Monday, June 27, 2011

இந்தி(ய) இசைப் புயல் ஆர் டி பர்மன்

இந்தி(ய) இசையுலகின் இசைப் புயல் மெலடி கிங், பல்லாயிரக் கணக்கான இசை ரசிகர்களின் இதய தெய்வம் ஆர் டி பர்மன் பிறந்த நாள் இன்று.

ராகுல் தேவ் பர்மன். பெயர் சொல்லும் போதே அதிர்கிறது. பலப்பல பாடல்கள் மனதில் ஆக்கிரமிக்கின்றன. இதைச் சொல்லலாம், அதைச் சொல்லலாம் என்று வரிசை கட்டி நிற்கின்றன.


Pancham போன பிறகு இனிய பாடல்களுக்கு பஞ்சம் இந்தித் திரையுலகினரால் செல்லமாக பன்ச்சம்தா என்று செல்லமாக அழைக்கப் படும் ஆர் டி பி தனது ஒன்பதாவது வயதில் Funtoosh படத்தில் ஒரு பாடலுக்கு இசை அமைத்து சாதனை செய்தார் என்பது ஆச்சர்யப் பட வைத்த செய்தி.

தனது கடைசிக் காலத்தில் உடல் நலம் ஒத்துழைக்க மறுத்ததால் தந்தை எஸ் டி பர்மன் ஒப்புக் கொண்ட பல படங்களுக்கு ஆர் டி பர்மன் முடித்துக் கொடுத்தார் என்று சொல்வார்கள். அந்த வகையில் ஆராதனா, கைட் போன்ற படங்களைச் சொல்லலாம்.

பூத் பங்களா என்ற படத்தில் மெஹம்மூத்துடன் இணைந்து நடித்திருக்கிறார். அதே மெஹ்மூத்துக்கு லாக்கொமே ஏக் படத்தில் கிஷோர் குரலில் 'சந்தா ஓ சந்தா' என்ற அற்புதமான பாடலைக் கொடுத்திருக்கிறார்.


கிஷோர் குமார் குரல் ஆர் டி பர்மனுக்காகவே படைக்கப் பட்டது போலும் என்பது போல இருவரின் காம்பினேஷனில் பற்பல இணையற்ற பாடல்கள்.அஜ்நபி, ஆந்தி, கேல் கேல் மெய்ன், ஆப் கி கசம், அமர் பிரேம், ஜவானி திவானி, ஆ கலே லக் ஜா, வாரன்ட், எத்தனை படங்களில் எத்தனை பாடல்கள்...

ஷோலே படத்தில் ஆர் டி பரமனே பாடிய 'மெஹ்பூபா...மெஹ்பூபா 'பாடலை முதலில் கிஷோரை பாடச் சொல்லி அவர் மறுத்த பின் இவரே பாடியதாகக் கேள்வி.

கேரவான் இன்னொரு அற்புதமான பாடல்களைக் கொண்ட படம்.


டிஸ்கோ பைத்தியம் தொடங்கிய எண்பதுகளின் பிற்பகுதியில் ஆர் டி பி மறக்கப் பட்டதும், ஒதுக்கப் பட்டதும் சோகங்கள். அவர் ஒரு பெரிய ஹிட்டுடன் மீண்ட 1942 a love story அவர் கடைசிப் படமானதும் சோகம்.

பரிச்சை படத்தில் குல்சார் எழுதிய பாடல் கிஷோர் குரலில்.கேல் கேல் மெய்ன் படத்தில் ஆஷா வுடன் ஆர் டி பர்மன் இணைந்து பாடிய பாடல். தமிழில் இது பின்னர் பிரதிஎடுக்கப் பட்டது!நிறையச் சொல்ல ஆசை... நேரம் கம்மி... இசைக்கு மொழி தேவை இல்லை. பாடல்களை முழுவதும் கேளுங்கள்...8 comments:

வல்லிசிம்ஹன் said...

ஆஹா ஆர்.டி.பர்மன்!!அவரது

முன்னோடி

அவரது தந்தை

எஸ்.டி. பர்மனின் ஆராதனா படப் பாடல்களைக் கேட்டுவிடுவேன்..

தேவ் ஆனந்த்..கிஷோர்

ராஜேஷ் கன்னா கிஷோர்,

சஞ்சீவ் குமார் கிஷோர்

இப்படிப் பலப்பல வடிவங்கள்.எல்லாமே அருமை.

ஆந்தி படப் பாடல்கள் உலகப் பிரசித்தி பெற்றவை.

நன்றி எங்கள் ப்ளாக்

தமிழ் உதயம் said...

இசையை ரசிக்க, ருசிக்க மொழி தேவையில்லை தான். ரசித்தோம் ஆர்.டி.பர்மனை.

A.R.ராஜகோபாலன் said...

மனம் மகிழ்ந்த பதிவு
நண்பரே
இசையால் இணைவோம்
என்ற மொழிக்கேற்ப
புரியாத மொழியானாலும்
புரிந்தது இசை
நன்றி பகிர்ந்ததற்கு

ராமலக்ஷ்மி said...

நல்ல பகிர்வு. இவரது பாடல் கலெக்‌ஷன் சிடிக்கள் நிறைய உள்ளன வீட்டில். கணவர் கேட்கையில் எனக்கு மொழி புரியாவிட்டாலும் ரசிப்பேன். சொல்லியுள்ளீர்களே ‘இசைக்கு மொழி தேவை இல்லை.’ அதே:)!

! ❤ பனித்துளி சங்கர் ❤ ! said...

இன்றுதான் இவரைப் பற்றியே அறிந்துகொண்டேன் . பகிர்ந்தமைக்கு நன்றி நண்பா

பத்மநாபன் said...

மொழி தெரியாவிட்டாலும் ..ஆர்.டி பர்மன்.. ஷோலே ல ஆரம்பிச்சது...எல்லா இந்தி படத்துக்கு அவரே இசை அமைத்த உணர்வு...

சந்ரு said...

நல்ல பகிர்வு பகிர்வுக்கு நன்றிகள்

meenakshi said...

நன்றி! ஆர்.டீ. பர்மன் பிறந்த நாளை, பாடல் காட்சியோடு கொண்டாடி விட்டீர்கள். ஆனால், மன்னிக்கவும்! ஜித்தேந்திராவை பார்க்கவே கூடாது என்பதற்காகவே இந்த பாட்டை நான் கேட்பதோடு சரி.
அடுத்த பாடலும் அருமை. அருணா இராணியையும் பிடிக்கும், ராகேஷையும் பிடிக்கும். என்ன! மீசை இல்லாமல் ராக்கேஷை பார்க்க மிகவும் கொடுமையாக இருக்கிறது. இதே பாடல் தான் தமிழில் 'கண்ணன் எங்கே, கண்ணன் எங்கே' அதுவும் மிகவும் அருமையான பாடல்.

Post a Comment

இந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க!