புதன், 28 செப்டம்பர், 2011

எது தீயது?

                              
எது தீயது என்ற வரைமுறைதான் புரியவில்லை என ஒரு நேயர் எழுதியுள்ள மறு மொழி எனது சிந்தனையைத் தூண்டியது.

தீயது எது என்று புரியாத அளவுக்கு குழப்பம் இருப்பது எதனால் என்று தெரியவில்லை. புரை தீர்ந்த நன்மை பயக்காதது எதுவும் தீயதே என்று குறள் வரையறுக்கிறது. மேலும் வியப்பாக பொய்மையையும் வாய்மையாகக் கருதலாம், அது புரை தீர்ந்த நன்மை பயக்கும் எனின என்று ஒரு படி மேலே சென்று சொல்கிறது.
   
தீதும் நன்றும் பிறர் தர வாரா என்பது மற்றொரு பழம் பாடல். (யாதும் ஊரே யாவரும் கேளிர் என்ற முதல் வரி பிரபலமான அளவுக்கு அடுத்தடுத்த வரிகள் பரவலாக வில்லை.)
   
மனத் துயரம் என்பது என்பது நமக்கு நாமே ஏற்படுத்திக் கொள்வது.  அதன் முக்கிய காரணம் நமது எதிர்ப்புகளும் எதிர்பார்ப்புகளும் தான் என்பது வெளிப்படை.  எனவே தீது என்பது அடுத்தவருக்கு மனத் துயரம் அல்லது உடல் வலி ஏற்படுத்துவதுதான் என்று சொல்லலாமா? 

சுகம் என்பது சும்மா இருப்பது என்று திருமூலர் தாயுமானவர் போன்றோர் சொன்னதும் இதனால் தானோ? 

செயல்படுவது அல்லாமல் எதிர்வினையாகச் செய்யாதிருப்பது என்று ஒரு சுவாரசியமான அம்சத்தையும் கிருஷ்ணமூர்த்தி (ஜே கே) குறிப்பிட்டுள்ளார். Right action emanates from the right mind. In other words, whatever action arises from the right mind, it is the right action because there is only action and no reaction. (Not his exact words).
 
அறுவை போதுமா? 
                        

13 கருத்துகள்:

  1. //எது தீயது என்ற வரைமுறைதான் புரியவில்லை//

    சில சமயம் அப்படித்தான் குழப்பமாய் இருக்கும். ஆனால், குழப்பம் வரும்போதே புரிய வேண்டுமோ, அது தீயது என்று.

    பதிலளிநீக்கு
  2. சிந்திக்க வேண்டிய விஷயங்கள் தாம்!

    வலைச்சரத்தில் http://blogintamil.blogspot.com/2011/09/blog-post_29.html உங்களைப் பற்றிச் சொல்லியிருக்கிறேன். முடிந்த போது பார்க்கவும்

    பதிலளிநீக்கு
  3. All the evil which happens in this world is not due to the action of bad person but due to the inaction of good person...

    ஒரு நல்லவன் வாய் மூடி தீங்கு நடப்பதை கவனிக்காமல், விதிப்படி நடக்கிறது என்றோ, என் குடும்பத்திற்கு தீங்கு இழைக்கும் என்றோ அமைதியாய் செல்வதும் தீமை தானே...

    பதிலளிநீக்கு
  4. நன்மையல்லாதது தீயது என்ற கண்ணோட்டம் - குழப்பசாமிகளின் கூடாரம்.

    பதிலளிநீக்கு
  5. "எது தீயது?"////

    நிச்சயம் ஒரு பதிவு எழுதுவதற்கான விஷயம் அதில் அடங்கி உள்ளது.

    பதிலளிநீக்கு
  6. தீயினும் அஞ்சப்படும் தீயது பற்றிய சிந்திக்க வேண்டிய பகிர்வு.

    பதிலளிநீக்கு
  7. தீய பயக்கும் தீயவைகளை இனம் காண உள்ளுணர்வு சொல்வதைக் கேட்க வேண்டுமோ?

    பதிலளிநீக்கு
  8. உள்ளம் உடம்பு இவை இரண்டிற்கும் பிறர்க்கு என்று இல்லாமல் தமக்கும் கேடு விளைவிப்பவை தீயது .....

    பதிலளிநீக்கு
  9. தீயது என்ற வரைமுறை பலருக்கு பலவிதமாக மாறுபடுகின்றது, எனினும் மனம் சொல்லும் எது தீயது என்று. . .

    பதிலளிநீக்கு
  10. தீ அது தீயது அதனால் அதை நாடாதே அப்டின்னு இருக்குமோப்பா ஸ்ரீராம்??

    அருமையா சொல்லி இருக்கீங்க. தீதும் நன்றும் பிறர் தர வாரான்னு எங்கு படிச்சாலும் சட்டுனு ரமணி சாரின் அருமையான படைப்புகள் நினைவுக்கு வந்துவிடுகிறது...

    அன்பு நன்றிகள்பா பகிர்வுக்கு.

    பதிலளிநீக்கு
  11. தீதும் நன்றும் பிறர் தர வாரா என்பது மற்றொரு பழம் பாடல். (யாதும் ஊரே யாவரும் கேளிர் என்ற முதல் வரி பிரபலமான அளவுக்கு அடுத்தடுத்த வரிகள் பரவலாக வில்லை.)/

    எல்லாப் பாடல்களும் அப்படித்தான்!

    பதிலளிநீக்கு
  12. "குழப்பம் வரும்போதே தெரியவில்லையா அது தீயது என்று..." -- நன்றாகச் சொன்னீர்கள் ஹுஸைனம்மா .நன்றி.

    வருகைக்கும், மற்றும் வலைச்சர அறிமுகத்துக்கும் மிக நன்றி middleclassmadhavi.

    உண்மை suryajeeva. நன்றி.

    நன்றி வைரை சதிஷ்.

    நன்றி அப்பாதுரை.

    நன்றி தமிழ் உதயம்.

    நன்றி இராஜராஜேஸ்வரி.

    உள்ளுணர்வு எல்லா சமயமும் சரியாவதுண்டா மோகன்ஜி...நன்றி.

    "தன்னைப் போல் பிறரையும்..." நல்ல கருத்து பத்மநாபன். நன்றி.

    சரியாகக் கணித்துள்ளீர்கள் பிரணவன். நன்றி.

    நன்றி மன்சுபாஷிணி. 'தீதும் நன்றும்' வரிகளைப் படிக்கும்போது (டைப் செய்யும் போதும்) எங்களுக்கும் ரமணி சார் ஞாபகம் வந்தது!

    மீள் வருகைக்கும் நன்றி இராஜராஜேஸ்வரி.

    பதிலளிநீக்கு

இந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க!