சனி, 25 ஜூன், 2011

அண்ணே அண்ணே சிப்பாய் அண்ணே ...

      
நம்ம பதிவு நல்ல பதிவு இப்பக் கொஞ்சம் ..... ?

சில நாட்களாக எங்கள் வாலை சுருட்டி வைத்துக் கொண்டிருந்தோம். நண்பர் ஒருவர் அனுப்பிய இணைய சுட்டி ஒன்றைப் பார்த்ததும், எங்கள் குறும்பு ஆசிரியர், தன் வேலையைக் காட்டிவிட்டார். 

நண்பர் நல்ல மனதுடன் அனுப்பிய சுட்டி,  கூகிளின்  மொழி  பெயர்ப்பு  தளம்.


அதிலே, ஆங்கிலத்திலிருந்து அல்லது வேறு எந்த அறுபது மொழிகளிலிருந்தும், மற்ற மொழிகளுக்கு சுலபமாக மொழி பெயர்ப்பு செய்யலாம் என்றும், மொழி தட்டச்சு செய்ததை அது படித்துக் காட்டும் என்றும், அதையே என்ன உச்சரிப்பு என்று ஆங்கிலத்தில் அழகாக எழுதிக் காட்டுகிறது என்றும் கூறியிருந்தார்.

கு ஆ - நல்லதாக நாலு வரிகள் கொடுத்தார். அதை அந்தத் தளம் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்ததை, இங்கே கொடுத்துள்ளோம். இதைப் படித்துப் பார்த்து, நாங்கள் கொடுத்த தமிழ் வரிகள் என்ன என்று கண்டு பிடியுங்கள்.

Hello, I know who is speaking? If what you say my name correctly, our Black teachers are ready to give you a hundred points. Get the answer points. Hail to the source!
  

சரி, இதையே தெலுங்கில் மொழி பெயர்க்கச் சொன்னால், என்ன செய்கிறது என்று பார்க்கலாம். அதை அப்படியே சிரஞ்சீவி சாருக்கு அனுப்பி, சரியாக இருக்கிறதா என்று தெரிந்து கொள்வோம் என்று நினைத்து தெலுங்கு என்று மொழி பெயர்க்கத் தேர்ந்தெடுத்தோம்.
 
உடனே நாங்கள் கேட்ட தெலுங்கு மொழி பெயர்ப்பு வந்தது.
 
హలో, నేను మాట్లాడే ఎవరు తెలుసా? మీరు సరిగ్గా నా పేరు ఏమి ఉంటే, మా బ్లాక్ ఉపాధ్యాయులు మీరు వంద పాయింట్లు ఇవ్వటానికి సిద్ధంగా ఉన్నారు. సమాధానం పాయింట్లు పొందండి. ఆధారం వడగళ్ళు!
 
இந்த ஜிலேபிகளை எப்படிப் படிப்பது என்று கேட்டதும், அந்தத் தளம் கூறியது இது:
 
Halō, nēnu māṭlāḍē evaru telusā? Mīru sariggā nā pēru ēmi uṇṭē, mā blāk upādhyāyulu mīru vanda pāyiṇṭlu ivvaṭāniki sid'dhaṅgā unnāru. Samādhānaṁ pāyiṇṭlu pondaṇḍi. Ādhāraṁ vaḍagaḷḷu!
 
நாங்கள் கொடுத்த நான்கு வாக்கியங்கள் என்ன என்று யாராவது கண்டுபிடித்து, கமெண்ட்டுங்கள். வாசகர்கள் கமெண்ட் எல்லாம் எழுதி முடித்தவுடன், கடைசி கமெண்ட் ஆக, நாங்கள் தமிழில் கொடுத்த வாக்கியங்களை எழுதுகிறோம்.
       
 
கு .ஆ மேலும் சும்மா இருக்காமல், மெட்ராஸ் பாஷையில் சில வாக்கியங்களைக் கொடுத்து, அவற்றை ஆங்கிலத்தில் மொழி பெயர்த்தார். அவைகள் இங்கே:
 
 
இன்னா நைனா சொகமா கீறியா?  
Nina cokama kiriya inna?   

