. டெக்னிக் காபி என்றேனே தவிர எழுத்தைக் காபி எனச் சொல்லவில்லை. சுஜாதா பாணி தனி. ஒருவேளை காபி என்பது கூடுதல் தாக்கமான சொல்லோ? மன்னிக்கவும்.

    பதிலளிநீக்கு
  26. // meenakshi said...
    //பத்மநாபன் சரியாகச் சொல்லி இருக்கிறார். சுப்ரமண்ய ராஜு என்பது சரியான விடை.//
    பத்மநாபனுக்கு முன்னாடி நான் சரியான விடை எழுதி இருக்கேனே! என் பேரை விட்டுடீங்களே. நியாயமா இது?//

    சாரி மீனாக்ஷி நீங்க விஜய் நடித்த 'சுறா' படத்தை சொல்கிறீர்களாக்கும் - என்று நினைத்தோம்! (எப்படி எல்லாம் சமாளிக்க வேண்டியதாக இருக்கு!)
    சரி இப்போ சொல்லிவிடுகிறோம் - மீனாக்ஷிதான் முதலில் சொன்னார் - அவருக்கு ஓ போடுங்க!

    பதிலளிநீக்கு
  27. //சாய் - ரிப்பீட்டு சொல்லுவாரு. எங்களுக்கு ஏன் வம்பு. ;-) //


    Why will I !

    பதிலளிநீக்கு
  28. /// சாய் said...
    // அப்பாவி தங்கமணி said...
    ஏன் எப்பவும் கொஸ்டின் கொஸ்டினா கேக்கறீங்க...அவ்வவ்வ்வ்வ்....//

    DITTO ///

    Taken from the comments column of our blog dated 20 May 2011.

    பதிலளிநீக்கு

இந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க!