Wednesday, October 12, 2011

ஜே கே 22:: ஏழ்மையும் வானின் அழகும்!

                        
ஆழ்ந்த உணர்வு (passion) இன்றி நீங்கள் நுண்ணுணர்வுடன் இருக்க இயலாது. 'ஆழ்ந்த உணர்வு' என்ற சொல்லைக் கண்டு அஞ்சாதீர்கள். பெரும்பாலான ஆன்மீகப் புத்தகங்கள், குருமார்கள், சுவாமிகள், தலைவர்கள் ஆகியவர்கள் 'ஆழ்ந்த உணர்வு கொள்ளாதீர்' என்று கூறுவர். ஆனால் ஆழ்ந்த உணர்வு இன்றி எவ்வாறு நீங்கள் அழகற்றதையும், அழகையும், குசுகுசுவென்று பேசும் இலைகளையும், சூர்ய அஸ்தமனத்தையும், ஓர் சிரிப்பையும், அழுகையையும் உணர முடியும்?
       
அய்யா, தயவு செய்து நான் சொல்வதற்கு செவி சாயுங்கள்! எவ்வாறு ஆழ் உணர்வைச் சேகரிப்பது என்று கேட்காதீர்கள். ஓர் வேலையைத் தேடி அடைவதற்கும், ஓர் பாவப்பட்ட மனிதனை வெறுப்பதற்கும், வேறொருவரைப் பார்த்து பொறாமைப் படுவதற்கும் உங்களுக்கு உணர்ச்சி மிகுதியாக இருப்பது எனக்குத் தெரியும். ஆனால் நான் கூறுவது முற்றிலும் வேறான உணர்வு. நான் கூறுவது நேசிக்கும் உணர்வையே. அன்பு என்ற நிலையில் 'நான்' இருப்பதில்லை. அன்பு என்ற நிலையில் கண்டனம் செய்வது என்று ஒன்றில்லை. பாலுணர்வு நன்று அல்லது தீது என்று கூறப்படுவதும் இல்லை. அல்லது இது சரி, இது தவறு என்றும் கூறப்படுவதுமில்லை. -
    
அந்நிலையில் இத்தகைய முரண்பாடுகள் நாம் அன்புடன், நேசத்துடன் உள்ளபோது இருப்பதில்லை. அன்பு முரண்பாடற்றது. ஆழ் உணர்வு இன்றி எவ்வாறு ஒருவர் அன்புடன் இருக்க முடியும்? நுண்ணுணர்வு கொண்டிருப்பதென்பது உங்கள் பக்கத்தில் உட்கார்ந்து இருப்பவரை உணர்வதாகும். உங்கள் நகரத்தின் அழகற்ற நிலையை, குப்பைக் கூளத்தை, ஏழ்மையை உணர்வதாகும்.
   
மற்றும் ஆற்றின் அழகையும், கடலின், வானின் அழகையும் உணர்வதே நுண்ணுணர்வு ஆகும். உணர்ச்சி ததும்பல் இல்லாவிடில் இத்தகைய நிகழ்வுகளுக்கு நீங்கள் நுண்ணுணர்வுடன் எவ்வாறு இருக்க முடியும்? எவ்வாறு ஒரு முக மலர்ச்சியை, அழுகையை நீங்கள் உணருவீர்கள்? அன்பு ஒரு ஆழ் உணர்வு என்று உங்களுக்கு உறுதி கூறுகிறேன்.

April 26, 'Book of Life'

13 comments:

middleclassmadhavi said...

'எங்கள்' பதிவு நான் என் டாஷ்போர்டைத் திறந்தவுடன் முந்தி வந்து நிற்கிறது! :-)

'passion' என்ற வார்த்தைக்கு ஈடான தமிழ்ச் சொல் வேறு ஏதேனும் இருக்கிறதா?

நவில்தொறும் நூல் நயம்!

shanmugavel said...

அன்பு ஒரு ஆழ் உணர்வு.ஜே.கே,ஜே.கே.தான்.

இராஜராஜேஸ்வரி said...

அன்பு ஒரு ஆழ் உணர்வு என்று உங்களுக்கு உறுதி கூறுகிறேன்.

ஜே கே 22:: ஏழ்மையும் வானின் அழகும்!"

பயில்தோறும் இன்பம் பயக்கும் அருமையான பகிர்வுக்குப் பாராட்டுக்கள்.

தமிழ் உதயம் said...

அன்பு, உணர்வு எல்லாம் அழகான சொற்கள் மட்டுமல்ல... அற்புதமான விஷயங்கள்...

அஹ‌ம‌து இர்ஷாத் said...

அழ‌கான‌ விஷ‌ய‌ம் அன்பு..அதை விவ‌ரித்த‌ க‌ட்டுரை ப‌டிக்க‌ இன்ப‌மாக‌வே இருக்கிற‌து..

வல்லிசிம்ஹன் said...

பலன் எதிர்பாராத அன்பு,வாடிய பயிரைக் கண்டபோதெல்லாம் வாடினேன் அன்பு. நமக்கு இழைக்கப்பட்ட தவறுகளை மன்னித்து மறப்பதும் அன்புதான்.
பலரூபங்களில் நம்மிடம் அன்பு காட்டுபவர்களை உணர்வது ஆழ்நிலை அன்பு.
இதை நான் உணர்ந்து கொள்ள வைத்தது உங்கள் அன்புக் கட்டுரைமொழிகள்.

suryajeeva said...

தோழர், எனக்கு நீண்ட காலமாய் சந்தேகம்... j.krishnamurthy யும் u.g.krishnamurthy யும் சுத்தமான அத்வைதம் போதித்தார்கள்... ஆனால் இன்னும் பலர் த்வைதம் இல்லாமல் அத்வைதம் இல்லை என்று பேசி வருகிறார்கள்.. இரண்டு முரண்பாடான கொள்கையை ஏன் பலர் ஓட்ட வைத்துக் கொண்டிருக்கிறார்கள் என்று தெரியுமா? [for.eg.ramakrishnar, ramanar, etc]

வானம்பாடிகள் said...

சுபெர்ப்.போட்டோக்களும்

எங்கள் said...

suryajeeva - ரொம்ப ஆழமாகப் பார்க்கின்றீர்கள். நாங்க இன்னும் மேலேயே நீச்சல் விளையாடிக்கொண்டிருக்கின்றோம். த்வைதம் / அத்வைதம் எல்லாம் எடுத்து அலசி ஆராய்ந்தோம் என்றால் - பெரும்பாலான வாசகர்கள் ஓடிப்போயவிடுவார்கள் என்று தோன்றுகிறது!

Lalitha Mittal said...

ஜே.கே யின் அன்பின் ஆழத்தையும் அனுபவித்தேன்;சூர்யா வுக்கு நீங்கள் அளித்த பதிலையும் ரசித்தேன்!

suryajeeva said...

சின்ன சின்னதாய் ஆரம்பிக்கலாமே... ஓட மாட்டார்கள் என்று நினைக்கிறேன்...

எங்கள் said...

வருகைக்கும் கருத்துக்கும் நன்றி

middleclassmadhavi
shanmugavel
இராஜராஜேஸ்வரி
தமிழ் உதயம்
அஹமது இர்ஷாத்
வல்லிசிம்ஹன்
suryajeeva
வானம்பாடிகள்
lalitha mittal

meenakshi said...

//அன்பு ஒரு ஆழ் உணர்வு// அருமை!
நல்ல பதிவு!

Post a Comment

இந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க!