இந்த எங்கள் ப்ளாக் ஆசிரியர்களின் ரவுஸ் ரொம்ப ஜாஸ்தியா கீதுப்பா! படா பேஜாரு பண்ணுறாங்கோ!
Black teachers have a lot of these ravus kituppa jastiya! Bada pejaru pannuranko!

மெய்யாலுமே சொல்லுறேன், இவங்க கிட்ட ஒண்ணும் வெச்சுக்காதீங்க - அஞ்சு பேரும் எம்டணுங்க!
Meyyalume tell me anything about these veccukkatinka - Anju emtanunka together!

அப்போ சரி வாத்யாரே! நான் வர்ட்டா? ஒடம்பப் பாத்துக்கோ! நான் வந்து கண்டுகினு போனேன்னு யார் கைலயும் சொல்லிக்காத!
Then right vatyare! I vartta? See otampa! Who I ponennu kantukinu collikkata kailayum!

போடா கய்தே! கிட்டே வந்தா கீசிடுவேன்! ஆமாம் சொல்லிபுட்டேன்.
No kayte! Kicituven come again and again! Yes colliputten.

இப்போ இன்னாத்துக்கு இந்த பம்மாத்து காட்டுற?
Pammattu innat now takes this to?

நம்ம கையுல ராங் காட்டாத ஹக்காங் - ஆமாம் சொல்லிபுட்டேன்
Wrong show our kaiyula hakkan - Yes colliputten.


ஐஸா கில்லாடிப்பா நீயி! நம்ம பொழப்புதான் நாறி கெடக்கு!
Aisa killatippa you! To harm our polapputan nari!
               

16 கருத்துகள்:

  1. ஹஹஅஹா மெய்யாலுமே உங்க ரவுசு தாங்கலை

    பதிலளிநீக்கு
  2. மத்தள கொத்தளம்25 ஜூன், 2011 அன்று AM 7:57

    ஹலோ, நான் பேசும் யார் தெரியுமா? நீங்கள் சரியாகஎன் பெயர் சொல்ல என்ன என்றால், நம்முடைய பிளாக்ஆசிரியர்கள் நீ ஒரு நூறு புள்ளிகள் கொடுக்க தயாராகஉள்ளன. பதில் புள்ளிகள் பெறவும். மூல வாழ்க!

    நீவிர் தந்துள்ள ஆங்கிலத்தை உங்கள் வழியிலேயே கூகிளிட்டு மொழி பெயர்த்ததில் விழி பிதுங்க வந்த பின் விளைவு...!

    ஒரு மாரி 'குன்சா' இன்னா சொல்லிருப்பேனு கண்டிக்குட முடியுது நைனா...

    பதிலளிநீக்கு
  3. சில நேரங்களில் கூகுளின் மொழிபெயர்ப்பு மிக பெரிய நகைசுவை தான். நமக்கு பிடித்த ஆங்கில தளங்களை மொத்தமாக தமிழில் வாசிப்பதில் ஒரு அலாதி சந்தோஷம் தான்.

    பதிலளிநீக்கு
  4. மத்தள கொத்தளம் - ஐயோ என்ன பேருங்க இது! தமிழிலிருந்து ஆங்கிலம், அந்த ஆங்கிலத்திலிருந்து தமிழ் - இந்த மாதிரி விபரீதம்தான் நேரும்! தெலுங்கைக் கொடுத்து ஆங்கிலம் முயற்சித்துப் பாருங்கள். ஏனென்றால், தெலுங்கு மொழி பெயர்ப்பு தமிழை விட கொஞ்சம் அதிகம் சரியாக உள்ளது.

    பதிலளிநீக்கு
  5. நம்ம கையுல ராங் காட்டாத ஹக்காங் - ஆமாம் சொல்லிபுட்டேன்
    அண்ணே அண்ணே சிப்பாய் அண்ணே ..." கூகிள் அண்ணன் தான் சொல்றார்.

    பதிலளிநீக்கு
  6. குசும்பு கூடித்தான்போச்சு !

    பதிலளிநீக்கு
  7. அண்ணா.நான்தா.யாரு பேசறதுன்னு கண்டுபுடிச்சிட்டிங்களா... சரியா சொன்னிங்கன்னா ..நூறு பாயிண்ட எங்க வலைப்பூவுல 100 பாயிண்ட் கொடுப்பாங்க...சரியான ஆதாரத்தை வரவேற்கிறேன்......

    பதிலளிநீக்கு
  8. கூகிள் குழந்தைபுள்ள மாதிரி ..நாம ஒன்ன கொடுக்க அது ஒன்ன கொடுக்க மழலையை ரசிக்கற மாதிரி ரசிக்க வேண்டியது தான்...

    பதிலளிநீக்கு
  9. உங்கள இப்படியெல்லாம் யோசிக்க சொல்லி யாரு கத்து கொடுக்குறது.....................
    ரொம்ப பவுசு பார்ட்டிகளா இருப்பிங்க போலே

    பதிலளிநீக்கு
  10. வணக்கம் வாசகர்களே! பேசுவது யாரென்று தெரிகிறதா? என்னுடைய பெயரை சரியாய் சொல்பவர்களுக்கு ‘எங்கள் ப்ளாக்’ ஆசிரியர்கள் நூறு பாயின்ட்டுகள் கொடுக்கத் தயாராயிருக்கிறார்கள். விடையைச் சொல்லி பாயின்ட்டுகளைப் பெறுங்கள். சரியான விடையை சொல்பவர்களுக்கு வாழ்த்துகள்- இப்படி தான் புரிஞ்சுகிட்டேன்.

    பதிலளிநீக்கு
  11. இந்த கருத்து ஆசிரியரால் அகற்றப்பட்டது.

    பதிலளிநீக்கு
  12. ஹலோ நான் யார் பேசறேன்னு தெரியுதா? என் பெயரை சரியா சொன்னா, எங்க பிளாக் ஆசிரியர்கள் மதிப்பெண் தருவார்கள். விடையை சொல்லுங்கள் , வாழ்க வளமுடன்

    பதிலளிநீக்கு
  13. “ஜூனூன்” தமிழ் மாதிரி, “கூகிள்” தமிழ்னு புது வகை வந்துடும்போல!!

    போன வாரம், என் பெரியவன், பள்ளிப் பாடத்திற்காக, ஃப்ரெஞ்சை கூகிள் துணையோடு மொழிபெயர்த்துப் பார்த்துவிட்டு, புலம்பிக் கொண்டேயிருந்தான். அப்போ கண்டுக்கலை. இப்போ புரிகிறது என்ன நடந்திருக்கும் என்று!!

    பதிலளிநீக்கு
  14. HVL அவர்களும், சிவகுமாரன் அவர்களும் (கடைசி வரி) மிகவும் சரியாகச் சொல்லி இருக்கிறார்கள். நாங்கள் மொழி பெயர்க்கக் கொடுத்த தமிழ் வாக்கியங்கள் இங்கே:

    "ஹலோ யார் பேசறது என்று தெரிகிறதா? என் பெயர் என்ன என்று நீங்கள் சரியாகச் சொன்னால், எங்கள் ப்ளாக் ஆசிரியர்கள் உங்களுக்கு நூறு பாயிண்டுகள் அளிக்கத் தயார். பதில் சொல்லி பாயிண்டுகள் பெறுங்கள். வாழ்க வளமுடன்!"

    பதிலளிநீக்கு
  15. :-))

    போகப் போக இதில் முன்னேற்றம் இருக்கும் என்று நான் நம்புகிறேன். ஆனாலும் ஒரு நிலைக்கு மேல் translator சரியாக மொழி பெயர்க்கமுடியாமல் நின்றுவிடும் என்றே தோன்றுகிறது.

    பதிலளிநீக்கு

இந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க!